வெல்லத்தான் நினைக்கிறேன் -- பேராண்மை
ஜனநாதன் தமிழ் திரை உலகின் சமீபத்திய நல்ல இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளவர். முதல் படமான இயற்கை ஒரு புது உலகத்தை, கப்பல்களில் மாலுமிகளாக வேலை செய்பவர்களின் களத்தில் ஒரு காதல் கதையை சொல்லியிருந்தார். இதில் வரும் கதாபாத்திரங்களில் ஒரு சிறு ஈர்ப்பு வர காரணம் அது பயணித்த களம் புதிது. அதற்கு பிறகு ஜீவா நடித்து வந்த "ஈ" உயிர்கொல்லி கிருமிகளை பரப்பி அதனால் உலகிற்கு வரும் ஆபத்தை ஒரு சென்னை சேரி பகுதியில்லுள்ள இளைஞனின் துணையோடு தடுப்பதை பற்றியும் நன்றாக சொல்லி இருந்தார். இந்த இரண்டு படங்களும் ஓரளவு வரவேற்பினை பெற்றதாகத்தான் நான் படித்திருக்கிறேன் அதை நம்புகிறேன். அந்த அளவில் இவரது மூன்றாவது படைப்பான "பேராண்மை" படம் வெளியாக இருக்கிறது. அதன் பாடல்கள் மற்றும் முன்னோட்ட காட்சிகள் நாளை வெளியிடப்படுவதாக அறிவிப்பு பார்த்தேன். நிச்சயம் இந்த படம் ஒரு நல்ல படமாக அமைய நிறைய வாய்ப்புகள் உண்டு. இந்த படத்தில் காடுகளின் இன்றியமையான்மை பற்றி சொல்லி இருப்பதாக படித்தேன். இந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்துள்ளார். ஜனநாதனின் ஆஸ்தான இசை அமைப்பாளர் வித்யாசாகர் தான் இந்த படத்திற்கும் இசை, நிச்சயம் "இயற்கை" அளவிற்கு நல்ல பாடலை கொடுப்பார் என்று நம்புவோமாக. இந்த படம் ஒரு நல்ல படமாக அமைந்து ஒரு நல்ல வெற்றி படமாக அமைய வாழ்த்துக்கள்.
0 comments:
Post a Comment