சொல்லத்தான் நினைத்தேன்..
சென்ற வாரம் வெளியான "ஈரம்" திரை படம் பெரிய அளவில் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. மகிழ்ச்சியான விஷயம். இந்த விஷயத்தை படம் வெளியாவதற்கு முன்பே என் மனதிற்கு பட்டது அதை பகிர்ந்து கொள்ளவும் எண்ணினேன். எண்ணம் எழுத்தாகாமல் போனதற்கு காரணம் சோம்பேறித்தனம் ஒன்றே காரணம். இனிமேலாவது இந்த சோம்பேறித்தனத்தை உதறவேண்டும், இப்படி சொல்லி சொல்லியே முப்பத்தேழு வயதாகி விட்டது. சரி மனதில் பட என்ன காரணம் என்று கேட்டால், இந்த படத்தை பற்றி அவ்வப்பொழுது வெளிவந்த புகை படங்களும், இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் (இயக்குனர் ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ்) தொடர்ந்து கொடுத்து வரும் நல்ல படங்களும், குறிப்பாக இந்த படத்தின் லோகோ புதிதாகவும் பார்த்தவுடன் மனதை கவரும் வண்ணமும் வடிவமைக்கப் பட்டிருந்த விதம். என்று அனைத்தும் தான்.
இந்த படத்தை நான் முழுமையாக இதுவரை பார்க்கவில்லை (டி.வி.டி வரை காத்திருக்கும் கும்பலை சார்ந்தவன் நான்). ஆனால் இந்த படம் சமந்தமாக வந்த திரை விமர்சனம், அவ்வப்பொழுது ஒளிபரப்பாகி வரும் காட்சிகளை பார்த்தேன் (நல்ல வேளை சன் டி.வி. இந்த படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையினை பெற்றதோ எங்களால் பார்க்க முடிந்தது). படம் மிக அழகாக ஒளிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படம் த்ரில்லர் வகையை சார்ந்ததால் கதை தெரியாமல் பார்த்தால் தான் சுவாரஸ்யம். எனினும் தண்ணியில் ஆவி புகுந்து பழி வாங்குவது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதால், அந்த ஒளிப்பதிவு நேர்த்தியும் துல்லியமான இசையும் நம்மை படத்தோடு ஒன்ற செய்துவிடுகிறது.
இந்த படத்தை ஷங்கர் தாயரித்து இருக்கிறார், அறிவழகன் என்ற அவரது முன்னாள் உதவி இயக்குனரை இயக்குனராக்கி இருக்கிறார். ஒளிப்பதிவை மனோஜ் பரமகாம்சா என்பவர் கையாண்டிருக்கிறார். தமன் (பாய்ஸ் படத்தில் குண்டாக ஒருத்தர் வருவாரே அவர்தான்). அறிவழகனின் முதல் படம், வழக்கம் போல முதல் படத்தில் முத்திரை பதித்து விட்டு காணாமல் போனவர்கள் பட்டியலில் சேராமலிருக்க வாழ்த்துக்கள்.
நீங்களும் வாய்ப்பு கிடைத்தால் தயவு செய்து இந்த படத்தை திருட்டு வி.சி.டி இல் பார்க்காமல் பாருங்கள்.
0 comments:
Post a Comment