கமெண்ட் கற்கண்டுகள் -- 2 (கண்டிப்பா சிரிக்க மட்டும்)

செய்தி: மார்ட்டினா நவரத்தினலோவா தனது தோழியை மணக்கிறார்.
கமெண்ட்: டேய் என்னங்கடா ... உங்க பிரச்சனை .... சும்மா இருக்க மாட்டீங்களாடா ....
செய்தி: சூர்யா நடிக்கும் புதிய படத்தின் பெயர் "சிங்கம்".
கமெண்ட்:Ivan Singama... ஏன்டா ungaluku எல்லாம் arive illaya. Allaku osarathula irukira ivana singamnu solringa.. Actor Director T.P. Gajendran ivana vida osarama iruparu. Ivan singamna, avaru என்ன ஒட்டகமா?
செய்தி:தனுஷ் நடிக்கும் புதியபடம் "மாப்பிள்ளை" இந்த படம் ரஜினியின் "மாப்பிள்ளை" படத்தின் ரீமேக்.
கமெண்ட்:ப்ளீஸ் நடிக்காதே. உன்னக்கு மணி வேண்டுமானால் பொய் பிச்சை எடு. தாங்க முடியலே உன் படமெல்லாம். யோசிச்சு பாரு. தமிழ் நாட்டு மக்கள் நலன் கருதி நடிப்பை விட்டுவிடு. டி கடை வைத்து பிழைத்து கொள்.
செய்தி: பாரதிராஜா மகன் மனோஜ் புதிதாக படம் இயக்க இருக்கிறார்.
கமெண்ட்:திரைக்கு பின்னாடி என்ன வேணா செய்துக்கோ. அப்பா மாதிரி கேமரா முன்னாடி வந்து எங்கள பயம் காட்டாத. சொல்ல முடியாது, எவனாவது கிறுக்கன் உனக்கும் இயக்குனர் சிகரம் II பட்டம் கொடுத்தாலும் கொடுப்பான். கிறுக்கு தமிழன எதுவும் சொல்ல முடியாது. அது சரி, உங்க அப்பாக்கு புலி பென்ஷன் நின்னு போச்சா? பாவம்.
செய்தி:அடுத்த படத்தில் இயக்கம் மட்டுமே நடிப்பு இல்லை -- சேரன் முடிவு.
கமெண்ட்:பதிவு செய்தவர்: பொறுமை
நடிச்சி உயிரை வாங்குவதை விட நடிக்காமலே மற்றவரை வாழ வைப்பது மேல் ....! மவனே ஏன் ஏன் ஏன் ...இப்படி ?


இதை என்னன்னு சொல்றது...

'புகையிலை இல்லா புது உலகம் படைப்போம்' என்கிறது சுகாதார அமைச்சகம். ஆனால், தான் தினமும் எண்பது சிகரெட் புகைப்பதை சாதனை என்கிறார் 77 வயதான ஸ்டீபன் துரைராஜ். நாற்பது வருடங்களுக்கும் மேலாகத் தொடர்கி றதாம் இவருடைய இந்த சா(வே)தனை!
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த இவர், தன்னுடைய புகைக்கும் சாதனைக்காக(?) ஏகப்பட்ட பட்டங்களை வாங்கிக் குவித்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரை சந்தித்தோம். சிகரெட்டும் கையுமாக நம்மை எதிர்கொண்டவர், ''மதுரை மெடிக்கல் காலேஜ்ல லேப் டெக்னீஷியனா வேலை பாத்தப்ப, ஓவரா சாக்லேட் சாப்பிடு வேன். அதைப் பாத்த நண்பர்கள், 'என்னப்பா... சின்னப்புள்ளத்தனமா சாக்லேட் தின்னுகிட்டு... சும்மா ஸ்டைலா சிகரெட்டை ஊதிப் பழகு'ன்னாங்க. அப்ப ஆரம்பிச் சதுதான்... இந்தப் பழக்கம். இப்ப வரைக்கும் விடமுடியலை!
1981-ம் வருஷம் சென்னையில நடந்த புகைபிடிக்கும் போட்டியில அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் போன்ற நாடுகள்லருந்து சுமார் நானூறுக்கும் மேற்பட்டவங்க கலந்துகிட்டாங்க. அதுல கலந்துகிட்டு, 'ஒன் ஹவர்'ல எண்பது சிகரெட்ஸை ஊதித் தள்ளி 'ஃபர்ஸ்ட் பிரைஸ்' வாங்குனேன். அதுக்காக, எம்.ஜி.ஆர். எனக்குத் தங்கப் பதக்கம்கூட கொடுத்து 'புரட்சிவீரன்(?)'னு பட்டம் கிடைச்சது. அப்புறமா டெல்லியில நடந்த போட்டியிலும் முதலிடத்தைப் பிடிச்சு, பிரதமர் இந்திரா காந்தி கையால பரிசு வாங்கினப்ப, 'புகைமன்னன்' பட்டம் கிடைச்சது...'' என்று அடுக்கிக்கொண்டே போன ஸ்டீபனை இடைமறித்த அவர் மனைவி பொன்னம்மாள்,
''இவரு இப்படி சிகரெட்டை ஊதித் தள்ளுறது எனக்கு பயமாத்தான் இருக்கு. ஆனா, இவரை பரிசோதிச்ச ஆந்திரா வைத்தியர் ஒருத்தரு, 'உடம்பு முழுக்க பாய்ஸனாகி மனுஷன் இரும்பு மனுஷனாயிட்டாரு. இப்ப இவருக்கு எந்த நோயும் இல்லை'னு சொல்லி இவருக்குத் தைரியமூட்டி விட்டுட்டாரே, என்ன பண்ணட்டும்?'' என்றார்.
இது குறித்து இதயம் மற்றும் நுரையீரல் சிகிச்சை மருத்துவரான டாக்டர் எம்.கே.கிரிதர்பாபுவிடம் கேட்டபோது, ''அதிகமா சிக ரெட் குடிச்சாலும், அவருடைய உடல்நிலை சீரா இருக்குன்னா, அதுக்குக் காரணம் அவரோட 'ஜெனட்டிக்'காதான் இருக்கும். அத னால, ஸ்டீபனை மத்தவங்க யாரும் முன்மாதிரியா எடுத்துக்கக் கூடாது. புகைப் பழக்கத்தால் ஸ்டீபனுக்கு ஏதாவதொரு பாதிப்பு நிச்சயம் இருக்கும். அது இப்போதைக்கு வெளியில் தெரியாமல் இருக்கலாமே ஒழிய, பாதிப்பே இல்லைன்னு சொல்லமுடியாது!'' என்றார்.


அட இங்க பார்றா...

''அடக்கடவுளே' என்று சொல்லவைத்த செய்தி..?''
''சமீப நாட்களாக கமல்ஹாசன் குறித்து இணையத்தில் உலவும் செய்தி. 'கமல் 1978-ல் 'சிவப்பு ரோஜாக்கள்' படத்தில் கில்லராக நடித்திருந்தார். சரியாக ஒரு வருடம் கழித்து, அதே போல பெண் களைக் குறிவைத்துக் கொல்லும் சைக்கோ ராமன் என்ற கொலையாளி கைது செய்யப்பட்டான். 1988-ல் 'சத்யா'வில் வேலையில்லா இளைஞனாக நடித்தார் கமல். 90-கள் முழுக்க நாட்டில் வேலை இல்லாத் திண்டாட்டம். 1992-ல் ஃபைனான்ஸ் கம்பெனி ஏமாற்றி ஓடுவதாக 'மகாநதி'யில் கதை. 1996-ல் நிஜமாகவே ஃபைனான்ஸ் கம்பெனிகள் முதலீடுகளை லபக்கி ஓடின. 2000-ல் இந்து-முஸ்லிம் கலவரம் குறித்த 'ஹேராம்' படம் வெளியானது. 2002-ல் குஜராத் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் மீதான இனப் படுகொலை. 2003-ல் 'அன்பே சிவம்' படத்தில் ஒரு காட்சியில் கமல் சுனாமி பற்றி பேசுவார். 2004-ல் நிஜமாகவே வந்தது சுனாமி. 2006-ல் 'வேட்டையாடு விளையாடு' படம் இரண்டு சைக்கோ கொலைகாரர்களைப் பற்றியது. தொடர்ந்த நாட்களிலேயே நொய்டாவில் மொனீந்தர், சதீஷ் என்னும் தொடர் கொலைகாரர்கள் பிடிபட்டனர். இப்போது 'தசாவதாரம்' படத்தில் அமெரிக்காவில் இருந்து உலகை அழிக்கும் கிருமி இந்தியாவுக்கு இறக்குமதி ஆவதாகச் செல்லும் கதை. இப்போது அமெரிக்காவைத் தாக்கிய பன்றிக் காய்ச்சல் கிருமிகள்தான் உலகெங்கும் பரவுகின்றன!'
இதை எல்லாம் படித்ததும் மனதில் தோன்றியது. கமலைத் தீர்க்கத்தரிசி என்று சொல்வதா... அல்லது அவர் படம் வெளியானதும் நிச்சயம் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்பதா? இந்தச் செய்தியைக் கமல் படித்தால், 'அடக் கடவுளே' என்று சொல்வாரோ!''
- வீரவிஜயன், மன்னார்குடி.
-விகடனின் நானே கேள்வி-நானே பதில் என்ற தலைப்பில் வந்த கேள்வி பதில் இது.


அமெரிக்காவில் அவமானம்..ஒரு தொடர்கதை..?

சமீபத்தில் அமெரிக்கா வந்த நடிகர் ஷாருக்கானுக்கு அமெரிக்கா குடியேற்றத்துறை, பல நெருக்குதலை கொடுத்ததாகவும் அது பெருத்த அவமானம் என்றும் ஷாருக்கானும், இந்திய அரசாங்கமும் புலம்பி இருப்பது, நமக்கு பல ஆச்சர்யங்களை தந்தது. குறிப்பாக டெல்லி முதல்வர் திருமதி.ஷீலா தீக்சித், "அமெரிக்கர்கள் இந்தியா வரும்பொழுது இது மாதிரி அவமானப்படுத்தினால்தான் இதன் முழு வீரியமும் அவர்களுக்கு தெரிய வரும்.." என்று பேசி இருப்பது நமக்கு சில ஆச்சர்யமான கேள்விகளை கேட்க தூண்டுகிறது.
ஆச்சர்யம்-1: இதற்கு முன், முன்னாள் குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாமுக்கு, கிட்டத்தட்ட இதே மாதிரியான சூழ்நிலை ஏற்பட்ட போதிலும், அரசாங்கம் இந்த அளவுக்கு அக்கறை காட்டியதா...?
ஆச்சர்யம்-2: முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் தனக்கு ஏற்பட்ட இந்த பிரச்சனையை பெரிதாக்க விரும்பவில்லை என்ற காரணத்தினாலும், இது அந்த நாட்டிற்குரிய சட்டதிட்டம் அதனால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை எனவும் கூறியது அவரது உண்மை அறியும் அறிவை காட்டுகிறதா..? இல்லை ஒரு பாலிவுட் சூப்பர் ஸ்டாருக்கு இருக்கும் தன்மானம் அவருக்கில்லையா...?
ஆச்சர்யம்-3: இதற்கு முன் தமிழ் நடிகர் கமலஹாசனுக்கும் இதே மாதிரியான ஒரு சூழல் ஏற்பட்ட பொழுது அப்போதைய மத்திய, மாநில அரசுகளும் இதே மாதிரியான பரபரப்பையும் ஆதங்கத்தையும் வெளிபடுத்தியதா...? இல்லை என்றால் பாலிவுட் சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே அந்த தகுதி இருப்பதாக ஹிந்திய மன்னிக்கவும் இந்திய அரசாங்கம் கருதுகிறதா...?
ஆச்சர்யம்-4: முஸ்லிம்களின் மீதான இந்த தீவிரவாத இமேஜ்-ஐ நீக்க அவர்கள் என்ன பண்ணவேண்டும்...? குறைந்த பட்சம் இந்திய முஸ்லீம்கள் என்ன பண்ண வேண்டும்..?



பிரபாகரன் செய்தது சரியா...?

பிரபாகரனைப் பொருத்த வரையில், அவர் ஒரு `வார் ஹீரோ' என்பதில் சந்தேகம் இல்லை. நல்லவர், வல்லவர், ஊழல் செய்யாதவர், தூய்மையான நிர்வாகத்தைத் தந்தவர் என்கிற இமேஜ் இருக்கிறது. போர் நிறுத்த சமயத்தில் நான் கிளிநொச்சியிலுள்ள `மடு' தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு தமிழர்கள் தன்னிறைவு பெற்றவர்களாய் வாழ்ந்ததைப் பார்த்தேன். அரிசி, ரொட்டி, காய்கனிகள் போன்ற அத்தியாவசியப் பொருள்களெல்லாம் மிகவும் மலிவான விலையில் கிடைத்தன. அதைப் பார்த்து எனது கார் டிரைவர் `அம்மா நாமும் இங்கேயே வந்து செட்டிலாகிவிடலாம் போல' என்று சொன்னார். ஆனால் அவ்வளவு பெரிய ஹீரோ தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னது, பேச்சுவார்த்தையை நம்பாதது, கடைசிகட்டச் சண்டை என்று தெரிந்தும் அங்கேயே இருந்தது சரியானதல்ல என்றே நான் சொல்லுவேன்.''

பிரபாகரனை பற்றி, நிமல்கா ஃபெர்னாண்டோ! சிங்களப் பெண்ணான இவர், சர்வதேச அளவில் குறிப்பிடத்தக்க மனித உரிமை ஆர்வலர். சமூக சேவகர். மனித உரிமைகள் விஷயத்தில் நாற்பது ஆண்டு கால பழுத்த அனுபவம் கொண்டவர். கொழும்புவில் உள்ள `பிளாட்ஃபாரம் ஃபார் ஃபிரீடம்' என்கிற மனித உரிமைகள் அமைப்பின் தலைவராயிருக்கிறார்.

நமது எண்ணங்களை பிரதிபலிப்பதாகவே இருக்கிறது பிரபாகரனை பற்றிய இவரது கண்ணோட்டம். குறிப்பாக கடைசிவரிகள்.


புல் லாட்ஜ் போட்டு யோசிப்பவர்கள்

திருத்தணி முருகன் கோவில் உண்டியலுக்குள் ஈரத் துண்டை உள்ளே விட்டு அதில் ஒட்டிவரும் நோட்டுக்களை திருடிய ஆசாமியை போலீசார் கைது செய்தனர். அவருக்கு 5 மாத சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.ஆந்திர மாநிலம் சந்திரகிரி பெத்தபேட், பிடிஐ காலனியைச் சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் ஜெமினிகணேசன் (32). இவர் பல நாட்களாக திருத்தணி முருகன் கோவில் உண்டியலில் நூதனமான முறையில் பணத்தை திருடி வந்துள்ளார். அவர் கோயிலில் யாரும் இல்லாத சமயத்தில் உண்டியலுக்குள் ஈரத்துண்டை போடுவார். பின்னர் அதில் ஒட்டி வரும் பணத்தை எடுத்து கொண்டு போய்விடுவார். தினமும் இப்படி பல முறை செய்து பணத்தை கொள்ளையடித்து வந்துள்ளார்.பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதற்கேற்ப கடந்த 17.2.2009ம் அன்று அவர் வழக்கம் போல் துண்டை நனைத்து பணத்தை எடுத்து கொண்டிருந்த போது கோவில் இணை ஆணையராக இருந்த தனபாலிடம் கையும், களவுமாக மாட்டினார்.இதையடுத்து அவர் திருத்தணி போலீசில் ஒப்படைக்கப்பட்டார். இன்ஸ்பெக்டர் மகேஷ் வழக்குப் பதிவு செய்து ஜெமினி கணேசனை செய்து சிறையில் அடைத்தார்.தற்போது வழக்கு திருத்தணி குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி செல்வம் முத்துக்குமாரி முன்னிலையில் நடந்தது. அப்போது நீதிபதி ஜெமினி கணேசனுக்கு 5 மாதம் கடுங்காவல் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார். இதையடுத்து அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரூம் போட்டு இல்லை புல் லாட்ஜ் போட்டு யோசிப்பாங்க போல. குற்றத்தில் ஈடு பட்ட அவரது பெயரை பாருங்கள்..ஒரே சிப்பு தான் (வடிவேலு பாணியில்) வருது போங்க.


காந்திக்கு மரியாதை.

மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்துவதை கட்டாயமாக்க சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் டிஸ்மிஸ் செய்து விட்டது.மகாத்மா காந்தி குறித்து உ.பி. முதல்வர் மாயாவதி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். இதையடுத்து வக்கீல்கள் ரவிகாந்த் மற்றும் சுகுமார் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில், ஒரு பொது நலன் மனுவைத் தாக்கல் செய்தனர்.அதில், காந்தியடிகள் இந்த நாட்டுக்கு ஆற்றிய சேவைக்காக, ஒவ்வொரு இந்திய குடிமகனும், அவருக்கு மரியாதை செலுத்த வேண்டியது அவசியமாகும். எனவே காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துவதை கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி பி.எஸ்.செளகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது.விசாரணைக்குப் பின்னர் நாட்டு மக்கள் காந்தியடிகளுக்கு மரியாதை செலுத்துவதை கட்டாயமாக்கி சட்டம் கொண்டு வர வேண்டும் என உத்தரவிட முடியாது.காந்தியடிகள் குறித்து மனுதாரர்கள் கூறுவதை முழுமையாக நாங்கள் ஏற்கிறோம். அதேசமயம், இதை முறைப்படுத்தியும், கட்டாயப்படுத்தியும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கவோ அல்லது சட்டம் கொண்டு வரவோ உத்தரவிட முடியாது. மேலும், இதுபோன்ற பொது நலன் மனுக்களையும் அனுமதிக்க முடியாது என்று நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்தனர்.

காந்திக்கு நல்லது செய்வதாக நினைத்து, கெடுதலே செய்திருக்கிறார்கள் இந்த வழக்கை தாக்கல் செய்தவர்கள். வேற என்னத்தை சொல்றது.


ராஜா இன்னும் "இளைய"ராஜாதான்

கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஒலி ஒளி காட்சி "அழகர்மலை" என்ற திரைபடத்தில் வரும் பாடல். இந்த பாடலை ராஜாவின் ரசிகர்களை மனதில் வைத்து உருவாக்கி இருப்பார்கள் என்றே தோன்றுகிறது. பாடலில் ராஜாவின் ஆளுமை நன்கு தெரிகிறது, ராஜாவின் இசை இன்னும் இளமையாக இருப்பதன் ரகசியம் என்னவோ...?
சமீபத்தில் கார்த்திக் ராஜாவின் பேட்டி ஒன்றை இணைய தளத்தில் பார்த்தேன், அதில் தனது தந்தையை பற்றி குறிப்பிடும் போது "எல்லாரிடத்திலும் மிகவும் அன்பாக இருப்பார், அவருக்கு அண்ணன் தம்பிகள் மீது மிகவும் பாசம். தாயை மிகவும் நேசிப்பவர்.." என்று சொன்னார் அந்த வார்த்தைகளை மனதில் வைத்து இந்த பாட்டை பார்க்கும் போது, அவை எவ்வளவு உண்மையான வார்த்தைகள் என்று உணரமுடிகிறது.
பின் குறிப்பு: "அழகர்மலை" படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் ராஜாவின் "பாண்டி நாட்டுதங்கம்" , "எங்க ஊரு பாட்டுக்காரன்", "எங்க ஊரு காவல் காரன்" போன்ற பாடல்களின் வரிசையில் இடம் பிடிக்கும் முழு தகுதியும் இருப்பதாகவே எனககு தோன்றுகிறது. நீங்களும் கேட்டு விட்டு சொல்லுங்கள்.


யாருக்காக ஜனநாயகம்..?

அமெரிக்காவில் தற்பொழுது ஒரு தலை போகிற பிரச்சனையாக பார்க்கப்படுகிற ஒன்று, மக்களுக்கான மருத்துவ காப்பீட்டை அரசாங்கமே நடத்த விருப்பது குறித்துதான். இதன் பலனாக குறைந்த கட்டணத்தில் மருத்துவ காப்பீட்டை மக்கள் பெற முடியும், மேலும் தற்பொழுது உள்ள தனியார் மருத்துவ காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை களைய முடியும் என்றும் அரசாங்கம் உறுதி அளிக்கிறது.
மக்கள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்றால், குறைந்த கட்டணத்தில் கொடுப்பதென்றால் அது கடைசியில் தங்கள் தலையிலயோ அல்லது தாங்கள் சார்ந்திருக்கும் தனியார் காப்பீட்டு நிறுவனத்தின் தலையிலயோ "கூடுதல் வரியாக" தான் விழும் என்ற அச்சத்தின் காரணமாகவும், மேலும் அரசாங்கம் பல விஷயங்களில் இப்படித்தான் கையிலெடுத்து தோல்வி அடைந்திருக்கிறது என்றும், வாதிடுகிறார்கள்.
சரி அரசாங்கம் குறைந்தவிலையில் கொடுப்பதால் அது ஏழைகளுக்கு சாதகமாத்தானே அமையும் என்று நானும் மேலெழுந்த வாரியாக நினைத்தேன், ஆனால் இது சம்மந்தமாக இன்று (08/11) நடந்த ஒரு கருத்தரங்கு ஒன்றில் மக்கள் எடுத்து வைத்த வாதங்கள் எனது எண்ணத்தை மறுபரீசிலனை செய்ய வைத்தது. அதற்கு முன் கருத்தரங்கு எப்படி நடந்தது என்பதை பார்க்கும் பொழுது சந்தேகமே இல்லாமல் ஜனநாயகம் அமெரிக்காவில் நன்கு வேரூன்றி இருக்கிறது என்பதை பறைசாற்றுவதாகவே இருந்தது. நான் பார்த்தது பென்சில்வானியா மாகாணத்தின் செனட்டர் (நம்மூர் எம்.பி) ஆர்ளேன் ஸ்பெக்டர், தனது மாகாண மக்களுக்கு அமுல் படுத்தப்போகிற இந்த திட்டத்தை பற்றிய ஒரு கலந்தாய்வு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் அதன் நேரடி ஒளிபரப்பை தான். ஸ்பெக்டர் அவர்களுக்கு என்பது வயது, இந்த வயதிலும் அவர் நிதானமாகவும் பொறுப்பாகவும் பதில் அளித்த விதத்தை வைத்துதான் அமெரிக்காவின் ஜனநாயகம் பற்றிய நன்மதிப்பை தோற்றுவித்தது. இதே மாதிரி நம்மூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்களோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் அவர்களோ இது மாதிரி ஒரு சட்டம் அமுல் படுத்துவதற்கு முன் அவர்களது தொகுதி பொது மக்களுடன் ஒரு கலந்தாய்வு செய்தால் எப்படி இருக்கும்..?
இது நம்மை போன்ற மிகப்பெரிய ஜனநாயக நாட்டை நமது ஜனங்களும் அறிந்து கொள்ள உதவுமே, மேலும் காசு வாங்கிகிட்டு ஒட்டு போடுறது, இல்லை ஓட்டே போடாமல் டிவி பார்த்துகிட்டு வீட்ல உட்காந்து இருக்கிறது, சட்டம் என்னவென்று புரியாமலே அதை பயன்படுத்த நினைப்பவர்களும் நிச்சயம் அவர்களது தவறை புரிந்து கொள்ள உதவும். நிச்சயம் நாம் இதை நடத்தலாம், ஏன்னா அமெரிக்காவிடமிருந்து டிஸ்கொதெஃ, பிசா, பௌலிங், அடுக்கு சினிமா கொட்டகைகள், மால் என எல்லாவற்றையும் இறக்குமதி செய்யும் நம் நாட்டில் ஏன் இந்த மாதிரி ஜனநாயகத்துக்கு தேவையான (ஆரோக்கியமான) விஷயங்களை இறக்குமதி செய்யக்கூடாது..? அல்லது முடியாது ...? ஜனநாயகம் யாருக்கானது ..மக்களுக்கானது தானே அவுங்களுக்கு தேவையானதை ஏன் அரசாங்கமே முன்னின்று "இறக்குமதி" செய்யக்கூடாது...?


என்னடா நடக்குது இங்கே..?

யுவன் ஷங்கர் ராஜா இசை அமைப்பில் வரவிருக்கும் அல்லது வரமாலே போகக்கூடிய வாய்ப்புள்ள ஒரு படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் ஒன்றின் முதல் வரி (படம்: கெட்டவன்). இந்த செய்திக்கும் இந்த வரிக்கும் மட்டுமே தொடர்பு உண்டு.

செய்தி இதுதான், நடை பெறவிருக்கும் இடைத்தேர்தலில் கம்பம் தொகுதியில் பாரதீய ஜனதா சார்பில் போட்டியிட தேர்வாகியிருந்த சசிகுமார் தி.மு.க வில் ஆகஸ்ட்-10 அதாவது இன்று சேர்ந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் "தி.மு.க அரசின் சாதனை, அழகிரியின் 'செயல்பாடு' ஆகியவற்றை கண்டு சேர்ந்தேன்" என்று கூறியுள்ளார். என்ன கொடுமைங்க இது அது இப்போது தான் இவருக்கு தெரிந்ததா, வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னால் தெரியவில்லையா..? இல்லை வேட்பு மனு திரும்ப பெறும் அன்றாவது தெரியவில்லையா..? தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் இந்த தருணத்திலா இவருக்கு தெரிந்தது ..? இல்லை அழகிரியின் "செயல்பாடு" அப்படியா..?
இப்ப படிங்க தலைப்பை...


கமெண்ட் கற்கண்டுகள் (சிரிப்பதற்கு மட்டும்)

இன்டர்நெட்டில் ஒரு விஷயம் படிக்கும் போது மறக்காமல் அதன் கீழே வரும் வாசகர் கமெண்ட் பகுதியையும் படிக்க தவறுவதில்லை, உண்மைலேயே அவ்வளவு நகைச்சுவை உணர்வு நம் மக்களுக்கு. தயவு செய்து இதை அந்த கண்ணோட்டத்தில் மட்டும் பாருங்கள். உங்களுக்கும் அது கற்கண்டாய் இனிக்கும். (உஸ்.. அப்பா இந்த தலைப்புக்கான காரணத்தை சொல்லும்போதே கண்ணைக்கட்டுதே...)
செய்தி: "தைரியமிருந்தால் மதுரையில் வந்து போட்டியிட்டு ஜெயிக்கட்டும் இந்த விஜயகாந்த் " என்று மு.க. அழகிரி பேச்சு.
கமெண்ட்: அடங்கோப்பன் மவனே .. இதே தொகுதியில உன் அப்பன் கூட உன்ன எதிர்த்து ஜெயிக்கிறது கஷ்டம்னு எங்களுக்கு தெரியும் ... ஏன் நீ போயி ஆண்டிப்பட்டி ல நின்னு ஜெயிக்க வேண்டியது தானே ... உனக்கே ஓவரா இல்ல ... மக்களை மெரட்டி வோட்டு வாங்குற நாய்க்கு நக்கல பாரு .. ஏகத்த் தளத்த பாரு ... நாயே நாயே ..
செய்தி: மோகன்லால் ஆதவன் பட ஒலித்தட்டை வெளியிடுகிறார்.
கமெண்ட்: ஒரு சாதாரண கிளெர்க் வேலைக்கு ஆயிரம் தகுதி கேக்குறாங்க... ஹீரோ என்றால் ஆஜானுபாகுவா இருக்கணும்.. ஆனா அஞ்சடி இருக்கிற இவனை எல்லாம் ஹீரோ ஆக்கி நம்மளை கொன்னு எடுக்க கிளம்பி இருக்காங்க... வேற வழி.... பார்த்து தலையில் அடிச்சுகிட வேண்டியது தான்.
செய்தி: அழகிரியை வாழ்த்தி பேசினார் வைரமுத்து.
கமெண்ட்:அப்பாவை ஜால்ரா அடிச்சி ஒரு வழி ஆகியாச்சு. இப்ப புள்ளைங்க காலம். அடிடா ராசா அடி. எத்தனை கோடிகளுக்கு வழியோ.. அதெல்லாம் இருக்கட்டும்... உங்க வீடு அம்மணி எழுதி உங்க பேர்ல வெளியிடதல்லாம் சொல்லவே இல்ல!
செய்தி:நடிகை ஸ்ரீதேவிகாவுக்கும் மும்பையைச் சேர்ந்த பைலட்டான ராமச்சந்திரனுக்கும் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி கேரளாவில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது.
கமெண்ட்:போன வேகத்தில் காவ்யா மாதவன் திரும்பி வந்ததுபோல் நீயும் திரும்பாமல் கை பிடித்த கணவனோடு கட்டையில் போகும்வரை சேர்ந்து வாழ்வதே சிறந்தது வாழ்த்துகள்! (நம்ம கமெண்ட்: ராசா இது வாழ்த்தா இல்லை சாபமா..)
செய்தி: கடலில் விழுந்த முமைத் கான் நீச்சலடித்து தப்பினார்!
கமெண்ட்: எப்பா! நல்ல வேலை நீச்சல் தெரிந்ததால் நீந்தி படகில் வந்து எங்கள் வயதில் பாலை வார்த்தார்.


அடுத்த தலைமுறைக்கான அரசியல் -- 4

சென்ற மாதத்தில் ஒரு நாள் இராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ்-ல் இரண்டாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்த பொழுது எனக்கு பக்கத்தில் அருகில் வெள்ளையும் சொள்ளையுமாக ஒருவர் பயணம் செய்தார். படிப்பதற்காக ஒரு வரலாற்று புத்தகத்தை நான் எடுத்தவுடன் அவர் மிகவும் பிரகாசமானார். அது என்ன ஏது என்று விசாரித்துக் கொண்டிருந்தார், நானும் பதிலுக்கு விசாரித்த பொழுதுதான் தெரிந்தது அவர் ஒரு சட்ட மன்ற உறுப்பினர் என்று. அவர் பெயர் ராம.சுப்புராம் திருமயம் தொகுதி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். அவருடன் பேசிக்கொண்டிருந்த போது நம்ம நாட்டுல மட்டும் ஏன் ஒரு சாதாரண குடிமகனுக்கு நியாயமான அரசாங்க வேலைகள் எதுவும் கையூட்டு இல்லாமல் நடப்பதில்லையே என்று கேட்டேன், அதற்கு அவர் சொன்னார் "முதல்ல உங்கள மாதிரி கேள்வி கேக்குறவுங்க எல்லாம் அரசியலுக்கு வரணும். அரசியல்ல இருக்குறவுங்களுக்கும் குடும்பம் இருக்குதுல்ல அவுங்க வருமானத்துக்கு அரசியலை நம்பாமல் இருக்கணும், உங்களை மாதிரி ஆளுங்க வெளி நாட்டில் சம்பாதிக்கும் போதே தங்களது குடும்பத்திற்கு தேவையானவற்றை சேர்த்து விடுவீர்கள், அதனால் உங்களை போன்றவர்கள் அரசியலுக்கு வரும் பட்சத்தில் அரசியலை ஒரு தொழிலாக பார்க்காமல், சேவைக்கான ஒரு களமாக கருதி செயல்படுவீர்கள் அப்பொழுது நீங்கள் எதிர் பார்க்கிற மாதிரியான நிகழ்வுகள் அரங்கேறும்..." என்றார். கூடுதல் தகவலாக அவர் கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சிங்கபூரில் வேலை பார்த்ததாகவும் அதனால் அவர் குடும்பம் வருமானத்திற்கு அரசியலை சார்ந்திருக்க வேண்டியதில்லை என்றும் சொன்னார். ஒரு கணம் யோசித்து பார்த்தால் இதில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனால் இதிலும் ஒரு குறை சொல்ல முடியும், ஏழையின் பிரச்சனைகளை அவர்களில் ஒருவராலேயே புரிந்து கொள்ள முடியும் என்றும் வாதிடலாம். அரசியலை சேவைக்குரிய தளமாக மாற்ற இன்னும் பல வருடங்கள் எடுத்துக்கொள்ளலாம் சொல்லப்போனால் பல தலைமுறை தங்களது வாழ்நாளை பலியிட வேண்டி வரலாம், இதற்கு பேசாமல் அரசியலை ஒரு தொழிலாகவே அங்கீகரித்து விட்டால் என்ன..? எப்படி விப்ரோ, இன்போசிஸ் போன்ற கம்பனிகள் இருக்கிறதோ அது மாதிரி தி.மு.க,அதிமுக என இரண்டு நிறுவனங்கள். ஒரு நிறுவனம் எப்படி தனது பங்குகளை வெளியிடும் முன்பு தனது நிறுவனத்தின் குறைகளையும் நிறைகளையும் வெளியிடுகிறதோ அது போல தேர்தல் என்று ஒன்று வரும் பொழுது அந்தந்த கட்சிகளின் நிறை குறைகளை வெளியிடலாம். பொதுவாக வெகு சிலரே தன் மேல் உள்ள குற்றத்தை ஒத்துக்கொள்வதில்லை, அதுபோல்தான் ஒரு நிறுவனமோ அல்லது கட்சியோ இருக்கப்போகிறது, ஒரு நிறுவனம் வெளியிடும் குறைகளை சரி பார்க்க ஒரு தணிக்கை துறை இருக்கிறதோ அது மாதிரி ஏன் தேர்தல் ஆணையமோ இல்லை வேறு ஒரு தணிக்கை துறையோ செயல்படலாம். இப்படியெல்லாம் இருந்தால்தான் கார்ப்பரேட் காலத்தில் ஜனித்த வருங்கால தலைமுறைக்கு அரசியல் (கட்சிகளின்) மீதான நம்பிக்கை இருக்கும்.



பின் குறிப்பு: ஒரு அரசியல் வாதி இப்பொழுதுள்ள வசதி காலத்தில் முடிந்த அளவு தொடர் வண்டியில் எல்லாம் பிரயாணம் செய்வது என்பது நிச்சயம் ஆச்சர்யமான ஒரு விஷயம் தான்.


நிருபர்களை மீட்ட கிளின்டன்

சில மாதங்களுக்கு முன்னால் வட கொரியா அரசாங்கத்தால் சிறை பிடிக்கப்பட்ட அமெரிக்க நாட்டை சேர்ந்த இரு நிருபர்கள் மீட்கப் பட்டிருக்கிறார்கள். என் வாழ் நாளில் நான் முதல் முறையாக கேள்வி படுகிறேன், ஒரு நாடு மற்றொரு நாட்டுடன் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் இல்லாததால், தனது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவரை அனுப்பி மற்றொரு நாட்டால் சிறை பிடிக்கப்பட்ட நிருபர்களை மீட்டு எடுத்திருக்கிறது. அந்த முன்னாள் குடியரசு தலைவர் பில் கிளின்டன். நம் நாட்டை சேர்ந்த சப்ரஜித் சிங் என்பவர் கிட்டத்தட்ட இதே மாதிரியான காரணங்களுக்காக சிறை பிடிக்கப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, அவரை மீட்க அவரது குடும்பத்தினர் போராடி வருவதை, நாம் செய்திகளில் பார்த்திருக்கலாம். அவரை மீட்க நாம் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பத்தாதோ என்றே தோன்றுகிறது, குறைந்த பட்சம் இதை பார்த்தபிறகாவது அப்படி தோன்றுகிறது. ஆனால் அதே சமயம் இப்படியும் நினைக்க தோன்றுகிறது அமெரிக்கா தனது "உலக தலைமை"யை மீண்டும் ஒரு முறை நிரூபித்துள்ளதோ என்று. உங்கள் எண்ணங்களையும் சொல்லுங்கள்.


அச்சமுண்டு அச்சமுண்டு = அச்சமில்லை அச்சமில்லை

அருண் வைத்தியநாதன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தின் இயக்குனர், சுமார் இரண்டரை வருடங்களுக்கு முன் சிவாஜி படத்தின் வெளியீடு சம்மந்தமாக சந்தித்ததில் நண்பராகி விட்டவர். இந்த "அச்சமுண்டு அச்சமுண்டு" படத்தின் கதையையும் அப்பவே சொன்னார். அதாவது அவுட் லைன் மட்டும். பேசிக்கொண்டிருக்கும் போது நல்ல படம் கொடுக்க வேண்டும் என்ற அவரது எண்ணத்தை வெளிப்படுத்தினார். அதை இப்போது நடை முறையிலும் செய்திருக்கிறார் என்று படத்தின் காட்சிகளும், பத்திரிகைகளில் வரும் பாராட்டுகளும் மற்றும் தொலைக்காட்சி விமர்சனங்களும், மெய்ப்பித்துக் கொண்டிருக்கின்றன. அவரை தெரிந்தவர் என்ற முறையில் அவருக்கு கிடைக்கும் இந்த பாராட்டுகள் என்னையும் மகிழ்ச்சி கொள்ள செய்கிறது.
இந்த படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை, ஆனால் தொலைகாட்சியில் பார்த்த சில காட்சிகள், இந்த படத்தை பற்றிய ஹாசினி பேசும் படம் விமர்சனம், இவை அனைத்தும் "அச்சமுண்டு அச்சமுண்டு" படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு நல்ல இயக்குனர் ஒருவர் கிடைத்துவிட்டார் என்று நாம் "அச்சமின்றி அச்சமின்றி" சொல்லலாம் போல தான் தோன்றுகிறது. வாழ்த்துகள் அருண்.


தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP