உன்னைப்போல் ஒருவன் --- ஒரு பார்வை
ஒரு வழியா அந்த DVD கடைக்காரர் உன்னைப்போல் ஒருவன் DVD ஐ இந்த வாரம்தான் கொடுத்தார்.பொதுவா கமல் படங்களை நான் திரை அரங்கில்தான் பார்ப்பது ஆனால் இந்த முறை அப்படி செய்ய முடியவில்லை. (காரணம் இன்னொரு தனி பதிவில்) நான் "THEWEDNESDAY" படத்தை கமல் எடுக்கப்போகிறார் என்பதைஅறியும் முன்னரே பார்த்தது.
இந்த படத்தை பற்றி அடிச்சு துவைச்சு நார் நாரா கிழிச்சு வலைப்பதிவில் தொங்க விட்டாச்சு, இனிமே நான் இதுல புதுசா சொல்ல ஏதுமில்லை போல தான் தோன்றுகிறது. ஆனால் அந்த கிழிசலை எல்லாம் கொஞ்சம் சேர்த்துவைத்து தைக்கலாம்னு நினைக்கிறேன்.
ஆனா அதுக்கு முன்னாடி கை வலிக்க குலுக்கலும், வாய் வலிக்க பாராட்டுகளும் மோகன் லாலுக்கு. கமலை சர்வசாதாரணமாக ஓரம் கட்டியிருக்கிறார் இந்த நடிப்பு புலி.
கிழிசல் (குற்றச்சாட்டு) --1 : "THE WEDNESDAY" மாதிரி இந்த படம் இல்லை.
ஒட்டு (நம்ம பதில்) -- 1: ஆமாம் இல்லை தான் ஏன்னா அந்த படத்தில் நடிச்சவங்க இந்த படத்தில் நடிக்கலை(எப்படி). பொதுவா நம்ம ஊர்ல இந்த படத்தை நான் ENGLISH லையே பார்த்துட்டேன் அது மாதிரி இல்லன்னு நிறையப்பேர் நிறைய தடவை சொல்லி கேட்டிருக்கிறேன். பாதிப்பு இல்லாத படைப்பு எதுதாங்க..? எல்லாமே இந்த உலகத்துல அப்படி தோன்றியது தான். நாம உட்பட. இங்கே எப்படி செய்திருக்கிறார்கள் என்றுதான் பார்க்க வேண்டும். நம்ம ஊர்ல ஒரு பாலத்தை இங்க நியூயார்க்-ல உள்ள ஒரு பாலத்தோட ஒப்பீட்டு சொல்லலாமா..? இருந்தாலும் நம்ம ஊருக்கு அது தனியா நன்மை சேர்க்குதுதானே? கமல் சொல்ற மாதிரி சொல்லனும்னா "வால்மீகி - ராமாயணம், கம்பர்-ராமாயணம் எது சிறந்தது..?" ரெண்டுமே நல்லது இல்லைன்னு சொன்னா அது ஒன்னும் பிரச்சனை இல்லை. ஆனா அவன் எடுத்தா நல்லா இருக்கும் நாம எடுத்தா இப்படித்தான், அப்படின்னு நம்மை நாமே குறை பட்டுக்குறதுல எந்த பிரயோஜனமும் இல்லை. அதுவும் நல்லா இருந்துச்சு இதுவும் நல்லா இருந்துச்சு.
கிழிசல் -- 2: கமல் ஒரு நாத்திகவாதி அதுனால தான் வேணுமின்னே ஒரு ஹிந்து தீவிரவாதிய காட்டியிருக்கிறார். ஒரிஜினல் அது மாதிரி காட்டவில்லை.
ஒட்டு -- 2: ஹிந்து தீவிரவாதம் மெல்ல மெல்ல வளர்ந்து வருவதை சுட்டி காட்டுவதாக ஏன் அதை எடுத்துக்கொள்ளகூடாது. இப்ப உள்ள கருத்து சுதந்திர உலகில் காந்தியை,பாரதியை எல்லாம் கூட மதவாதியா பார்க்கும் கொடுமை நடக்கும் போது இந்த மாதிரி குற்றச்சாட்டை கமல் பெருசா எடுத்துக்க வேணாமின்னு நினைக்கிறேன். இது கருத்து சுதந்திரத்தின்(!?) ஒரு பகுதி.
கிழிசல் -- 3: கமல் ஒரு ஹிந்து வெறியர், அதாவது மனசளவில், அதனாலத்தான் முஸ்லீம் மட்டும் தீவிரவாதம் செய்வது போல் காட்டியுள்ளார்.
ஒட்டு -- 3: அப்ப முன்னாடி சொன்ன கிழிசல் பொய்யா..? சரிங்க கமலை விடுங்க ஒரிஜினல் "THE WEDNESDAY" படத்துல அப்படித்தானே காண்பிச்சாங்க அதுல நஸ்ரூதின்ஷா என்ற ஒரு முஸ்லீம் தானே நடித்திருந்தார்...? ஏன் அந்த படத்தை குறை சொல்லல..? சரிங்க அவ்வளவு ஏன் ஒரு முஸ்லீம் போலீஸ் ஆபிசர் தானே தீவிரவாதிகளை மிக சரியாக கையாளுவதை போல காண்பிக்கிறார்..? விஜயகாந்த் படத்துல கூடத்தான் காண்பிச்சாங்க இது மாதிரி அப்பவெல்லாம் இந்த மாதிரியான விமர்சனம் வரலையே..? வடிவேலு சொல்ற மாதிரி ஒரு பத்து பேரு மூத்தற சந்துக்குள்ள வைத்து அடி அடின்னு அடிச்சுட்டு இன்னொரு வண்டில ஏத்தி அங்க உள்ள முட்டு சந்துல வச்சு அடி அடின்னு அடிச்சுட்டு, இவன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறான் இவன் நல்லவன்டா பேசாம விட்டுருவோம் அப்படின்னு கமலை விட்டாதான் உண்டு போல. இதுக்கு மேல இதுல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.
கிழிசல் -- 3: ஒரு பொண்ணு சிகரட் குடிக்கிற மாதிரி காண்பிக்கிறது எல்லாம் ஓவர்.
ஒட்டு -- 3: ஏன் சென்னைல சாப்ட்வேர் ல, மல்டி நேஷனல் பேங்க் ல வேலை செய்யுற இடத்துல உள்ள புகை பிடிக்கும் இடத்தை போயி பார்த்ததில்லையா..? யாரை காட்டி இருக்கிறார் ஒரு தொலைக்காட்சியில் வேலை பார்க்கும் நிருபர் பெண்ணை தானே அப்படி காண்பிக்கிறார். கிராமத்தில் உள்ள குப்பம்மாவும்,சுப்பம்மாவும் புகை பிடிக்கிற மாதிரியா காண்பித்துள்ளார்..? உங்களுக்கெல்லாம் ஒரு புள்ளிவிவரம் தெரியுமா உலகில் அதிகம் புகை பிடிக்கும் பெண்கள் இருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா இருப்பது மூன்றாமிடத்தில். இதுல எது ஓவர்னு நீங்களே முடிவு பண்ணிக்குங்க.
நிறைகள்: குத்து பாட்டு இல்லாமை, ரெட்டை அர்த்த வசனங்கள் இல்லாமை, காட்சி அமைப்புகளில் நிதானம் தெரிந்தாலும், காட்சி ஓட்டத்தில் அது தெரியாமல் இருத்தல், முக்கியமா படத்துல காமெராவும்,இசையும் தேவையான அளவே தங்களின் பங்களிப்பை செய்திருப்பதே பெரிய பிளஸ்.
குறைகள்: வேக வேகமாக அதுவும் ஆங்கிலத்தில் பேசப்படும் வசனங்கள் நமக்கு ஒத்து வருமா..? "நம்ம பய மெதுவாத்தான் வருவான்.." அப்படின்னு வசனம் எழுதுனவர் படத்துலையே இப்படியான்னுதான் கேட்க தோணுது. "ஒன்ன மாதிரியான ஆளுகிட்ட எல்லாம் முதலமைச்சர் பேசுவாரா..?" அப்படின்னு மோகன்லால் கேட்டதும் "என்கிட்டே ஒட்டு கேட்டு வர்றப்ப அப்படி எதுவும் சொல்லலியேன்னு.." கமல் சொல்வதும், நல்லாத்தான் இருக்குது ஆனா எல்லா படங்களுக்கும் சென்சார் அனுமதிக்குமா..? இல்லை தற்போதைய அரசுதான் அனுமதிக்குமா..? கூந்தல் உள்ளவ முடிஞ்சுக்குறா அப்படின்னு நினைச்சுக்க வேண்டியதுதான்.
7 comments:
நண்பரே அந்த பொறியியல் மாணவர் ஒரு வசனம் சொல்வாரே அபிவாதயே அதை கவனிக்க வில்லையா நண்பா ....அந்த சிறந்த கல்லூரியில் படிப்பவர் பார்பனாக தான் இருக்க வேண்டுமா ....அது ஜாதி வெறியை காட்டவில்லையா
அந்த படத்தில் வரும் அரசியல் சரியா .............அந்த குண்டுவெடிப்பில் சம்பந்த பட்டுள்ள மேல் மட்டத்தில் இருப்பவர்களை கமல் கொள்வாரா.அடி தட்டில் வேலை பார்த்தவர்களை மட்டும் கொள்ளும் முதலாளித்துவ அறிஞர் கமலா
எதற்கு நடிகர் விஜையை திட்டுகிறார் ...அந்த காட்சி தேவையா சொல்லுங்கள் ..
அது இவர் டாக்டர் பட்டம் வாங்கி விட்டார் அவரும் வாங்கலாமா .....இந்த காட்சி இல்லை என்றாலும் படம் நன்றாக தானே இருக்கும்
ஏன் குண்டு வைக்கும் பையிலே திருமால் படம் ......திருமால் என்றால் காப்பாற்றுபவர் என்று அர்த்தமா ....ஏன் சாதரண பையாகவே இருக்கலாமே ...நம் தமிழ் மக்கள் அரசியலை தெரிந்து கொண்டு படம் பார்க்க வேண்டாமா .....படம் வேகமாய் போனால் போதுமா
அடி தட்டு தீவிரவாதி மட்டும் சாக வேண்டும் ......மேல் மட்ட அரசியல்வாதி என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் சரியா................................அடித்தட்டில் இருப்பவரை மட்டும் கமல் கொல்வாரா ...சொல்லுங்கள் அரசியல் பார்வை எப்படி இருக்கிறது கமலுக்கு
உன்னை போல் ஒருவன் பாட்டு கேட்டீர்களா ....அதில் வரும் சுலோகம் அர்த்தம் தெரியுமா மக்கள் கஷ்ட படும் பொழுது கடவுள் தோன்றுவார் .....அப்புறம் எதற்கு கமல் நாத்திகம் பேசுகிறார் ........ஒரு பொய்யானவிடம்.....நல்ல கலையை எதிர்பார்க்க முடியாது நண்பா
நண்பரே அந்த பொறியியல் மாணவர் ஒரு வசனம் சொல்வாரே அபிவாதயே அதை கவனிக்க வில்லையா நண்பா ....அந்த சிறந்த கல்லூரியில் படிப்பவர் பார்பனாக தான் இருக்க வேண்டுமா ....அது ஜாதி வெறியை காட்டவில்லையா
>> முதல்ல உங்க கருத்துக்கள் அனைத்திற்கும் ஒரு மிகப்பெரிய நன்றி.
இதுல ஒரு நிகழ்கால உண்மை இருக்குது இதை கூட நான் எப்படி பார்க்குறேன்னா IIT போன்ற கல்விக்கூடங்களை நிரப்பி கொண்டிருப்பவர்கள் அவர்கள் தான். ஆனால் இதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு நாம் ஏன் அடுத்த கமல் படத்திலோ அல்லது வேறு ஒருவர் படத்திலோ "இவன் பெயர் முத்துசாமி " அப்படின்னு சொல்ற மாதிரி மாத்திக்காட்ட கூடாது. இதற்காகத்தான் நான் IIT ல சேர குறைந்த பட்சம் 80% மதிப்பெண் பெற வேண்டும் என்பதை எதிர்க்கிறேன். நிச்சயம் கால மாற்றம் ஏற்படும். அதற்கான அறைகூவலாகத்தான் இதை எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு உண்மையா சொல்லனும்னா நீங்க சொன்னதை படிச்ச பிறகு திருப்பி போட்டு பார்த்தேன். மீண்டும் நன்றி.
அந்த படத்தில் வரும் அரசியல் சரியா .............அந்த குண்டுவெடிப்பில் சம்பந்த பட்டுள்ள மேல் மட்டத்தில் இருப்பவர்களை கமல் கொள்வாரா.அடி தட்டில் வேலை பார்த்தவர்களை மட்டும் கொள்ளும் முதலாளித்துவ அறிஞர் கமலா
>> தீவிரவாதி பற்றி இந்த படம் பேசட்டும் பிறகு அரசியல் வாதிகளை பற்றி இன்னொரு படத்துல பேசலாம்னு கமல் நினைத்திருப்பார். அவர் நிச்சயம் அடுத்த படத்துல பேசுவார் என நம்புகிறேன்.
எதற்கு நடிகர் விஜையை திட்டுகிறார் ...அந்த காட்சி தேவையா சொல்லுங்கள் ..
அது இவர் டாக்டர் பட்டம் வாங்கி விட்டார் அவரும் வாங்கலாமா .....இந்த காட்சி இல்லை என்றாலும் படம் நன்றாக தானே இருக்கும்.
>> எதற்கு விஜையை திட்டுகிறார்...? நல்ல கேள்வி. என்னை கேட்டா ஏன் திட்ட கூடாதுன்னு கேட்பேன். அதாவது
எல்லாரும் விமர்சனத்திற்கு உட்பட்டவர்கள் தானே...?ஆனா இந்த காட்சியை தவிர்த்திருக்கலாம் தான்.
ஏன் குண்டு வைக்கும் பையிலே திருமால் படம் ......திருமால் என்றால் காப்பாற்றுபவர் என்று அர்த்தமா ....ஏன் சாதரண பையாகவே இருக்கலாமே ...நம் தமிழ் மக்கள் அரசியலை தெரிந்து கொண்டு படம் பார்க்க வேண்டாமா .....படம் வேகமாய் போனால் போதுமா
>>ஒரு விதத்துல இது மக்களை குழப்புவதற்காகத்தான். ஏன்னா இப்பவெல்லாம் ஒரு பை அனாதையா இருந்தா உடனே போலீஸ்-ல சொல்லிடுவாங்க இல்லை. அதுல வெங்கடாசலபதி படம் இருந்தா பெரும்பாலனவர்கள் அதை கண்டு கொள்ளாமல் போக வாய்ப்பிருக்கிறது அல்லவா..?
உன்னை போல் ஒருவன் பாட்டு கேட்டீர்களா ....அதில் வரும் சுலோகம் அர்த்தம் தெரியுமா மக்கள் கஷ்ட படும் பொழுது கடவுள் தோன்றுவார் .....அப்புறம் எதற்கு கமல் நாத்திகம் பேசுகிறார் ........ஒரு பொய்யானவிடம்.....நல்ல கலையை எதிர்பார்க்க முடியாது நண்பா.
>>முழுக்க முழுக்க அதை கமல் என்ற தனிப்பட்ட மனிதனின் பிரசங்க கதாபாத்திரமாக மாற்றாமல், அந்த கதாபாத்திரத்தின் தன்மைகேற்ப (கற்பனைக்காக) கூட அந்த பாட்டை உபயோக படுத்தி இருக்கலாம் அல்லவா...? இது உங்கள் கருத்தை பார்த்த பிறகு தோன்றியது, இதை கமல் வைத்திருக்கும் நம்பிக்கையில் சொல்வது மற்றபடி நீங்க சொல்ற மாதிரி தான் வெளியில் இருப்பவர்களுக்கு தோன்றும். கமல் இதை தவிர்த்திருக்கலாம்.
Post a Comment