கனவொன்று கண்டேன்..


தமிழ்நாடு அரசு தமிழ் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவிற்கு எனக்கும் சிறப்பு அழைப்பு கொடுக்கப்பட்டு நான் சென்றிருக்கிறேன், நான் விரும்பி ரசிக்கும் ரஜினி,கமல் இன்னும் பல கலைஞர்கள் அருகருகே பார்க்கிறேன், அடடா என்ன ஒரு இனிமையான காட்சி. நிகழ்ச்சியில் 2008-ஆம் ஆண்டிற்காக கமலுக்கு சிறந்த நடிகரென கொடுக்கப்படுகிறது, பலத்த கரகோஷங்களுக்கிடையில் அந்த விருதை பெற்ற கமல் தனது நன்றியுரையில் " எனககு இந்த விருதை வழங்கிய தமிழக அரசிற்கும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனது நன்றி. இந்த மேடையில் எனது தாழ்மையான கோரிக்கை ஒன்றை என் சார்பாகவும் என் நண்பர் ரஜினி சார்பாகவும், நண்பர் இளையராஜா சார்பாகவும் வைக்கலாம் என்று நினைக்கிறேன். நாங்கள் மூவரும் தமிழ் திரை உலகில் நீண்ட தூரம் நடந்து வந்துவிட்டோம், எங்களுக்கு இதுவரை கிடைத்த விருதுகளே போதுமான அங்கீகாரம், போதுமான ஊக்கம். இனி எங்களது பெயர்கள் தமிழக அரசின் விருது பட்டியலில் இடம் பெறுவதை தயவு செய்து தவிர்க்கவும். இது அவையடக்கம் அன்று அடுத்த தலைமுறை கலைஞர்களை நாங்கள் நடந்து வந்த பாதையில் நடை போட வழி விடும் வழிதான். இதற்கான ஒப்பந்தத்தை நான் ரஜினியிடம் இருந்தும், இளையராஜாவிடம் இருந்தும் ஏற்கனவே பெற்று விட்டுதான் சொல்கிறேன். (ரஜினியும், இளையராஜாவும் ஆமோதிப்பது போல் தலையசைக்கின்றனர்).அதன் அடையாளமாக எனககு கிடைத்த இந்த விருதை அதே 2008-ஆம் ஆண்டு வெளிவந்த, பல மேடைகளில் விருது பெற்ற, "சுப்ரமணியபுரம்" படத்தில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும், தமிழக முதல்வர் அனுமதியோடு கொடுக்கிறேன்."
இதை பார்த்து சற்றே திகைத்து போன கலைஞரும் "எனககு கொடுத்த இந்த விருதினை நான்..."
ச்சே கனவு கலைஞ்சிருச்சே . (ஆஹா வடை போச்சே மாதிரி தான்..),


0 comments:

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP