அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 3

ரொம்ப நாளாச்சு இந்த பகுதிக்கு வந்து ஆனால் திரும்ப வருவதற்கு இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல் திருவிழா ஆரம்பித்து விட்டது. முதல் கட்ட வாக்கு பதிவு நடந்து முடிந்து விட்டது. வழக்கம் போல் கூட்டணி தாவல்கள், கடைசி நேர உடன்பாடுகள், பேரங்கள் எல்லாம் கன ஜோராக நடைபெற்று வருகிறது. சில பத்திரிக்கைகள் இதுதான் முதல் முறை என்பது போல் எழுதி வருவது அதை விட பெரிய கொடுமை. சரி இதை தடுக்க என்னதான் வழி...? பேசாமல் அரசியல் என்பதை சேவை என்ற வளையத்திலிருந்து வெளியிலெடுத்து வியாபாரம் என்ற வட்டத்திற்குள் அடைக்க வேண்டும். தயவு செய்து கோப படாமல் சிந்தித்து பாருங்கள் இது உண்மையென புரியும். இப்பொழுது என்ன நடக்கிறது "அரசியல் சேவை" என்ற பெயரில் "அரசியல் வியாபாரம்" தானே நடக்கிறது. சரி இதை எப்படி அங்கீகரிக்கப்பட்ட வியாபாரம் ஆக்க வேண்டும் ..?
பா.மா.க என்ற கட்சி என்ன பண்ணிக் கொண்டிருக்கிறது ஒரு முறை தி.மு.க ஆதரவு அடுத்த தேர்தலுக்கு அண்ணா.தி.மு.க என்று மாறி மாறி இந்த கொள்கை அரசியல் கோட்பாட்டு அரசியல் என்பதெல்லாம் வெறும் வெட்டி பேச்சு என்பதை நிரூபித்து விட்டது இதை எந்த சட்டமாவது தடுக்க முனைந்ததா..? இல்லை மக்களான நாம்தான் அந்த கட்சியை மண்ணை கவ்வ வைத்து ஒதுக்கி விட்டோமா..? இல்லை. அதாவது மவுன புரட்சி என்பதை போல மவுன அங்கீகாரம் கொடுத்து விட்டோம் எதற்கு அரசியல் வியாபாரத்திற்கு தான். அதை பேசாமல் சொல்லிவிட்டே செய்யலாமே. உதாரணமாக பா.ம. க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நாங்கள் இந்த இந்த நல திட்டங்களை அமுல் படுத்துவோம் என்றும் அப்படி அமுல் படுத்தப்படும் திட்டங்களுக்கு இவ்வளவு சதவீதம் உதவி தொகையாக (கமிஷனாக ) பெற்றுக்கொள்ளப்படும். அறிமுகபடுத்தப்படும் நல திட்டங்களின் தேவைகளுக்கேற்ப நாமும் அந்த கட்சிக்கு வாக்களிக்கலாம். உதாரணமாக கூவம் சுத்தப்படுத்தப்படும் திட்டம் மூன்று மாதங்களில் முடிக்கப்படும் என்றும், அதன் மொத்த தொகையில் 10% தொகை பா.ம.க கட்சிக்கு வந்து சேரும் என்றும் கொள்ளலாம். சரி அப்படி வந்து சேரும் தொகை எப்படி கண்காணிக்க படும் என்று கேட்டால், கட்சிகளுக்கென்று துவக்கப் படும் அந்த வங்கி கணக்கு பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் அது தினசரிகள் மூலமாகவோ, தொலைகாட்சி மூலமாகவோ மக்களுக்கு தெரிவிக்கப்படும். கேட்பதற்கு சிரிப்பா இருக்கா..? ஆனால் இது நடக்காது என்றோ முடியாது என்றோ எனக்கு தோன்றவில்லை. தற்பொழுது நடைமுறையில் உள்ள தகவலறியும் சட்டம் போலவும், வியாபாரம் எனப்படும் பொழுது பங்கு சந்தையை உள்ளே இழுக்க முடியாமல் இருக்க முடியவில்லை, எப்படி பொது இடத்தில் பங்கு சந்தையின் விவரங்கள் வெளியிடப் படுகிறதோ அது போல கட்சியின் வங்கி கணக்கை ஏன் காட்டக்கூடாது..? அதே போல் கூவம் சுத்தப்படுத்தும் திட்டத்தை மூன்று மாதத்தில் முடிக்காமல் போவதற்கு என்னென்ன தடை கற்கள் இருக்கிறதென்பதை, ஒரு பங்கை வெளியிடும் அன்று அந்த பங்கை வெளியிடும் நிறுவனம் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வதால் உள்ள எதிர்மறையான விஷயங்களையும் பட்டியலிட்டு சொல்லுவதைப் போல் ஏன் சொல்ல முடியாது. அது மட்டுமில்லாமல் ஒரு திறந்த நிர்வாகம் நடை பெறுவது அந்த அரசின் மீதான மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் என்றே தோன்றுகிறது. இது பா.ம.க வுக்கு மட்டுமல்ல காங்கிரஸ்,பா.ஜ.க என அனைவருக்கும் பொருந்தும். எனக்கு தெரிந்து இது அடுத்த தலை முறைக்கான அரசியலுக்கு ஒரு ஆதாரமாக இல்லாவிட்டாலும் ஆரம்பமாகவாது இருக்கும் என்று நம்புகிறேன்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP