சத்யம் ஒரு சரிவு

கடந்த நாலு நாளா ஜூனியர் விகடன் முதல் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வரை தலைப்பு செய்திகளில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் வீழ்ச்சி பற்றி தான் ஒரே புலம்பல். இதற்கு காரணம் என்ன ? ராமலிங்க ராஜு கைது .. என செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. இதெல்லாம் பற்றி நாமும் மீண்டும் பேச வேண்டாம். ஆனால் இந்த பிரச்சனை பற்றி சில செய்திகள் இவ்வாறும் சொன்னது... "இந்தியாவின் மதிப்பை உலக அரங்கில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் குலைத்துவிட்டது..". "மென்பொருள் துறையின் வீழ்ச்சி இந்தியாவில் ஆரம்பமா..?" இவர்களுக்கு மென்பொருள் துறையில் உள்ள எனது சில கேள்விகள். 1. இந்தியாவில் சத்யம் நிறுவனம் செய்த குளறுபடியால் இந்தியாவின் மானம் உலக அரங்கில் போனதென்றால்.. இதை விட பெரிய அளவில் குளறுபடி பண்ணி கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு மேலாக நிர்வாகம் நடத்திய அமெரிக்காவைச் சேர்ந்த LEHMAN BROS. நடத்திய குளறுபடிகளால் பாதிக்கப் பட்டவர்கள் இதை விட பல மடங்கு அதிகம்..? அது மட்டுமல்ல அந்த நிறவனத்தின் வீழ்ச்சியை ஏன் ஊடகங்கள் இந்த அளவுக்கு பெரிது படுத்த வில்லை ..? அமெரிக்காவின் மானம் LEHMAN BROS.-ஆள் போனதை விட, சத்யம் நிறுவனத்தின் வீழ்ச்சியால் இந்தியாவின் மானம் பெரிய அளவில் போகிறது. 2. மென்பொருள் துறை மீது நிறைய பேருக்கு ஒரு வித எரிச்சல் நீண்ட காலமாகவே இருந்து வந்தது அவர்களின் வரிசையில் வந்த சில வயித்தெரிச்சல் கும்பலின் வாக்காகவே இதை எடுத்துக் கொண்டாலும், நம்மோட பதில் இதுதான், உழைப்பாளிகளே மென்பொருளில் வேலை பார்ப்பவர்கள் ஏதோ எ.சி-யில் உட்கார்ந்து கொண்டு லட்சம் லட்சமாக சம்பாதிப்பவர்கள் என்ற உங்களது எண்ணத்தை தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள், அப்படி உங்களுக்கு யாரவது சொல்லியிருந்தால் அவர்களை இந்த விஷயத்தையும் படிக்கச் சொல்லுங்கள். நீங்களோ அல்லது வேறு யாருமோ நினைப்பதை போல கம்ப்யூட்டரை முறைத்து பார்த்து கொண்டிருந்தால் வேலை நடந்து விடாது. காலையில் போனவுடன் ஆரம்பிப்பார்கள் எங்கள் எஜமானர்கள் (அதாங்க PROJECT LEADERS) நேத்து நீ அடிச்ச கொடு வேலை செய்யலை ... என்னன்னு பார்த்து நீ உடனே சரி பண்ணலைன்னா இன்னைக்கு சாயந்திரமே உன்னுடைய வேலை காலி. அப்படின்னு கூலா சொல்லிடுவாரு. அதே மாதிரி சாயந்திரமே வேலை போயிடும். அதை நினைச்சு பயந்து கிட்டே இருக்கணும் ஒவ்வொரு நாளும். இதை விட கொடுமை என்னங்க இருக்குது. அதுவும் இப்ப இருக்குற பொருளாதார நெருக்கடில இவுங்க நெருக்கடி இன்னும் அதிகமா இருக்குது. இது மட்டுமில்ல வெள்ளைகாரர்களுக்கு கோபம் வராத அளவுக்கு நடந்துக்க தெரிஞ்சுருக்கனும். இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா லட்ச ரூபா சம்பளம் கொடுத்தால் இதெல்லாம் பெரிய விஷயமில்லை. அப்படின்னு சொன்னீங்கன்ன நாளைக்கே உங்களுக்கு அப்படி ஒரு வேலை ரெடி-யா இருக்குன்னு வச்சுக்குங்க. அந்த டென்ஷன் எல்லாம் பட்டால் தான் தெரியும். இதை விளையாட்டா சொல்லலை சத்யமா சொல்றேன். (நான் நிஜ "சத்யமா"தான் சொல்றேன்). அப்படி ஏன் கஷ்ட்ட படுற பேசாம இங்க வந்து விவசாயம் பார்க்க வேண்டியது தானே, அப்படின்னு நீங்க கேட்கலாம், சரி எல்லாரும் விவசாயம் பார்த்தால் என்ன ஆவுறது..? ஏற்கனவே கரும்பு விலையை உயர்த்த சொல்லி விவசாயிங்க போராடுறாங்க. மென் பொருள் துறை என்பது ஏதோ சுகவாசிகளின் இருப்பிடம் போல் பேசுறதை முதலில் நிப்பாட்டுங்க. சுருக்கமா சொல்லனுமின்னா விவசாயிகள், மூட்டை தூக்குறவங்க உடம்புக்கு வேலை கொடுத்தால் நாங்க மூளைக்கு வேலை கொடுக்கிறோம். அவ்வளவுதான். அது மட்டுமில்லாம நம்ம நாட்டுல இருந்து ஒரு காலத்துல வெள்ளையர்கள் கொண்டு சென்ற செல்வங்களை எல்லாம் நாங்க டாலரா இந்தியாவிற்குள் கொண்டு வருகிறோம். இதை விட என்ன பண்ணனுமின்னு நினைக்கிறீங்க..? சரி இதை விடுங்க, நம்ம கதைக்கு வருவோம், மென்பொருள் அழிவதில் சந்தோசம் கொள்ளும் கனவான்களே தயவு செய்து உங்க எண்ணத்தை மாத்துங்க, மேலும் அது இந்த மாதிரி ஒரு நிறுவனம் கணக்கு குளறு படியில் செய்த தவறால் மாட்டி இருக்கிறார்கள். மென்பொருளில் எந்த பிரச்சனையும் கிடையாது. கொஞ்சம் புரியுற மாதிரி சொல்லனுமின்னா இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்கி தந்த காங்கிரஸ் ஒரு தேர்தலில் தோற்றால் உடனே மக்களுக்கு தேசப் பற்று இல்லை என்று அர்த்தமா..? அதே மாதிரி தான் இதுவும்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP