பூ -- ஒரு பார்வை
ரொம்ப நாளாக இந்த படத்தை பார்க்க காத்திருந்தேன். இந்த படம் நாஞ்சில் நாடன் எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்டது. வெகு நாட்களாவே தமிழ் திரை உலகம் நாவல்களை தழுவி எடுக்க வேண்டும் என்ற கோஷம் ஆங்காங்கே கேட்பதுண்டு எனக்கு தெரிந்து சமீபத்தில் வந்த சொல்ல மறந்த கதை (நாஞ்சில் நாடன்--எழுதியது) தங்கர்பச்சான் இயக்கியது, அதே மாதிரி தங்கர்பச்சான் எழுதிய சிறு கதையை ஒன்பது ரூபாய் நோட்டு அவரே இயக்கினார், இந்த படங்கள் பெரிய அளவில் வசூலை வாரி குவிக்கவில்லை என்றாலும், நல்ல படங்கள் என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது என்றே நினைக்கிறேன். இந்த பூ-வும் அதற்கு விதிவிலக்கல்ல.
தன் சொந்த மாமன் மகன் மேல் காதல் கொள்ளும் ஒரு கிராமத்து பெண் தன்னுடைய காதலுக்காக காதலையே துறப்பதுதான் கதை சுருக்கமாக சொல்ல முடியும். தன் மாமன் மகனை ஒவ்வொரு அங்குலமாக காதலிக்கும் மாரி (கதாநாயகியின் பெயர்) கிட்டத்தட்ட அதே அளவு காதலை அவள் மாமனிடமிருந்தும் பெற காரணமாக அவனின் கல்லூரி தோழியே காரணமாக இருப்பது இந்த படம் ஒரு எதார்த்த படம் என்பதை உணர்த்துகிறது. எனக்கு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரமாக படுவது கதாநாயகனின் அப்பாவாக வரும் பேனாக்காரர் தான். மாட்டு வண்டி ஒட்டி பிழைக்கும் அவர் தன்னை யாரும் "வண்டிக்காரன்" என்று அழைப்பதை தடுப்பதற்காகவும், தான் வண்டி ஒட்டி பிழைத்தாலும் தனக்கு எழுத படிக்க தெரியும் என்பதை காட்டிக்கொள்ளும் விதமாகவும் எல்லாவற்றையும் குறிப்பெடுத்து வைத்துக் கொள்வது, தன்னை வண்டிக்காரன் என்று குறிப்பிட்டதற்காக அவருடன் சண்டை போட்டுக்கொண்டு செல்வதாகட்டும், தன் மகன் என்ஜினியர் படிப்பு படித்தவுடன் முப்பத்தைந்தாயிரம் சம்பாதிப்பானா என்று கேட்கும் தனது முதலாளிக்கு "இல்லைங்கையா கூடவே கிடைக்கும்னு சொல்ராங்கயா.." என்று சொல்வதாகட்டும், இல்லை ஒரு மெக்கானிக் எஞ்சினியர் படிப்பு படித்தவனுக்கு ஒரு ஐயாயிரம் முதல் ஆறாயிரம் வரையே ஆரம்ப கால சம்பளம் கிடைக்கும் என்று தெரிந்தவுடன் நொறுங்கி போவதாகட்டும், தன் முதலாளி மகளை கட்டினால் தனது குடும்பத்தின் வறுமை தீரும் என்று எண்ணி தனது தங்கை மகளை தனது மகனுக்கு கல்யாணம் பண்ணாமல் விடுகிறார். இதன் விளைவாக குடும்பத்தில் யாரும் நிம்மதி இன்றி தவிப்பதும், இதற்கெல்லாம் தான் தான் காரணம் என்று அறிந்தவுடன் பூவின் காலில் விழுவதாகட்டும் எல்லா காட்சிகளுமே அவரை சுற்றியே நடப்பது அவரையே படத்தின் பிரதான கதா பாத்திரமாக காட்டுகிறது.
எந்த படமும் சரியான முறையில் மக்களிடம் கொண்டு செல்லப் பட்டால் அந்த படம் நிச்சயம் மக்களை சென்றடையும் என்று நம்புகிறேன். இந்த படத்தைப் பற்றி அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை நான் எங்குமே படித்ததில்லை. இது கூட இந்த படத்தின் தோல்வி காரணிகளில் ஒன்றாய் இருக்கலாம். குறைந்த பட்சம் தலைப்பையாவது மாற்றி இருந்திருக்கலாம் இப்படி.....
"தன்மான தகப்பன்" அல்லது "பேனாக்காரர்" .
0 comments:
Post a Comment