செய்திகள் வாசிப்பது செந்தில் -- கேட்பவர் கவுண்டமணி
கவுண்டமணி - செந்தில் இணை நகைச்சுவை பெரும்பாலும் ரசிக்கத்தக்க வகையிலேயே இருக்கும் அதில் நக்கல் நையாண்டிகள் இருந்தாலும் நகைச்சுவை ருசி சற்றே தூக்கலாகவே இருக்கும். அதனால் நாம் சமீபத்தில் படித்த சில விஷயங்களை இந்த இணை மூலமாக சொல்லலாம் என்று நினைக்கிறோம். இது முதல் பகுதி இப்பகுதியில் எப்போதுமே செந்தில் செய்திகளை படிப்பவருமாக அதை பற்றிய தனது கண்ணோட்டத்தை பதிய வைப்பவராக கவுண்டமணி அவர்களும் இருப்பார்கள்.
செந்தில்: அண்ணே வணக்கம்னே எப்படி இருக்கீங்க என்ன காலையிலேயே டீக்கடை பக்கம் வந்துட்டீங்க, இந்தாங்கன்னே பேப்பர் படிக்கிறீங்களா..?
கவுண்டமணி: டீ சட்டி தலையா நான் என்ன உன்ன மாதிரின்னு நினைச்சியா எனககு நிறைய வேலை இருக்குடா.. (மனசுக்குள் உட்டா நமக்கு படிக்க தெரியாத விஷயத்தை நமக்கிட்டேயே போட்டு வாங்க நினைக்கிறான்.. நான் மாட்டுவேனா ..). நாங்க எல்லாம் நியூஸ் டிப்போ டா ... ஜெனரல் நாலேஜ் அதிகம் டா நீ வேணும்னா படி நான் அதை பத்தி அந்த செய்தியை பற்றி நான் நிறைய விஷயங்களை சொல்லுறேன்..
செந்தில்: சரிண்ணே.." என்னை 4 முறை சிறையில் அடைத்தார்கL. நான் என்ன தவறு செய்தேன். என் இனம் அழிக்கப்படுவதைக் கண்டு நல்ல அப்பனுக்குப் பிறந்த என்னால் பொறுக்க முடியவில்லை." அப்படின்னு சீமான் சொல்லியதாக வந்திருக்குன்னே... என்னன்னே இப்படி பொத்தாம் பொதுவா சொல்லிப்புட்டார் ?
கவுண்டமணி: ஆமாம் இப்ப இவர் தான் நம்ம ஊர்ல நல்ல அப்பனுக்கு பொறந்தவங்களுக்கு எல்லாம் சர்டிபிகேட் கொடுக்கிறாரா ..? ஒ அதனாலத்தான் எல்லாரையும் என் சொந்தங்கலேன்னு சொல்றாரா ...?
செந்தில்: இருந்தாலும் உங்களுக்கு குரும்புன்னே...
கவுண்டமணி: டே நீ யார்ன்னு எனககு தெரியும் நான் யாருன்னு உனக்கு தெரியும் இந்த ஐஸ் வைக்கிற வேலையெல்லாம் இங்கே வேண்டாம் மகனே அடுத்த செய்திய படி கருத்து சொல்லிட்டு நான் கிளம்பனும எனககு நிறைய வேலை இருக்கு.
செந்தில்: அண்ணே எனக்கும் வேலை இருக்கு அப்புறமா படிச்சு சொல்றேன்..(மனசுக்குள் என்னமோ இவரு தான் சூரியனையே எழுப்புறவர் மாதிரி பேசுவாரு...)
கவுண்டமணி: டே மெது வடை தலையா கொவிச்சுக்கிடதாட.. படி டா.
செந்தில்: கிவ் ரேச்பெட் அண்ட் டேக் ரேச்பெட்.
0 comments:
Post a Comment