யானையே வந்தது முன்னே...
காங்கிரஸ் அரசு மத்தியில் ஆட்சி அமைக்கப்போகிறது, தாரளமயமாக்களை மிக தாரளாமாக ஆதரிக்கும் மன்மோகன் தலைமையில், அதுவும் வலுவான பெரும்பான்மையுடன். குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவில்லாமலே. சும்மாவே இன்னைக்கு அம்பானிக்கு காய்ச்சல் (பன்றி காய்ச்சல் எல்லாம் இல்லை, சும்மா காய்ச்சல் தான்) என்றாலே பங்கு சந்தை சுமார் 3000 புள்ளிகள் வரை குறையும். அதுக்கே அப்படின்னா மேற் சொன்ன மாதிரி வந்தால் பங்கு சந்தை என்ன பண்ணும்..? ஆமாம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்தது கிட்டத்தட்ட 10% உயர்வை ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே எட்டியதால் பங்கு சந்தை வர்த்தகம் நிறுத்தப்பட்டது. சிறிது நேரம் கழித்து துவங்கிய போதும் அதே அளவு உயரத்தொடங்கியதால் திங்கள் கிழமைக்கான வர்த்தகம் மொத்தமாக நிப்பாட்டப் பட்டது.
இதுவரை உலக வரலாற்றில் எந்த ஒரு பங்கு வர்த்தகமும் இந்த அளவுக்கு முன்னேற்றத்தில் உயர்ந்ததில்லை எனவும், மேலும் அதன் காரணமாக பங்கு வர்த்தகம் நிப்பாட்டப் பட்டதும் இல்லை, என்கின்றன செய்திகள். உங்களுக்கு தெரிந்தால் நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
யானை வரும் பின்னே, மணி ஓசை வரும் முன்னே, என்பது பழமொழி. இங்கு யானையே முன் வந்துவிட்டது. இந்த சாதனை இந்த அரசின் வாழ் நாள் முழுவதும் தொடர வாழ்த்துகள்.
0 comments:
Post a Comment