அட இங்க பார்றா...
''அடக்கடவுளே' என்று சொல்லவைத்த செய்தி..?''
''சமீப நாட்களாக கமல்ஹாசன் குறித்து இணையத்தில் உலவும் செய்தி. 'கமல் 1978-ல் 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் கில்லராக நடித்திருந்தார். சரியாக ஒரு வருடம் கழித்து, அதே போல பெண் களைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ ராமன் என்ற கொலையாளி கைது செய்யப்பட்டான். 1988-ல் 'சத்யா'வில் வேலையில்லா இளைஞனாக நடித்தார் கமல். 90-கள் முழுக்க நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம். 1992-ல் ஃபைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி ஓடுவதாக 'மகாநதி'யில் கதை. 1996-ல் நிஜமாகவே ஃபைனான்ஸ் கம்பெனிகள் முதலீடுகளை லபக்கி ஓடின. 2000-ல் இந்து-முஸ்லிம் கலவரம் குறித்த 'ஹேராம்' படம் வெளியானது. 2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான இனப் படுகொலை. 2003-ல் 'அன்பே சிவம்' படத்தில் ஒரு காட்சியில் கமல் சுனாமி பற்றி பேசுவார். 2004-ல் நிஜமாகவே வந்தது சுனாமி. 2006-ல் 'வேட்டையாடு விளையாடு' படம் இரண்டு சைக்கோ கொலைகாரர்களைப் பற்றியது. தொடர்ந்த நாட்களிலேயே நொய்டாவில் மொனீந்தர், சதீஷ் என்னும் தொடர் கொலைகாரர்கள் பிடிபட்டனர். இப்போது 'தசாவதாரம்' படத்தில் அமெரிக்காவில் இருந்து உலகை அழிக்கும் கிருமி இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதாகச் செல்லும் கதை. இப்போது அமெரிக்காவைத் தாக்கிய பன்றிக் காய்ச்சல் கிருமிகள்தான் உலகெங்கும் பரவுகின்றன!'
இதை எல்லாம் படித்ததும் மனதில் தோன்றியது. கமலைத் தீர்க்கத்தரிசி என்று சொல்வதா... அல்லது அவர் படம் வெளியானதும் நிச்சயம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்பதா? இந்தச் செய்தியைக் கமல் படித்தால், 'அடக் கடவுளே' என்று சொல்வாரோ!''
- வீரவிஜயன், மன்னார்குடி.
-விகடனின் நானே கேள்வி-நானே பதில் என்ற தலைப்பில் வந்த கேள்வி பதில் இது.
0 comments:
Post a Comment