நிருபர்களை மீட்ட கிளின்டன்
சில மாதங்களுக்கு முன்னால் வட கொரியா அரசாங்கத்தால் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க நாட்டை சேர்ந்த இரு நிருபர்கள் மீட்கப் பட்டிருக்கிறார்கள். என் வாழ் நாளில் நான் முதல் முறையாக கேள்வி படுகிறேன், ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாததால், தனது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரை அனுப்பி மற்றொரு நாட்டால் சிறை பிடிக்கப்பட்ட நிருபர்களை மீட்டு எடுத்திருக்கிறது. அந்த முன்னாள் குடியரசு தலைவர் பில் கிளின்டன். நம் நாட்டை சேர்ந்த சப்ரஜித் சிங் என்பவர் கிட்டத்தட்ட இதே மாதிரியான காரணங்களுக்காக சிறை பிடிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவரை மீட்க அவரது குடும்பத்தினர் போராடி வருவதை, நாம் செய்திகளில் பார்த்திருக்கலாம். அவரை மீட்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பத்தாதோ என்றே தோன்றுகிறது, குறைந்த பட்சம் இதை பார்த்தபிறகாவது அப்படி தோன்றுகிறது. ஆனால் அதே சமயம் இப்படியும் நினைக்க தோன்றுகிறது அமெரிக்கா தனது "உலக தலைமை"யை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளதோ என்று. உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்கள்.
0 comments:
Post a Comment