அறந்தாங்கி நாயகன் அரசியல் நாயகன்.?

அரசியல் சதுரங்கத்தில் எப்பொழுதுமே வெட்டுப்பட்ட காய்களாக சிலர் ஆகிவிடுவதுண்டு. அதாவது திறமை இருந்தும் வெற்றியை கூட்டணி கொள்ளத் தெரியாதவர்களாக. உலக அரசியலில் அப்படி யார் என்று எனக்கு தெரியவில்லை ஆனால் நிச்சயம் ஒருவராவது இருப்பார் என்று நம்புகிறேன். தமிழக அரசியலில் இதற்கு முன் சிலர் இருந்திருக்கலாம், ஆனால் எனக்கு தெரிந்த ஒருவர் தற்பொழுதைய இராமநாதபுரம் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் திருநாவுக்கரசர். இவர் எனக்கு பரிச்சயமானதுக்கு காரணம் எங்கள் தொகுதி வேட்பாளர் என்பது மட்டுமல்ல. அவர் கடந்து வந்த அரசியல் பாதைகளும் தான். இவர் முதல் தேர்தலில் வெற்றி பெற்றதுடன் துணை சபாநாயகராக ஆக்கப்பட்டார் எம்.ஜி.ஆர் அமைச்சரவையில். அதன் பின் தொழில் துறை அமைச்சர், வீட்டு வசதி துறை அமைச்சர் என்று பல்வேறு காலகட்டத்தில் பல்வேறு அமைச்சர் பதவி வகித்தவர். எம்.ஜி.ஆர் ஒரு முறை கின்னஸ் சாதனை புரிவதற்காக (அப்படி சாதனை புரிய நினைப்பவர்கள் மட்டுமே செய்ய துணியும் காரியம் அது) தனது அமைச்சரவையில் இருந்த அத்தனை பேரையும் ராஜினாமா செய்ய வைத்தார், அப்பொழுது அந்த அமைச்சரைவையில் இடம் பெற்றிருந்த திருநாவுக்கரசுவை தவிர. அந்த அளவிற்கு புகழ் பெற்ற திருநாவுக்கரசர் எம்.ஜி.ஆர மறைவுக்கு பிறகு எப்படி அரசியல் வாழ்க்கையை தொடரப் போகிறார் என்று எல்லோரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வேளையில், ஜெயலலிதாவை முன் நிறுத்தி அதிமுகவை கைபற்ற நினைத்தார், ஆனால் அது நடக்காமல் போகவே அதிமுகவை ஜெ அணி என்று பிரிக்கும் அளவிற்கு அந்த கட்சியின் முக்கிய சட்டமன்ற உறுப்பினர்களை வளைத்துப்போட்டு தனது அணியின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியவர். எங்க ஊர் காரர் என்பதை நான் நினைத்து பெருமை அடைவதற்கு இன்னொரு காரணமும் உண்டு நான் கல்லூரியில் படிக்கும் காலங்களில் என்னுடைய நண்பர்கள் இப்படி கூறுவதுண்டு .."பரவாயில்லை உங்க ஊர்ல படிச்சவுங்க நிறைய பேர் இருக்குறாங்கன்னு நினைக்கிறேன். ஏன்னா திருநாவுக்கரசு பல முறை பல சின்னத்துல நின்னுட்டார். எல்லா முறையும் வெற்றியும் பெற்றிருக்கிறார். காரணம் உங்க ஊர் மக்கள் வேட்பாளரின் சின்னத்தைப் பார்த்து ஒட்டு போடாமல் அவரது பெயரை படிச்சு பார்த்து குத்திருக்காங்க.." . இது ஒரு காரணமா இருந்தாலும் இன்னொரு விசயமும் எனககு தோனுது தான் எந்த சின்னத்துல நின்னாலும் அந்த சின்னத்தை மக்களின் மனதில் தெளிவாக பதிவு செய்யும் விதமாக தனது பிரச்சாரத்தை அவர் மேற்கொள்ளும் விதம். சரி அவரை நான் ஆதரிக்க காரணம் அவர் என் தொகுதியை சேர்ந்தவர் என்ற ஒரு காரணம் மட்டுமல்ல. ரொம்ப அலட்டிக்காமல் அதே சமயம் கடுமையான உழைப்பாளி, தனியாக கட்சி நடத்தி முதல் தேர்தலிலேயே மூன்று தொகுதிகளில் வெற்றி பெற்றார் , தாமரைகனியும் சாத்தூர் ராமச்சந்திரனும் அவர்களது சொந்த செல்வாக்கால் வெற்றி பெற்றிருந்தாலும் அவர்கள் திருநாவுக்கரசின் தலைமையிலான எம்.ஜி.ஆர அதி.மு.க சின்னத்துலையே போட்டி இட்டனர். ஆஸ்டின் என்பவரை கன்னியா குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தொகுதியில் நிற்க வைத்து வெற்றி பெற செய்தார். அதற்கப்புறம் இவர் எம்.பி ஆவதற்காக தனது சட்ட மன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து அரசன் என்ற புது முகத்தை நிற்கவைத்து வெற்றி பெற செய்தவர். சென்ற நாடாளுமன்ற தேர்தலில் ஜெயலலிதா பாஜாகாவுடன் கூட்டணி வைத்தவுடன் போட்ட முதல் கண்டிஷன் "திருநாவுக்கரசுக்கு சீட் கொடுக்க கூடாது" என்பது தான் விளைவு 40 தொகுதிகளிலும் தோல்வி என்ற வரலாற்று சாதனை தான். இவருக்கு சீட் கொடுத்திருந்தாலாவது 39:1 என்ற அளவிலாவது வெற்றி பெற்றிருக்கலாம் என்பது பல பத்திரிகைகளில் தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய கணிப்பாயிருந்தது. அது மட்டுமல்ல இவரது திறனை கண்ட வெங்கையா நாயுடு இவரை அதே கால கட்டத்தில் தங்களது கச்சிக்கான உ.பி. மாநில மாநிலங்களவை எம்.பி. பதவியை இவருக்கு கொடுத்தது இவரது முக்கியத்துவத்தை உணர்த்துவதாக இருந்தது. இப்பொழுது இருப்பவர்களுடன் ஒப்பிடும் பொது மிகவும் நேர்மையாகவே செயல்படக் கூடியவர். தனது தொகுதி மக்களின் செல்வாக்கை தனது வாக்குறுதி நிறைவேற்றல் மூலமாகவே பெற்றவர். அறந்தாங்கி நாயகன் அரசியல் நாயகன் ஆவாரா ..? தனது வெற்றி பயணத்தை தக்க வைத்துக் கொள்வாரா ..? என்பது சனி அன்று தெரிந்து விடும்.

இன்று வெளிவந்த ஜுனியர் விகடன் பத்திரிக்கையில் நாற்பது தொகுதி நிலவரத்தில் இவரே வெற்றி பெறுவார் என சொல்லப்பட்டுள்ளது, அந்த வாக்கு மெய்யாகும் என்று நம்புவோமாக.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP