வசனங்களில் வாழ்க்கை ....
சில வசனங்கள் திரையிலிருந்து நீண்டு நம் வாழ்க்கையையும் தொட்டு தொடர்ந்து வருவதுண்டு. அதிலும் குறிப்பாக நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் வசனங்களில் நம்மை போன்ற நடுத்தர மக்களின் அன்றாட பிரச்சனைகளுக்கு வடிகால்கள் உண்டு. நாம் சில விடயங்களை இப்படி எடுத்துக்கொள்ள வில்லை என்றால் வாழ்க்கை வறண்ட பாலையாக மாறி விடும் அபாயம் உண்டு. நீங்க இதுவரை அப்படி நினைக்க வாய்ப்பில்லை என்றால், இந்த கட்டுரை அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் என்ற நம்பிக்கையோடு...
காட்சி-1: நீங்கள் காலை 9.05 -க்கு அலுவலகத்தில் நுழையும் போது உங்கள் மேலாளர் ஏன் ஐந்து நிமிடம் தாமதம் என்று கேட்கும் போது...
வசனம்: அப்பாடா இப்பவே கண்ணை கட்டுதே....
காட்சி-2: நீங்கள் உங்கள் அலுவலக நண்பரோடு பேசிக்கொண்டிருக்கும் போது உங்கள் அலுவலக மேலதிகாரி அழைக்கும் போது ...
வசனம்: பாஸ் இவங்க இப்படித்தான் .. இவங்களுக்கு வேற வேலையே இல்லை. ஏதாவது இடைஞ்சல் கொடுத்துக்கிட்டே இருப்பாங்க இதுக்கெல்லாம் பயந்தா நாம "தொழில்" பாக்க முடியுங்களா...
காட்சி-3: நீங்கள் ஒரு நிறுவனத்திலிருந்து விலகி இன்னொரு நிறுவனத்தில் சேர்ந்தவுடன் உங்களது பழைய நிறுவனத்தைப் பற்றி சொல்லும் போது ...
வசனம்: அது கம்பெனி இதெல்லாம் ஒரு கம்பெனின்னு இங்கெல்லாம் ஹும் எப்படித்தான் வேலை பார்க்கிறீங்களோ..
காட்சி-4:உங்கள் அணியில் உள்ளவர்கள் உங்கள் மேலாளரைப் பற்றி குறை சொல்லிவிட்டு உங்களிடம் அதை பற்றி கருத்து கேட்கும் போது...
வசனம்: (மனசுக்குள்) ஆஹா வளைய விரிக்கிரானே வம்புக் கிழுக்கிரானே....
காட்சி-5: நீங்கள் உங்கள் மேலாளரை பற்றி குறை சொல்லும் போது ஒரு நபர் மட்டும் அதை "வெகுவாக" ஆதரித்துப் பேசினால் ....
வசனம்: ஒருவேளை இவன் "அவனா" இருப்பானோ..?
காட்சி-6: நீங்கள் செய்யாத தவறுக்காக உங்கள் மேலாளர் உங்களை வறுத்தெடுக்கும் போது ...
வசனம்: எப்படித்தான் நம்மளை கண்டுபுடிக்கிராங்கன்னே தெரியலையே...
காட்சி-7: நீங்கள் அந்த தவறை செய்யவில்லை என்பதை அவரே உணர்ந்து உங்களிடம் சொல்லும் போது .....
வசனம்: நல்லா கிளப்புறாங்கடா பீதிய...
காட்சி-8: நீங்கள் உங்கள் சக அலுவலரிடம் பேசும் போது நான் நிச்சயமா இந்த கேள்வியை அடுத்த கூட்டத்தில் (மீட்டிங்கில்) கேட்க போறேன் என்று சொன்னதும் அதை "மிகவும்" ஆமோதிக்கும் விதமாக சொல்லும் நபரை பார்த்து ...
வசனம்: இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்பை ரண களம் ஆக்கிட்டாங்கப்பா...
இது மாதிரி இன்னும் பல சூழல்கள் உள்ளன அவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பார்க்கலாம். உங்கள் மனத்தில் தோன்றிய இந்த மாதிரியான வசனங்கள் இருந்தால் எனக்கும் தெரியப் படுத்துங்கள் நானும் பயன்படுத்திக் கொள்கிறேன்.
0 comments:
Post a Comment