மந்திரி பதவி படும் பாடு ....
நாம் கீழே தந்திருப்பது ஜுனியர் விகடன் பத்திரிக்கையில் வந்த கட்டுரையின் ஒரு பகுதி. தமிழகத்தின் மத்திய மந்திரிகள் எப்படி தேர்ந்தெடுக்க படுகிறார்கள் என்று பாருங்கள்.. கொடுமை. காதாலா காதலா படத்தில் ஒரு கமல் ஒரு வசனம் பேசுவார் "...கடவுள் இருக்குன்னு சொல்றவனை கூட நம்பலாம் ஆனால் நான் தான் கடவுள்னு சொல்றவனை நம்பவே கூடாதுன்னு...". தனது கட்சியை போல ஒரு ஜனநாயக கட்சியை பார்க்கவே முடியாதுன்னு சொல்ற தி.மு.க வில் ....
இதோ அந்த காட்சி .. மன்னிக்கவும் கட்டுரை ..
''டெல்லியிலிருந்து முதல்வர் உள்ளிட்டவர்கள் வந்ததுமே கட்சியின் செயற்குழு கூடும் என்று ஆவ லோடு கட்சியினர் எதிர்பார்த்தார்கள். ஆனால், முதல்வரின் வீட்டில் 'மந்திரி ரேஸில்' இருந்தவர்களை மட்டும் அழைத்து மாறி மாறி
விவாதம் நடந்தது. முதலில் தயாநிதி தரப்பினரை அழைத்துப் பேசினார் கலைஞர். கட்சியில் இருக்கும் முக்கியஸ்தர்கள் சிலரே, 'தயாநிதி மாறனுக்குப் பதவி கொடுக்கக் கூடாது' என்று தன்னிடம் மறைமுகமாகச் சொல்லிவருவதை டப்பெனப் போட்டு உடைத்த அவர், 'இந்தத் தடவை இல்லாட்டிதான் என்னப்பா?...' என்றாராம். தயாநிதி மாறன் உடனே ஏதும் சொல்லாமல், 'சரி' என்று தலை யாட்டியபடி நிற்க, கட்சியின் வெற்றிக்காக தயாநிதி தரப்பு பட்ட கஷ்டங்களை மற்ற சிலர் எடுத்து வைத்து தீவிரமாக வாதாடினார்களாம். தொகுதிவாரியாக செலவு விவரங்களையும் கலைஞரிடம் கொடுத்த தயாநிதி தரப்பு, 'கடந்த முறை அமைச்சராக இருந்த போது தயாநிதியால் எள்ளளவும் கெட்ட பெயர் ஏற்படவில்லை. இருந்தும், எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை வராவிட்டால், தயாநிதிக்குப் பதவி வேண்டாம்!' என்று அவர்கள் வருத்தத்தோடு சொன் னார்களாம்.
'முடிந்த மட்டும் தயாவுக்கு கேபினெட் கிடைக்க ஏற்பாடு செய்கிறேன்... நம்பிக்கை வையுங்கள்!' என்று சொல்லி அவர்களை அனுப்பியிருக்கிறார் கலைஞர். மாறன் பிரதர்ஸ் மலர்ந்த முகத்துடன் வீட்டைவிட்டு வெளியே வர, அவர்களுக்கு எதிராக தூபம் போடும் புள்ளிகள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்!'' என்று சொன்ன அந்த முக்கியஸ்தர்கள்... மேற்கொண்டு நடந்த காட்சிகளையும் ஸீன் பை ஸீனாகச் சொல்லத் தொடங்கினார்கள்..
இது தான் ஹைலைட் ...
''மகள் கனிமொழியையும் ராசாத்தி அம்மாளையும் அழைத்துப் பேசியபோது, 'மூன்று கேபினெட் பதவிகள் எப்படியும் வாங்கிவிட முடியும்' என்பதை உறுதியாகச் சொன்னதோடு, 'அந்த மூன்றில் யாருக்கெல்லாம் இடம்' என்று சொன்னாராம். 'நீ என்னம்மா நினைக் கிறே?' என்றும் கேட்டாராம். ராசாத்தி அம்மாள், 'வேண்டியவங்க வேண்டாதவங்களுக்குக் கொடுக்கிறது ஒருபக்கம் இருந்தாலும், கனிக்கும் இந்த முறை பதவி கட்டாயம் தரணும்...' என்று வேண்டினாராம். அதற்குள் அப்பாவின் தவிப்பு பொறுக்காமல் கண் கலங்கிய கனிமொழி, அடுத்தடுத்த சந்திப்புகளிலும் தனக்கு இடம் கிடைக்காதபடி வலுவான கரங்கள் காய் நகர்த்துவதை உணர்ந்து, 'உங்க மனசுக்கு எது சரின்னு படுதோ அதையே செய்யுங்க...' என்று ஒரு கட்டத்தில் ஒதுங்கிவிட்டாராம். ராசாத்தி அம்மாள் இதை ஜீரணிக்க முடியாமல் தன் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.
அழகிரியைப் பொறுத்தவரை கேபினெட் அந்தஸ்துக் கான பரிசீலனையில் முதல் ரவுண்டின்போது தான் இல்லை என்பதே பெரும் ஷாக்காக இருந்தது. அதோடு 'மந்திரியாகத்தான் திரும்பிவருவேன்' என்று தன் மதுரைக் கண்மணிகளிடம் உற்சாகமாகச் சொல்லிவிட்டு வந்த நிலையில், மே 23ம் தேதி 'முதல் தவணை பதவியேற்பிலும்' தான் பங்கேற்க முடியாமல் போனதில் ஏக அப்செட்தான். பதவியேற்பு ஒத்திப்போன கோபமும் அவருக்கு சேர்ந்து கொண்டது. 'அடைந்தால் கேபினெட் பதவி... இல்லையேல் அதிரடிப் பாய்ச்சல்' என்பதே அவருடைய அணுகு முறையாக இருந்தது. டெல்லியில் தந்தையிடம் கர்ஜித்தது போலவே சென்னையிலும், 'மொழிப் புலமையெல்லாம் வைத்துதான் மந்திரி பதவி என்பது அர்த்தமில்லாத பேச்சு. வேண்டுமானால் நான் என் எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்கள் மதுரையில் யாரை நிறுத்தினாலும் ஜெயிக்க வைக் கிறேன். அதேநேரம், தமிழகத்தில் மறுபடி சட்டமன்றத் தேர்தல் வரட்டும். காங்கிரஸ் உதவியில்லாமல் நீங்கள் இங்கே தமிழ்நாட்டில் ஆள்கிற அளவுக்கு ஜெயித்துக் கொடுக்கிறேன். கட்சியிலும் அரசிலும் பெரிய பொறுப்பைக் கொடுங்கள்' என்று மறுபடி அவர் சீறினாராம்!'' .
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு (!) பெண் உண்டுன்னு ஏன் சொல்றாங்கன்னு இப்ப புரிஞ்சுது. பேசாம ஆண்கள் ஏன் ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்கும் பின்னால் நிற்கக்கூடாது, ஏன்னா பின்னால் நிற்பவருக்குதான் பவர் அதிகம் போலவே..
0 comments:
Post a Comment