வெல்லத்தான் நினைக்கிறேன் -- பா (ஹிந்தி)
இந்த படத்தின் டிரைலேர் பார்த்தேன். ஆஹா அற்புதம் ஒரு ரசிகனாக இந்த படம் வெற்றி பெறவேண்டும் என்று இந்த படத்தின் அவுட்லைனை படித்தவுடனேயே நினைத்தேன், அதாவது அபிஷேக்பச்சனின் மகனாக அமிதாப்பச்சன் நடிக்கிறார் என்று கேள்வி பட்டவுடனேயே இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியது. அதெல்லாம் போக, இளையராஜாவின் இசை இந்த டிரைலரை பாருங்க (ஆடியோ உடன்) சும்மா பின்னி இருக்கிறார் ராஜா. இந்த இசை நமக்கு ஏற்கனவே அறிமுகமானதுதான் (அது ஒரு கனா காலம் பாடல்) . ரொம்ப நாளா நம்ம மக்கள் ஒரு விஷயம் சொல்லுவாங்க (ராஜா இசையை புரிந்தவர்கள் அல்ல) தமிழர்களை தமிழ் பாடல் கேட்க வைத்தவர் ராஜா அப்படின்னு, ராஜாவின் பாடலை ஹிந்தி பேசும் மக்களும் கேட்டு ரசிக்கலாம் என்ன சரியான முறையில் அது அங்கே கொண்டு சேர்க்கப்படவில்லை. ஆனால் இதை ஒரு கடமையாகவே எடுத்துக்கொண்டு செயல்படும் பால்கி (இவர் தான் இந்த படத்தின் இயக்குனர்), அவர்கள் "ராஜாவின் இசையை இந்தியாவின் ஒரு பகுதிதான் (தெற்கு பகுதி) கேட்டிருக்கிறது இன்னொரு பகுதியும் கேட்க வேண்டும் என்பதற்காகவே அவர் ஏற்கனவே போட்ட பல பாடல்களின் மெட்டுகளை நான் பயன்படுத்திக் கொள்கிறேன்." என்று சொல்லி இருக்கிறார். இவருடையை முதல் படமான சீனிகம் (CHEENIKUM) பாடல்கள் மிகப் பெரிய ஹிட் என்பதை ஹிந்தி நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இந்த முறையும் அது நடக்கும் என்றே தோன்றுகிறது. இந்த படத்தில் ராஜாவின் "சங்கத்தில் பாடாத.." மெட்டு ஹிந்தியில் பாட போகிறது. இந்த படத்தின் டிரைலேர் பாருங்க அப்புறம் சொல்லுங்க ...
1 comments:
அதுல அந்த மொட்டையா வருவது கூட அமிதாப்ன்னு நினைக்கிறேன். நன்றி பிளாக்பாண்டி
Post a Comment