Showing posts with label கேள்வி-பதில். Show all posts
Showing posts with label கேள்வி-பதில். Show all posts

பிடித்த கேள்விகள் - பிடித்த பதில்கள்

 எந்த பத்திரிகை ஆனாலும் அதில் வரும் கேள்வி- பதில் பகுதியை படிக்க தவறுவதில்லை அப்படி படித்த கேள்வி-பதில்களில் என்னை கவர்ந்த வற்றை இங்கே தந்துள்ளேன். இவை உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையோடு..

லஞ்சம், மாமூல்... என்னங்க வித்தியாசம்?
சம்பளம் மாதிரி, குறிப்பிட்ட தேதியில் தொடர்ந்து ஒழுக்கமாக(!) லஞ்சம் கொடுத்து வந்தால் - அதுதான் மாமூல்!

கம்ப ராமாயணம் எழுதிய கம்பரும், அமராவதியின் காதலனான அம்பிகாபதியின் தகப்பனார் கம்பரும் ஒரே நபர்தானா?

அம்பிகாபதி-அமராவதி கதையே ஒரு கதை தான்! கவிச்சக்ரவர்த்தி கம்பர் இருந்தது உண்மை; அவர் ராமாயணம் எழுதியது உண்மை. அவ்வளவே!
(மதன் கேள்வி - பதில்)

கேள்வி : தமிழக அரசு, கலைஞர் சிறந்த கதை வசனகர்த்தா என விருது தருகிறது. அண்ணா விருதை தி.மு.க. கலைஞருக்கு அளிக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது?
பதில் : இவற்றை மறுக்கும் பெருந்தன்மை கலைஞருக்கு வேண்டும் என்று தெரிகிறது!
(கல்கண்டு கேள்வி-பதில்)

ஊழல் எதிர்ப்பாளரான சோ, ஜெயலலிதாவை ஆதரிப்பது ஏன்?


சோவின் பிரச்சனை ஊழல் அல்ல, உள்ளத்தில் ஊறியிருக்கும் உணர்வு..

சமீபத்தில் நடந்த ஒரு கண்டனக் கூட்டத்தில் நடிகர் விவேக் பத்திரிகை யாளர்களை ஆபாசமாய்த் திட்டிப் பேசினாராமே..?


விவேக் பாவம். சினிமாவில் சீன் காட்டி பார்த்தார், வடிவேலு வின் அமர்க்களத்துக்கு முன் காணாமல் போய்விட்டார். இப் போது மேடையில் சீன் காட்டுகிறார் பரிதாபப் படுவோம்.
(அரசு கேள்வி-பதில்)


Read more...

அட இங்க பார்றா...

''அடக்கடவுளே' என்று சொல்லவைத்த செய்தி..?''
''சமீப நாட்களாக கமல்ஹாசன் குறித்து இணையத்தில் உலவும் செய்தி. 'கமல் 1978-ல் 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் கில்லராக நடித்திருந்தார். சரியாக ஒரு வருடம் கழித்து, அதே போல பெண் களைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ ராமன் என்ற கொலையாளி கைது செய்யப்பட்டான். 1988-ல் 'சத்யா'வில் வேலையில்லா இளைஞனாக நடித்தார் கமல். 90-கள் முழுக்க நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம். 1992-ல் ஃபைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி ஓடுவதாக 'மகாநதி'யில் கதை. 1996-ல் நிஜமாகவே ஃபைனான்ஸ் கம்பெனிகள் முதலீடுகளை லபக்கி ஓடின. 2000-ல் இந்து-முஸ்லிம் கலவரம் குறித்த 'ஹேராம்' படம் வெளியானது. 2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான இனப் படுகொலை. 2003-ல் 'அன்பே சிவம்' படத்தில் ஒரு காட்சியில் கமல் சுனாமி பற்றி பேசுவார். 2004-ல் நிஜமாகவே வந்தது சுனாமி. 2006-ல் 'வேட்டையாடு விளையாடு' படம் இரண்டு சைக்கோ கொலைகாரர்களைப் பற்றியது. தொடர்ந்த நாட்களிலேயே நொய்டாவில் மொனீந்தர், சதீஷ் என்னும் தொடர் கொலைகாரர்கள் பிடிபட்டனர். இப்போது 'தசாவதாரம்' படத்தில் அமெரிக்காவில் இருந்து உலகை அழிக்கும் கிருமி இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதாகச் செல்லும் கதை. இப்போது அமெரிக்காவைத் தாக்கிய பன்றிக் காய்ச்சல் கிருமிகள்தான் உலகெங்கும் பரவுகின்றன!'
இதை எல்லாம் படித்ததும் மனதில் தோன்றியது. கமலைத் தீர்க்கத்தரிசி என்று சொல்வதா... அல்லது அவர் படம் வெளியானதும் நிச்சயம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்பதா? இந்தச் செய்தியைக் கமல் படித்தால், 'அடக் கடவுளே' என்று சொல்வாரோ!''
- வீரவிஜயன், மன்னார்குடி.
-விகடனின் நானே கேள்வி-நானே பதில் என்ற தலைப்பில் வந்த கேள்வி பதில் இது.


Read more...

உங்களுக்கு புரியுதா..?

கேள்வி:- தமிழ்ச்செல்வன் மறைவிற்கு இரங்கல் கவிதை எழுதிய போது எதிர்ப்பு தெரிவித்தவர் தான் ஜெயலலிதா என்றும், இப்போது தமிழ் ஈழம் வேண்டும் என்றும் நீங்கள் கூறியதாக கருணாநிதி கூறியிருக்கிறாரே? இதற்கு நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?
பதில்:- நான் இப்போது தமிழ் ஈழம் வேண்டும் என்று கோருவதற்கும், தமிழ்ச்செல்வனுக்கு கருணாநிதி இரங்கல் கவிதை பாடியதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது? இந்த இரண்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை. கருணாநிதி ஏதோ சம்பந்தம் இல்லாததை பற்றி பேசுகிறார்.
எங்களுக்கு இப்போ ஒண்ணுமே புரியலை போங்க. உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்க.


Read more...

கேள்வியும் நானே பதிலும் நானே

உபதேசம் செய்பவர்களில் பலர், தாங்கள் உபதேசிப்பது போல் இருந்து காட்டுவதில்லை. என்ன காரணம்?
- ஜி. ஜெயராமன், கூந்தலூர்
இருக்க முடிவதில்லை. அவ்வளவுதான் காரணம்! அதுசரி, இந்தக் கேள்விக்கு விடை தெரிந்து கொண்டதால் உங்களுக்கு என்ன நன்மை? பதில் சொல்வதால் எனக்கு என்ன நன்மை? படிப்பவர்களுக்குத்தான் என்ன நன்மை? இப்படி ஒரு பயனற்ற கேள்வி அவசியமா?
-------------------------------------------------------------------------------------------
மேலே உள்ள கேள்வி பதில் "சுட்டி விகடனில்" வந்தது. பதில் அளித்தவர் சுகி சிவம் அவர்கள், ஆமாம் சன் தொலைக் காட்சியில் வரும் அதே நபர் தான். இந்த பதிலில் அவரை சுடும் விதமாக கேள்வி அமைந்ததாலையே அவர் இவ்வாறு பதில் சொல்லி இருக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது.
அதாவது இந்த கேள்வியினால் என்ன பயன் என்று கேட்டு (கோபமாக?!) அதன் மூலம் தான் பாதிக்க பட்டத்தையும் சுட்டிக் காட்டுகிறாரா..? கேள்வியும் நானே பதிலும் நானே ...
.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP