ஹேய் கலக்கிட்டோம்ல...
மே-1 உழைப்பாளிகளின் தினம், வழக்கம் போல் சிறப்பு நிகழ்ச்சிகள் என்ற பெயரில் தொலை காட்சியில் வரும் அனைத்துமே குப்பையாக இருப்பதில்லை என்பதற்கு இன்று சன் தொலைக்காட்சியில் வந்த சாலமன் பாப்பயாவிடம் பட்டி மன்ற பேச்சாளர் ராஜா உரையாடினதை சொல்லலாம். சாலமன் பாப்பையாவின் அந்த மதுரை தமிழில் உள்ள நெருக்கம் நம்மை மேலும் மயக்கியது. அவரிடம் கேட்ட சில கேள்விகளும் அதற்கான பதில்களும்....
கேள்வி: உங்களின் எதிர்கால லட்சியம் என்ன ...?
பதில்: ஹேய..எழுபது வயசுல என்னங்க லட்சியம்..எனது கனவு மேகங்கள் எல்லாம் கலைந்து தெளிவா இருக்கு. மூட்டையெல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு உக்காந்திருகோம் எப்ப கூபிடுறாரோ அப்ப கிளம்ப தயாரா உக்காந்திருக்கேன்.. இதுல போய் லட்சியம் அது இதுன்னு..,. ஹா ஹா ..
கேள்வி: நீங்கள் எல்லா மதத்தின் கடவுளையும் கும்பிடுறிங்க எப்படி உங்களால முடியுது...?
பதில்: நான் இந்து மத இலக்கியங்களை படித்திருக்கிறேன், பைபிளை அக்கு அக்கா படிச்சிருக்கேன், இஸ்லாமிய குரானையும் படித்திருக்கிறேன், பாராதியாரையும் படித்திருக்கிறேன் .. இது எல்லாமே பரம் பொருள் ஒன்றே என்பதை தெளிவா சொல்லுது அதனால எந்த மதத்தை சேர்ந்த கடவுளையும் என்னால ஏத்துக்க முடியுது.
கேள்வி: நீங்கள்தான் பட்டி மன்றத்தின் தரத்தினை குறைத்ததாக ஒரு குற்றச்சாட்டு இருக்கிறதே ..?
பதில்: அப்படியா ... நான் குற்றச்சாட்டு என்று அதை பாக்கலை... அதை ஏத்துக்கறேன்.
கேள்வி: நீங்க சிரிக்க சிரிக்க மேடைல பேசுறிங்க நிஜ வாழ்க்கைல நீங்க யாரிடமாவது கோபப்படுவீங்களா ...?
பதில்: நான் எங்க வீட்டுகாரம்மாவிடம் கோபப் படுவேன் ஏன்னா அவுங்கதான் நான் எவ்வளவு தூரம் நடக்குறேனோ அந்த தூரம் வரக்கூடியவங்க. அதுமட்டுமில்லாம மத்தவங்களிடம் கோபப் பட நமக்கு உரிமையில்லை.
கேள்வி: உங்களுக்கு பிடிச்ச இசை அமைப்பாளர் யார் ....?
பதில்: பி.யு .சின்னப்பா காலத்திலிருந்து பாட்டு கேட்டுகிட்டு இருக்கேன், ரகுமான் நம்மோளோட புகழை எங்கோயோ கொண்டு போய் இருக்கிறார் அவருடைய இசைல மேல் நாட்டு தாக்கம் அதிகமிருக்கும் .. இளையராஜா இசை மனசுக்கு நெருக்கமா இருக்கும் அந்த இசை மேல எனக்கு ஒரு கிறுக்கே உண்டு.
கேள்வி: நீங்க அழுவீங்களா ...?
பதில்: எங்க அம்மாவை பத்தி நினைத்தால் அழுகை வரும் (குரல் கம்முகிறது), ஏன் எனில் அவுங்களுக்கு நான் எதுவுமே செயலை ...அதில்லாம மிகவும் கஷ்ட்டதில இருக்கிற ஏழையை பார்த்தால் அழுகை வரும் ஏன் எனில் நானும் அந்த நிலைலிருந்து தான் வந்திருக்கிறேன்.
கேள்வி: இளமையில் வறுமை வரமா கொடுமையா ...?
பதில்: என்னை பொறுத்த வரைக்கும் வரம்தான். ஏன்னா அந்த வறுமை தான் எனக்குள்ளிருந்த இந்த திறமையெல்லாம் வெளி கொண்டு வந்திருக்குன்னு நான் நினைக்கிறேன். எனக்கு மட்டுமல்ல பெரிய கவிஞர்கள் எல்லாம் வறுமையை முழுமையாக கடந்து வந்ததுனாலையே அவுங்க இன்றைய நிலையை அடைந்திருக்காங்கன்னு நினைக்கிறேன்.
கேள்வி: இளைய சமுதாயம் இலக்கிய தமிழை அவ்வளவாக புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லையே...?
பதில்: அவுங்க தொல்காப்பியம் போன்றவற்றை படிக்காவிட்டால் கூட பரவாயில்லை, பாரதியை படிக்கலாம் இல்லை கண்ணதாசனாவது படிக்கலாம் இப்ப அதுவும் இல்லை அது தான் பிரச்சனை. நம்ம அரசியல் வாதிகள் தான் இதற்கெல்லாம் காரணம்.
நிஜமான சமுதாய அக்கறை, தெளிந்த வாழ்க்கை பார்வை,மண்ணின் மனம் மாறாத பேச்சு இப்படி எல்லா விதத்துலயும் சாலமன் பாப்பையாவின் அனுபவம் பேசியது நிச்சயம் எல்லோருக்கும் உபயோகமாக இருந்திருக்கும்.
0 comments:
Post a Comment