அலட்சியம் அள்ளிய உயிர்கள்
சில தினங்களுக்கு முன் ஒரு வீடியோ கடையில் குறைந்த விலையில் விற்கப்பட்ட பழைய டி.வி.டி இல் நான் மூன்று டி.வி.டி வாங்கினேன் அதில் ஒன்று "சொந்த மண்ணில்" (ON NATIVE SOIL). இந்த டி.வி.டி ஒரு ஆவணப் படம் அதாவது செப்டம்பர்-11-2001 தீவிரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களின் வேண்டுகோளுக்கிணங்கி ஒரு கமிஷன் அமைக்கப்பட்டு, அந்த கமிஷனின் ரிப்போர்ட் தாக்கல் பற்றியது தான் இந்த ஆவணப் படம்.
படம் ஆப்கனிஸ்தான் நாட்டிலுள்ள காபூலில் இருந்து ஆரம்பிக்கிறது. அங்குள்ள ஒரு மலைப்பகுதியில் ஒசாமா பின்லேடனை சந்திக்கிறார் ஒரு நிருபர். அவர் சொல்கிறார், ஒசாமா பார்ப்பதற்கு சாதரணமாகவும், அவனிடம் கேள்வி நிறைய கேள்விகள் வைக்கப்படுகின்றன ஏன் அமெரிக்காவை தாக்க நினைக்கிறீர்கள் என்ற ஒன்று, அதற்கு பதிலாக அவர் சொல்வது "தெற்காசிய நாடுகளில் அமெரிக்கா தனது தலையீட்டினை குறைத்து கொள்ளவேண்டும்". மற்றொன்று எப்பொழுது, எப்படி தாக்குவீர்கள் என்ற கேள்விக்கு "அதை நீங்கள் ஊடகங்களின் மூலமாக அவ்வப்பொழுது அறிந்து கொள்வீர்கள்" என்ற பதிலும் ஒன்று.
செப்டம்பர் -11 (09/11) , அமெரிக்காவை தீவிர வாதத்தின் கரங்கள் "இறுக" தீண்டிய நாள். ஏன் இறுக என்று சொல்கிறேன் என்றால் இதற்கு முன்னும் தீவிரவாத தாக்குதல்கள் அமெரிக்காவில் நடந்திருக்கின்றன, ஏன் செப்டம்பர் -11 தாக்குதலில் பல உயிர்களுடன் தன்னையும் மறித்துக்கொண்ட, உலக வர்த்தக மைய கட்டிடமே ஒரு முறை தாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அப்பொழுது அதன் அடிப்பாகம் மட்டுமே பாதிக்கப்பட்டது.
சுதந்திரத்தின் நிலம் என்று வர்ணிக்கப்படும் அமெரிக்கா தொழில் நுட்பத்திலும், வளர்ச்சியிலும் மற்ற நாடுகள் பார்த்து பொறாமை படும் அளவுக்குத்தான் இருந்தது. அப்படி தொழில் நுட்பத்தில் சேர்ந்து விளங்கிய அமெரிக்காவை தாக்குதலுக்கு உள்ளாக்க யாருக்குத்தான் தைரியம் வரும் ?
வந்தது ஒசாமாவுக்கு.
மிகவும் திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலில் நிலை குலைந்து போன அமெரிக்கா தனது தொழில் நுட்ப வசதிகளை மறு பரீசிலனை பண்ண ஆரம்பித்தது. உலகின் பெரும்பான்மையான நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்காவை சார்ந்து இருந்ததினால் உலக நாடுகள் பெரும் பன்மையானவை இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டன.
சரி இதற்கு யார்தான் காரணம் அப்படிங்கிறதை பற்றியதுதான் இந்த ஆவணப்படம். முதலில் அந்த தீவிரவாதிகள் பயணம் செய்த விமான நிலையங்களில் நடந்த பாதுக்காப்பு குளறுபடிகள் என்று கூறப்பட்டது, அதாவது இரண்டு தீவிரவாதிகள் பரிசோதனை கருவியை கடக்கும் முன்பும் எச்சரிக்கை மணி சத்தம் எழுப்புகிறது, சோதனை அதிகாரிகளின் கையிலிருக்கும் பரிசோதனை கருவியும் ஒலி எழுப்புகிறது, இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அவர்கள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் அது அங்குள்ள கண்காணிப்பு கருவியில் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது, அதுவும் இந்த ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளது. அவர்களிடம் கேட்டால் அவர்கள் சொல்கிறார்கள் அரசாங்கத்திடம் (FBI, CIA உள்ளிட்ட) இருந்து எந்த விதமான உறுதியான எச்சரிக்கைகளும் எங்களிடம் வரவில்லை. FBI சொல்கிறது தனக்கு கிடைத்த அனைத்து விஷயங்களையும் அரசாங்கத்திடம் உடனுக்குடன் பகிர்ந்து கொண்டதாகவும் அதற்கு சாட்சியாக தொலை-நகல் (FAX) அனுப்பியதற்கான சாட்சியையும் காண்பிக்கிறது. அரசாங்கம் சார்பில் பேசும் வெளியுறவுத்துறை செயலர் சொல்கிறார், உளவுத்துறை கொடுத்த தகவலில் தாக்கப்படலாம் என்று இருந்ததே அன்றி எப்பொழுது எப்படி என்ற விவரங்கள் அதில் இல்லை. இந்த மாதிரியான தகவல்கள் அடிக்கடி எங்களுக்கு கிடைத்து வருவதால் அதை சொல்லி நாட்டு மக்களை பீதி அடைய செய்ய வேண்டாம் என்ற நோக்கத்துடனும் தான் நாங்கள் விமான நிலையங்களுக்கு உரிய விவரங்களை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. ஆனால் நாங்கள் எதை காரணமாக நினைக்கிறோம் என்றால் இந்த தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்த அந்த பயிற்சி விமான உரிமையாளர்களையே. பயிற்சி விமான கூட்டமைப்பின் தலைவர் சொல்கிறார் எங்களிடம் 65,000 பேர்களின் பட்டியல் இருக்கிறது இதில் யாரை என்று நாங்கள் சொல்வது என்று. உடன் தீர்ப்பு குழுவில் (நீதிபதி..?) இருந்தவர் கேட்கிறார்.. " ஒரு சின்ன விஷயம் 65,000 பேரில் 10 அல்லது 15 பேர் அடிக்கடி பயிற்சி விமானங்களை இயக்கி பயின்றிருக்கிறார்கள், அதை வைத்து அந்த பத்து பேர்களையும் பற்றி விசாரணை செய்திருக்கலாமே." ஆனால் அந்த விமான கூட்டமைப்பின் தலைவரிடம் அதற்கான பதில் இல்லை.
இப்படியாக அவனை கேட்டால் இவன், இவனை கேட்டால் இன்னொருத்தன் என்று சொல்லியே தங்களது கடமை தவறலை எல்லோருமே நியாய படுத்த முயலுகின்றனர். இது எல்லா நாடுகளிலும் நடப்பதுதான், ஆனால் இதை தைரியமாக படம் பிடித்து மக்களிடம் காட்டுகிற அந்த சுதந்திரம் வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறாதா என்றால் ஒரு கேள்வி குறி ஒன்றே மிச்சம்.
0 comments:
Post a Comment