கேள்விகள் இங்கே பதில் ..?

எண்ணங்களில் தோன்றிய சில கேள்விகள் இதற்கான பதில்களை நீங்கள் எங்காவது படித்தாலோ, கேள்விப்பட்டலோ தயவு செய்து நம்முடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கேள்வி-1: சத்யம் நிறுவனத்திற்கு "சத்யம்" என்று பெயர்ii வர யார் அல்லது என்ன காரணம் ...?கேள்வி-2: மதுரையை கட்டி ஆளும் அழகிரி தினகரன் குடும்பத்துடன் இணைந்ததால் மதுரை தினகரன் அலுவலக எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் பிடிபடுவார்களா..?

கேள்வி-3: ஈழ தமிழ் நாளையே மலரும் என்றால் இந்த ஆட்சியை இழக்கவும் தயார்னு சொன்ன கலைஞர் பேச்சு வெறும் ஏட்டு சுரைக்காய்தான் என்பது எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் ...?

கேள்வி-4: விவேக்கிற்கு பத்மஸ்ரீ விருது கிடைக்க காரணம் என்ன ...?


1 comments:

gopinathan,  January 27, 2009 at 7:45 AM  

கேள்வி 1 க்கான பதில்: இப்படியே போனால் "விந்திய மலைக்குத் தெற்கில் உள்ள மற்ற மாநிலத்தவர்கள் எல்லாம் தங்களைத் தங்கள் மொழியின் பெயராலேயே (தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் ) அழைத்துக் கொள்ளும் போது நம் மாநிலத்தில் மட்டும் இந்த 'திராவிட' என்ற வார்த்தையை ஏன் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள் ? தி மு க என்று பெயர் வர என்ன காரணம்? தி க திராவிடர்களின் முன்னேற்றத்துக்குப் பாடுபடவில்லை என்பதுவா ? " என்றெல்லாம் கேட்பீர்கள் போலிருகிறதே?

எது எப்படியோ, 26/1/2009 ம் தேதி (அல்லது 25/1/2009 - சரியாக நினைவில்லை ) வந்த Times of India இதழில் ஷோபா டே ஒரு கட்டுரையில் எழுதி இருந்தது போல், சத்யம் என்ற பெயர் கொண்ட நிறுவனம் இவ்வளவு பெரிய ஒரு முறைகேட்டில் சிக்கி இருப்பது நம்மிடம் நிலவும் irony யைத் தான் காட்டுகிறது.

அப்படின்னா திராவிட முன்னேற்ற கழகம் என்ற சொற்றொடர் ஒரு paradox ஆன்னு கேக்கறீங்களா ? இதுக்கு நான் பதில் சொன்னா அப்புறம் கருணாநிதி இதுக்கும் ஒரு கவிதை எழுத ஆரம்பிச்சுடுவார். ஆள வுடுங்க சாமி.

கேள்வி 2 க்கான பதில்: ஏன், ரெண்டு பேரும் சேராம இருந்திருந்தா மட்டும் குற்றவாளிகளைப் பிடிச்சிருப்பாங்களா ? அடப் போங்கப்பா. புரியாத ஆளா இருக்கிங்களே.

கேள்வி 3 க்கான பதில்: யாருக்கு இன்னும் புரியாம இருக்கு? அத முதல்ல நீங்க சொல்லுங்க. 'திராவிட' என்ற பெயரை சுவிஸ் பேங்க் அக்கௌன்டின் சாவியாகப் பயன்படுத்தும் கட்சிகளைப் பல வருடங்களாகப் பார்த்து வரும் எல்லோருக்கும் புரிந்திருக்கும். குறைஞ்ச பட்சம் ' தமிழர்களே தமிழர்களே நீங்கள் என்னை கடலில் தூக்கி எரிந்தாலும் உங்களுக்கு கட்டுமரமாக இருப்பேன் கைவிட மாட்டேன் ' என்ற நகைச்சுவைக் காட்சியை கலைஞர் டிவி இல் பார்த்து வரும் எல்லோருக்கும் கண்டிப்பாகப் புரிந்திருக்கும்.
[ அது சரி உங்களோட ஏட்டு சுரக்காய் உதாரணம் சரியா வரலியே? கலைஞரின் பேச்சு 'அத்தைக்கு மீசை முளைச்சா...' என்பது மாதிரியான கதை. நடக்கவே நடக்காத ஒன்னைப் பத்தி சொல்றது இருக்கே, அது, பச்சையா சொன்னா, ஏமாற்று வேலை. ]

கேள்வி 4 க்கான பதில்: சமீபத்தில் விவேக் ஒரு டிவி நிகழ்ச்சியில் முன்னாள் குடியரசுத் தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களை பேட்டி கண்டார். பாவம் அந்த மரியாதைக்குரிய மேதை நொந்து நூடுல்ஸ் ஆகும் அளவுக்கு விவேக் தன் 'திறமையைக்' (?!) காட்டினாரே, அதுக்காக இருக்குமோ ? அப்படித் தான் இருக்கும். காங்கிரஸ்சுக்கு கலாமைப் பிடிக்காது. விவேக் திரு கலாம் அவர்களைப் பண்ணுன டார்ச்சரைப் பாத்த காங்கிரஸ்காரங்க ரொம்ப சந்தோஷப் பட்டு இந்த விருது விவேக்குக்குக் கிடைக்க சிபாரிசு பண்ணி இருப்பாங்க.

Post a Comment

தொடர்பவர்கள்

There was an error in this gadget

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP