கலைஞன் எல்லை கடந்தவன்

ஸ்லம் டாக் மில்லியனர் படம் பற்றி பல வித விமர்சனங்கள் வந்த வண்ணம் இருப்பது அந்த படத்தைப் பார்க்காத என்னைப் போன்றோரை மிகவும் குழப்புகிறது. ஆனால் அதில் ஒரு விமர்சனம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. அதாவது "ஒரு வெள்ளைக்காரன் இந்தியர்களின் மூளையை பயன்படுத்தி விருதுகள் வாங்கி குவித்திருக்கிறார். இந்த படத்திற்காக விருது பெற்ற ரகுமான் இதை விட சிறந்த தனது பங்களிப்பை இதற்கு முன் வந்த சில படங்களில் பண்ணியிருக்கிறார்." என்று மகேஷ் பட் என்ற பாலிவுட் இயக்குனர் சொல்லியிருப்பதாக படித்தேன்.
வெள்ளைக்காரன் இந்திய மூளையை திருடி விருது வாங்கி இருந்தாலோ அல்லது நம்மவர்கள் அந்த படத்திற்கு இலவசமாக பணி புரிந்திருந்தாலோ அவர் சொன்னதை ஒரு விதத்தில் ஏற்று கொள்ளலாம். ஒரு இயக்குனர் என்ற முறையில் ஒரு இசை அமைப்பாளரின் மூளையை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது அவரது கடமை. அதில் என்ன தவறு இருக்க முடியும்..? அதை ஒரு இயக்குனரே குறை சொல்வது வேடிக்கை மட்டுமல்ல வேதனையானதும் கூட .
அது மட்டுமல்ல இந்த படத்தில் இந்தியாவின் வறுமையை படம் பிடித்து இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஒரு இயக்குனர் பெயர் வாங்கி விட்டதாகவும் வருகிற விமர்சனத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கதைப் படி அது ஒரு குடிசை பகுதியில் நடை பெரும் பட்சத்தில் அதை குடிசை சார்ந்தே காண்பிக்க வேண்டியிருக்கும் அதை காண்பித்தால் வறுமையை படமெடுத்தார் என்று குற்றம்சாட்டுவது எந்த விதத்தில் சரி ..? கலைஞன் என்பவன் எல்லைகளை கடந்தவன் தயவு செய்து அவனை இந்த நாட்டை சேர்ந்தவன் அந்த இனத்தை சேர்ந்தவன் என்று பிரித்து பார்க்காதீர்கள். 


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP