வித்தியாசத்திலும் ஒரு வித்தியாசம்

ஹிந்து ஆங்கில பத்திரிக்கையில் வாராவாரம் "பிடித்தது -- பிடிக்காதது" என்ற தலைப்பில் பிடித்த படத்தை பற்றியும் பிடிக்காத படத்தை பற்றியும் ஒவ்வொரு வாரமும் ஒரு பிரபலம் சொல்வது வழக்கம். இது ஒரு வித்தியாசமான பகுதி. ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரி சிலர் சொல்லி வருவர் இந்த வாரம் "பார்த்திபன் கனவு" பட இயக்குனர் கரு.பழனியப்பன் சொல்லி இருந்தார் வித்தியாசமாக அதே சமயம் சுவாரஸ்யமாக இப்படி....
எனக்கு "வாரணம் ஆயிரம்" படம் பிடிக்கும் ஏன்னா ஒரு தந்தை - மகனுக்கு இடையேயான உறவை இந்த அளவுக்கு கேவலமாக யாரும் சொன்னதில்லை. அதுவுமில்லாமால் இரண்டு வெவ்வேறு காலகட்டங்களில் நடக்கும் கதையை சொல்லும் போது இன்னும் நிறைய மெனக்கிட வேண்டும் என்று இந்த படம் சொல்லித்தந்தது. அது மட்டுமில்லாமல் கெளதம் மேனன் என்னைப் போன்ற இயக்குனர்களுக்கு வெறும் காட்சிகளின் கோர்வை மட்டும் இந்த மாதிரி படத்திற்கு போதாது நல்ல களமும் அவசியம் என்று சொன்னதற்காக இந்த படம் எனக்கு பிடிக்கும்.

எனக்கு பிடிக்காத படம் "அவள் அப்படிதான்" படம். இந்த படத்தை ருத்ரையா இயக்கி இருந்தார், இந்த படம் வெளி வந்த ஆண்டும் நான் பிறந்த ஆண்டும் ஒண்ணுதான். இந்த படத்தை எனது பதினைந்தாவது வயதில் பார்த்தேன், அப்பொழுதும் இதில் வரும் பாத்திரங்களின் படைப்பு புதிதாக உணர முடிந்தது.
இப்பொழுது பார்த்தாலும் அப்படிதான். இந்த படத்தை எந்த படத்துடனும் ஒப்பிட முடியாத இதன் உயர்ந்த தரம் என்ற உண்மை எனக்கு பிடிக்கவில்லை (??!!)
மேலும் இந்த படத்தில் இரண்டே அற்புதமான பாடல்கள் அவற்றை கூட நாம் ரசிக்கவில்லை என்ற உண்மை எனக்கு பிடிக்கவில்லை(???!!!).

இப்படியாக வித்தியாசாமான இந்த பகுதியை மேலும் வித்தியாச படுத்தி இருந்தார் கரு. பழனியப்பன். எல்லாரும் தனக்கு மணிரத்தினம் பிடிக்கும் பாலச்சந்தர் பிடிக்கும், பாரதிராஜா பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது, எனக்கு மணிவண்ணன் பிடிக்கும் என்று சொன்னார் இவர் . ஏன்னா மணிவண்ணன் தான் "நூறாவது நாள்" மாதிரியான த்ரில்லர் கொடுப்பார் "கோபுரங்கள் சாய்வதில்லை" மாதிரி குடும்ப படமும் கொடுப்பார், "அமைதி படை" மாதிரி அரசியல் நையாண்டி படம் கொடுப்பார், "பாலைவன ரோஜாக்கள்" மாதிரியான எழுச்சி படமும் கொடுப்பார், "முதல் வசந்தம்" மாதிரியான கிராமத்து கதைகளையும் கொடுப்பார். ஒரு இயக்குனர் என்பவர் எல்லா மாதிரியான படங்களையும் கொடுக்க தெரிந்தவராக இருக்க வேண்டும் அந்த வகையில் அவரை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னார். அதை நான் வழி மொழிகிறேன்.


Read more...

எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே ?

இந்த அரசியல்வாதிகள் பொதுவாவே பொதுமக்களை வைத்து நிறைய காமெடி பண்ணுவார்கள் அதுவும் தேர்தல் நேரத்துல கேட்கனுமா..? கவுண்டமணி பாணில சொன்னா இவங்க கிட்ட உண்டான கெட்ட பழக்கமே இதுதான். அது மாதிரி நம் கண்ணில் பட்ட சில தேர்தல் காமெடிகள்...

"நாப்பதுக்கு நாப்பது அம்மாதான் ஜெயிப்பாங்க, அவங்களோட ஆளுமைத்திறனுக்கு நிச்சயம் பிரதமரா வரணும்னு என் ஆசை. அது நடக்கும் காலம் வந்துவிட்டது" -- நடிகை விந்தியா சொன்னது . அது !!!

"கலைஞர், சோனியா கையில் இலங்கை பிரச்னை இருந்திருந்தால் ஏன் இவ் வளவு காலம் விட்டு வைக்கிறார்கள். மூன்று மாதத்திற்கு முன்பே போர் நிறுத்தம் செய்ய வழி செய்து எதிர்க்கட்சியின் விமர்சனத்திலிருந்து தப்பித்திருப்பார்கள்" -- நடிகர் பாக்கியராஜ் சொன்னது. பாஸ் இது கொஞ்சம் ஓவர் சப்பைக்கட்டு.

"தனது குடும்பத்திற்கு சொத்து சேர்கிற கருணாநிதிக்கு உங்கள் ஆதரவா இல்லை குடும்பமே இல்லாமல் உங்களுக்காக உழைக்கும் எனக்கு உங்கள் ஆதரவா ..?" அதெல்லாம் சரி அந்த கூட்டத்திற்கு சசிகலா வந்திருந்தாங்களா..?




Read more...

தொலைந்து போன என் சொந்தங்களே...

என் சொந்தங்களே அங்கே என் இனம் தாக்கப்படுகிறது இங்கே இவர்களுக்கு கொண்டாட்டம் கேட்குதா...? அப்படின்னு பேசி நமக்கு பேச்சாளரா அறிமுகமான இயக்குனர் சீமான் அவர்களின் சமீபத்திய தேர்தல் பேச்சு நம்மை சற்றே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அவர் சொன்னது இது தான் ".. நமக்கு ஆதரவாக தமிழ் ஈழம் பெற்று தர விரும்புகிற ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தலில் நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரியுங்கள்."
சீமானின் கோணம் மாறிப்போக என்ன காரணம்..? சீமானின் பாண்டிச்சேரி பேச்சு தான் அப்படி என்னதான் பேசினார் ..." அங்கே எனது இனம் செத்துக் கொண்டிருக்கிறது இங்கே இருக்கும் வேசி மகன்கள் கிரிக்கெட் பாத்துக்கிட்டு இருக்காங்க. (அப்பொழுது இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருந்தது). " நீங்க என்ன வேணும்னாலும் பேசலாம் யாரும் எதுவும் கேட்க கூடாது ஏன்னா நீங்க உணர்ச்சி வசப் பட்டு பேசிட்டேன்னு சொல்லிடுவீங்க. சரிங்க அதே மாதிரி ஏன் சோனியாவும் கணவனை இழந்த துயரத்தில் உணர்ச்சிவசப்பட்டு இலங்கை தமிழர் பிரச்சனையில் அமைதியா இருந்திருக்க கூடாது..? தமிழன் மட்டும் தான் உணர்ச்சி வசப் படனுமா ...?
வழக்கறிஞர் அருள்மொழி சொல்கிறார் இதற்கு முன் வரை சுப்பிரமணியசுவாமி, சோ இந்த இருவரின் கருத்தைத்தான் தனது ஈழக்கொள்கையாக ஜெயலலிதா அறிவித்து வந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் அவர் எடுத்திருக்கும் ஈழ ஆதரவு என்கிற நிலைப்பாடு தேர்தல் முடிந்தபிறகு அல்லது இவர் ஆட்சிக்கு வந்த பிறகு இப்படியே இருக்குமா என்று நம்புவதற்கு இல்லை. அப்படி தொடர்ந்தால் நல்லது. எந்த சர்வதேச சட்டமும் ஈராக் மீதும், தாலிபான்கள் மீதும் தாக்குதல் நடத்தும்படி அமெரிக்காவுக்கு அனுமதி கொடுக்க வில்லை. ஏற்கெனவே ஜெ.வி.பி. என்கிற இடதுசாரி சிங்களப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிறீமாவோ பண்டார நாயகா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திராகாந்தி இந்தியப் படையை அனுப்பி அப்போராட்டத்தை ஒடுக்கிக் கொடுத்தார். அவரே கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வங்கதேசத்தை உருவாக்கியது என்று எல்லாவற்றிற்கும் உதாரணங்கள் வரலாற்றில் இருக்கின்றன. அதைபோல தனி ஈழத்தையும் உருவாக்க நினைத்தால் அதுவும் முடியும்''
கவிஞர் தாமரை சொல்கிறார் ..வீடு பற்றி எரிகிறது. உடனே அணைக்க தண்ணீர் வேண்டும். அது நல்ல தண்ணீரா? சாக்கடையா? என்பதல்ல பிரச்னை. ஆகவே, இந்த நேரத்தில் ஈழமக்களுக்குத் துணையாக ஒலிக்கின்ற ஜெயலலிதாவின் கருத்தை வரவேற்கிறேன் என்று.
தாமரை தண்ணீரா சாக்கடையா என்று கவலை படமால் இருக்கலாம் அதற்காக தண்ணீரும் சாக்கடையும் ஒன்றாகி விட முடியாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.


Read more...

மக்களை ஏன் சந்திக்கணும்...?

''மக்களை நேரடியாகச் சந்திக்காமல் கொல்லைப்புறம் வழியாக, அதாவது ராஜ்யசபா எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக ஸ்டாலின் சொல்லியிருக் கிறாரே?''
''என்னைப் பார்த்து இதைக் கேட்கிற ஸ்டாலின், தன் தங்கை கனிமொழியிடம் இதைக் கேட்க வேண்டியதுதானே? அமைச்சர் ஜி.கே.வாசனைப் பார்த்துக் கேட்பாரா? முரசொலி மாறன் 30 ஆண்டுகள் இப்படித்தானே பதவியில் இருந்தார்? ஸ்டாலினுக்குத் தைரியம் இருந் தால், பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இதைச் சுட்டிக்காட்ட வேண்டியதுதானே? அரசியல்ரீதியாக விமர் சனம் செய்யலாம். அதற்கு அவருக்கு உரிமை உண்டு. ஆனால், மாநிலங்களவை உறுப்பினர் என்ற பதவியைக் கொச்சைப்படுத்தலாமா? அவையின் அடுத்த கூட்டத் தில் இந்தச் சிக்கலை எழுப்புவேன். ஸ்டாலின் இதற் குப் பதில் சொல்லித்தான் ஆக வேண்டும்!''

அதெல்லாம் சரி நீங்க தேர்தல்ல போட்டியே போடப் போறதில்லையா ...? அதுசரி பூசாரி எப்பவாது தன்னை பலி கொடுக்கணும்னு சொல்லுவாரா ...? நீங்கதான் பூசாரி ஆச்சே...


Read more...

எது கவிதை..?

ஆரம்பிச்சுட்டன்யா இவன் அப்படின்னு நீங்க திட்டுறது கேட்குது. இது இப்ப எழுதின கவிதை இல்லை ஆமாம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது. இப்ப நீங்க நினைக்கிறதும் சரிதான், ஆமாம் கல்யாணத்துக்கு முன்னால் எழுதியது...
"எது கவிதை..?"
மழை எழுதிய கவிதை நதி என்றால்
மொழி எழுதிய கவிதை தமிழ் என்றால்
தமிழ் எழுதிய கவிதை பாரதி என்றால்
கடவுள் எழுதிய கவிதை பெண் என்றால்
பெண் எழுதிய கவிதை குழந்தை என்றால்
என் விரல் பிரசவித்த இதுவும் கவிதையே



Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP