காட்சிகளில் கவிதை -- ஒரு பாடல் பார்வை
பாலுமகேந்திரா "காமிரா கவிஞர்" என்று சொல்லப்படுபவர். இந்த காட்சியை பாருங்கள் அந்த பாராட்டுதலுக்கு அவர் எவ்வளவு பொருத்தமானவர் என்று தெரிந்துகொள்வீர்கள் . இந்த பாடலில் வைரமுத்துவின் சொல்லாட்சியும் அற்புதம். பொதுவாக இந்த மாதிரியான தத்துவ பாடலில் "எல்லாமே பொய்.. ஏன் வாழவேண்டும்" என்றெல்லாம் தொனிக்க பாடல் எழுதுவார்கள். ஆனால் இந்த பாடலில் இறுதியில் "பேதை மனிதனே கடமையை இன்றே செய்வதில் தானே ஆனந்தம்.." என்று வாழ்வதற்கு அச்சாரமாயுள்ள உழைப்பை பேணும் படி சொல்வது மிகவும் அருமை. இந்த பாடலை காட்சி படுத்திய விதத்தை பாருங்கள் எந்தெந்த வரிகளுக்கு எந்த மாதிரியான காட்சியமைப்பு என்பதோடு அந்த லைட்டிங் அமைப்புகளும் மனதை இந்த பாடலோடு ஒன்றச்செய்து விடுகின்றன. இன்னொருமுறை பாருங்க வாழ்க்கை மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.
0 comments:
Post a Comment