ஒத்துக்குறேன் இப்ப ஒத்துக்குறேன்
இந்த வசனம் வடிவேலு வின்னர் படத்துல சொல்லுவார். சிரிக்கத் தெரியாதவர்களையும் சிரிக்க வைக்கும் நல்ல நகைச்சுவை காட்சி. சமீபத்தில் எனக்கு இப்படி நடந்த ஒரு விஷயம்...
சில நாட்களுக்கு முன் அலுவலகத்தில் நடந்த ஒரு பிரச்சனை காரணமாக மனம் குழம்பி இருந்த நான் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்றேன். அங்கிருந்த அர்ச்சகர் ஒருவர் நமக்கு நண்பராவார், அவருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது என் அலுவலகத்தில் நடந்த பிரச்சனையை கூறினேன், அதாவது எனக்கு நடந்த அலுவலக பிரச்சனையில் சம்மந்த பட்டவர் ஒரு பிரச்னையை பெரிதாக்க மேலதிகாரியிடம் முறையிட்டு விட்டார் என்று சொன்னேன். அவர் என்னுடைய நட்சத்திரம் ராசி எல்லாம் கேட்டார் நானும் சொன்னேன் அதை கேட்டு விட்டு அவர் சொன்னார் நானும் அதே நட்சத்திரம், அதே ராசி தான் என்று மகிழ்வுடன் கூறினார். மேலும் இந்த ராசி காரர்களுக்கு இப்பொழுது நேரம் சரி இல்லையென்றும் கொஞ்சம் படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் கூறினார்.
அந்த சமயம் பார்த்து அந்த கோவிலின் மேலதிகாரி அவரிடம் வந்து எங்களுக்கு பின்னால் வெகு நேரமாக நின்று கொண்டிருந்த ஒருவர் அர்ச்சனைக்காக காத்திருப்பதாகவும் உடனே அதை செய்யுமாறும் கூறி சென்றார். அந்த நண்பரும் அந்த அர்ச்சனையை முடித்து வருவதாக கூறினார். அந்த வேலையை முடித்து விட்டு வந்தார், அங்கே வந்தவுடன் சொன்னது இப்பவாது நம்புறியா இந்த ராசி உடையவர்களை எப்படி பாடாய் படுத்துதுன்னு. அந்த ஆளு இவ்வளவு நேரமும் உன் பின்னாடிதான் நின்னான் ஏதாவது சொன்னனா நேரா போயி மேலாளர் கிட்ட சொல்லிபுட்டான் இப்படித்தான்..என்று சொன்னார். எனக்கோ அந்த கலக்கத்திலும் மனசு விட்டு சிரிக்கிற மாதிரி இருந்தது.
இப்ப புரியுதா ஏன் வடிவேலு வசனத்தை சொன்னேன்னு.
0 comments:
Post a Comment