அமெரிக்காவில் அவமானம்..ஒரு தொடர்கதை..?
சமீபத்தில் அமெரிக்கா வந்த நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்கா குடியேற்றத்துறை, பல நெருக்குதலை கொடுத்ததாகவும் அது பெருத்த அவமானம் என்றும் ஷாருக்கானும், இந்திய அரசாங்கமும் புலம்பி இருப்பது, நமக்கு பல ஆச்சர்யங்களை தந்தது. குறிப்பாக டெல்லி முதல்வர் திருமதி.ஷீலா தீக்சித், "அமெரிக்கர்கள் இந்தியா வரும்பொழுது இது மாதிரி அவமானப்படுத்தினால்தான் இதன் முழு வீரியமும் அவர்களுக்கு தெரிய வரும்.." என்று பேசி இருப்பது நமக்கு சில ஆச்சர்யமான கேள்விகளை கேட்க தூண்டுகிறது.
ஆச்சர்யம்-1: இதற்கு முன், முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாமுக்கு, கிட்டத்தட்ட இதே மாதிரியான சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், அரசாங்கம் இந்த அளவுக்கு அக்கறை காட்டியதா...?
ஆச்சர்யம்-2: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தனக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையை பெரிதாக்க விரும்பவில்லை என்ற காரணத்தினாலும், இது அந்த நாட்டிற்குரிய சட்டதிட்டம் அதனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை எனவும் கூறியது அவரது உண்மை அறியும் அறிவை காட்டுகிறதா..? இல்லை ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு இருக்கும் தன்மானம் அவருக்கில்லையா...?
ஆச்சர்யம்-3: இதற்கு முன் தமிழ் நடிகர் கமலஹாசனுக்கும் இதே மாதிரியான ஒரு சூழல் ஏற்பட்ட பொழுது அப்போதைய மத்திய, மாநில அரசுகளும் இதே மாதிரியான பரபரப்பையும் ஆதங்கத்தையும் வெளிபடுத்தியதா...? இல்லை என்றால் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே அந்த தகுதி இருப்பதாக ஹிந்திய மன்னிக்கவும் இந்திய அரசாங்கம் கருதுகிறதா...?
ஆச்சர்யம்-4: முஸ்லிம்களின் மீதான இந்த தீவிரவாத இமேஜ்-ஐ நீக்க அவர்கள் என்ன பண்ணவேண்டும்...? குறைந்த பட்சம் இந்திய முஸ்லீம்கள் என்ன பண்ண வேண்டும்..?
0 comments:
Post a Comment