பொருளாதாரம் புரியா தாரம் ...?

புரியாத தாரம் அமைந்தால் வாழ்க்கை எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது இன்றைய உலக பொருளாதாரம். சரி அது என்ன உலக பொருளாதாரம்..? உள்ளூர் பொருளாதாரமே புரியலை இதுலே உலக பொருளாதாரம் எப்படி போனால் என்ன..? அப்படி இல்லீங்க இப்ப எல்லாம் அமெரிக்காவில் இன்று வெளியாகும் வாசனை திரவியம் முதல் ஹாலிவுட் படம் வரை உடனுக்குடன் நமக்கு கிடைப்பது போல் அமெரிக்கா பொருளாதாரத்தில் ஏற்படும் சிறு விரிசலும் நம்மையும் பாதிக்கிறது. அது ஒரு விதத்தில் சரியானதும் கூட காரணம் எங்க நாட்டில் தான் பிரச்சனையே இல்லையே என்று எந்த நாடும் நிம்மதியாக இருக்க முடியாது அப்படி எந்த ஒரு நாடும் எடுக்கும் பொருளாதார தீர்வு உலகில் உள்ள அனைவருக்கும் ஒரு வித தீர்வாக அமையும். மனிதாபிமானம் இப்படி வளர்ந்தால்தான் உண்டு. சரி நம்ம விஷயத்துக்கு வருவோம் இந்த பிரச்சனைக்கும் காரணகர்த்தா வழக்கம் போல (?!) அமெரிக்கா தான். உப்பை தின்னவன் தண்ணி குடிச்சுத்தானே ஆக வேண்டும், அதான் அமெரிக்கா தண்ணி குடிக்க ஆரம்பித்துள்ளது அதில் அந்த "விக்கல்" நிக்குமா இல்லையா.. என்பது போக போகத் தான் தெரியும். ஆனால் அமெரிக்கா தண்ணி குடிக்க ஆரம்பித்துவிட்டது. அதாவது ஒபாமா அரசு கிட்டத்தட்ட 825 பில்லியன் டாலர்ஸ் ஒதுக்கி உள்ளது. இதில் எனக்கு புரிந்த வரையில் இது எப்படி செயல் படப் போகிறதென்றால், அமெரிக்கா அரசாங்கம் இந்த தொகையை ஒவ்வொரு துறையிலும் ஒரு குறிப்பிட்ட அளவு முதலீடு செய்யும். எப்படி .? அந்த துறையில் தொழில் பண்ணுபவர்கள் தங்களது தொழில் முன்னேற்றத்திற்கு அந்த பணத்தை குறைந்த வட்டியில் அரசாங்கத்திடமிருந்து கடனாக பெற முடியும். இதை கேட்கும் போதே சிரிப்பு தான் வருகிறது. வடிவேலு சொல்வது போல் இவங்க நம்மளையெல்லாம் வைத்து காமெடி கீமெடி பண்றாங்களான்னு தோனுது. அதுக்கு பேசாம ஒவ்வொருத்தருக்கும் பத்தாயிரம் டாலர்ஸ் கொடுக்குறேன் அப்படின்னு அரசாங்கம் சொல்லி இருக்கலாம்ல ..? விலை வாசியை குறைத்து அடிப்படை தேவைகளை எல்லாருக்கும் கிடைக்க வைப்பதற்கு இதை விட்டால் நல்ல சந்தர்ப்பம் கிடைக்காது என்று எண்ணி இருந்தால் இவுங்க என்னடான்னா பணக்காரங்களை மேலும் பணக்காரங்களா ஆக்குகிறது எந்த விதத்தில் நியாயம் ? இதுல அமெரிக்கா ஊடகங்கள் இதை சோஷலிச சிந்தனை அப்படின்னு சொல்லி கமெண்ட் அடிச்சிருக்காங்க. எத்தனை கடைகள் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்தாலும் பொருள்களின் விலை மட்டும் இன்னும் குறையவே இல்லை என்பது மிகவும் வருத்தத்திற்கு உரியது. வளைகுடா நாடுகள் கூட இப்படித்தான் பெட்ரோல் டீசல் போன்றவைகளின் விலையை குறைக்காமல் காலம் ஒட்டிட கனவு கண்டார்கள் ஆனால் என்ன ஆனது ..? மக்கள் திடீரென்று தங்களது எரிபொருள் தேவைகளை குறைத்துக் கொண்டார்கள் அதன் விலை குறைந்தது. அதே நிலைமை மற்ற பொருள்களுக்கும் ஏற்படும் அதுவரை அரசாங்கம் இப்படித்தான் கோமாளித்தனங்களை அரங்கேற்றிக் கொண்டிருப்பார்கள் .


Read more...

சொல்லிட்டாங்கப்பா..

கருணாநிதி இலங்கை செல்ல வேண்டும் .. ஜெயலலிதா கோரிக்கை சில தினங்களுக்கு முன் பத்திரிக்கைகளில் வந்திருந்தது. ஜெயலலிதாவின் நோக்கம் நம் எல்லோருக்கும் தெளிவாக புரிகிறது. அதுவும் கருணாநிதியை உடல் நலக் குறைவால் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்ட பிறகு இப்படி பேசுவது தான் நம்மை "சொல்லிட்டாங்கப்பா இவுங்க ..." அப்படின்னு சொல்ல வைத்தது.
அது சரி கருணாநிதியை விட அதிகமாக இலங்கை தமிழர் பிரச்சனையில் அதிக ஆர்வம் காட்டும் (!) ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரர் வை.கோ வை ஏன் இலங்கைக்கு அனுப்பக்கூடாது. ஒரு வேளை கள்ளத் தோணியில்மட்டும் தான் பயணம் செய்வாரோ வை.கோ.?


Read more...

இலங்கை அரசின் கடமை.

இலங்கை பிரச்சனையை எந்த கோணத்தில் இருந்து பார்த்தாலும் ஒரு தவறு தெரிகிறது. தீர்வு என்பது இந்தப் பிரச்சனையை பொறுத்த வரையில் இன்னும் எத்தனை ஆயிரம் உயிர்களை பலி கொண்ட பிறகு ஏற்படப்போகிறது என்று தெரியவில்லை. சரி இதற்கு என்னதான் முடிவு யாரவது ஒருவர் விட்டுக்கொடுக்க முன் வர வேண்டும். தமிழ் ஊடகங்களின் தற்போதைய பிரதி பலிப்பு விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவே உள்ளது. அதில் சில பத்திரிக்கைகள் இதை தீவிரவாதத்திற்கான ஆதரவாகவே பார்க்கிறது. "தீவிரவாதம் எந்த பிரச்சனைக்கும் தீர்வல்ல" என்பது ஏற்றுக்கொள்ள கடினமாக இருந்தாலும் சத்தியமான உண்மையான உண்மை. ஆனால் ஒரு இனத்தை மொத்தமாக அழிப்பதில் கவனம் செலுத்தும் எந்த அரசும் அல்லது எந்த இயக்கமும் எதிர் கொள்ள வேண்டியது தீவிரவாதத்தைத்தான் என்பது இன்றைய அவசர கதி உலகத்தில் எழுதப்படாத விதியாக உள்ளது. இலங்கை அரசும் அப்படித்தான் தீவிரவாதத்தை எதிர் கொண்டுள்ளது, விடுதலைப்புலிகளும் அப்படித்தான் தீவிரவாதத்தை கையில் எடுத்துக்கொண்டுள்ளது. ஆனால் இதில் அப்பாவி பொது மக்கள் (அதாவது இரண்டு பக்கங்களையும் ஆதரிக்க பிடிக்காமல் இருப்பவர்கள்) பாதிக்கப் படுவதுதான் தவிர்க்கப் பட வேண்டும். அதை செய்ய வேண்டியது அந்த மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட ஒரு அரசின் கடமை.


Read more...

கலைஞன் எல்லை கடந்தவன்

ஸ்லம் டாக் மில்லியனர் படம் பற்றி பல வித விமர்சனங்கள் வந்த வண்ணம் இருப்பது அந்த படத்தைப் பார்க்காத என்னைப் போன்றோரை மிகவும் குழப்புகிறது. ஆனால் அதில் ஒரு விமர்சனம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. அதாவது "ஒரு வெள்ளைக்காரன் இந்தியர்களின் மூளையை பயன்படுத்தி விருதுகள் வாங்கி குவித்திருக்கிறார். இந்த படத்திற்காக விருது பெற்ற ரகுமான் இதை விட சிறந்த தனது பங்களிப்பை இதற்கு முன் வந்த சில படங்களில் பண்ணியிருக்கிறார்." என்று மகேஷ் பட் என்ற பாலிவுட் இயக்குனர் சொல்லியிருப்பதாக படித்தேன்.
வெள்ளைக்காரன் இந்திய மூளையை திருடி விருது வாங்கி இருந்தாலோ அல்லது நம்மவர்கள் அந்த படத்திற்கு இலவசமாக பணி புரிந்திருந்தாலோ அவர் சொன்னதை ஒரு விதத்தில் ஏற்று கொள்ளலாம். ஒரு இயக்குனர் என்ற முறையில் ஒரு இசை அமைப்பாளரின் மூளையை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவரது கடமை. அதில் என்ன தவறு இருக்க முடியும்..? அதை ஒரு இயக்குனரே குறை சொல்வது வேடிக்கை மட்டுமல்ல வேதனையானதும் கூட .
அது மட்டுமல்ல இந்த படத்தில் இந்தியாவின் வறுமையை படம் பிடித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு இயக்குனர் பெயர் வாங்கி விட்டதாகவும் வருகிற விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கதைப் படி அது ஒரு குடிசை பகுதியில் நடை பெரும் பட்சத்தில் அதை குடிசை சார்ந்தே காண்பிக்க வேண்டியிருக்கும் அதை காண்பித்தால் வறுமையை படமெடுத்தார் என்று குற்றம்சாட்டுவது எந்த விதத்தில் சரி ..? கலைஞன் என்பவன் எல்லைகளை கடந்தவன் தயவு செய்து அவனை இந்த நாட்டை சேர்ந்தவன் அந்த இனத்தை சேர்ந்தவன் என்று பிரித்து பார்க்காதீர்கள். 


Read more...

இளையராஜாவுக்கு ஆஸ்கார் கிடைக்காது பற்றி ...

ராஜாவின் ரசிகர்களாகிய எங்களுக்கு ஒன்றும் ரஹ்மானின் இந்த விருது பயணம் பொறாமை அளிக்கவில்லை. மாறாக அதை விட சிறந்த இசையமைப்பாளரான ராஜாவிற்கு ஏன் வாய்க்கவில்லை என்றே கேட்கிறோம். அலுவலகத்தில் பக்கத்து சீட் நண்பருக்கு ( நம்மை விட குறைவாகவே வேலைப் பார்க்கும்) பதவி உயர்வு கிடைக்கும் போது ஒரு ஆதங்கம் பிறப்பது இயற்கை அது போலத்தான் இதுவும். இங்கு சிலர் சொல்லியிருப்பது போல ரஹ்மானின் வரவிற்கு பின்னர் ராஜாவின் திறமை குன்றியது போல சொல்பவர்கள் ஒரு கணம் யோசித்து பாருங்கள் இரண்டு வெற்றி படங்கள் கொடுத்த மிஷ்கின் ஏன் ராஜா இசை தான் தன் படத்திற்கு வேண்டும் என்று ஒத்தைக் காலில் நின்றார்..? ரஹ்மான் கூடத்தான் ஷாருக்கானின் படங்களுக்கு இசையமைப்பதில்லை என்ற கொள்கை கொண்டுள்ளார்(அவருடன் காபிரைட் விஷயத்தில் ஏற்பட்ட சண்டை..). ராஜாவை குறை சொல்பவர்கள் மனசாட்சியோடு சொல்லுங்கள்.


Read more...

இளையராஜாவிற்கு ஏன் aascar கிடைக்க வில்லை -- விகடன்.காம் கட்டுரை

தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே இன்று ஆஸ்கருக்குச் சென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானைக் கொண்டாடி வருவது மிகவும் மகிழ்ச்சிக்குரியது என்பதில் அணுவளவும் மாறுபட்ட கருத்து இல்லை...
ஆனால், தமிழ்த் திரை இசையில் ஒரு சகாப்தமான இளையராஜாவை, இந்தச் சூழலில் நினைவுகூறுவதும் அவசியமே.

தமிழ்த் திரையுலகை இந்திய அளவில் கவனத்தைப் பெறச் செய்த கலைஞர்களில் முதல் வரிசை இடம் இளையராஜாவுக்கு உண்டு. அவரது அற்புதமான இசைப் படைப்புகள் பலவும் எவர் லாஸ்டிங் என்று சொல்லப்படுகிற ரகத்தைச் சார்ந்தவை!
தொழில்நுட்ப முன்னேற்றம் ஏற்படாத காலக்கட்டத்தில் தன்னால் இயன்ற வரையில் உலகத் தரத்துடன் போட்டியிட்டவர் இசை ஞானி!
* கடந்த 1976-ல் இருந்து இந்தியாவின் முன்னணி திரை இசைக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்வது.* 840-க்கும் மேற்பட்ட இந்தியத் திரைப்படங்களில் பின்னணி இசையும், 5,000-க்கும் மேற்பட்ட பாடல்களுக்கும் இசையமைத்தது.
* லண்டனில் சிம்பொனி இசையமைத்த முதல் ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர் என்ற பெருமையை இந்தியாவுக்குப் பெற்று தந்தது...
இத்தகைய அரிய சாதனைகள் படைத்த அற்புதக் கலைஞன்... இந்தத் தலைமுறையினருக்கு ஏற்றாற் போல் கூட இசையமைத்து அதிரச் செய்து வருவதற்கு 'நந்தலாலா', 'நான் கடவுள்' சான்றுகள்!
உலகிலுள்ள திரைப்பட கலைஞர்களுக்கு 'ஆஸ்கர்'தான் உச்சபட்ச அங்கீகாரம் என்பதை ஏற்க முடியாது என்று திரையுலக ஜீனியஸ்கள் பலரும் அவ்வப்போது சொல்லிக் கொண்டுதான் வருகின்றனர்.
ஆனால், உலக அளவில் ஒரு திரைக் கலைஞரின் புகழ் சென்றடைவதற்கு ஆஸ்கர் என்ற விருதுதான் முன்னிலைப் பெறுகிறது என்பது மறுக்க முடியாத கசப்பான உண்மை!
இந்திய திரையுலக மேதை சத்யஜித் ரேவுக்கு 1992-ல் ஆஸ்கர் வாழ்நாள் சாதனையாளர் விருது அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே... அதே வருடத்தில், இந்திய அரசு அவருக்கு பாரத ரத்னா வழங்கியது.
அதன்பின் தான் உலக அளவில் மட்டுமின்றி, சாதாரண ரசிகர்களிடையேயும் மகத்தான படைப்பாளி சத்யஜித் ரே பற்றி வெகுவாகத் தெரிய வந்தது என்பது உண்மை.
இப்படி உலக சினிமா கலைஞர்களுக்கு மிகச் சிறந்த அங்கீகாரமாகத் திகழும் ஆஸ்கர்... உன்னதக் கலைஞர் இளையராஜாவுக்கு கிடைக்கவில்லையே என்பது தமிழ் ரசிகர்கள் பலரது ஆதங்கமாக இருக்கலாம்.
ஆஸ்கர் என்பது, அதுவும் இசைக்கான ஆஸ்கர் என்பது ஆங்கிலப் படங்களுக்கு மட்டுமே கிடைக்கும்... அது எப்படி இளையராஜாவுக்கு கிடைக்க வாய்ப்பு ஏற்படும் என்று வினவலாம்.
ரஹ்மானுக்கு அப்படி ஒரு வாய்ப்பாக 'ஸ்லம்டாக் மில்லியனர்' என்ற ஆங்கிலப் படம் அமைந்துவிட்டது என்பதையும் அறிவோம்.
ஆஸ்கருக்குச் செல்லக்கூடிய வகையிலான ஆங்கிலப் படத்தில் இளையராஜா பணிபுரிய முடியாமல் போனதற்கு காரணமென்ன?
வாய்ப்பு..!
அப்படி ஒரு வாய்ப்பு அவருக்கு அமையவில்லை...
இதற்குக் காரணம்... காலம்.
இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் இசை மீது மட்டுமே நாட்டம் செலுத்தினாரே தவிர, தனது இசைத் திறனை உலக அளவில் கொண்டு செல்வதற்கு அடிப்படையான வியாபார யுக்தி (இந்த யுக்தி ஒரு நல்ல கலைஞனுக்கு இருப்பதில் தவறேதுமில்லை) அவருக்கு இல்லை!
இப்படி... இளையராஜாவின் திறமையை உலக அளவில் கொண்டு செல்ல முடியாத நிலைக்கு காரணமான 'வாய்ப்பு' மற்றும் 'காலம்' ஆகியவற்றின் மீது தான் அவரது ரசிகர்களின் கோபமும் ஆதங்கமும் இருக்கிறது. இளையராஜாவுக்கு கிடைக்காத வாய்ப்புகள் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி!
உலக அளவில் அங்கீகாரம் கிடைத்த பின்புதான் தாயகத்தில் உயரிய அங்கீகாரம் அளிக்கும் பழக்கத்தையும் மத்திய அரசு மாற்றிக் கொள்ள வேண்டும்.
ரஹ்மானுக்கு ஆஸ்கர் கிடைக்கப்போவதற்கு முன்பே அவருக்கு உயரிய விருதுகளை மத்திய அரசு வழங்கினால், இந்தியாவை உலக நாடுகள் வெகுவாகப் போற்றும்.
ஆனால், பத்ம விருதுகளின் மூன்றாவது நிலையில் உள்ள பத்மஸ்ரீ விருதை (2000-ல்) மட்டுமே ரஹ்மானுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளது.
வெளிநாட்டைச் சேர்ந்த ரசிகர் ஒருவர், இந்திய இசைமைப்பாளர் ரஹ்மானைப் பற்றி தெரிந்துகொள்ள அவரது அதிகாரப்பூர்வ இணையத்தளத்துக்குச் செல்கிறார். அங்கே 'அவார்ட்ஸ்' என்ற பக்கத்தை க்ளிக்கும் போது, முதலில் காணப்படுவது வெளிநாடு அளித்த உயரிய அங்கீகாரமான 'கோல்டன் குளோப்' விருதே! அதற்குப் பின்புதான் இந்தியா அளித்த பத்மஸ்ரீ இடம்பெறுகிறது.
இதைப் பார்க்கும்போது, 'உலக அளவில் சிறப்பாக அங்கீகரிகக்ப்பட்ட கலைஞனுக்கு, அவனது தாய்நாடு குறிப்பிடத்தக்க வகையில் உயரிய அங்கீகாரம் அளித்திருக்கவில்லையே," என்று தான் அந்த வெளிநாட்டவர் எள்ளி நகையாடுவார்.
ரஹ்மான் மட்டுமின்றி, அவரைப் போன்ற உயரிய கலைஞர்கள் பலருக்கும் காலதாமதமின்றி அங்கீகரிக்கும் வழக்கத்தை மத்திய அரசு பின்பற்ற வேண்டும் என்பது கலை விமர்சகர்களின் கருத்து.
உலக அளவில் கலைத்துறையில் இந்தியாவைப் பெருமிதம் கொள்ளச் செய்யும் வகையில் செயலாற்றி வரும் ரஹ்மானுக்கு காலதாமதமின்றி 'பாரத ரத்னா' விருது அளித்தால், இந்திய அரசின் அங்கீகாரத்துக்கே கெளரவமாக இருக்கக்கூடும்!
ரஹ்மானுக்காவது பரவாயில்லை... ஒரு பத்ம விருதைக் கொடுத்திருக்கிறது, மத்திய அரசு. ஆனால், இளையராஜாவுக்கோ... சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதுகளோடு சரி!
ஆங்கிலப் படங்களுக்கும் இசையமைத்து, ஆஸ்கர் வரை இளையராஜா சென்று உரிய கவனத்தை ஈர்க்கவில்லையே என்று ஏங்கும் அவரது ரசிகர்களுக்கு... “அடுத்து வரும் மூன்று தலைமுறையினரின் ஐபாட்களில் கூட இளையராஜா பாடல்களுக்கு என்று ஒரு சிறப்பிடம் இருக்கும்" என்ற கணிப்பு மட்டுமே ஆறுதலைத் தரும்!


Read more...

கேள்விகள் இங்கே பதில் ..?

எண்ணங்களில் தோன்றிய சில கேள்விகள் இதற்கான பதில்களை நீங்கள் எங்காவது படித்தாலோ, கேள்விப்பட்டலோ தயவு செய்து நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கேள்வி-1: சத்யம் நிறுவனத்திற்கு "சத்யம்" என்று பெயர்ii வர யார் அல்லது என்ன காரணம் ...?



கேள்வி-2: மதுரையை கட்டி ஆளும் அழகிரி தினகரன் குடும்பத்துடன் இணைந்ததால் மதுரை தினகரன் அலுவலக எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவார்களா..?

கேள்வி-3: ஈழ தமிழ் நாளையே மலரும் என்றால் இந்த ஆட்சியை இழக்கவும் தயார்னு சொன்ன கலைஞர் பேச்சு வெறும் ஏட்டு சுரைக்காய்தான் என்பது எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் ...?

கேள்வி-4: விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது கிடைக்க காரணம் என்ன ...?










Read more...

இது உண்மையா..?

ஆஸ்கருக்கு அடுத்த பெருமைக்குரியதாக கருதப்படும் விருதைப் பெற்றுள்ள இசைப்புயல், தனது மாஜி குருநாதரான ஞானியிடம் நேரில் ஆசி வாங்க பி.ஏ. மூலம் முயன்றிருக்கிறார். இதற்கு ஞானி, நான் பிசி. இங்கெல்லாம் அவர் வரவேண்டாம். வாழ்த்துக்கள்! எனக்கூறி தொலைவில் இருந்தே வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாராம். (எங்கிருந்தாலும் வாழ்க!) .

இளையராஜா பற்றி பலரும் பலவிதமாக கிளப்பி விடும் புரளிகளில் இதுவும் ஒன்றாக இருக்கலாம். சமீபத்தில் மிஷ்கின் இளையராஜா பற்றி சொன்னதுதான் ஞமாபகத்திற்கு வருகிறது ... "அவர் ரொம்ப கண்டிப்பானவர், ஸ்கிரிப்ட் எல்லாம் பார்க்க மாட்டார் அப்படியெல்லாம் சொல்கிறார்கள் ஆனால் அதெல்லாம் உண்மையில்லைங்கிறது அவர்கிட்ட வேலை செய்ய ஆரம்பித்த பிறகு புரிந்து விட்டது


Read more...

பட்டவுடன் தொட்டது .. ப(ய) ழமொழி

ஒரு சின்ன துரோகம் கூட செய்யாமல் வெற்றியடைய முடியுமா என்ன ..? -- ஹாலிவுட் இயக்குனர் ஜான் ரோன்வர் என்பவர் சொன்னதாக விகடனில் வந்திருந்தது. ஒரு கணம் யோசித்து பார்த்தால் பயமாய் இருக்கிறது நம் வாழ்க்கையில் அடைந்த சில வெற்றிகளுக்கு பின்னால் கூட துரோகம் இம்மியளாவது இருக்கக் கூடும் என்று நினைத்தாலே.


Read more...

பட்டவுடன் தொட்டது - - நந்தலாலா

நந்தலாலா பாடல்கள் பற்றி விகடனில் வந்த விமர்சனம் ....
இளையராஜா எனும் இசை யானை, மலை மேல் ஏறி துதிக்கை உயர்த்திப் பிளிறி, தன் ஆளுமையைப் பறைசாற்றி இருக்கிறது, 'நந்தலாலா'வின் ஒவ்வொரு ஒலிக்குறிப்பிலும்! ஒரு சுற்றுலாவின் குதூகலத்தோடு புறப்படும் 'மெள்ள ஊர்ந்து ஊர்ந்து...' பாடல் ஊர்வல உற்சாகம். 'ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு உலகத்திலே...' என்று ஆரம்பிக்கும் ஜேசுதாஸ், 'அன்பு ஒண்ணுதான் அநாதையா?' என்று கேட்கும்போது ஆரம்பிக்கும் மனப்பிசைவு பாட்டின் இறுதிவரை தொடர்கிறது. 'தாலாட்டு கேட்க நானும்...' ராஜாவின் டிபிக்கல் அம்மா கேவல். உற்சாகமான, குடும்ப மெலடி 'கைவீசி நடக்கிற காற்றே'. (இதையும், இளையராஜா குழந்தையாகவே குதூகலப்படுத்தும் 'ஒரு வாண்டுக் கூட்டமே' பாடலையும் படத்தில் நீக்கியிருப்பதாகச் சொல்கிறது குறிப்பு. வாண்டு பாட்டுக்கு கபிலனின் வாத்சல்யமான வரிகளும் அழகு!) அப்புறம் 'எலிலே... எலிலே..!' என்கிற அந்தக் குறவர் பாடல்... என்ன சொல்வது! சரோஜா அம்மாள் என்பவர் உடுக்கு அடித்துப் பாடியிருப்பது உலுக்கி எடுக்கிறது!


Read more...

பெருமை கொள்ள வைத்த ஏ.ஆர்.ரகுமான்

இசை பிரியர்களையும்,இந்தியர்களையும், தமிழர்களையும் பெருமை கொள்ள வைத்தார் நேற்று நடந்த தங்க உருண்டை (GOLDEN GLOBE) விருது விழாவில் சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான். அவருக்கு கிடைத்த இந்த அங்கீகாரம் அவருடைய கடின உழைப்புக்கு கிடைத்தாதகவே கொள்ளவேண்டும்.

ஏ.ஆர்.ரகுமானுக்கு எண்ணங்களின் வாழ்த்துக்கள்.


Read more...

சொல்லிட்டார்பா..

கடந்த வெள்ளிக்கிழமை (01/09/09) அன்று சென்னையில் நடந்த வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில் தமிழக மின் துறை அமைச்சர் சொன்ன ஒரு விஷயம்தான் நம்மை சொல்லிட்டார்பா..இவரு அப்படின்னு நினைக்கத் தோணியது.. அவர் சொன்னது இதுதான்..."யாரும் தகவல் தொழில் நுட்ப துறையில் முதலீடு செய்யாதீர்கள், அதற்கு பதிலாக செங்கல் தொழில் முதலீடு செய்தால் நீங்கள் நல்ல லாபம் ஈட்ட முடியும் .." ஆற்காட்டாருக்கு தகவல் தொழில் நுட்பம் மேல் அப்படி என்ன கோபம். வரும் நாடளுமன்ற தேர்தலிலோ அல்லது சட்டமன்ற தேர்தலிலோ தி.மு.க தோற்பதற்கான வாய்ப்பை பிரகாசமாக்கி கொடுத்த மின்வெட்டு ஏற்பட காரணமாய் இருந்தவர் ஆயிற்றே, வராமல் இருக்குமா..? சரி விடுங்க ஆற்காட்டாரே தகவல் தொழில் நுட்ப துறையில் முதலீடு செய்றதை விட பேசாம உங்க கட்சி வளர்ச்சி நிதிக்கு கொடுப்பதன் மூலமா, தி.மு.க வில் முதலீடு செய்யலாமான்னு சொல்லுங்க அதை விட்டுட்டு செங்கல் தொழில் அது இது-ன்னு சொல்லி ஏன் குழப்புறீங்க.


Read more...

சன்னில் கறை...

சன் தொலைகாட்சி திரை துறை பிரவேசம் திரை துறையினருக்கு இப்போது எப்படி என்று தெரியவில்லை. ஆனால் இது நீண்ட கால அடிப்படையில் ஒரு பிரச்சனையாய் இருக்கும் என்பது என்னவோ உறுதி. திரை துறையில் கார்ப்பரேட் நிறுவனங்களின் கால கட்டம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்த நிலையில் சன்னின் வரவு எல்லாராலும் வரவேற்கப் படலாம், ஆனால் அது மக்களுக்கு கொடுக்கும் இம்சை அடடா தாங்கவே முடியலை. இவர்கள் எடுத்திருக்கும் படங்களை விளம்பரம் செய்வதற்கு நேரம் காலமே கிடையாது, ஒரு வரை முறையின்றி செய்யப்படுவதை பார்க்கும் பொழுது ஒருவித வெறுப்பே ஏற்படுகிறது. அதுவும் மாதா மாதம் ஒரு படம் வெளியிடுவதாக அது வெளியிட்டுள்ள அறிக்கை நம்மைப் போன்றோருக்கு ஒரு வித கிலியை ஏற்படுத்துகிறது. சன் குழுமம் வெளியிடும் படங்களே பாடல்கள் வரிசையில் முதலிடம், படங்களின் வரிசையில் முதலிடம் அது மட்டுமல்ல ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் இரண்டு நிமிடம் ஓடக்கூடிய அந்த படம் சம்மந்தப்பட்ட முன்னோட்டம், சனி ஞாயிறு கிழமைகளில் கிடைக்கும் நேரத்தில் அந்த பட சம்மந்த பட்டவர்களின் பேட்டி இப்படியாக அந்த படத்தை சன் தொலைகாட்சியை பார்க்கும் நம்மை போன்றோரின் மனதினுள் செலுத்தும் இந்த முயற்சியை என்னவென்று சொல்வது. சன் தொலைக்காட்சியை அதன் ஆரம்ப காலம் தொட்டே பார்த்து வருகிறேன் அதன் வளர்ச்சியை கண்டு வியந்திருக்கிறேன். ஆனால் அது தற்பொழுது செய்து வரும் இந்த போக்கு நிச்சயம் சன்னிற்கு ஏற்பட்ட ஒரு கறையாகத்தான் கருத வேண்டியுள்ளது. அமீர், சேரன், பிரகாஷ்ராஜ் போன்றவர்களே இதை ஆதரித்து பேசும் பொழுது ஒரு வித வருத்தம்தான் ஏற்படுகிறது. நீங்கள் கேட்கலாம் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் வேற தொலைகாட்சி பார்க்க வேண்டியதுதானேன்னு... நாங்க இங்க (அமெரிக்காவில் ) பார்க்கும் எல்லா அலைவரிசைக்கும் தனித்தனியாக மாதா மாதம் கட்டணம் செலுத்த வேண்டும். இப்பொழுது சன் தொலைக்காட்சிக்கு கிட்டத்தட்ட $25 செலுத்தி வருகிறோம். (ஆமாங்க இதுவே அதிகம் தான் ). இந்த நிலையில் இன்னொரு தொலைகாட்சி அலைவரிசை என்பது எங்களை போன்றவர்களுக்கு சுமையானதுதான். இப்படியே போனால் ஒரு நாள் சன் தொலைக்காட்சியை மறந்து விட வேண்டியது தான்.


Read more...

இந்த வார குசும்பு...

அழகிரி ஜூனியர் விகடன் இதழுக்கு இந்த வாரம் (01/09/09) அளித்த பேட்டியில் சொன்ன ஒரு விஷயம்...
கேள்வி: திருமங்கலம் தேர்தலில் நிறைய பணம் விளையாடுவதாக சொல்லப்படுகிறதே ..?

அழகிரி பதில்: நாங்கள் பண நாயகத்தின் மீது நம்பிக்கை வைப்பவர்கள் அல்ல. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருப்பவர்கள்.

(கவுண்டமணி இரு காதையும் பொத்திக் கொண்டு அடிக்கடி சொல்லும் வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது ...)
அய்யா சாமி ரீலு ஒட்டினது போதும்டா, தாங்க முடியலை..


Read more...

பட்டவுடன் தொட்டது...சனவரி-2009

குமுதம் அரசு பதில்களில் வந்த ஒரு கேள்வியும் அதற்கு அரசுவின் பதிலும் ..

கேள்வி: "ஹாலிவுட்டின் ஒரே புத்திசாலி கலைஞன் யாரென்று என்னை கேட்டால் சார்லி சாப்ளின் என்று சொல்வேன் .." அப்படின்னு பெர்னாட்ஷா சொன்னார், அது மாதிரி கோலிவுடின் ஒரே புத்திசாலி கலைஞன் என்று யாரை நீங்கள் சொல்வீர்கள்..?

பதில்: இளையராஜா.


Read more...

சத்யம் ஒரு சரிவு

கடந்த நாலு நாளா ஜூனியர் விகடன் முதல் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வரை தலைப்பு செய்திகளில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வீழ்ச்சி பற்றி தான் ஒரே புலம்பல். இதற்கு காரணம் என்ன ? ராமலிங்க ராஜு கைது .. என செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. இதெல்லாம் பற்றி நாமும் மீண்டும் பேச வேண்டாம். ஆனால் இந்த பிரச்சனை பற்றி சில செய்திகள் இவ்வாறும் சொன்னது... "இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் குலைத்துவிட்டது..". "மென்பொருள் துறையின் வீழ்ச்சி இந்தியாவில் ஆரம்பமா..?" இவர்களுக்கு மென்பொருள் துறையில் உள்ள எனது சில கேள்விகள். 1. இந்தியாவில் சத்யம் நிறுவனம் செய்த குளறுபடியால் இந்தியாவின் மானம் உலக அரங்கில் போனதென்றால்.. இதை விட பெரிய அளவில் குளறுபடி பண்ணி கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகம் நடத்திய அமெரிக்காவைச் சேர்ந்த LEHMAN BROS. நடத்திய குளறுபடிகளால் பாதிக்கப் பட்டவர்கள் இதை விட பல மடங்கு அதிகம்..? அது மட்டுமல்ல அந்த நிறவனத்தின் வீழ்ச்சியை ஏன் ஊடகங்கள் இந்த அளவுக்கு பெரிது படுத்த வில்லை ..? அமெரிக்காவின் மானம் LEHMAN BROS.-ஆள் போனதை விட, சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சியால் இந்தியாவின் மானம் பெரிய அளவில் போகிறது. 2. மென்பொருள் துறை மீது நிறைய பேருக்கு ஒரு வித எரிச்சல் நீண்ட காலமாகவே இருந்து வந்தது அவர்களின் வரிசையில் வந்த சில வயித்தெரிச்சல் கும்பலின் வாக்காகவே இதை எடுத்துக் கொண்டாலும், நம்மோட பதில் இதுதான், உழைப்பாளிகளே மென்பொருளில் வேலை பார்ப்பவர்கள் ஏதோ எ.சி-யில் உட்கார்ந்து கொண்டு லட்சம் லட்சமாக சம்பாதிப்பவர்கள் என்ற உங்களது எண்ணத்தை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள், அப்படி உங்களுக்கு யாரவது சொல்லியிருந்தால் அவர்களை இந்த விஷயத்தையும் படிக்கச் சொல்லுங்கள். நீங்களோ அல்லது வேறு யாருமோ நினைப்பதை போல கம்ப்யூட்டரை முறைத்து பார்த்து கொண்டிருந்தால் வேலை நடந்து விடாது. காலையில் போனவுடன் ஆரம்பிப்பார்கள் எங்கள் எஜமானர்கள் (அதாங்க PROJECT LEADERS) நேத்து நீ அடிச்ச கொடு வேலை செய்யலை ... என்னன்னு பார்த்து நீ உடனே சரி பண்ணலைன்னா இன்னைக்கு சாயந்திரமே உன்னுடைய வேலை காலி. அப்படின்னு கூலா சொல்லிடுவாரு. அதே மாதிரி சாயந்திரமே வேலை போயிடும். அதை நினைச்சு பயந்து கிட்டே இருக்கணும் ஒவ்வொரு நாளும். இதை விட கொடுமை என்னங்க இருக்குது. அதுவும் இப்ப இருக்குற பொருளாதார நெருக்கடில இவுங்க நெருக்கடி இன்னும் அதிகமா இருக்குது. இது மட்டுமில்ல வெள்ளைகாரர்களுக்கு கோபம் வராத அளவுக்கு நடந்துக்க தெரிஞ்சுருக்கனும். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா லட்ச ரூபா சம்பளம் கொடுத்தால் இதெல்லாம் பெரிய விஷயமில்லை. அப்படின்னு சொன்னீங்கன்ன நாளைக்கே உங்களுக்கு அப்படி ஒரு வேலை ரெடி-யா இருக்குன்னு வச்சுக்குங்க. அந்த டென்ஷன் எல்லாம் பட்டால் தான் தெரியும். இதை விளையாட்டா சொல்லலை சத்யமா சொல்றேன். (நான் நிஜ "சத்யமா"தான் சொல்றேன்). அப்படி ஏன் கஷ்ட்ட படுற பேசாம இங்க வந்து விவசாயம் பார்க்க வேண்டியது தானே, அப்படின்னு நீங்க கேட்கலாம், சரி எல்லாரும் விவசாயம் பார்த்தால் என்ன ஆவுறது..? ஏற்கனவே கரும்பு விலையை உயர்த்த சொல்லி விவசாயிங்க போராடுறாங்க. மென் பொருள் துறை என்பது ஏதோ சுகவாசிகளின் இருப்பிடம் போல் பேசுறதை முதலில் நிப்பாட்டுங்க. சுருக்கமா சொல்லனுமின்னா விவசாயிகள், மூட்டை தூக்குறவங்க உடம்புக்கு வேலை கொடுத்தால் நாங்க மூளைக்கு வேலை கொடுக்கிறோம். அவ்வளவுதான். அது மட்டுமில்லாம நம்ம நாட்டுல இருந்து ஒரு காலத்துல வெள்ளையர்கள் கொண்டு சென்ற செல்வங்களை எல்லாம் நாங்க டாலரா இந்தியாவிற்குள் கொண்டு வருகிறோம். இதை விட என்ன பண்ணனுமின்னு நினைக்கிறீங்க..? சரி இதை விடுங்க, நம்ம கதைக்கு வருவோம், மென்பொருள் அழிவதில் சந்தோசம் கொள்ளும் கனவான்களே தயவு செய்து உங்க எண்ணத்தை மாத்துங்க, மேலும் அது இந்த மாதிரி ஒரு நிறுவனம் கணக்கு குளறு படியில் செய்த தவறால் மாட்டி இருக்கிறார்கள். மென்பொருளில் எந்த பிரச்சனையும் கிடையாது. கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லனுமின்னா இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த காங்கிரஸ் ஒரு தேர்தலில் தோற்றால் உடனே மக்களுக்கு தேசப் பற்று இல்லை என்று அர்த்தமா..? அதே மாதிரி தான் இதுவும்.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP