நாடகம் விடும் வேளைதான் உட்சகாட்சி நடக்குதம்மா..
தலைப்பை படித்தவுடனே நீங்கள் நாம் எதை பற்றி பேசப் போகிறோம் என்று யூகித்திருந்தால் நீங்கள் பெரிய ஆள்தான் என்று உங்களுக்கு நீங்களே ஒரு தட்டு தட்டிக் கொள்ளுங்கள்.
இலங்கை தமிழர் படுகொலைக்காக தமிழக முதல்வர் இருந்த உண்ணாவிரத நோன்பினை பற்றித்தான் சொல்ல போகிறோம். அந்த நாடகத்தினை மன்னிக்கவும் அந்த உண்ணா நோன்பினை சன் தொலைகாட்சி இணைப்பு பெற்றவர்கள் அனைவரும் கண்டிருக்கலாம். பார்க்கத்தவரியவர்களுக்காக நாம் கண்ட சில காட்சிகள்...
1. மண்டபம் மாதிரி இருந்த ஒரு திறந்த அரங்கத்தில் தான் இது நடைபெற்றது (அண்ணா நினைவிடம்) . முதல் சிறிது நேரம் அமர்ந்திருந்த கலைஞர் சிறிது நேரத்தில் படுத்து விட்டார். கால் மாட்டில் மனைவி தாயாளு அம்மாளும், தலை மாட்டில் துணைவி ராஜாத்தியம்மாளும் அமர்ந்திருக்க.
2. பிரிவுக்கு முன் இருந்தது போலவே இப்போதும் இருப்பதாக தயாநிதி காட்டிக் கொண்டார். சன் தொலைக்காட்சியின் ஒளிபதிவாலருக்கு இடம் பிடித்து கொடுத்ததாகட்டும், தாயாளு அம்மாவின் காதில் அடிக்கடி சில விஷயங்கள் சொல்லி செல்ல தட்டு வாங்குவதிலாகட்டும், வந்த விருந்தினர்களை கவனிப்பதிலாகட்டும் இப்படி எல்லாவற்றிலும். (சும்மாவா ..!!!)
3. தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி உண்ணாவிரதத்தினை கைவிடுமாறு கோஷம் போட்டுக்கொண்டே இருந்தது உட்ச பச்ச காமெடி. (நீங்கள் வேண்டும் நீங்கள் வேண்டும் தயவு செய்து உண்ணா விரதத்தை கைவிடுங்கள் என்ற கோஷம் மட்டும் காதில் விழுந்தது).
4. சில அமைச்சர்களின் பாட்டை நினைத்தால்தான் இன்னும் பாவமாக இருந்தது இவ்வளவு சொத்து சேர்த்த பிறகும் (கஷ்ட்டப்பட்டு) . அவர்கள் ஒரு சேரில் கூட அமர்த்தப்படாமல் நின்று கொண்டே இருந்ததைப் பார்க்க.
5. தயாநிதியும் கனிமொழியும் அக்னி நட்சத்திர கார்த்திக் பிரபு ரேஞ்சுக்கு அடிக்கடி பார்த்துக் கொண்டார்கள்.
6. "இவர் குடும்பத்துக்கு செய்வார் நாங்க பார்த்துக்கிட்டே இருக்கனுமா..?" என்று பேசி கட்சியிலிருந்து விலகிய நடிகர் ராதா ரவி எல்லா குடும்ப உறுப்பினர்களுடனும் மரியாதையாக பணிந்து பேசி தன்பங்கை சரி வர செய்தார்.
7. கூடியிருந்த மக்களை விட அதிக எண்ணிக்கையில் காமிராக்கள் இருந்தது நாடகத்தின் வெற்றியை உறுதி செய்ய இயக்குனர் (?!!) மிகவும் பாடு பட்டிருந்தது தெரிந்தது.
8. கலைஞர் போன்ற பழுத்த அரசியல்வாதிகளே இந்த மாதிரியான நாடக அரங்கேற்றத்தை இத்தனை முறை செய்வார்கள் என்றால் வருங்கால தமிழக அரசியலை நினைத்தாலே பயமாக இருக்கிறது. (விடிவு காலமே வாராதான்னு ).
9. இந்த உண்ணாவிரதம்தான் போர் நிறுத்தத்தை ஏற்படுத்தியதென்றால் ஏன் இதை முன்னமே செய்யவில்லை ...? (ஒரு வேலை தமிழக உளவுத்துறை அவ்வளவு மெதுவாக செயல்படுகிறதா...?)
10. இதெல்லாம் போதும்டான்னு சொல்லி ஸ்டாலின் தனது ஆதாரவாளர்களுடன் தனியாக அமர்ந்திருந்தது, இயக்குனரின் கவனக்குறைவோ (!?). (அதான் தயாநிதி இருக்காரேன்னு நினைச்சிருக்கலாம்..!)
11. மன்னராட்சி இன்னும் ஒழிக்கப்படவில்லையோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியது உற்றார் உறவினர்கள் மேடை வீற்றிருப்பாய் பார்க்கும் பொழுது .
(கலைஞர் சொன்ன "பாலைவன ரோஜாக்கள்" மாதிரி "மக்களாட்சியில் ஒரு மன்னரோ"!!)
12. கலைஞர் இந்த வயதான காலத்திலும் தன்னை வருத்திக் கொண்டதை தவிர குறிப்பிடும்படி இந்த நாடகத்தில் ஒன்றும் இல்லை.
சன் டிவி டாப் டென் பாணியில் சொல்வதென்றால் "உண்ணா நோன்பு -- உப்பில்லாமல் சப்பில்லாமல்".
2 comments:
Politics is the art of postponing decisions until they are no longer relevant...
இந்த பழமொழியை ஒழுங்காக கடைபிடிப்பது நம் அரசியல்வாதிகள் தான்
-சதீஷ்
Thanks Sathish
Post a Comment