மாண்புமிகு தமிழக துணை முதல்வர் !?
"....அவரவர் போட்ட டெல்லிக்கணக்கு களை முடிந்த வரை ஈடுகொடுத்து, நிரவிக் கொடுத்துவிட்டார் கருணாநிதி. ஒத்துழைக்காத காங்கிரஸூடன் போராடிய சோர்விலிருந்து மீள்வ தற்காக அவர் காத்திருப்பது தன் 86-வது பிறந்த நாளுக்கு. அன்றைய தினத்தை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடத் தன் தொண்டர்களை அவர் அனுமதிக்கிறாரோ இல்லையோ... ஸ்டாலின் ஆதரவாளர்கள் அந்த நாளுக்காகக் காத்திருக்கிறார்கள். காரணம், அன்று அவர்கள் எதிர்பார்ப்பது ஸ்டாலி னுக்குத் துணை முதல்வர் பதவியை!.."
நாம் இப்போது பிளாஷ் நியூஸ் ஆக பார்ப்பதை ஒரு பத்திரிகை மேற்கண்டவாறு நான்கைந்து நாட்களுக்கு முன்னமே கொடுத்து விட்டது. புலி வரும் கதை போலாகி விடும் என்று எதிர்பார்த்த ஸ்டாலின் துணை முதல்வர் பதவி கடைசியில் வந்தே விட்டது. ஸ்டாலின் கட்சிக்காக உழைத்தவர் தான் அதனால் அவருக்கு முழு தகுதியும் உள்ளது என்பதை தினசரி தி.மு.கவை திட்டாமல் உறங்கப் போகாத சோ வே வக்காலத்து வாங்குவதையும், ஸ்டாலின் போல வேற யாருமே தி.மு.க வில் உழைக்க வில்லையா..? என்று எதிர் பாட்டும் கேட்கிறது. தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன் முறையாக உருவாக்கப்பட்டிருக்கிறது துணை முதல்வர் பதவி. இது எந்த அளவுக்கு நன்மை பயக்கப் போகிறது என்று பார்த்தால், ஒன்றுமேயில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. மேலும் இது வருங் காலங்களில் பெரிய பெரிய பிரச்சனைகளை உண்டு பண்ணும் என்றே தோன்றுகிறது. அதிகார பகிர்வு மூலம் தனது குடும்பத்தை வேண்டுமானால் கலைஞர் சமாதானப் படுத்தி இருக்கலாம். ஆனால் தமிழக அரசியலை அடுத்த மோசமான கட்டத்திற்கு இட்டு சென்ற பெயரை தட்டி சென்றுள்ளார் கலைஞர்.
0 comments:
Post a Comment