ஒரு விருதும் சில வினாக்களும்


என்ன ஒரு ராஜா ரசிகர் நீங்கள் இவ்வளவு நாட்களாக எதிர்பார்த்த விருது கிடைச்சிருக்கு ஆனா ஒரு பதிவும் போடலையே..? அப்படின்னு ஒருத்தர் கேட்டார். ஒரு வேளை இந்த விருது பத்து  வருடங்களுக்கு முன்னால் ராஜாவுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் வரிந்து வரிந்து எழுத தோன்றியிருக்கும். ஆனால் இப்ப அப்படி தோணலை அதாவது விருது வாங்கினதை பத்தி. இப்பவும் நான் நம்புறேன் ராஜா விருதுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு கலைஞன். ஆனால் அது சம்மந்தமாக ராஜாவை நோகடிக்கும் நோக்கோடு எழுதப்பட்ட ஒரு விமர்சனத்திற்கு பதில் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன். ராஜா விருது வாங்கியவுடன் அவரை சந்தித்த ஊடக நண்பர்கள் கேட்ட கேள்வியில் எழுந்ததுதான் இந்த விமர்சனம். ஒரு நிருபர் கேட்டார் "உங்களுடன் ஏ.ஆர்.ரஹ்மானும் விருது வாங்கி இருக்கிறார் அது பத்தி என்ன சொல்றீங்க..?" அப்படின்னு கேட்டார் அதற்கு ராஜா "அவர் வாங்கியது அவருக்கு." அப்படின்னு சொன்னார். உடனே மிகவும் பணிவான எண்ணம் (!?) கொண்டவர்களால் அதை தாங்கி கொள்ள முடியவில்லை. என்ன மனுஷன் இவர் சக இசை அமைப்பாளர் வாங்கும் போது ஒரு மூத்தவர் என்ற முறையில் பாராட்ட வேண்டாமா..? என்ற கூக்குரல்கள். பணிவான இதயம் கொண்டவர்களே உங்களுக்கு சில கேள்விகள்...
1. இந்த கேள்விக்கு பதிலை ராஜா "ரஹ்மான் இரண்டு ஆஸ்கார் அவார்டை வாங்கிவிட்டார் என்னை விட பெரியவர். என்னை விட சிறந்த இசை அமைப்பாளர். ஏன் இந்தியாவிலேயே அவர்தான் சிறந்த இசை அமைப்பாளர்." அப்படின்னு சொல்லி இருந்தா "பணிவானவர்கள்" பாராட்டி இருக்கலாம். அதை தான் எதிர் பார்க்கிறார்களா..? என்னை பொறுத்தவரை அப்படி தான் ராஜா "பணிவு" ன்னு நிரூபிக்கனும்ன்னு இருந்தா அது தேவையே இல்லை. அதுவும் இவ்வளவு தூரம் தன்னை இசை துறையில் நிரூபித்த பிறகும்.  பணிவானர்களே நீங்கள் ராஜாவை அவரது இசைக்காக ரசியுங்கள் அவருக்கு பணிவா இருக்க தெரியலை அப்படிங்கிறதுக்காக நோகடிக்காதீங்க.

2. இந்த பணிவு எல்லாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கு. அதுவுமில்லாம ராஜாவுக்கானா அங்கீகாரம் அவரது இசைக்கானதே அன்றி அவரது பணிவுக்காகவோ அல்லது அவர் போட்டிருக்கிற வெள்ளை நிற காலணிக்காகவோ அல்ல.  ஒவ்வொரு முறையும்  உங்களுக்கானா அங்கீகாரம் மறுக்கப்படும் போது நீங்க ஒரு முறையாவது எனக்கு ஏன் இப்படி நடக்குதுன்னு நினச்சிருக்கீங்களா இல்லையா..? அதையேதானே ராஜா பிரதிபலித்திருக்கிறார். ஒரு சக மனிதனா யோசிச்சு பாருங்க அவரோட வலி என்னன்னு தெரியும்.

3.  பணிவானர்களே உங்களால் பணிவுதிலகம் என்று போற்ற படுகிற ஏ.ஆர்.ரஹ்மான் ரோஜா படம் வெற்றியடைந்த பிறகு குமுதம் இதழில் வந்த பேட்டியில் "என்னை கவர்ந்த இசை அமைப்பாளர்கள் எம்.எஸ்.வி, கே.வி.மகாதேவன், டி.ராஜேந்தர்..." அப்படின்னு எல்லாம் சொல்லிவிட்டு அன்று தொட முடியாத உயரத்தில் இருந்தாரே ராஜா அவரை மட்டும் சொல்லாமல் விட்டாரே (அதுவும் அவரிடம் பணிபுரிந்த பிறகும்) அதுதான் பணிவின் எடுத்துக்காட்டா..? நான் இதை சரி என்றோ தவறு என்றோ சொல்லவில்லை. ஆனால் இது சரி ராஜா சொன்னதுதான் தவறு அப்படின்னு சொல்றவங்களைதான் நான் கேட்குறேன்.

இது மாதிரி இன்னும் நிறைய கேள்விகள் இருக்கு. ஆனா என்னை போன்றவர்களின் ஆதங்கம் எல்லாம் ஏன் இளையராஜா மட்டும் அதற்கு இலக்காகிறார் என்பது தான் புரியவில்லை. இன்னைக்குதான் படித்தேன் இந்த வார விகடனில் பொக்கிஷம் பகுதியில் வந்த "நாயகன்" விமர்சனத்தை அதன் கடைசி வரிகள் உங்களுக்காக "இளையராஜாவின் 400-வது படமாம்! படத்தின் செட், டேக்கிங், கலர், ரிச்னெஸ் - இவற்றுக்கு நடுவே இளையராஜாவே இருக்கும் இடம் தெரியாமல் அமுங்கிப் போய்விடுகிறார்... பாவம்!" இதை என்னன்னு சொல்றது..? நாயகன் படத்துல இளையராஜா தெரியலையாம் விகடனுக்கு, (சொல்ல கஷ்டமாத்தான் இருக்கு இருந்தாலும் ..) எப்படி தெரியும் ...மணிரத்தினம், கமல்,ஸ்ரீராம்.. இவாளெல்லாம் இணைந்து பணிபுரிந்திருக்கும் பொழுது..?!


Read more...

தேசிய விருது - 2010

முதலில் ஒரு மன்னிப்பு.. நீண்ட நாட்களாக எழுத முடியாமல் போனதற்காக. ஆனால் இன்று என்னை எழுத தூண்டிய விஷயம் "நான் கடவுள்" படத்திற்கு பாலாவிற்கு கிடைத்த தேசிய விருது. "எண்ணங்களில்" முதன் முதலாக விமர்சனம் வந்தது அந்த படத்திற்குதான். பாலாவிற்கு இந்த விருது கிடைத்ததற்காக மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம். இந்த விருதுக்கு பாலா தகுதியானவர்தான். ஆனால் இது சம்மந்தமாக ஒரு வீடியோ காட்சி பார்த்த பொழுது பாலா கழுத்தில் நிறைய மாலைகள் மலர் மாலைகள் அல்ல சந்தனத்தால் ஆன மாலைகள் அல்லது அது மாதிரியான ஒரு மரத்தால் செய்த  மாலைகள்  தெரிந்தது. நான் கடவுள் வெளியான போது ஒரு பேட்டியில் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி இருந்தார் அப்படி பட்டவர் எப்படி இந்த மாதிரியான மாலைகளை கழுத்தில் சுமந்து கொண்டுள்ளார் அல்லது என்ன மாதிரியான காரணம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் எழுந்ததுதான் மற்றபடி நிறையில் குறை காணும் எண்ணம் கிடையாது.
பாலாவிற்கு மீண்டும் வாழ்த்துகள். அது போலவே வழக்கம் போல் இளையராஜாவிற்கு விருது கிடைக்காமல் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை ஏனெனில் ராஜா விருதுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லி வரும் எம்மை போன்றவர்களின் வாக்கு பொய்க்காமல் பார்த்துக்கொண்ட நடுவர் குழுவிற்கும் வாழ்த்துகள்(!?).


Read more...

தொடர்பவர்கள்

There was an error in this gadget

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP