தொலைந்து போன என் சொந்தங்களே...

என் சொந்தங்களே அங்கே என் இனம் தாக்கப்படுகிறது இங்கே இவர்களுக்கு கொண்டாட்டம் கேட்குதா...? அப்படின்னு பேசி நமக்கு பேச்சாளரா அறிமுகமான இயக்குனர் சீமான் அவர்களின் சமீபத்திய தேர்தல் பேச்சு நம்மை சற்றே திரும்பி பார்க்க வைத்திருக்கிறது. அவர் சொன்னது இது தான் ".. நமக்கு ஆதரவாக தமிழ் ஈழம் பெற்று தர விரும்புகிற ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தேர்தலில் நீங்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை ஆதரியுங்கள்."
சீமானின் கோணம் மாறிப்போக என்ன காரணம்..? சீமானின் பாண்டிச்சேரி பேச்சு தான் அப்படி என்னதான் பேசினார் ..." அங்கே எனது இனம் செத்துக் கொண்டிருக்கிறது இங்கே இருக்கும் வேசி மகன்கள் கிரிக்கெட் பாத்துக்கிட்டு இருக்காங்க. (அப்பொழுது இந்தியா - இலங்கை கிரிக்கெட் தொடர் நடந்து கொண்டிருந்தது). " நீங்க என்ன வேணும்னாலும் பேசலாம் யாரும் எதுவும் கேட்க கூடாது ஏன்னா நீங்க உணர்ச்சி வசப் பட்டு பேசிட்டேன்னு சொல்லிடுவீங்க. சரிங்க அதே மாதிரி ஏன் சோனியாவும் கணவனை இழந்த துயரத்தில் உணர்ச்சிவசப்பட்டு இலங்கை தமிழர் பிரச்சனையில் அமைதியா இருந்திருக்க கூடாது..? தமிழன் மட்டும் தான் உணர்ச்சி வசப் படனுமா ...?
வழக்கறிஞர் அருள்மொழி சொல்கிறார் இதற்கு முன் வரை சுப்பிரமணியசுவாமி, சோ இந்த இருவரின் கருத்தைத்தான் தனது ஈழக்கொள்கையாக ஜெயலலிதா அறிவித்து வந்திருக்கிறார். தேர்தல் நேரத்தில் அவர் எடுத்திருக்கும் ஈழ ஆதரவு என்கிற நிலைப்பாடு தேர்தல் முடிந்தபிறகு அல்லது இவர் ஆட்சிக்கு வந்த பிறகு இப்படியே இருக்குமா என்று நம்புவதற்கு இல்லை. அப்படி தொடர்ந்தால் நல்லது. எந்த சர்வதேச சட்டமும் ஈராக் மீதும், தாலிபான்கள் மீதும் தாக்குதல் நடத்தும்படி அமெரிக்காவுக்கு அனுமதி கொடுக்க வில்லை. ஏற்கெனவே ஜெ.வி.பி. என்கிற இடதுசாரி சிங்களப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக சிறீமாவோ பண்டார நாயகா கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்திராகாந்தி இந்தியப் படையை அனுப்பி அப்போராட்டத்தை ஒடுக்கிக் கொடுத்தார். அவரே கிழக்கு பாகிஸ்தானுக்கு இந்திய இராணுவத்தை அனுப்பி வங்கதேசத்தை உருவாக்கியது என்று எல்லாவற்றிற்கும் உதாரணங்கள் வரலாற்றில் இருக்கின்றன. அதைபோல தனி ஈழத்தையும் உருவாக்க நினைத்தால் அதுவும் முடியும்''
கவிஞர் தாமரை சொல்கிறார் ..வீடு பற்றி எரிகிறது. உடனே அணைக்க தண்ணீர் வேண்டும். அது நல்ல தண்ணீரா? சாக்கடையா? என்பதல்ல பிரச்னை. ஆகவே, இந்த நேரத்தில் ஈழமக்களுக்குத் துணையாக ஒலிக்கின்ற ஜெயலலிதாவின் கருத்தை வரவேற்கிறேன் என்று.
தாமரை தண்ணீரா சாக்கடையா என்று கவலை படமால் இருக்கலாம் அதற்காக தண்ணீரும் சாக்கடையும் ஒன்றாகி விட முடியாது. இதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP