தேசிய விருது - 2010

முதலில் ஒரு மன்னிப்பு.. நீண்ட நாட்களாக எழுத முடியாமல் போனதற்காக. ஆனால் இன்று என்னை எழுத தூண்டிய விஷயம் "நான் கடவுள்" படத்திற்கு பாலாவிற்கு கிடைத்த தேசிய விருது. "எண்ணங்களில்" முதன் முதலாக விமர்சனம் வந்தது அந்த படத்திற்குதான். பாலாவிற்கு இந்த விருது கிடைத்ததற்காக மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறோம். இந்த விருதுக்கு பாலா தகுதியானவர்தான். ஆனால் இது சம்மந்தமாக ஒரு வீடியோ காட்சி பார்த்த பொழுது பாலா கழுத்தில் நிறைய மாலைகள் மலர் மாலைகள் அல்ல சந்தனத்தால் ஆன மாலைகள் அல்லது அது மாதிரியான ஒரு மரத்தால் செய்த  மாலைகள்  தெரிந்தது. நான் கடவுள் வெளியான போது ஒரு பேட்டியில் தனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்லி இருந்தார் அப்படி பட்டவர் எப்படி இந்த மாதிரியான மாலைகளை கழுத்தில் சுமந்து கொண்டுள்ளார் அல்லது என்ன மாதிரியான காரணம் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் எழுந்ததுதான் மற்றபடி நிறையில் குறை காணும் எண்ணம் கிடையாது.
பாலாவிற்கு மீண்டும் வாழ்த்துகள். அது போலவே வழக்கம் போல் இளையராஜாவிற்கு விருது கிடைக்காமல் போனதில் எந்த ஆச்சரியமும் இல்லை ஏனெனில் ராஜா விருதுகளுக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லி வரும் எம்மை போன்றவர்களின் வாக்கு பொய்க்காமல் பார்த்துக்கொண்ட நடுவர் குழுவிற்கும் வாழ்த்துகள்(!?).


1 comments:

M.S.R. கோபிநாத் January 25, 2010 at 5:00 PM  

சரவணன், அடிக்கடி பதிவு போடுங்க. உங்களுக்கு மகிழ்ச்சி கொடுக்கும் விதத்தில் இன்று பத்மபூஷன் விருது இளையராஜாவுக்கும்,ரகுமானுக்கும் அறிவித்திருக்கிறார்கள். சந்தோஷம் தானே..

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/padma-bhushan-aamir-khan.html

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP