பொருளாதாரம் புரியா தாரம் ...?
புரியாத தாரம் அமைந்தால் வாழ்க்கை எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது இன்றைய உலக பொருளாதாரம். சரி அது என்ன உலக பொருளாதாரம்..? உள்ளூர் பொருளாதாரமே புரியலை இதுலே உலக பொருளாதாரம் எப்படி போனால் என்ன..? அப்படி இல்லீங்க இப்ப எல்லாம் அமெரிக்காவில் இன்று வெளியாகும் வாசனை திரவியம் முதல் ஹாலிவுட் படம் வரை உடனுக்குடன் நமக்கு கிடைப்பது போல் அமெரிக்கா பொருளாதாரத்தில் ஏற்படும் சிறு விரிசலும் நம்மையும் பாதிக்கிறது. அது ஒரு விதத்தில் சரியானதும் கூட காரணம் எங்க நாட்டில் தான் பிரச்சனையே இல்லையே என்று எந்த நாடும் நிம்மதியாக இருக்க முடியாது அப்படி எந்த ஒரு நாடும் எடுக்கும் பொருளாதார தீர்வு உலகில் உள்ள அனைவருக்கும் ஒரு வித தீர்வாக அமையும். மனிதாபிமானம் இப்படி வளர்ந்தால்தான் உண்டு. சரி நம்ம விஷயத்துக்கு வருவோம் இந்த பிரச்சனைக்கும் காரணகர்த்தா வழக்கம் போல (?!) அமெரிக்கா தான். உப்பை தின்னவன் தண்ணி குடிச்சுத்தானே ஆக வேண்டும், அதான் அமெரிக்கா தண்ணி குடிக்க ஆரம்பித்துள்ளது அதில் அந்த "விக்கல்" நிக்குமா இல்லையா.. என்பது போக போகத் தான் தெரியும். ஆனால் அமெரிக்கா தண்ணி குடிக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது ஒபாமா அரசு கிட்டத்தட்ட 825 பில்லியன் டாலர்ஸ் ஒதுக்கி உள்ளது. இதில் எனக்கு புரிந்த வரையில் இது எப்படி செயல் படப் போகிறதென்றால், அமெரிக்கா அரசாங்கம் இந்த தொகையை ஒவ்வொரு துறையிலும் ஒரு குறிப்பிட்ட அளவு முதலீடு செய்யும். எப்படி .? அந்த துறையில் தொழில் பண்ணுபவர்கள் தங்களது தொழில் முன்னேற்றத்திற்கு அந்த பணத்தை குறைந்த வட்டியில் அரசாங்கத்திடமிருந்து கடனாக பெற முடியும். இதை கேட்கும் போதே சிரிப்பு தான் வருகிறது. வடிவேலு சொல்வது போல் இவங்க நம்மளையெல்லாம் வைத்து காமெடி கீமெடி பண்றாங்களான்னு தோனுது. அதுக்கு பேசாம ஒவ்வொருத்தருக்கும் பத்தாயிரம் டாலர்ஸ் கொடுக்குறேன் அப்படின்னு அரசாங்கம் சொல்லி இருக்கலாம்ல ..? விலை வாசியை குறைத்து அடிப்படை தேவைகளை எல்லாருக்கும் கிடைக்க வைப்பதற்கு இதை விட்டால் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று எண்ணி இருந்தால் இவுங்க என்னடான்னா பணக்காரங்களை மேலும் பணக்காரங்களா ஆக்குகிறது எந்த விதத்தில் நியாயம் ? இதுல அமெரிக்கா ஊடகங்கள் இதை சோஷலிச சிந்தனை அப்படின்னு சொல்லி கமெண்ட் அடிச்சிருக்காங்க. எத்தனை கடைகள் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தாலும் பொருள்களின் விலை மட்டும் இன்னும் குறையவே இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது. வளைகுடா நாடுகள் கூட இப்படித்தான் பெட்ரோல் டீசல் போன்றவைகளின் விலையை குறைக்காமல் காலம் ஒட்டிட கனவு கண்டார்கள் ஆனால் என்ன ஆனது ..? மக்கள் திடீரென்று தங்களது எரிபொருள் தேவைகளை குறைத்துக் கொண்டார்கள் அதன் விலை குறைந்தது. அதே நிலைமை மற்ற பொருள்களுக்கும் ஏற்படும் அதுவரை அரசாங்கம் இப்படித்தான் கோமாளித்தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள் .
Read more...