மக்களை ஏன் சந்திக்கணும்...?

''மக்களை நேரடியாகச் சந்திக்காமல் கொல்லைப்புறம் வழியாக, அதாவது ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஸ்டாலின் சொல்லியிருக் கிறாரே?''
''என்னைப் பார்த்து இதைக் கேட்கிற ஸ்டாலின், தன் தங்கை கனிமொழியிடம் இதைக் கேட்க வேண்டியதுதானே? அமைச்சர் ஜி.கே.வாசனைப் பார்த்துக் கேட்பாரா? முரசொலி மாறன் 30 ஆண்டுகள் இப்படித்தானே பதவியில் இருந்தார்? ஸ்டாலினுக்குத் தைரியம் இருந் தால், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியதுதானே? அரசியல்ரீதியாக விமர் சனம் செய்யலாம். அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், மாநிலங்களவை உறுப்பினர் என்ற பதவியைக் கொச்சைப்படுத்தலாமா? அவையின் அடுத்த கூட்டத் தில் இந்தச் சிக்கலை எழுப்புவேன். ஸ்டாலின் இதற் குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!''

அதெல்லாம் சரி நீங்க தேர்தல்ல போட்டியே போடப் போறதில்லையா ...? அதுசரி பூசாரி எப்பவாது தன்னை பலி கொடுக்கணும்னு சொல்லுவாரா ...? நீங்கதான் பூசாரி ஆச்சே...


Read more...

எது கவிதை..?

ஆரம்பிச்சுட்டன்யா இவன் அப்படின்னு நீங்க திட்டுறது கேட்குது. இது இப்ப எழுதின கவிதை இல்லை ஆமாம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது. இப்ப நீங்க நினைக்கிறதும் சரிதான், ஆமாம் கல்யாணத்துக்கு முன்னால் எழுதியது...
"எது கவிதை..?"
மழை எழுதிய கவிதை நதி என்றால்
மொழி எழுதிய கவிதை தமிழ் என்றால்
தமிழ் எழுதிய கவிதை பாரதி என்றால்
கடவுள் எழுதிய கவிதை பெண் என்றால்
பெண் எழுதிய கவிதை குழந்தை என்றால்
என் விரல் பிரசவித்த இதுவும் கவிதையே



Read more...

மே-1 தோன்றிய வரலாறு

மே மாதம் முதல் தேதி, தொழிலாளர் வர்க்கத்தினருக்குப் பொன்னாள். உலகம் எங்குமுள்ள பாட்டாளி மக்கள் இத்தினத்தைக் கொண்டாடுகிறார்கள். தினம் 12 மணி நேர வேலையை 8 மணியாகக் குறைக்கத் தொழிலாளர்கள் போராடி வெற்றி பெற்றது, மே முதல் தேதியன்றுதான்.
1837-ல் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த வான்ப்யூரன், 14 மணி நேர மாக இருந்த வேலைத் திட்டத்தை மாற்றி, அரசாங்க அலுவலகங்களில் வேலை செய்வோர் 10 மணி நேரம் வேலை பார்த்தால் போதும் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தார். 'இந்தப் பத்து மணி நேரம் கூட அதிகம்; எட்டு மணி நேர வேலையே நிர்ணயிக்க வேண்டும்' என்று தொழி லாளர்கள் போராட்டம் தொடங் கினர்.
இதனால் ஏற்பட்ட ஆர்ப்பாட்டங்களை அடக்க முதலாளிகள் முயன்றனர். துப்பாக்கிப் பிரயோகம் நடைபெற்றதில் ஆறு தொழிலாளிகள் மாண்டனர். ஏராளமான பேர் காயம் அடைந்தனர். இதைக் கண் டிக்க 'ஹேய் மார்க்கெட்' என்ற இடத் தில் 30,000 தொழிலாளர்கள் ஒன்று கூடினர். இக்கூட்டத்தினர் மீதும் அடக்குமுறை கையாளப்பட்டது. இப் போராட்டத்தில் கைதான பலர் சிரச்சேதம் செய்யப்பட்டனர்.
1888-ல் அமெரிக்காவில் கூடிய தொழில் கூட்டு மகாநாடு, 8 மணி நேர வேலைத் திட்டத்தை வற்புறுத்தி யது. இப்போராட்டங்கள், மே மாதம் நடைபெற்றதால் இவை 'மே தினப் போராட்டம்' என்று பிரசித்தி பெற்றன. எவ்வளவோ இன்னல்களுக்குப் பின் இப்போராட்டம் வெற்றியடைந்தது.
1904-ல் ஆம்ஸ்டர்டாமில் கூடிய தொழிலாளர்கள் மாநாட்டில் ஒவ் வொரு மே 1-ம் தேதியன்றும் இவ் விழாவைக் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இன்று கம்யுனிசத்தை மிக தீவிரமாக எதிர்த்து வரும் அமெரிக்காவில் தான் உழைப்பாளர் தினம் ஆரம்பிக்கப்பட்டது என்று படித்தவுடன் ஆச்சர்யம். அது மட்டுமல்ல இன்று உழைப்பாளர் தினம் என்பது அமெரிக்காவில் சுத்தமாக மறந்து விட்ட ஒன்றாகிவிட்டது.


Read more...

அமீர் கலைஞர் உண்ணாவிரதம் பற்றி சொல்லியது...

ஈழத் தமிழர் பிரச்னையில் கலைஞரோட அணுகுமுறை எப்படியிருக்கிறது?``பாராளுமன்றத் தேர்தலுக்காக ஈழத்தமிழர்களுக்குத் துரோகம் செஞ்சுட்டார்னு நான் கலைஞரை சுலபமா விமர்சனம் செஞ்சுடலாம். ஆனால், கலைஞரின் இடத்துல நான் இருந்து பார்த்தால்தான் அவரோட கஷ்டங்கள் என்னனு தெரியும். கலைஞர் ஈழத்தமிழர்களுக்கு தன்னால் இயன்றதைச் செய்ய நினைப்பவர்தான். அந்த உணர்வு இல்லாமலா ஏற்கெனவே இருமுறை ஆட்சியை இங்கே இழந்தார்? `தமிழினத் தலைவர்'ங்கிற முறையில் இந்தப் பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வரும் பொறுப்பில் பெரும்பங்கு கலைஞருக்குத்தான் இருக்கு. ஆனால் இந்த முறை காங்கிரஸ் கூட்டணியால்தான் அவர் நினைச்சதை செய்வதில் தாமதம் ஏற்பட்டுருச்சு.'' முதல்வர் கருணாநிதியின் உண்ணாவிரதம் பற்றி என்ன நினைக்கிறீங்க?``ஈழத்தமிழர் பிரச்னைக்காக நம் முதல்வர் போராடுறது பாராட்ட வேண்டிய விஷயம். அவரது உண்ணாவிரதத்தால்தான் இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட்டிருப்பதா சொல்றாங்க. அப்படி நடந்திருந்தால் எனக்கு மிகவும் சந்தோஷம்.''


Read more...

ஹேய் கலக்கிட்டோம்ல...

மே-1 உழைப்பாளிகளின் தினம், வழக்கம் போல் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் தொலை காட்சியில் வரும் அனைத்துமே குப்பையாக இருப்பதில்லை என்பதற்கு இன்று சன் தொலைக்காட்சியில் வந்த சாலமன் பாப்பயாவிடம் பட்டி மன்ற பேச்சாளர் ராஜா உரையாடினதை சொல்லலாம். சாலமன் பாப்பையாவின் அந்த மதுரை தமிழில் உள்ள நெருக்கம் நம்மை மேலும் மயக்கியது. அவரிடம் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும்....
கேள்வி: உங்களின் எதிர்கால லட்சியம் என்ன ...?
பதில்: ஹேய..எழுபது வயசுல என்னங்க லட்சியம்..எனது கனவு மேகங்கள் எல்லாம் கலைந்து தெளிவா இருக்கு. மூட்டையெல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு உக்காந்திருகோம் எப்ப கூபிடுறாரோ அப்ப கிளம்ப தயாரா உக்காந்திருக்கேன்.. இதுல போய் லட்சியம் அது இதுன்னு..,. ஹா ஹா ..
கேள்வி: நீங்கள் எல்லா மதத்தின் கடவுளையும் கும்பிடுறிங்க எப்படி உங்களால முடியுது...?
பதில்: நான் இந்து மத இலக்கியங்களை படித்திருக்கிறேன், பைபிளை அக்கு அக்கா படிச்சிருக்கேன், இஸ்லாமிய குரானையும் படித்திருக்கிறேன், பாராதியாரையும் படித்திருக்கிறேன் .. இது எல்லாமே பரம் பொருள் ஒன்றே என்பதை தெளிவா சொல்லுது அதனால எந்த மதத்தை சேர்ந்த கடவுளையும் என்னால ஏத்துக்க முடியுது.
கேள்வி: நீங்கள்தான் பட்டி மன்றத்தின் தரத்தினை குறைத்ததாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே ..?
பதில்: அப்படியா ... நான் குற்றச்சாட்டு என்று அதை பாக்கலை... அதை ஏத்துக்கறேன்.
கேள்வி: நீங்க சிரிக்க சிரிக்க மேடைல பேசுறிங்க நிஜ வாழ்க்கைல நீங்க யாரிடமாவது கோபப்படுவீங்களா ...?
பதில்: நான் எங்க வீட்டுகாரம்மாவிடம் கோபப் படுவேன் ஏன்னா அவுங்கதான் நான் எவ்வளவு தூரம் நடக்குறேனோ அந்த தூரம் வரக்கூடியவங்க. அதுமட்டுமில்லாம மத்தவங்களிடம் கோபப் பட நமக்கு உரிமையில்லை.
கேள்வி: உங்களுக்கு பிடிச்ச இசை அமைப்பாளர் யார் ....?
பதில்: பி.யு .சின்னப்பா காலத்திலிருந்து பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன், ரகுமான் நம்மோளோட புகழை எங்கோயோ கொண்டு போய் இருக்கிறார் அவருடைய இசைல மேல் நாட்டு தாக்கம் அதிகமிருக்கும் .. இளையராஜா இசை மனசுக்கு நெருக்கமா இருக்கும் அந்த இசை மேல எனக்கு ஒரு கிறுக்கே உண்டு.
கேள்வி: நீங்க அழுவீங்களா ...?
பதில்: எங்க அம்மாவை பத்தி நினைத்தால் அழுகை வரும் (குரல் கம்முகிறது), ஏன் எனில் அவுங்களுக்கு நான் எதுவுமே செயலை ...அதில்லாம மிகவும் கஷ்ட்டதில இருக்கிற ஏழையை பார்த்தால் அழுகை வரும் ஏன் எனில் நானும் அந்த நிலைலிருந்து தான் வந்திருக்கிறேன்.
கேள்வி: இளமையில் வறுமை வரமா கொடுமையா ...?
பதில்: என்னை பொறுத்த வரைக்கும் வரம்தான். ஏன்னா அந்த வறுமை தான் எனக்குள்ளிருந்த இந்த திறமையெல்லாம் வெளி கொண்டு வந்திருக்குன்னு நான் நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல பெரிய கவிஞர்கள் எல்லாம் வறுமையை முழுமையாக கடந்து வந்ததுனாலையே அவுங்க இன்றைய நிலையை அடைந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்.
கேள்வி: இளைய சமுதாயம் இலக்கிய தமிழை அவ்வளவாக புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லையே...?
பதில்: அவுங்க தொல்காப்பியம் போன்றவற்றை படிக்காவிட்டால் கூட பரவாயில்லை, பாரதியை படிக்கலாம் இல்லை கண்ணதாசனாவது படிக்கலாம் இப்ப அதுவும் இல்லை அது தான் பிரச்சனை. நம்ம அரசியல் வாதிகள் தான் இதற்கெல்லாம் காரணம்.

நிஜமான சமுதாய அக்கறை, தெளிந்த வாழ்க்கை பார்வை,மண்ணின் மனம் மாறாத பேச்சு இப்படி எல்லா விதத்துலயும் சாலமன் பாப்பையாவின் அனுபவம் பேசியது நிச்சயம் எல்லோருக்கும் உபயோகமாக இருந்திருக்கும்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP