இதை என்னன்னு சொல்றது...
'புகையிலை இல்லா புது உலகம் படைப்போம்' என்கிறது சுகாதார அமைச்சகம். ஆனால், தான் தினமும் எண்பது சிகரெட் புகைப்பதை சாதனை என்கிறார் 77 வயதான ஸ்டீபன் துரைராஜ். நாற்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்கி றதாம் இவருடைய இந்த சா(வே)தனை!
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த இவர், தன்னுடைய புகைக்கும் சாதனைக்காக(?) ஏகப்பட்ட பட்டங்களை வாங்கிக் குவித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை சந்தித்தோம். சிகரெட்டும் கையுமாக நம்மை எதிர்கொண்டவர், ''மதுரை மெடிக்கல் காலேஜ்ல லேப் டெக்னீஷியனா வேலை பாத்தப்ப, ஓவரா சாக்லேட் சாப்பிடு வேன். அதைப் பாத்த நண்பர்கள், 'என்னப்பா... சின்னப்புள்ளத்தனமா சாக்லேட் தின்னுகிட்டு... சும்மா ஸ்டைலா சிகரெட்டை ஊதிப் பழகு'ன்னாங்க. அப்ப ஆரம்பிச் சதுதான்... இந்தப் பழக்கம். இப்ப வரைக்கும் விடமுடியலை!
1981-ம் வருஷம் சென்னையில நடந்த புகைபிடிக்கும் போட்டியில அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள்லருந்து சுமார் நானூறுக்கும் மேற்பட்டவங்க கலந்துகிட்டாங்க. அதுல கலந்துகிட்டு, 'ஒன் ஹவர்'ல எண்பது சிகரெட்ஸை ஊதித் தள்ளி 'ஃபர்ஸ்ட் பிரைஸ்' வாங்குனேன். அதுக்காக, எம்.ஜி.ஆர். எனக்குத் தங்கப் பதக்கம்கூட கொடுத்து 'புரட்சிவீரன்(?)'னு பட்டம் கிடைச்சது. அப்புறமா டெல்லியில நடந்த போட்டியிலும் முதலிடத்தைப் பிடிச்சு, பிரதமர் இந்திரா காந்தி கையால பரிசு வாங்கினப்ப, 'புகைமன்னன்' பட்டம் கிடைச்சது...'' என்று அடுக்கிக்கொண்டே போன ஸ்டீபனை இடைமறித்த அவர் மனைவி பொன்னம்மாள்,
''இவரு இப்படி சிகரெட்டை ஊதித் தள்ளுறது எனக்கு பயமாத்தான் இருக்கு. ஆனா, இவரை பரிசோதிச்ச ஆந்திரா வைத்தியர் ஒருத்தரு, 'உடம்பு முழுக்க பாய்ஸனாகி மனுஷன் இரும்பு மனுஷனாயிட்டாரு. இப்ப இவருக்கு எந்த நோயும் இல்லை'னு சொல்லி இவருக்குத் தைரியமூட்டி விட்டுட்டாரே, என்ன பண்ணட்டும்?'' என்றார்.
இது குறித்து இதயம் மற்றும் நுரையீரல் சிகிச்சை மருத்துவரான டாக்டர் எம்.கே.கிரிதர்பாபுவிடம் கேட்டபோது, ''அதிகமா சிக ரெட் குடிச்சாலும், அவருடைய உடல்நிலை சீரா இருக்குன்னா, அதுக்குக் காரணம் அவரோட 'ஜெனட்டிக்'காதான் இருக்கும். அத னால, ஸ்டீபனை மத்தவங்க யாரும் முன்மாதிரியா எடுத்துக்கக் கூடாது. புகைப் பழக்கத்தால் ஸ்டீபனுக்கு ஏதாவதொரு பாதிப்பு நிச்சயம் இருக்கும். அது இப்போதைக்கு வெளியில் தெரியாமல் இருக்கலாமே ஒழிய, பாதிப்பே இல்லைன்னு சொல்லமுடியாது!'' என்றார்.
0 comments:
Post a Comment