இலங்கை அரசின் கடமை.

இலங்கை பிரச்சனையை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஒரு தவறு தெரிகிறது. தீர்வு என்பது இந்தப் பிரச்சனையை பொறுத்த வரையில் இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களை பலி கொண்ட பிறகு ஏற்படப்போகிறது என்று தெரியவில்லை. சரி இதற்கு என்னதான் முடிவு யாரவது ஒருவர் விட்டுக்கொடுக்க முன் வர வேண்டும். தமிழ் ஊடகங்களின் தற்போதைய பிரதி பலிப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே உள்ளது. அதில் சில பத்திரிக்கைகள் இதை தீவிரவாதத்திற்கான ஆதரவாகவே பார்க்கிறது. "தீவிரவாதம் எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல" என்பது ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தாலும் சத்தியமான உண்மையான உண்மை. ஆனால் ஒரு இனத்தை மொத்தமாக அழிப்பதில் கவனம் செலுத்தும் எந்த அரசும் அல்லது எந்த இயக்கமும் எதிர் கொள்ள வேண்டியது தீவிரவாதத்தைத்தான் என்பது இன்றைய அவசர கதி உலகத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது. இலங்கை அரசும் அப்படித்தான் தீவிரவாதத்தை எதிர் கொண்டுள்ளது, விடுதலைப்புலிகளும் அப்படித்தான் தீவிரவாதத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால் இதில் அப்பாவி பொது மக்கள் (அதாவது இரண்டு பக்கங்களையும் ஆதரிக்க பிடிக்காமல் இருப்பவர்கள்) பாதிக்கப் படுவதுதான் தவிர்க்கப் பட வேண்டும். அதை செய்ய வேண்டியது அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசின் கடமை.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP