வறுமையின் நிறம் சிவப்பு -- ஒரு பார்வை
கமலும் பாலசந்தரும் இணைந்து கிட்டத்தட்ட 36 படங்களுக்கு மேல் பணி புரிந்து இருக்கிறார்களாம் அதில் 30 படங்களுக்கும் மேல் கமல் கதாநாயகனாக அல்லது அதற்கு சமமான வேடத்தில் நடித்திருக்கிறாராம். அதில் நிச்சயம் "வறுமையின் நிறம் சிவப்பு" சிறந்த ஒன்றாக இருக்கும். சுருக்கமாக சொல்லவேண்டுமென்றால் கமலின் நம்பிக்கைகளை மய்யமாக வைத்து எடுக்கப்பட்ட பாலசந்தர் படம் என்று கூட சொல்லலாம். அதாவது இடம் பெறும் காட்சிகள் பேசும் வசனங்கள் எல்லாமே கமலின் கொள்கைகளை பறை சாற்றுவதாகவே உள்ளது ஆனால் அவை வடிவைக்கமைக்கப்பட்ட விதம் பாலசந்தரின் பாணியிலேயே இருக்கிறது.
இந்த படத்தில் சிறப்பு அம்சம்கள் சிலவை உங்களுக்காக...
1. கமலின் நடிப்பு (எல்லா காட்சிகளிலும்).
2. ஸ்ரீதேவியின் நடிப்பு (எல்லா காட்சிகளிலும்).
3. தனக்கு லிப்ட் கொடுக்கும் பெண்ணிடம் திலீப் சொல்கிறார் "லைப்-ல லிப்ட் ரொம்ப முக்கியம், நாளைக்கும் லிப்ட் கிடைக்குமா..." அந்த பெண் சொல்கிறார் "MENU- வோ MEN- ஒ எனககு தினமும் மாறிக்கிட்டே இருக்கணும் ". இங்கே ஒரு விஷயம் சொல்லணும் பாலசந்தர் பல விஷயங்களில் முன்னோடியாக செயல் படுபவர் (தமிழ் திரையுலகை பொறுத்தவரையில்) என்ற பெயர் உண்டு, மேற்சொன்ன இந்த காட்சியின் மூலம் தற்பொழுது பரபரப்பாக பேச பட்டு வரும் "ஆண் விபசாரம்" பற்றி கிட்டத்தட்ட இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பே தனது படத்தில் சொல்லி இருக்கிறார்.
4. பசி காரணமாக தனது புத்தகங்களை எல்லாம் எடைக்கு போட்டுவிட்டு கமல் பேசும் வசனங்கள் நச் "ஏன்பா இந்த பாரதியார் கவிதைகள் புத்தகத்தை எடைக்கு எடுக்கவில்லை..." எடைக்கு எடுப்பவர் "சார் இது படிக்க நல்லா இருக்கும் ஆனா மடிக்க வராது. நல்ல ஆயில் பிரிண்ட்ல வர்ற ஸ்டார் டஸ்ட் மாதிரியான புஸ்தகம் இருந்தா கொடுங்க அவைதான் நல்ல விலைக்கு போகும்.." இதில் பாரதியார் போன்ற கொள்கைவாதிகள் எழுதிய கவிதைகள் கூட எளிதில் "மடங்குவதில்லை" என்பதை சொல்லி இருப்பதாகவே கருதவேண்டியிருக்கிறது. மேலும் கமல் சொல்வார் ."பாரதியார் பெரிய கவிஞர்தான் ஆனால் பசி அவரை விட பெரியது. இந்த உலகில் மிகவும் பலம வாய்ந்ததும் அதுதான்.." "பசி அதிகமானால் மானத்தை கூட விற்க தூண்டுமாம் ஆனால் நான் 'மகாகவி' யைத்தானே வித்தேன் .." அப்படின்னு பேசும் வசனங்கள் எல்லாம் சூபெர்ப்.
5. கமலின் கொள்கைபிடிப்பு நடைமுறை வாழ்க்கைக்கு உதவாது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக ஸ்ரீதேவி பேசும் வசனம் "வாசப்படி குட்டையா இருந்தா நாமதானே தலையை குனிஞ்சு போகணும் நான் குனியாமத்தான் போவேன்னா யாருக்கு அது பாதிப்பு ..." இதில் கூட 'குட்டையானது' என்பது இந்த 'குட்டையான உலகத்தை' குறிப்பதாக தான் நான் நினைக்கிறேன்.
6. பிறப்பால் முற்பட்ட வகுப்பினரான கமல் கடைசியில் நேர்மையாக வாழ ஒரு தொழிலும் வழி செய்யாத பட்சத்தில் முடிதிருத்தும் வேலைக்கு வருவதும் அங்கு அவரது (ஆச்சாரத்தில் மிகவும் நம்பிக்கையுள்ள) அப்பாவை பார்த்தவுடன் .."என் தன் மானத்தை இழந்து எந்த வேலையையும் பார்க்க முடியாது அதனால்தான் இந்த வேலைக்கு வந்தேன். மேலும் நாலாம் தலை முறையை பார் நாவிதனும் சித்தப்பா ஆவான் .. அப்படின்னு சொல்லி இருக்காங்க.." அதாவது சாதிகள் இல்லையடி பாப்பான்னு பாரதி சொன்ன விஷயத்தை அழகா சொல்லி இருக்கும் விதம்.
7. நேர்மைவாதியாக இருந்தாலும் கதாநாயகன் கடைசிவரை ஒரு வாடகை வீட்டில் கூட தங்க முடியாமல் இருப்பது எதார்த்த சினிமாவை நோக்கி தமிழ் சினிமா அப்பவே நடை போட்டிருக்கிறதை தான் இது காண்பிக்கிறது.
சரி இதில் குறையே இல்லையா அப்படின்னு நீங்க கேட்கலாம்.. இருக்குது எனககு தெரிஞ்சு இது தான...
எல்லா நேர்மை வாதிகளும் போராடிகிட்டே இருக்கத்தான் வேண்டும், விடிவே வராது என்பதை போல வரும் காட்சிகள். அதுக்காக அவர் கோடானு கோடி சம்பாதிப்பதாக காமிக் கலைன்னாலும், ஒரு நல்ல சாப்பாடு சாப்பிட நினைக்கும் அந்த வேலை இல்லா பட்ட தாரிகள் தங்களுக்கு ஒருவர் அதற்காக ஏற்பாடு செய்யப்பட அதையும் சாப்பிட முடியாதபடி அவுங்க வீட்டில் ரொம்ப நாளா மரணத்துடன் போராடிக்கிட்டிருந்த ஒரு நபர் மரணமுருவதும அதன் காரணமாக அவர்கள் சாப்பிட முடியாமல் போவதும்.. ஒரே சோகம்...
இதை கூட குறையாய் சொல்லணுமின்னு தான் சொல்ல வேண்டியிருக்கிறது அதுதான் இந்த படத்தின் வெற்றின்னு நான் நினைக்கிறேன்.
0 comments:
Post a Comment