அமைதிக்கான நோபல்


ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசை பெறவிருக்கிறார். ஒபாமா அமெரிக்கா அதிபர் தேர்தலில் நிற்கும் ஒரு கறுப்பர் என்பது மட்டுமே எனககு தெரிந்திருந்தது. நண்பர் ஒருவர் அவரை பற்றி இன்டர்நெட் மூலம் தான் அறிந்த ஒபாமா பற்றிய தகவல்களை என்னுடன் பகிர்ந்து கொண்டது, ஒபாமா மீதான ஒரு ஈர்ப்பு ஏற்பட காரணமானது. வெள்ளைக்காரர்களின் ஆதிக்கத்தில் உள்ள அமெரிக்கா போன்ற ஒரு நாட்டில் வெள்ளையர் அல்லாத ஒருத்தர் முன்னேறுவது எவ்வளவு பெரிய சாதனை என்பது அமெரிக்காவிலிருக்கும் அனைவருக்கும் தெரியும். இங்கே சுதந்திரம் அதிகம் என்பது நமக்கு தெரியும், டி.வி. போன்ற வெகுஜன தொடர்பில் உள்ளவர்கள் கூட பகிரங்கமாக ஒரு கறுப்பர் நம்ம நாட்டிற்கு ஜனாதிபதி ஆவதை ஏற்கமுடியவில்லை என்று கூறும் நிலையில்லுள்ளது அமெரிக்கா. இந்த நாட்டின் சட்டங்கள் அனைவரும் பொது என்று சொன்னாலும், அதை ஏற்க மறுக்கும் கூட்டமும் இங்கே உண்டு. FOX NEWS CHANNEL அனேகமாக அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஒபாமாவை நேரிடையாகவோ, மறைமுகமாவோ தாக்குவது என்பது சகஜம். இந்த டி.வி.-இல் வந்த GLEN BECK தனது நிகழ்ச்சியில் பகிரங்கமாக "ஒபாமா ஒரு நிறவெறி கொண்டவர். அவருக்கு வெள்ளையர்களின் கலாச்சாரம் (!) தெரியாது ." என்று பகிரங்கமாக சொன்னவர். இது மிகப் பெரிய சர்ச்சை குட்பட்டதால் அவர் அந்த நிறுவனத்தாலேயே வேலை நீக்கம் செய்யும் படி ஆகி விட்டது. இதை எதற்காக சொல்கிறேன் என்றால் அனைவரும் சமம் என்ற கோஷம் அமெரிக்காவில் இருந்தாலும் இங்குள்ள மற்ற இனத்தவர்கள், குறிப்பாக அரசியல் வாழ்க்கையில் உள்ளவர்கள், எந்த மாதிரியான விஷயங்களை எல்லாம் கடந்து வர வேண்டியிருக்கிறது என்ற நிலையை சுட்டிக்காட்டவே.
இன்று காலை இந்த செய்தி கிடைத்தவுடன் எல்லா சேனலும் முக்கிய செய்தியாக இதை சொல்லிக் கொண்டிருந்தாலும், FOX NEWS CHANNEL இந்த விருது எப்படி ஒபாமாவிற்கு கிடைத்தது..? இவர் பதவியேற்று இன்னும் ஒரு வருடம் கூட முழுதாக முடியாத நிலையில், இவருக்கு எப்படி அமைதிக்கான நோபல் பரிசை கொடுக்கலாம்..? என்றெல்லாம் கேள்வி கணைகள் தொடுக்க ஆரம்பித்து விட்டது. இங்கிலாந்திலுள்ள ஒரு கடை வீதியில் ஒரு வெள்ளைக் கார முதியவரிடம் "ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளதே...?" என்று கேட்டவுடன் அந்த முதியவர் "அப்படியா..? ஆச்சர்யம் தான்..ஆனால் அவர் என்ன செய்தார் எதற்கு இந்த விருது..?" என்ற கேள்வியுடன் முடித்தார்.
சரி ஒபாமா என்னதான் பண்ணிவிட்டார்..? எதற்காக இந்த விருது..? அவர் தனது தேர்தல் அறிக்கையில் சொல்லி இருந்தவாறு ஈராக்கிலுள்ள அமெரிக்க படைகளின் எண்ணிக்கையை குறைக்கவும், அதே சமயம் பின்லேடன் பதுங்கி இருப்பதாக கருதப்படும் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க துருப்புகளை அதிகமாக்கி வருகிறார். ஈரானுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் என்று அறிவித்த முதல் அமெரிக்க அதிபர் ஒபாமா. அனேகமாக எல்லா சுதந்திரக் கட்சி (REPUBLIC PARTY) உறுப்பினர்களும், ஈரானுடன் போர் என்றே சொல்லி வந்தார்கள், சொல்லி வருகிறார்கள். நாடுள்ள நிலையில் இன்னொரு போரை தாங்காது என்று ஆணித்தரமாக தேர்தலுக்கு முன்பிருந்தே சொல்லி வந்தவர், வருபவர் ஒபாமா. பாலஸ்தீன், இஸ்ரேல் விவாகரத்தில் இவர் பேச்சு வார்த்தையின் மூலமே தீர்வு காண வலியுறுத்தியதாகவும், அதுவும் ஒரு காரணமாகும் என விருது பரிந்துரை கமிட்டி சொல்லி இருந்தது. எனககு தெரிந்து பாலஸ்தீன் இஸ்ரேல் விவாகரத்தில் இவரது நிலைப்பாடு என்ன என்பதை இன்னும் தெளிவாக சொல்லவில்லை என்றே தோன்றுகிறது. ஏனெனில் அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுப்பதென்பது அவ்வளவு சுலபமில்லை. இதற்கு காரணம் அமெரிக்காவின் முக்கிய முடிவு எடுக்கும் எல்லா நிலையிலும் யூதர்கள் வியாப்பித்து இருப்பது தான்.
அதே மாதிரி சர்வதேச அணு ஆயுத பரவலை தடுத்திட பாடு பட்டதாகவும் கமிட்டி சொல்லி இருப்பதாக படித்தேன். இதுவும் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் இவர் சொல்லிவரும் இதே மாதிரியான கருத்துக்களை. இதற்கு முன்பிருந்தவர்களும் சொல்லி வந்திருக்கிறார்கள். சிறப்பாக சொல்லும்படியாக எதுவும் நடவடிக்கை எடுத்ததாக நான் அறியவில்லை.
ஆனால் இந்த விஷயங்களை எல்லாம் விடவும் அவருக்கு இந்த அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க காரணமாக இருப்பதாக நான் நினைப்பது, மேற்சொன்ன பிரச்சனைகளில் அவரது காந்தீய எண்ணங்களை நோக்கிய நகர்வாகும். ஒபாமா தன்னை ஒரு காந்தியின் தீவிர ஆதரவாளராகவே காட்டி கொண்டுள்ளார், எனககு தெரிந்து இரண்டு முறை இவர் இவ்வாறு நடந்து கொண்டார். ஒரு முறை "நீங்கள் யாருடன் டின்னெர் சாப்பிட விரும்புகுறீர்கள்..?" என்ற கேள்விக்கு. "திரு. காந்தி " என்று சொன்னார். மற்றொன்று இந்த மாதம் கொண்டாடப்பட்ட 'காந்தி பிறந்த நாள்' கொண்டாட்ட செய்தியாக "காந்தியின் கொள்கைகள் உலகில் உள்ள அனைத்து நாட்டினரானாலும் கடை பிடிக்க வேண்டியது இந்த கால கட்டத்தில் அவசியமாகிறது " என்று சொன்னார். எனககு தெரிந்து காந்தி பிறந்த நாளுக்கு சிறப்பு உரையாற்றிய முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவகத்தான் இருக்கும்.
ஒபாமாவிற்கு காந்தி பிறந்த தேசத்தின் மக்களின் வாழ்த்துக்கள்.


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP