கலைஞனை மதிக்காத சமூகமே...!

ஒரு குறிப்பிட்ட நபரின் கேள்விக்காக இந்த கட்டுரை எழுதப்பட்டிருந்தாலும் நீண்ட நாட்களாகவே மனதை உறுத்திக்கொண்டிருந்த ஒரு விஷயத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள இது உதவும் என்று நம்பிக்கையோடு. .
சமீபத்தில் நாம் எழுதியிருந்த "ராஜாவின் புகழுக்கு மற்றுமொரு சான்று" என்ற கட்டுரையில் வந்த விஷயத்தை ஒரு நண்பர் "ஏண்டா அதையே திரும்ப திரும்ப சொல்லிகிட்டே இருக்க ..?" என்று கேட்டிருந்தார். அதாவது சும்மா ராஜாவின் புகழை திரும்ப திரும்ப பேசிகிட்டே இருக்க என்று.
சமீபத்தில் விகடன் பொக்கிஷம் என்ற தலைப்பில் ஆனந்த விகடன் பழைய விகடனில் வந்த பேட்டிகள்,விமர்சனங்கள் என்று பல விஷயங்களையும் மீண்டும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. அந்த வரிசையில் "சிகப்பு ரோஜாக்கள்", "முதல் மரியாதை" போன்ற படங்களின் விமர்சனங்களும் வந்திருந்தது. அதில் ஒரு வரி கூட ஒரு வார்த்தை கூட ராஜாவின் இசையை பற்றி குறிப்பிடவில்லை. அது ஏன் ..? தயவு செய்து யாரும் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம், காரணம், திட்டமிட்டு அவரது இசை திறமையை ஒடுக்க நினைத்த மேல்தட்டு கனவான்களே. விகடன் விமர்சனம் நம்மிடையே எந்த அளவிற்கு பிரபலம் என்பதை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை, அந்த விமர்சனத்திலேயே இப்படி என்றால்..? சரி அவர்கள் சொல்லி என்ன ஆக வேண்டியது அப்படின்னு சொல்லிட்டு போக என்னால் முடியாது. விகடனை படிக்கும் லட்சக்கணக்கான வாசகர்களில் சில ஆயிரம் பேர்களாவது இப்படி எடுத்து சொன்னால்தான் உண்டு.
அவர்களுக்கு எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டியது ஒரு நல்ல இசை ரசிகனின் கடமை என்று நினைக்கிறேன். அதை விகடன் இணையதளத்திலேயே பதிவு செய்து இருக்கிறேன். அதை பலபேர் ஆதரித்தும் இருக்கிறார்கள். அதுவுமில்லாமல் இப்படி பேசாமல் போய் போய் தான் இன்று ராஜாவை சாருநிவேதிதா போன்றவர்கள் விமர்சித்து கொண்டுள்ளார்கள். அதுவும் கண்மூடித்தனமாக. எல்லா படைப்பும் விமர்சனத்துக்குரியவை தான் அதில் சந்தேகம் இல்லை. ஆனால் கண்மூடித்தனமாக செய்யப்படுபவை தான் கண்டிக்கத்தக்கவை. சாருநிவேதிதா போன்றவர்கள் ஆரம்ப காலம் தொட்டே இளையராஜா நல்ல இசையை வழங்கவில்லை என்று சொல்வதுடன் இளையராஜாவின் ஒரு பாடல் கூட நல்ல பாடல் இல்லை என்று சொல்வது எந்த விதத்தில் நியாயம்..? விமர்சனத்திலும் ஒரு தர்மம் வேண்டாமா ..? ஒரு சின்ன உதாரணம் சாருநிவேதிதா சொல்கிறார் "நான் கடவுள் படம் ஒரு உலக தரமான படம் என்பதில் சந்தேகமே இல்லை ஆனால் அதை அப்படி பார்க்க முடியாமல் செய்வது இளையராஜாவின் இசையே..." -இதற்கு மேல் அவரிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும். ஒரு கூடுதல் செய்தி "உலகிலேயே மிகவும் கடினமான காரியம் என்பது என்னைப் பொறுத்தவரை ஜேசுதாசின் பாடல்களை கேட்பது தான் என்ன ஒரு கொடுமையான (!!!!???) குரல் ..." இது சாருநேவேதிதா சொன்ன மற்றொரு விமர்சனம். இப்படியெல்லாம் பேசுபவர்கள் இருக்கிற பட்சத்தில், இப்படியெல்லாம் ராஜாவின் இசையை இருட்டடிப்பு செய்பவர்கள் இருக்கிற பட்சத்தில் என்னைப் போன்றவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி கொண்டிருப்போம். இதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. ஒரு கலைஞனுக்கு அவன் ஊதியத்தை விட உயர்வானது ரசிகர்களின் ஆதரவு தான். இங்கு எந்த சாதி என்று பார்த்துதான் கலைஞர்களும் மதிக்கப்படுவது வேதனையிலும் வேதனை. பாரதியார் பாடல்கள் சாஸ்தீரிய சங்கீதத்தில் இடம் பெற்றால் அது தர்மம் ஆனால் அதுவே கண்ணதாசன் பாடல்கள் வந்தால் வரம்பு மீறல். பாரதியார், கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார், வீர பாண்டிய கட்டபொம்மன் , காமராஜர் போன்றோர் சாதியை ஒழிக்க பாடு பட்டார்கள் ஆனால் அவர்களுக்கு சாதி முத்திரை குத்திக்காடிய மக்களை என்னவென்று சொல்வது..? இங்கே நான் இளையராஜாவின் புகழ் பாடியதாக சுட்டிக்காட்டிய நண்பருக்கு ஒன்று சொல்லி கொள்கிறேன், நல்ல கலைஞனை மதிக்க வேண்டியது ஒரு சமுதாயத்தின் கடமை, இளையராஜாவை யாரும் மதிக்கலைன்னு சொல்ல வரலை ஆனால் அந்த கலைஞனின் திறமைக்கேற்ற சன்மானம் (அங்கீகாரம்) வழங்கப் படவில்லை என்பதே என் போன்றோரின் வாதம். அந்த அங்கீகாரம் கிடைக்கும் வரை நான் சொல்லிக் கொண்டேதான் இருப்பேன்.
அந்த நண்பருக்கு இன்னொரு செய்தி இசை அமைப்பாளர் ரஹ்மானுக்கு பாராட்டு விழா நடந்த பொழுது ஏற்புரை வழங்கிய அவர் சொன்னார் ... "...ஆஸ்கார் அவார்டு வாங்குவதற்கு சில சேனல்கள் இருக்கின்றன அதன் மூலமாக நாம் அப்ரோச் செய்ய வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அவர்களுக்கு நம்மை பற்றி தெரியாது..." அது போலத்தான் இதுவும் ராஜாவின் இசை நல்ல இசை என்று மனசுக்குள் வைத்துக்கொண்டிருந்தால் மட்டும் போதாது அது எப்பேர்பட்ட நல்லிசை என்பதை புரிய வைக்க வேண்டும். அதில் ஒரு சிறு முயற்சி தான் இது.


7 comments:

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் October 14, 2009 at 12:32 PM  

யாராவது, என்னவாவது சொல்லிக்கொண்டு போகட்டும். ராஜா... ராஜாதான் நண்பரே! நீங்க எழுதுங்க. அவர் ஒரு மலை!

hari raj October 14, 2009 at 8:27 PM  

மிக நல்ல பதிவு.

ஹரி ராஜகோபாலன்

Anonymous,  October 15, 2009 at 12:48 AM  

ஜேசுதாசின் குரலை கொடுமைனு சொல்லும்போதே தெரியவேண்டாமா இந்த சாரு நிவேதிதாவுக்கு ஒரு ஈரமண்ணும் தெரியலைனு....இவங்கல்லாம் விமர்சனம் பண்ணலேன்னு இபோ யாரு அழுதா.....அதுலேயும் ராஜாவோட ஒரு பாட்டு கூட நல்ல பாட்டு இல்லியமா....போய் புள்ளைங்கள படிக்க வெக்க சொல்லுங்க....

Unknown October 15, 2009 at 9:40 AM  

1976 ல் தொடங்கிய பயணம் இன்றும் தொடர்கிறது.அக்டோபர்-09 வரை 2009 ல் மட்டும் ராஜாவின் இசையமைப்பில் வெளி வந்துள்ள படங்கள் 1.நான் கடவுள் 2.நந்தலாலா 3.வால் மீகி 4.அழகர் மலை 5.ஜெகன் மோகினி6.கண்ணுக்குள்ளே.டப்பிங் படம் 1.பழசி ராஜா .ஆக மொத்தம் 7.வேறு எந்த இசையமைப்பாளருக்கும் 2009ல் இத்தனை படங்கள் வரவில்லை.நிஜமாகவே பலம் வாய்ந்தது என்பதினால் தான் சிங்கத்தினை காட்டிற்கு ராஜா என்று சொல்கிறோம்.சிங்கம் காட்டிற்கு ராஜா இல்லை என்று சொன்னாலும் அது நம்மை வந்து சீண்டாது.அது போல் தான் இளையராஜாவும்."சிகப்பு ரோஜாக்கள்", "முதல் மரியாதை" போன்ற படங்களின் விமர்சனங்களும் வந்திருந்தது. அதில் ஒரு வரி கூட ஒரு வார்த்தை கூட ராஜாவின் இசையை பற்றி குறிப்பிடவில்லை.ஆனால் அந்த விகடன் தயாரித்த வால்மீகி படத்திற்கு இசை இளையராஜா.அதற்கு அடுத்து வெளியான "அழகர் மலை" பட விமர்சனத்தில் பெயரில் தான் இளையராஜா இருக்கிறார் என நையாண்டி செய்கிறது. "விமர்சன குழுவினர் "அருகமணி கருகமணி" பாடலை கேட்டிருக்க வாய்ப்பிருந்திருக்காது.போற்றுவார் போற்றட்டும் தூற்றுவார் தூற்றட்டும்.ராஜா என்றும் ராஜாவாய் தான் இருப்பார்.

Muthu Vijayan October 15, 2009 at 1:01 PM  

சரவணன் உங்கள் கருத்து மிகவும் சரியானது தான் இருபினும் இளையராஜவின் திறமையை குறைத்து சொன்னாலும் மிகைத்து சொன்னாலும் அவரின் உண்மையான திறமை மாறபோவதில்லை. என்னை பொறுத்த வரையில் இளையராஜாவின் இசை பிடிக்காதவர்கள் மிகவும் சிலரே ஆனால் இளையராஜவை பிடிக்காதவர்கள் பலர் உள்ளனர். இவர்கள் இளையராஜாவை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்பதே நிஜம். கவிஞர் வாலி சொன்னது போல் இளையராஜாவை அறியாதார் அறியாதாரே. இன்னும் 100 ஆண்டுகளுக்கு பின் பிறபவருக்கு இளையராஜாவின் உருவம் தெரியாது ஆனால் அவரின் இசை தெரிந்து இருக்கும். அவர்கள் இளையராஜாவின் பாடலை கேட்கு நிச்சயம் ரசிப்பார்கள், இவரின் இசை நுணுக்கங்களை பார்த்து நிச்சயம் அச்சிரியபடுவார்கள்.

ஆதலால் நண்பரே நாம் ஏன் இப்படி பட்ட விமர்சனகளை கேட்டு கவலை படவேண்டும், நாம் பாட்டுக்கு ராஜாவின் பாட்டை கேட்போம்.

Obsessed with Meera! ♥♥♥♥ October 16, 2009 at 1:18 PM  

Charu Niveditha,
when there is a reason to support your depreciation of musical legend like Maestro Ilayaraja ( I mean if you really sound enough in music to talk ill about the composition of one of the godfather of indian music ) you can talk. But you are definitely not onesuch. Just for the fulsome praises and afterall money you are trying to get popular and pathetically you are proving yourself tawdry. I fear these are the traits of illegitimates.
I, on behalf of all the fans of maestro Ilayaraja wish that you manifest yourself as a legitimate

Prasanna

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP