A WEDENSDAY -- ஒரு பார்வை
ஒருவழியா வார கடைசியும் முடிவுக்கு வந்தது.. இந்த வாரம் A WEDNESDAY என்ற ஹிந்தி திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது (உபயம்: டி.வி.டி). மிகவும் நல்ல படம் தயவு செய்து தேடி கண்டுபிடிச்சு பாருங்க. ஒரு பொது ஜனத்தின் சமுதாய கோபம் தான் இந்த படம். கிட்டத்தட்ட ஒன்னே முக்கால் மணி நேரம் மட்டுமே ஓடிய இந்த படத்தில் குறைகள் இருந்தாலும் படத்தை பாராட்ட ஏகப்பட்ட விஷயங்கள் இருப்பதால் அவை மட்டும் இங்கே ...
1. படத்தில் பாடல்களே இல்லை. எனவே படத்தின் ஓட்டம் எங்குமே தடை படாமல் நம்மால் நிம்மதியாக ரசிக்க முடிகிறது.
2. உலக தரத்தில் ஒரு படம் என்று தாராளமாக இந்த படத்தை சொல்லலாம். அனைவரின் இயல்பு மீறாத நடிப்பும். குறிப்பாக படத்தின் முதன்மை கதா பாத்திரத்தில் நடித்துள்ள ஓம்புரி மற்றும் அனுபம்கேர் நடிப்பு. கதை சொல்லும் விதமும் பாத்திரங்களின் படைப்பும் நிச்சயம் இந்திய சினிமாவிற்கும் நான் இதுவரை பார்த்த ஹாலிவுட் படங்களிலும் மிகவும் புதுமையான ஒன்று.
3. பிரமாண்டம் என்ற பெயரில் தயாரிப்பாளரின் சொத்தை புடுங்காத, அதே சமயத்தில் ஒரு நொடி கூட நிக்காமல் ஓடும் பரபரப்பான திரைக்கதை அமைத்திருந்த விதமும் மிகவும் பாராட்டுக்குரியது.
4. படத்தில் வரும் ஒவ்வொரு வசனமும் மிகவும் கவனத்திற்குரிய வகையிலும் அதே சமயம் கேட்பவர்களின் நெஞ்சில் சரக்கென பாயும் விதம் அமைத்திருக்கிருக்கிறார்கள். குறிப்பாக "... அந்த நபரின் பெயரை நான் சொல்ல மாட்டேன் ஏனெனில் அவர் இந்த மதத்தை சேர்ந்தவர் என்பதை அதை வைத்து நீங்கள் யூகிக்க நான் விட மாட்டேன்.. " என்று அந்த போலீஸ் ஆபிசர் பேசும் வசனம்.
5. இயக்கம் அற்புதம் சில விஷயங்களை மிகவும் நுணுக்கமாக கையாண்டுள்ளதால் ஆளுயர மாலையே போடலாம். குறிப்பாக தீவிரவாதிகளை விடுவிக்கும் படையில் (இரண்டே நபர்தான் அனுமதி) ஒரு இந்துவும் ஒரு முஸ்லிமும் உள்ளதாக என்பது புறப்படும் முன் அந்த இந்து அதிகாரியிடம் மட்டும் அனுபம் கேர் (காவல் துறை உயர் அதிகாரியாக நடித்துள்ள) அழைத்து "எல்லாம் முடிந்தவுடன் போன் பண்ணு.. " என்று சொல்வதும் அதற்கு முன்னர் வரும் காட்சிகளில் அந்த முஸ்லீம் அதிகாரியை மிகவும் கோபக் காரராக காண்பிப்பதும் இந்து அதிகாரியை சற்றே முதிர்ந்த மன நிலையுடன் காண்பிப்பது என பல விஷயங்களை நாமே யூகிக்க விட்டிருக்கிறார் இயக்குனர்.
6. படத்தை ஒன்னே முக்கால் மணி நேரத்திலேயே முடித்திருப்பது.
குறிப்பு: இந்த படத்தின் கதையை நீங்கள் படம் பார்க்கும் பொழுது புதிதாக (Fresh) உணரும் விதமாக படத்தின் கதையை பற்றி விரிவாக விவரிக்கவில்லை.
0 comments:
Post a Comment