அன்றும் இன்றும் என்றும்


அன்றும் -இன்றும்: 2004 பொதுத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை வலு கிடைக்க பல கட்சிகளை அணுகி ஆதரவைத் தேட வேண்டியிருந்தது. எனவே அப்போது தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த கருணாநிதியை சோனியா காந்தியே காரில் வந்து சந்தித்து ஆதரவு கோரினார்.
கருணாநிதி தன்னுடைய தேவைகளை ஆந்திரத்தின் முதுபெரும் அரசியல் தலைவர் என். ஜனார்த்தன ரெட்டியிடம் தெரிவித்து அவரும் எழுத்துபூர்வமாகவே சம்மதம் அளித்திருந்தார். ஒப்புக்கொண்டபடி இலாகாக்கள் வரவில்லை என்றதும் நிருபர்கள் கூட்டத்திலேயே அதைக் காட்டினார், இதெல்லாம் பழைய வரலாறு.
இப்போது சோனியா தலைமையிலான காங்கிரஸ் கட்சியே வலுவான நிலையில் உள்ளது. அத்துடன் சிறியதும் பெரியதுமாக எல்லா கட்சிகளும் வலியச் சென்று ஆதரவைத் தருகின்றன.
இப்போதைய நிலைமைப்படி அரசுக்கு ஆதரவு தெரிவிப்போரின் எண்ணிக்கை 300-ஐத் தாண்டிவிட்டது. எனவே சோனியா காந்தியின் வீட்டுக்கு முதல்வர் கருணாநிதி காரில் சென்று விருப்பப் பட்டியலைக் கொடுக்க வேண்டியதாயிற்று.

இது தினமணியில் வந்த செய்தி, சரி அன்றைக்கும் இன்றைக்கும் மாற்றங்கள்தான் நடந்திருக்கிறது. ஆனால் என்றைக்கும் மாறாமல் தி.மு.க எதிர்ப்பு நிலை எடுத்த தினமணிக்கு வாழ்த்துகள்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP