பதிவுலகம் சார்பில் ஷங்கருக்கு நன்றி


ஷங்கர் இயக்கம் படங்கள் குறித்து எனக்கு எப்பவுமே மாற்று கருத்து உண்டு. ஆனால் அவர் தயாரிக்கும் படங்கள் குறித்து எப்பவுமே ஒரு நல்ல பார்வை உண்டு. அவரின் சமீபத்திய வெளியீடான "ஈரம்" இன்னும் பார்க்கவில்லை (ஆமாம் இன்டர்நெட்டில் இல்லாம் படம் பார்க்காம இருந்தா எப்படி பார்க்க முடியும். குறைந்த பட்சம் DVD வர்ற வரைக்கும் காத்திருப்பது என்னுடைய வழக்கம். அந்த DVD ம் இன்னும் வரவில்லை). ஆனால் இந்த படம் பெருவாரியாக பாராட்டப்பட்டாலும் பொருளாதார ரீதியாகவும் நன்றாக போய் கொண்டிருப்பதாக இணையத்தளங்களிலும்,பத்திரிகைகளிலும் படித்தேன் மகிழ்ந்தேன். இந்த படம் எப்படி வித்தியாசமாகவும், ஈர்ப்பாகவும் இருந்தததோ அதே  மாதிரி அந்த படத்தின் விளம்பரங்களிலும் ஷங்கர் கவனம் செலுத்துவது ரொம்பவும் நல்ல விஷயம். அதிலும் இன்று வந்த விளம்பரம் ஆர்குட் இணையதளத்தில் "ஈரம்" படம் பற்றி நடை பெறும் விவாதத்தை குறிப்பிட்டு வந்துள்ளது வலைப்பதிவுகளுக்கும் அதில் வரும் சினிமா விமர்சனங்களுக்கும் திரை உலகில் ஓரளவாவது  முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையை  ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஷங்கர் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் செய்யும் பொழுது பதிவுலகம் மீதான பார்வையை மற்ற தயாரிப்பாளர்கள் திருப்புவதற்கும்  ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றே நம்புகிறேன். இதை ஒரு பதிவராக பார்க்கும் பொழுது ஷங்கருக்கு நன்றி சொல்லவே தோன்றுகிறது.


Read more...

ஏன் எமெர்ஜென்சி..?



கேள்வி: ''நெருக்கடி நிலைப் பிரகடனத்துக்குப் பின்பு நாட் டில் ஏற்பட்டிருக்கும் முன்னேற் றத்தைத் தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். தொழிலாளர் கள் தீவிரமாக வேலைகளில் ஈடுபடுகிறார்கள். எங்கும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதைக் காண்கிறோம். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைத் தாங்கள் முன்னதாகவே கொண்டுவந் திருக்கக் கூடாதா?'' (கேள்வி கேட்டவர் பெயர் திருமதி ராஜகுமாரி சேஷாத்ரி)


பதில்: ''கொண்டு வந்திருக்க லாம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக எல்லா எதிர்க் கட்சிகளும், பெரும்பான்மை யான பத்திரிகைகளும் கட்டுப் பாடின்மையை மறைமுகமாக ஆதரித்து வந்தன. அரசாங்கம் எந்தத் திட்டத்தைச் சொன் னாலும் அதைக் கேலி செய்வ திலும், அதற்குத் தவறான உள் நோக்கம் கற்பிப்பதிலுமே ஈடு பட்டிருந்தன. அதனால் மக்க ளும் அவற்றைச் செயல்படுத்து வதில் அக்கறை காட்டவில்லை. நெருக்கடி நிலைப் பிரகடனத் துக்குப் பின் புதிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது. ஆனால், இது போதாது. ஒழுக்கம், கட் டுப்பாடு போன்ற அருங்குணங் களை நாமே நமக்கு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும். இன்னொருவர் நம் மீது திணிக்கும் நிலை ஏற்படக்கூடாது. இந்தக் கட்டுப் பாடும் ஒழுக்கமும் இல்லாவிட் டால் இந்தப் பெரிய தேசத்தில் நாம் எதையும் சாதிக்க முடி யாது. ஒழுக்கத்தில் சில வகை உண்டு. ஒன்று, சமுதாய ஒழுக் கம்! அதாவது, நம் வேலை களைத் திறமையாகவும், உரிய சமயத்திலும் செய்வது, நாம் வசிக்கும் பகுதியைச் சுத்தமாக வைத்திருப்பது... இப்படிப்பட்ட புற ஒழுக்கங்கள். இவற் றால் தேசம் ஆரோக்கியமாக இருக்கும்; அதன் பெருமையும் சிறந்தோங்கியிருக்கும். அதே போல் தனி மனித ஒழுக்கம்! இப்படி உடல் சுகாதாரம் முதல் நம்மைச் சுற்றியுள்ள ஒவ்வொரு விஷயத்திலும் கட்டுப்பாட்டை யும் ஒழுக்கத்தையும் நாம் கடைப்பிடிக்காவிட்டால், பல வித தொல்லைகளை அனுப விக்க நேரிடும். நாம் ஒழுக்க மான வாழ்வு நடத்தினால்தான், அதிக திறமையுள்ளவர்களாகவும் திருப்தி உள்ளவர்களாகவும் வாழ முடியும்!''
(பதில் சொன்னவர் அன்றைய பிரதமமந்திரி திருமதி.இந்திராகாந்தி)
 
எமெர்ஜென்சி என்பது ஏதோ சுய கட்டுப்பாட்டையும்,தனி மனித ஒழுக்கத்தையும் கற்பிக்க வந்ததை போல சொல்லப்படும் மறைந்த இந்திராகாந்தியின் பதிலில் தெரிவதெல்லாம் செய்த தவறை மறைக்க செய்யும் செயலே. இதை விட பெரிய கொடுமை இந்த கேள்வியை கேட்ட அந்த பெண்மணி  அந்த கொடூர காலத்தை புகழ்வதுதான். ஒருவேளை எமெர்ஜென்சியை கண்டு ரசித்தவராக கூட இருக்கலாம். அந்த பெண்மணியை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து பிரதமமந்திரியாக இருந்த இந்திராகாந்தியை பேட்டி எடுக்க அனுப்பியதாம் விகடன். குறைந்த பட்சம் இந்தமாதிரியான சென்சிடிவான பிரச்சனைகளுக்கான விடயத்தை அவர் தொடாமலாவது பார்த்துகொண்டிருந்திருக்கலாம் விகடன் போன்ற பெரிய பத்திரிகைகள். உங்களுக்கு எமெர்ஜென்சி எதற்காக இந்திரா காந்தியால் அமுல் படுத்தப்பட்டது தெரியுமா..?
1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 12 ஆம் தேதி அலகாபாத் உயர் நீதிமன்றம் "மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 ல் வரையறுக்கப்பட்ட நடைமுறைகளுக்கு விரோதமாக தேர்தல் முறைகேடுகளில் இந்திராகாந்தி ஈடுபட்டதால் அவருடைய தேர்தல் (1971 ஆம் ஆண்டு நடந்த) தேர்வு செல்லாது" என்று தீர்ப்பளித்தது.  அத்துடன் இந்திரா காந்தி இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கு மூன்று வார கால அவகாசம் வழங்கப்பட்டது, உச்சநீதிமன்றம் மேல் முறையீட்ட ஏற்க மறுத்தாலோ, இல்லை இந்திராகாந்தி மேல்முறையீடு செய்யவில்லை என்றாலோ தான் இந்த தீர்ப்பு நடைமுறை படுத்தப்படும் என்றும் கூறப்பட்டது. அப்பொழுது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த வி.ஆர்.கிருஷ்ணய்யர் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு முழுமையான தடை விதிக்கவில்லை. இதுவே நெருக்கடி நிலை அறிவிக்கப்பட காரணமானது. இந்திராகாந்தி 1971 தேர்தலில் செய்த தவறு என்ன..? அப்பொழுது பிரதமமந்திரியின் தனி செயலராக பணியாற்றிய யஷ்பால் கபூர் என்பவரை தேர்தல் முகவராக இந்திராகாந்தி நியமித்ததுதான் தவறு என்று இந்திராகாந்தியை எதிர்த்து போட்டியிட்ட ராஜ் நாராயன் வழக்கு தொடர்ந்தார். யஷ்பால் கபூர் தன்னுடைய அரசாங்க பதவியை ராஜினாமா செயாமலேயே தேர்தல் பணிகளை கவனிக்க ஆரம்பித்துவிட்டார். அதாவது ஜனவரி 7 ஆம் தேதி தேர்தல் முகவராக பணியேற்றார், ஜனவரி 13 ஆம் தேதி அன்று தான் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். இந்த ஆறு நாள் கால இடைவெளிதான் இந்தியாவில் அவசரநிலை பிரகடனப்படுத்த காரணமானது என்றால் நம்ப முடிகிறதா..?
இந்திரா நினைவு நாளில் சரித்திர புகழ் வாய்ந்த அவசர நிலை பிரகடனம் ஏற்படுத்தப்பட்ட காரணத்தையும் நினைவுகூர்வது சரியாக இருக்கும் என்று நம்புகிறேன்.


Read more...

மனிதம் வளர்ப்போம்



. சமீபத்தில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ரிச்மொன்ட் என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் பதினைந்து வயது மதிக்கத்தக்க ஒரு மாணவியை பத்து பேர் கொண்ட கும்பல் ஒன்று கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரமாக  சீரழித்துள்ளது. இதை இன்னும் ஒரு பத்து பேர் பார்த்திருக்கிருகிறார்கள் ஆனால் யாருமே போலீசை கூப்பிடவில்லை. அத்துடன் இந்த "பார்வையாளர்கள்" அந்த கொடூரத்தை படம் பிடித்துள்ளார்கள். எங்கே போனது மனிதாபிமானம்..? குற்றம் செய்பவர்களை விட குற்றம் செய்ய தூண்டுபவர்களுக்குதான் தண்டனை அதிகம் என்று சட்டம் சொல்லுகிறது (அமெரிக்க சட்டமும் இதை சொல்லுதான்னு தெரியலை). அப்படி பார்த்தால் இந்த பதினைந்து பேரும் மிகப் பெரிய தண்டனைக்குரியவர்கள். இது குறித்து சமீபத்தில் C.N.N டி.வியில் வந்த ஒரு கலந்தரையாடல் நிகழ்ச்சி (LARRY KING LIVE), பல விஷயங்களை அலசியது. அதில் குறிப்பாக தீபக் சோப்ரா என்பவர் சொன்ன விஷயம், இது போன்ற கொடூர மனிதர்கள் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள். அவர்கள் வளர்க்கப்படும் சூழலில் இது போன்ற கொடூர விஷயங்கள் மிகவும் சாதரணமாகவும் அன்றாட நிகழ்வுகளாகவும் ஆகிப்போவது தான். வன்முறை அவர்கள் வாழ்கையின் ஒரு அங்கம், எனவே இதை அவர்கள் சாதரண நிகழ்வுகளிலிருந்து பிரித்து பார்க்க முடியாது. மனித மூளையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன. இவற்றை எப்படி தமிழில் மொழி பெயர்ப்பது என்று தெரியவில்லை அதனால் ஆங்கிலத்திலேயே கொடுத்துள்ளேன்.
1. Limibic Brain
2. Reptalian Brain
3. Cardical Brain
இதில் Limbic Brain என்பது மனிதனின் உணர்வு சம்மந்தபட்டவைகளை தீர்மானிப்பவை. இந்த பகுதி பாதிக்கப்பட்டாலோ அல்லது பழுதடைந்தாலோ சமூகத்திற்கெதிரான சிந்தனைகளும்,அடுத்தவர்களின் நலனை பற்றி அக்கறை கொள்ளாத மன நிலையும் ஏற்படும். இதை சரி பண்ணி கொள்வதற்காகத்தான் ஆன்மிகம் சம்மந்தப்பட்ட விஷயங்களை குழந்தை பருவத்திலிருந்தே போதிக்க வேண்டும் அதாவது நம்மையும் மீறி ஒரு சக்தி இருக்கிறது அது நாம் தவறு செய்யும் போது தண்டிக்கும். என்றெல்லாம் விளக்கி சொல்லவேண்டும். சிறுவயதிலிருந்தே தியானம் போன்றவற்றை கற்று கொடுத்தலின் மூலமாக அவர்கள் மூளையின் Limbic பகுதி பாதிக்காதவண்ணம் பார்த்துக்கொள்ளலாம். இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட Daniel Amen என்ற உளவியாளர் (Psychiatrist) சொல்கிறார், மூளையின் முன் பகுதியில் தான் நல்லது கெட்டதை பகுத்தறியும் தன்மை உள்ளதாகவும் அதை குடியின் மூலமாகவும், போதை பழக்கத்திற்கு அடிமை ஆவதன் மூலமாகவும் இழக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர் படத்தில் வரும் வாலி பாடலை போல "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே.." . குழந்தைகளுக்கு மனிதத்தை போதிப்போம் மனிதம் வளர்ப்போம்.


Read more...

ராகு-கேது பெயர்ச்சி உண்மை


இன்னைக்கு ராகு-கேது பெயர்ச்சின்னு சொன்னாங்க அப்பவெல்லாம் நான் பெரிசா நம்பலை. ஆனா இந்த படத்தை பார்த்தவுடன் எனக்கு அந்த நம்பிக்கை வந்திடுச்சு. நீங்க இதுக்கு முன்னாடி எப்பவாது ஜெயலலிதா தன்னுடைய கட்சி கூட்டத்தில் மற்றவர்கள் உட்காந்திருக்க தான் எழுந்து நின்று பேசி இருக்கிறாரா..? நேத்து நடந்த கூட்டத்துல பேசி இருக்காரே, அப்ப ராகு-கேது பெயர்ச்சி வந்துடுச்சுன்னுதானே அர்த்தம்.
(படம்: தினமலர்)


Read more...

ராமதாசு ஒரு சீரியஸ் பீசு..!

இலங்கைத் தமிழர்களை ராஜபக்சே கொன்று குவித்த ரத்தத்தின் ஈரம் இன்னும் அங்கு காயவில்லை. இந்த நேரத்தில் தமிழகத்தை சேர்ந்த எம்பிக்கள் குழு இலங்கைக்கு சென்று ரத்தக்கறை படிந்த ராஜபக்சேவுடன் கைகுலுக்கி, சிரித்து பேசிவிட்டு வந்து இருக்கிறார்கள்.பரஸ்பரம், பரிசு பொருட்களை கொடுத்தும், வாங்கியும் வந்து இருக்கிறார்கள். எப்படி இவர்களுக்கு இப்படி நடந்து கொள்ள மனம் வந்ததோ தெரியவில்லை. யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கைகுலுக்குவானா என்பதை தமிழர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.


 இந்த பேச்சை பேசியவர் வேறு யாருமல்ல பா.ம.க தலைவர் ராமதாசு அவர்கள்தான். ராமதாஸ் என்னதான் கூட்டணி மாறி அவ்வப்பொழுது காமெடி செய்தாலும் , அவருடைய எல்லா பேச்சுகளையும் காமெடி என்று எடுத்துக்கொள்ளமுடியுமா..? அவர் சரியா  சொல்றப்ப  ஏத்துக்கத்தானே வேணும்.  "யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரோடு எந்த ஒரு யூதனாவது கை குலுக்குவானா..?" ரொம்பவும் யோசிக்க வேண்டிய விடயம். நான் நியூயார்க்கில்  ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பொழுது 

ஒரு சக ஊழியருடன் காரில் பயணம் செய்ய நேர்ந்தது. அவர் யூத இனத்தை சேர்ந்த ஒரு பெண். அவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது நாங்கள் பயணம் செய்த அந்த கார் லெக்சஸ் (LEXUS) ரக கார் என்பதை தெரிந்து கொண்டேன். அடுத்து நான் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் சொன்ன பதிலும் என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. "இந்த ரக கார்கள் ஜெர்மனில் தானே தயாரிக்கப்படுகிறது.." என்று கேட்டேன். சட்டென்று முகம் மாறிய அவர் "இல்லை இல்லை இது ஜப்பானில் தயாரிக்கப்படும் கார். இது ஜெர்மனியில் தயாரித்தால் இந்த காரை நான் பயன்படுத்தவே மாட்டேன்" என்றார்.  இது நடந்தது 2005 ல், இதை தவறென்றும் சொல்ல முடியாது. ஏன்னா அதன்  வலியும் வேதனையும் அவர்களுக்கு தானே தெரியும். அந்தவிதத்தில் ராமதாஸ் சொன்ன உதாரணம் ரொம்பவும் சரியாக சரியான இடத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (அப்பாடா "ராமதாசு ஒரு காமெடி பீசு" எழுதினப்ப ஒருத்தரு ஆட்டோ வர வாழுத்துக்கள்-ன்னு சொல்லி இருந்தாரு அதை இப்ப சரி கட்டியாச்சுன்னு நினைக்கிறேன்..ஹும் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது.).


Read more...

நல்லது நடக்கணும்


ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதாகரமாக வெடித்து தற்போது புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ராஜாவின் அலுவலகங்களில் நடந்த அதிரடி சிபிஐ சோதனையால் திமுக வட்டாரம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

இருப்பினும் முதல்வர் கருணாநிதி இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்காமல் உள்ளார். ஆனால் காங்கிரஸ் தரப்பில் ராஜா மீது நடவடிக்கை எடுக்கு ஆயத்தம் நடந்து வருவதாக பேசப்படுகிறது.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராஜா மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு முதல்வர் கருணாநிதியின் கருத்தை அறிய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மூத்த தலைவர் கருணாநிதி என்பதாலும், தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்த பெரும் வெற்றிக்குக் காரணகர்த்தா என்பதாலும் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்பவில்லையாம்.
அதேசமயம், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து காங்கிரஸ் மீதும், மன்மோகன் சிங் அரசு மீதும், மத்திய அமைச்சர் ராஜா விவகாரத்தைப் பயன்படுத்தி குற்றம் சாட்டிப் பேசுவதால் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதை கருணாநிதியும் விரும்ப மாட்டார் என காங்கிரஸ் மேலிடம் கருதுகிறதாம்.இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் ராஜா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மற்றும் பிரதமர் தயாராகி விட்டனர். அதற்கு முன்பு கருணாநிதியிடமிருந்து ஒரு வார்த்தைக்காக காங்கிரஸ் காத்திருக்கிறது என்பதே என்று காங்கிரஸ் தரப்பில் கூறுகிறார்கள்.விரைவில் முதல்வர் கருணாநிதி யின் தூதர் ஒருவர் சோனியா காந்தியை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர் ராஜா மீது நடவடிக்கை பாயலாம் என்றும் பேசப்படுகிறது.மக்களவை குளிர் காலக் கூட்டத் தொடர் துவங்கவுள்ள நிலையில் ராஜா விவகாரத்தால் தங்களுக்கு சி்க்கலை வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்கிறார்கள்.அதே நேரத்தில் ராஜாவை பதவியிலிருந்து திரும்பப் பெற்றால் ஊழலை ஒப்புக் கொண்டது போலாகிவிடுமே என திமுக அஞ்சுகிறது.இதனால் திமுக ஆழ்ந்த அமைதி காக்க, அதைப் பார்த்து காங்கிரசின் கோபம் அதிமாகிக் கொண்டுள்ளது. ராஜா நீண்ட நாட்கள் பதவியில் நீடிக்க முடியாது என்றே தெரிகிறது.

மேற்கண்ட அந்த செய்தி இன்றைக்கு தட்ஸ்தமிழ் இணையதளத்தில் வந்த செய்தி.  இரண்டு நாளைக்கு முன் நம் "எண்ணங்களில்" தோன்றியதை பிரதிபலிக்கும் விதமாக இன்று வந்துள்ள இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். குறிப்பாக கடைசி வரிகள் நமது எண்ணத்தை முற்றிலுமாக ஒத்து போவதாகவே கருதுகிறேன். எப்படியோ நல்லது நடந்தா சரி.


Read more...

ஆணியே புடுங்கவேணாம்


அனில்அம்பானிக்கும், முக்கேஷ்அம்பானிக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சுமூக நிலை ஏற்படாததால்  அன்றைய தினம் இந்திய பங்கு சந்தை வர்த்தகம் வீழ்ச்சியை சந்தித்தாக நான் சில தினங்களுக்கு முன் செய்தி படித்தேன்.  ஆனால் கிட்டத்தட்ட அதே நாளில் அமெரிக்காவில் ஒரு அறிக்கை வெளியடப்படுகிறது அதில் ஒருநாளைக்கு சராசரியாக 7000 பேர் வேலை இழப்பதாக. ஆனால் அன்றைய அமெரிக்க பங்கு சந்தை ஏறுமுகத்தில் இருக்கிறது. அது அமெரிக்கா, இது இந்தியா அப்படின்னு கைப்புள்ள மாதிரி நீங்கள் சொல்லலாம். ஆனால் இங்கு நிகழ்பவை எல்லாம் காமெடியா தெரியலை, ரொம்ப சீரியசான ஒரு கொள்ளை சட்ட பூர்வமாக அரங்கேறுதொன்னு தோணுது.
பங்கு சந்தை கிட்டத்தட்ட நம்ம சுதந்திரம் வாங்குற காலத்திலிருந்தே இருந்து வருவதாக அறிகிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் பங்குசந்தையின் செயல்பாடுகள் இப்படித்தான் இருந்ததான்னு தெரியலை. ஏன்னா என்னை பொறுத்தவரை பங்கு சந்தை என்பது பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவதற்கான ஒரு அமைப்பு. சரி அது பாட்டுக்கும் அது வேலைய  பண்ணட்டும் எனக்கென்ன அப்படின்னு நடுத்தர மக்களோ, அன்றாடம் தான் சம்பாதிப்பதை ஒரு சிறு சேமிப்பாக்க வங்கி கணக்கு தொடங்கும் சாதரண மக்களோ இருக்க முடியாது. இதன் வளர்ச்சிக்கு முழுதாக துணைபோவதுதான் உலக தாரளமயமாக்களின் குறிக்கோள் அல்லது செயல்பாடு. சாதாரண குடிமகன் ஒருவன் தான் பங்குசந்தையின் நிழல் படியாமல் தனது வாழ் நாளை கடத்த நினைத்தால் அது  இன்றைய சூழலில் நடக்காத காரியம்.
தெரிந்தோ தெரியாமலோ  ஒவ்வொருவரின் பாக்கெட் பங்குசந்தையால் திருடப்படுவதை எல்லோரும் உணர்ந்திருக்க வாய்ப்பில்லை.  ஒருவன் வங்கியில் நிரந்தர வைப்பு தொகையில் வைக்கப்படும் பணம் போய் சேருமிடம் பங்குச்சந்தை.இப்படி எப்படி பார்த்தாலும் பணம் போய் சேருமிடம் பங்குசந்தைதான்.  சமீப காலங்களில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு பங்கு சந்தைகளின் குறீயீட்டு எண் குறைவதை கொண்டே கணக்கிட பட்டது. இந்த சூதாட்டத்தில் கை தேர்ந்தவர்களே பணத்தை பெற முடியும்.  அப்படி பட்ட பங்கு சந்தை அனில் அம்பானிக்கும் முக்கேஷ் அம்பானிக்கும் ஒரு சண்டைன்னா தன்னை சுருக்கி கொள்ளுமாம் ஆனால் அதே பங்கு சந்தைக்கு தனது வேர்வையால் பங்கு சேர்க்கும் சாதாரண மனிதனின் வேலையிழப்பிற்கு செபி மன்னிக்கவும் செவி சாய்க்கதாம். இது எப்படி இருக்கு..? ஒரு நாட்டின் பங்கு சந்தை அந்த நாட்டின் பொருளாதாரத்தின்  முகமாவே பார்க்கப்படுவது. அப்படி இருக்கும் பொழுது நாட்டில் உள்ள குப்பனுக்கும்,சுப்பனுக்கும் ஆதரவா இருக்கனுமில்லையா..? ஆனால் அது இங்க நடப்பதில்லை அதான் இங்கே பிரச்சனையே.
 "எனக்கு தான் கோபம் வராதுங்க்றேன்ல அப்புறம் ஏன்யா அதையே தூண்டுறீங்க..? " அப்படின்னு கைப்புள்ள சொல்ற மாதிரி, நான்தான் பங்குசந்தையே வேனான்கிறேன் அப்புறம் வலுகட்டாயமா PF ங்குற பேர்ல வாங்கி அதை பங்குல போட்டா என்ன அர்த்தம்..? சரி அப்படியே போடட்டும் அப்புறம் ஏன் என்னை போல ஏழாயிரம் பேருக்கு வேலை போறப்ப பங்கு சந்தை கீழே போக மாட்டேங்குது..? மேலே உள்ள பணக்காரர்களுக்கு கீழே உள்ளவன் காசு வேணும், அவன் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை. இப்படி நினைக்கிறவங்க திருடனைவிட மோசமானவங்க. இவங்க எங்களுக்காக ஆணியே புடுங்கவேனாம். எங்களை தொந்தரவு பண்ணாம அவுங்க வேலைய பார்த்தா போதும்.  அப்படிங்கறது தான் என்னை போன்றவர்களின் வேண்டுகோள்.


Read more...

அதிகார கரங்கள் ஒரு ஆபத்து

 ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஊழல் நடந்ததாக யாரேனும் புகார் தெரிவித்திருக்கலாம். அதன்பேரில்தான், தொலை தொடர்பு அமைச்சக அலுவலகத்தில் சோதனை நடந்துள்ளது. அதற்காக என் மீது குற்றம் சொல்ல முடியாது. சி.பி.ஐ.,சோதனை என்பது வழக்கமான ஒன்றுதான். ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் தொடர்பான அனைத்து முடிவுகளும் டிராய் நிர்ணயித்துள்ள விதிமுறைகளின் அடிப்படையிலும், பிரதமருடன் கலந்து ஆலோசித்த பிறகே எடுக்கப்பட்டன.



மேற்கண்ட செய்தி மத்திய அமைச்சர் ஆ.ராசா  குறித்து சமீபத்தில் வந்த ஒரு செய்தி. இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்திலேயே மிகப் பெரியதாக ஆக்கப்பட்டு, தேர்தல் சூட்டில் ஆறியும் போனது. கிட்டத்தட்ட 65,000 கோடி ரூபாய் ஊழல் இதில் நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. (இந்த ஒரு துறையிலேயே 65,000 கோடி ஊழல் செய்ய முடியும்னா..?  ஹுஸ் அப்பா கண்ண கட்டுதே). இது குறித்த தி.மு.கவின் செயல்பாடுகளோ நம்மை வியக்க வைக்கிறது. ஒருத்தனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளிய பிறகும் அவன் தன்னை அந்த வீட்டின் விருந்தாளியாகவே பாவித்துக்கொள்வது என்ன நாகரீகம் என்று தெரியவில்லை. காங்கிரஸ் இந்த காரணத்திற்காகவே ஆ.ராசாவிற்கு மத்திய மந்திரி பதவி தர இந்த முறை தயங்கியதாகவும் ஆனால் தி.மு.க வின் நெருக்குதலாலேயே இந்த பதவியை அதுவும் முன்பு வகித்த அதே துறையை கேட்டு பெற்றது தி.மு.க. இவ்வளவு நடந்த பிறகும் ஆ.ராசா தான் ராஜினாமா செய்யப்போவதில்லை என்று வெளிப்படையாக சொல்கிறார். இவை எல்லாம் தி.மு.க வின் தலைமை அறியாமல் வரப்போவதில்லை. இவ்வளவு நடந்த பிறகும் இவரை யார் மந்திரி பதவியை தொடர செய்வது..? எவ்வளவோ பதவிகளை பெற்ற, இழந்த தி.மு.க போன்ற கட்சிகளே பதவி சுகத்தை இழக்க தயாரில்லாததை கண்டு அதிர்ச்சியே ஏற்படுகிறது. இப்பொழுது நடக்கும் இந்த சம்பவத்திற்கெல்லாம், வாய் மூடி மௌனியாக தி.மு.க இருப்பது அந்த கட்சிக்கே ஆபத்தாய் முடியும். இதை பழுத்த அரசியல் அனுபவம் உள்ள கருணாநிதியும் உணர்ந்திருப்பார் என்றே தோன்றுகிறது. ஆனால் அதையும் மீறி இந்த மாதிரியான விடயங்கள் நடப்பது எதனால்..? சில பத்திரிகைகள் சொல்வதைப்போல தி.மு.க வின் அதிகார மையம் கைகள் மாறி இருக்கலாமோ என்ற அச்சம் தோன்றுகிறது. அது என்ன "கைகள்"..? ஆம் அது ஒரு கைக்கு போக வில்லை, குறைந்த பட்சம் மூன்று கைகளிலாவாது அது இருக்க வேண்டும். அவைகள் எவை என்று உங்களுக்கே தெரியும். அதிகாரம் ஒரு கையில் இருப்பதுதான் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், இந்தியாவிலேயே ஜனநாயகமாக செயல் படும் ஒரே கட்சி என தன்னை கூறிக்கொள்ளும் தி.மு.க விற்கும்  நல்லது.


Read more...

பதிவுலகம் பற்றிய ஒரு பதிவு


சமீபத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களின் விமர்சனத்தை அன்றைய தினமே
படித்து தெரிந்து கொள்ள முடிகிறது, தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் கூகுள் நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக இருக்கிறார் என்ற செய்தியை அறிந்து கொள்ள முடிகிறது, மனசு சோர்வாக இருக்கும் போது படித்து தெளிந்து கொள்ள என்னை மாதிரியே தவறு செய்து திருத்திக்கொண்ட ஒரு சக நண்பனை பார்க்க முடிகிறது, இவற்றை எல்லாம் எம் தமிழ் மொழியிலேயே அறிந்து கொள்ளமுடிகிறது.  காரணம் தமிழ் வலைபூக்கள் அல்லது வலைப்பதிவுகள். ஒரு தமிழனா பெருமை கொள்ள பல விஷயங்கள் இருந்தாலும், அந்த பட்டியலில் தமிழ் வலைப்பூக்களுக்கும் ஒரு இடம் உண்டு என்பதை நான் உணர ஆரம்பித்துள்ளேன். எனக்கு தெரிந்து வேறு எந்த இந்திய மொழிகளுக்கும் இவ்வளவு வலைப்பூக்கள் அந்தந்த மொழிகளிலே இருக்கிறதா
என்ற கேள்வி எனக்குள் இருக்கிறது. அனேகமாக இதற்கான விடையையும் நான் ஒரு தமிழ் வலைப்பூவிலேயே காண்பேன் என்று நம்புகிறேன்.  குடும்ப சண்டை,
சொந்த அனுபவங்கள்,தகவல் தொழில் நுட்பம்,இனப்பிரச்சினை,
சர்வதேசபிரச்சனை,ஜாதகம்,ஆன்மிகம்,பகுத்தறிவு,
இன்னும் எவ்வளவோ, விஷயங்களை அலசும் ஒரு பண்பு அல்லது திறமை நம்ம
தமிழ் மக்களுக்கே உரித்தானதாக நான் உணர்கிறேன். தொலை தொடர்பு துறை வளர்ந்த பிறகு நம் மக்களின் வாழ்க்கை முறையிலேயே ஒரு மாற்றம் தெரிகிறது, தனக்கேற்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், அதன் பாதிப்பை தனது சக மனிதர்களுக்கு உணர்த்தவும் மக்கள் பழகி கொண்டது என்னை பொறுத்தவரை வரவேற்கத்தக்கதே. சிலர் இதை வியாபரமாக்கலாம், சிலர் தங்கள் மீதான கவனத்தை ஒட்டுமொத்த இந்த சமூகமும்  திருப்பவேண்டும் என்ற நோக்கிலும் சொல்லலாம் ஆனால் அப்படிப்பட்டவர்கள் மிகவும் குறைவு. 
பதிவுலகம் நிறைய கதவுகளை தமிழ்கூறும் நல்லுலகத்திற்கும்  திறந்துவிட்டுள்ளது. எல்லா விஷயத்திலும் விதிவிலக்குகள் உண்டு, அது மாதிரி ஒன்றிரண்டு தவறான வலைப்பதிவுகள் இருக்கலாம். ஆனால் பல தமிழ் பதிவுகள் சரியான திசையை நோக்கியே சென்று கொண்டிருப்பதாகவே நான் உறுதியாக நம்புகிறேன். 
இந்த மாதிரியான ஒரு  கும்பலில் நானும் ஒருவனாக இருப்பதை நினைத்து பெருமை படுகிறேன்.


Read more...

கமெண்ட் கற்கண்டுகள் -- 5


எந்திரனுக்கு பிறகு நடிப்புக்கு ரஜினி குட்-பை
>> ஆகா கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க. அடுத்த படத்துக்கு கதை தயார் ஆகிற வரையிலும் இதுதான் கதை.

வக்கீலை ஏமாற்றி திருமணம் செய்த போலி வக்கீல் கைது.
>>எப்படி நாங்களெல்லாம் ஆடி காத்துலயே அவுள் சாபிட்ரவங்க. எங்க கிட்டயேவா ..?

சி.பி.ஐ ரெய்ட் வழக்கமான ஒன்றுதான். (மத்திய அமைச்சர் ஆ.ராசா)
>>காங்கிரசுக்கு எங்க மீது கோபம் வரும் பொழுது அவுங்க எங்க ஆபிஸ்ல ரெய்ட் விடுவதும். எங்களுக்கு அவுங்க மீது கோபம் வர்றப்ப தமிழ்நாட்டுல போராட்டம் பண்ணுவதும் வழக்கமான ஒண்ணுதான். இதை நாங்க ஒரு விளையாட்டவே வச்சிருக்கோம். மத்தபடி ஒண்ணுமில்லை.

பிரதமரையும், சோனியாவையும் சந்திக்கப் போகிறோம் என்று அழைப்பு இல்லாததால் தான் அந்தக் குழுவில் இடம் பெறவில்லை. (திருமாவளவன்)
>> ஐ ஆச தோச அப்பள வடை. நீங்க சந்திப்பின் போது பிரதமரையும் சோனியாவையும் ஆதரிப்பீங்க. வெளில வந்து அவுங்க செய்யுறது எல்லாம் சரியில்லைனு சொல்லிவீங்க. இது கூட எங்களுக்கு தெரியாதா..?

என் மனைவி தமிழச்சி, எனவே நான் பாதி தமிழன், நான் தமிழர்களுக்கு துரோகம் செய்வேனா..? (மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ்)
>>பாஸ் நீங்க ரொம்ப லேட். இங்க முழு தமிழர்களே தமிழர்களுக்கு துரோகம் செய்வதை மக்கள் உணர ஆராம்பிச்சுட்டாங்க. இப்ப வந்து...போயி பிள்ளைங்களை படிக்கவைங்க.

நம்ப தமிழர்களுக்கு ரசனை குறைவு. (தங்கர்பச்சான் ஒரு தொலைக்காட்சி பேட்டியில்).
>>கரீட்டா சொன்னீங்க. அதுல (தமிழர்) நீங்களும் ஒருத்தருங்கிரத மறந்துராதீங்க.

முல்லை பெரியாறு அணை விஷயத்தில் மத்திய அரசு கருணாநிதியை ஏமாற்றி விட்டது. எனவே மத்திய அரசுக்கு அளிக்கும் ஆதரவை வாபஸ் வாங்க வேண்டும். (ஜெயலலிதா)
>>ஹி ஹி ஸ்கூல் போற குழந்தைக்கு கூட தெரியும் நீங்க ஏன் இதை சொல்றீங்கன்னு. ஆமாம் உங்களுக்கு இவ்வளவு மொக்கையா அறிக்கை எழுதி தரவங்க யாருங்க...?




    


Read more...

பட்டவுடன் தொட்டது -- எஸ்.ராமகிருஷ்ணன் எழுத்துக்கள்


 ஒரு எழுத்தாளன் என்பவன் சம்பவங்களை உற்று நோக்குபவனாக இருப்பதோடு அவற்றை சுவை பட தொகுத்து தரவேண்டும். அத்துடன் ஒரு புதுவிஷயமும், சமுதாயத்தின் மீதான தனது பார்வையை பதியும் படியும் செய்பவனாக இருக்க வேண்டும். அவனுடன் இருந்து அந்த சம்பவத்தை பார்த்தவனே இவனது எழுத்துக்கள் மூலமாக அதே சம்பவத்தை புதிதாக காணும் படி செய்பவனே எனக்கு பிடித்த எழுத்தாளன். சமீப காலங்களில் அந்த மாதிரியான எழுத்துக்களை தருபவர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் முதன்மை ஆனவர். அவருடையை எல்லா புத்தகங்களையும் படித்தேன் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் படித்த எல்லாமே எனக்கு பிடித்தவை. இவர் லிங்குசாமியின் "சண்டகோழி" படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். தற்பொழுது நடிகர் ஆர்யா தயாரிப்பில், இளையராஜா இசையில் வெளிவரவிருக்கும் "படித்துறை" என்ற படத்தில் பாடல் எழுதுவதோடு, வசனமும் கையாளுகிறார். சமீபத்தில் இவர் எழுத்தில் படித்த ஒரு ஜெர்மன் நாட்டு திரை படத்தை பற்றிய பார்வையை படித்தவுடன் இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இது "ஆனந்த விகடனி" ல் வந்தது. இது  உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையோடு.

'A boy in the Stripped pyjama' என்ற ஜெர்மானியப் படம் பார்த்தேன். யூதர்களைக் கொல்வதற்கான நாஜி முகாம் ஒன்றுக்கு ஜெர்மன் ராணுவ அதிகாரியின் குடும்பம் ஒன்று வருகிறது. ராணுவ அதிகாரிக்கு ஒன்பது வயதில் ஒரு மகன் இருக்கிறான். ராணுவக் குடியிருப்பு என்பதால் வெளியே போய் விளையாட யாரும் இல்லை. தனியே வீட்டில் இருப்பது எரிச்சலூட்டுகிறது.

ஒருநாள் தன் வீட்டின் பின் வாசலைத் திறந்து ஓடுகிறான். தொலைவில் ஒரு முகாம் இருப்பதைக் காண்கிறான். அதில் முள்வேலி அமைக்கப்பட்டு இருக்கிறது. வேலியின் உள்ளே அவன் வயதில் ஒரு சிறுவன் அகதி உடை அணிந்து அடிபட்டு வீங்கிய முகத்துடன் இருப்பதைக் காண்கிறான். ஜெர்மானியப் பையனுக்கு அது அகதி முகாம் என்று புரியவே இல்லை. அவன் யூத சிறுவனிடம், 'எதற்காக இந்த முகாமைச் சுற்றி கம்பிவேலி போடப்பட்டுள்ளது, மிருகங்கள் வராமல் தடுக்கவா?' என்று கேட்கிறான். அதற்கு யூத சிறுவன், 'இல்லை, மனிதர்கள் வராமல் தடுக்க' என்று பதில் சொல்கிறான்.
ஜெர்மானியச் சிறுவனுக்கு அது புரியவில்லை. 'இந்த முகாமில் என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்கிறான். யூதச் சிறுவன் பதில் சொல்லாமல் போய்விடுகிறான். மறுநாள் ஜெர்மானியச் சிறுவன் வீட்டில் நடக்கும் விருந்துக்கு ஒயின் கிளாஸைச் சுத்தம் செய்ய முகாமில் இருந்து யூதச் சிறுவன் அழைத்து வரப்படுகிறான். அங்கே ஜெர்மானியச் சிறுவன் தந்த கேக்கை யூதச் சிறுவன் தின்னும்போது பிடிபடுகிறான். உடனே, ஜெர்மானியச் சிறுவன் அவனைத் தனக்குத் தெரியாது என்று சொல்லி மாட்டிவிடவே, கேக்கை திருடிச் சாப்பிடுகிறாயா என்று ராணுவ அதிகாரி அடிஅடியென அடிக்கிறார்.
மறுநாள் தன் தவறுக்கு மன்னிப்பு கேட்க அவனைத் தேடி வருகிறான் ஜெர்மானியச் சிறுவன். யூதச் சிறுவன் கோபம்கொள்ளவில்லை. மாறாக, பிடிபட்டு அகதியாக உள்ளவன் அவமானங்களைத் தாங்கிக்கொள்ளப் பழகியிருக்கிறான் என்று மன்னிக்கிறான். இரண்டு சிறுவர்களுக்குள்ளும் நட்பு உருவாகிறது.
அதன் பிறகு, தன் வீட்டில் இருந்து ரகசியமாக ரொட்டி, கேக் எனத் திருடி வந்து, யூதச் சிறுவனுக்குத் தருகிறான். ஒரே வயது, ஒரே விருப்பம், விளையாட்டுத்தனம்கொண்ட இரண்டு சிறுவர்களில் ஒருவன் அகதியாகவும் மற்றவன் அதிகார வாரிசாகவும் இருப்பதும் எவ்வளவு முரண்பாடு. அகதிச் சிறுவன் அவமானத்தில் குறுகிப்போய் ஒடுங்கி மெலிந்திருப்பது அதிர்ச்சிகொள்ளவைக்கிறது.
இதற்கிடையில், யூத முகாமில் இருப்பவர்கள் கூட்டம் கூட்டமாகக் கொலை செய்யப்படுவதும், இறந்த உடலை மொத்தமாக எரிப்பதுமாக அழித் தொழிப்பு வேகமாக நடைபெறுகிறது. இந்த உண்மை அறிந்த ஜெர்மானிய அதிகாரியின் மனைவி அதிர்ச்சியடைகிறாள். கணவனோடு சண்டையிடுகிறாள். கணவன், 'ஹிட்லரின் கட்டளையை நாங்கள் மீற முடியாது. இது ஒரு தேசச் சேவை' என்கிறான். மனைவி, 'இந்தக் கொடுமையைக் காண என்னால் முடியாது' என்று பிள்ளைகளை அழைத்துக்கொண்டு ஊருக்குக் கிளம்ப முடிவு செய்கிறாள்.
ஊருக்குப் புறப்படும் முதல் நாளில் யூதச் சிறுவன் தன் அப்பாவை முகாமில் காணவில்லை என்று சொல்லிக் கவலைப்படுகிறான். அவரைத் தேட தானும் அந்த முகாமில் வருவதாகச் சொல்கிறான் ஜெர்மானியச் சிறுவன். அதன்படி அவனுக்காக அகதி உடை ஒன்றைத் திருடி வந்து தருகிறான் யூதச் சிறுவன்.
இரண்டு சிறுவர்களும் முகாமுக்குள் போகிறார் கள். மனித அவலங்களைக் காண்கிறார்கள். ஹிட்லரின் அவசர ஆணைப்படி முகாமில் இருப்பவர்கள் மொத்தமாகக் கொல்ல அழைத்துப் போகப்படுகிறார்கள். அதில் இரண்டு சிறுவர்களும் மாட்டிக்கொள்கிறார்கள்.
இதனிடையில் தன் மகனைக் காணாமல் தேடி அலைகிறாள் ஜெர்மானியத் தாய். அவனைத் தேடி முகாமுக்கே வருகிறான் தந்தை. ஆனால், யூதர்களை விஷ வாயு செலுத்திக் கொல்வதற்காக அடைத்துவைக்கப்பட்ட சேம்பரில் இரண்டு சிறுவர்களும் அடைக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்மை தெரியவருகிறது. பிள்ளையைக் காப்பாற்ற குடும்பமே போராடுகிறது. ஆனால், விஷ வாயு தாக்கி இரண்டு சிறுவர்களும் செத்துப் போகிறார்கள். இருவரது கைகளும் நட்போடு ஒன்றாகக் கோக்கப் பட்ட நிலையில் இருக்கின்றன. ஜெர்மானிய அதிகாரியின் மனைவி கதறி அழுகிறாள்.
சொந்த உதிரம் பலியாகப் போகும்போது ஏற்படும் தவிப்புப் போராட்டம். ஏன், ஆயிரமாயிரம் பேர் கொல்லப்பட்டபோது வரவில்லை என்ற ஜெர்மானிய மனச்சாட்சியின் கேள்வியை அந்தப் படம் எழுப்புகிறது. மனித அவலத்தின் வலியை இரண்டு சிறுவர்களை மட்டுமே முதன்மைப்படுத்தி சொல்லிய அற்புதமான படம்.


Read more...

வெல்லத்தான் நினைக்கிறேன் -- ரேணிகுண்டா





தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களிலேயே "பேராண்மை" க்குத்தான் முதலிடம் என்று அறிந்து மகிழ்வுற்றோம். ஒரு நல்ல படம் மீண்டும் வெற்றி பெற்றிருப்பது, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மெச்சுவதாகவே உள்ளது.  நான் இன்னும் "பேராண்மை" பார்க்கவில்லை. பார்த்தபிறகு அது எப்படி நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்பதை பற்றி பேசலாம். எப்படியோ  இந்த படம் வெல்ல வேண்டும் என்ற ("வெல்லத்தான் நினைக்கிறேன் -- பேராண்மை") நமது எண்ணம் ஈடேறி இருப்பது குறித்து மகிழ்ச்சியே. அந்த நம்பிக்கையோடு...
ரேணிகுண்டா இந்த படத்தை லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த ஆர்.பன்னீர் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். புது முகங்கள் நடித்துள்ள இந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் இந்த படத்தை பற்றி வரும் செய்திகளும் இந்த படத்தை ஒரு நம்பிக்கைக்குரிய படமாக காட்டுகிறது. சமீப காலமாக இந்த மாதிரியான புது இயக்குனர்களும் புது முகங்களும் இணைந்து வரும் படங்கள் தரத்திலும் கல்லா கட்டுவதிலும் முதன்மை பெறுவது, தமிழ் பட ரசிகர்களாகிய நமக்கு கிடைக்கும் பெருமை. இந்த படமும்  வெல்ல வாழ்த்துகிறோம்.


Read more...

நிசமாவே நல்லவங்களா இவிங்க..?


"முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும்" -- என்ற பழமொழி எந்த விதத்தில் உண்மையோ இல்லையோ தெரியாது, ஆனால் தீவிரவாதம் விஷயத்தில் உண்மையாக நிறைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு அன்றாட நிகழ்வுகளில் ஒன்றாகி போனதை சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கே நடக்கும் அனைத்திற்கும் ஆப்கானிஸ்தானில் இருந்து இடம் மாறிய தாலிபான்களே. அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் "பாகிஸ்தானை கைபற்றியவுடன் எங்கள் முதல் இலக்கு இந்தியாதான்." என்பதாகும். இதற்கு பதில் அளிக்கும் விதமாக இந்தியாவில் இயங்கி வரும் மாவோயிஸ்டுகள் இயக்கம் "இந்தியாவை தாலிபான்கள் தாக்கினால் நாங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். நாங்கள் இந்தியாவை ஆதரிப்போம்" என்று தெரிவித்திருந்தார்கள். ஒரு வேளை  வடிவேலு காமெடி-ல சொல்ற மாதிரி "இந்தியா எங்கள் சொத்து அதை கொள்ளையடிக்கும் உரிமை எங்களுக்கு மட்டுமே உண்டு". என்று சொல்லாமல் சொல்கின்றனரா..?  தெரியவில்லை. ஆனால் நமக்கோ  "எங்களை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே" அப்படின்னு கேட்கதான்  தோணுது.


Read more...

தினமலரின் தவறு


மேற்காணும் இந்த படம் "தினமலர்" பத்திரிகையில் இன்று (oct-22-2009)  வெளிவந்தது. இதில் "ஆந்திர முதல்வர் ராஜ சேகர ரெட்டியை" அமெரிக்க தூதர் சந்தித்ததாக போட்டிருக்கிருக்கிறார்கள். நீங்கள் குழம்புவதை போலவே நானும் குழம்பி போனேன், ராஜ சேகர ரெட்டி இறந்து மாதகணக்கில் ஆகிறது இந்த நேரத்தில் எப்படி...? மேலும் படத்தில் இருப்பது தற்போதைய முதல்வர் ரோசையா அவர்களே. இப்படி இவர்கள் தவறு செய்தால் யாரும் கேட்க கூடாது..ஆனால் ....நமக்கெதுக்கு வம்பு.

.


Read more...

விசுவாமித்திரனின் கம்யூனிச சிந்தனை

கொஞ்ச நாளைக்கு முன்னால ராஜரிஷி-ங்குற படம் பார்த்தேன். அதுல விசுவாமித்திரன் எப்படி முனிவரானர்..? ஒரு நாட்டின் அரசனாக இருந்த விசுவாமித்திரன் (அரசராக இருக்கும் பொழுது அவர் பெயர் என்ன என்பதை நான் மறந்துட்டேன்), தனது நாடு அண்டை நாடுகளுடன் போர் புரிந்து வெற்றி மேல் வெற்றி குவிப்பதை கண்டு பெறும் மகிழ்ச்சி கொள்கிறார். அரசவையில் ஒரு நாள் தனது மகிழ்ச்சியை தனது அரசவை சகாக்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு வழக்கு வருகிறது. அரசாங்கத்திற்கு சொந்தமான தேரில் வந்த பொருள்களை சில கொள்ளையர்கள் கொள்ளையடித்து விடுகிறார்கள் அவர்களை காவலர்கள் பிடித்து வந்து அரசர் முன் நிப்பாட்டுகின்றனர். அரசருக்கு ஆச்சர்யம் என் நாட்டில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றல்லவா நினைத்து கொண்டிருக்கிறேன், என் நாட்டில் திருட்டா..? அதுவும் மன்னருக்கு வந்த உணவுகளை திருட முற்பட்டிருக்கிறார்களே..? அப்படின்னு ஆச்சர்யம். அமைச்சரிடம் விளக்கம் கேட்கிறான் அரசன், அமைச்சர் சொல்கிறார் நாம் தொடர்ந்து போர் மேற்கொண்டிருந்ததால் மக்கள் விவசாயம் பக்கம் கவனம் செலுத்தமுடியவில்லை. விவசாயம் படுத்துவிட்டது. உணவு பஞ்சம் நாட்டில் தலை விரித்து ஆடுகிறது. அரசர் கேட்கிறார் அப்ப இந்த உணவு ..?  "இது வஷிஷ்டர் என்ற முனிவரின் ஆசிரமத்திலிருந்து வருகிறது" என்று அமைச்சர் விளக்குகிறார். "நாடே பஞ்சத்தில் இருக்கும்போது அந்த முனிவரிடம் மட்டும் எப்படி..? " என்று அரசர் வினவ, மீண்டும் அமைச்சர் விளக்குகிறார் "அரசே அவரிடம் காமதேனு என்று ஒரு பசு இருக்கிறது, அது கேட்டவை எல்லாம் தரக்கூடியது. அதன் மூலமாகத்தான் இந்த உணவை வரவழைத்து நீங்கள் பசி ஆற வேண்டும் என்று அனுப்பி வைத்துள்ளார். " என்று. அரசன் உடனே அந்த முனிவரின் ஆசிரமம் நோக்கி விரைகிறான், "நீங்கள் எனக்கு உணவு கொடுத்தது போலவே அந்த காமதேனுவை கொண்டு என்நாட்டு மக்களுக்கும் கொடுத்து அவர்கள் பசியார வேண்டும்" என்று கேட்டு கொள்கிறான். முனிவர் அதற்கு மறுப்பு தெரிவப்பதுடன் அது நாட்டை ஆளும் அரசரின் கடமை என்றும் எடுத்துரைக்கிறார். அரசன் கோபம் கொள்கிறான் படை வீரர்களை அனுப்பி அந்த காமதேனு பசுவை பிடிக்க ஏற்பாடு செய்கிறான், ஆனால் முழு படையும் தோற்றுவிடுகிறது.  அந்த பசுவை எப்படி பெறுவது என்ற கேள்வியில் அதை மிகப்பெரிய தவம் மேற்கொள்வதன் மூலமாக பெற முடியும் என்று அறிந்து தவம் மேற்கொள்கிறான். அந்த தவத்தின் வாயிலாக தனது நாட்டு மக்களின் பசியை தீர்க்கிறார்.
 நீங்கள் சமீப காலமாக பங்கு சந்தையை உற்று நோக்கினால் அது உயர்ந்து கொண்டேதான் போகிறது ஆனால் ஆட்குறைப்பும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. பங்கு சந்தை ஒரு நாட்டின் பொருளாதாரத்தின் மைய புள்ளியாக பார்க்கப்படும் பட்சத்தில், வேலையிழப்பு நடக்கும் போது எப்படி பங்கு சந்தை உயரும்..? இங்கே நாம் புரிந்து கொள்ளவேண்டியது, பங்கு சந்தை, பெரிய பெரிய பண முதலைகள் பணத்தை பங்கு போட்டுக்கொள்ளும் சந்தை, அதில் மற்றவர்களுக்கு தொடர்பில்லை. அதனால் நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களுக்கு பயன் ஒன்றும் இல்லை. எனவே இதை கொண்டு ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணக்கிடுவது என்பது ஏமாற்று வேலை. நேற்று CNN தொலைகாட்சியில் ஒரு செய்தி, வெள்ளை மாளிகை, WALL STREET -இ எச்சரித்துள்ளதாக. ஏன்னா அங்கு நடந்து வரும் குளறு படிகள். அதாவது நட்டத்தில் இயங்குவதாக கூறி அரசாங்கத்திடம் நிதியுதவி பெற்ற நிறுவனங்கள், இன்று பணத்தை திரும்ப அரசாங்கத்திடம் கொடுப்பதற்கு பதிலாக அந்தந்த நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் (C.E.O) தங்களது சம்பளத்தை உயர்த்தி கொள்வது, ஊழியர்களுக்கு அதிகபடியான போனஸ் கொடுப்பது என்று தங்களை வளர்த்து கொண்டுள்ளது.
சரி இதற்கும் முதலில் சொன்ன விசுவாமித்திரன் கதைக்கும் என்ன சம்மந்தம், அந்த கதையை பார்த்தீர்களேயானால் தனது நாட்டு மக்கள் பசியால் தவிப்பதை பொறுக்க முடியாமல் தனது பதவியையே துறந்து, துறவறம் பூண்ட மன்னர்கள் இருந்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. விசுவாமித்திரன் காலத்திலேயே தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் சிந்தனை எல்லாம் வந்தாச்சு. ஆனால் மக்களாலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கால மன்னர்களோ பணக்காரர்களின் கல்லா நிரம்பவும், தங்களையும் அவர்களில்  ஒன்றாக இணைத்துக்கொள்ளும் முயற்சியையுமே சிரமேற்கொண்டு செய்கிறார்கள். அதில் ஒரு பகுதிதான் நலிந்த நிறுவனங்களுக்கு மக்களின் வரிப்பணத்தை நிதிஉதவியாக கொடுத்தது எல்லாம். அமெரிக்கா மட்டுமல்ல முதலாளித்துவ சிந்தனைகள் கொண்ட அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டின் அடித்தட்டு மக்களையும் நடுத்தர மக்களையும் காப்பாற்றுவதற்கு வழி பார்க்க வேண்டும். இது கம்யூனிச சிந்தனையோ இல்லையோ தெரியாது ஆனால் எக்காரணம் கொண்டும் சமுதாயத்தின் ஒரு தட்டு மக்களின் வளர்ச்சிக்கு மட்டும்  துணை போவது என்பது மற்ற மக்களின் ஒட்டு மொத்த கோபமும் தாங்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் மேல் திரும்புவதற்கு வழி வகுக்கும்.


Read more...

இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை

புதுசா அறிமுகமாகும் ஒரு டைரக்டரோட (ஆர்.சுந்தர்ராஜன்) படமாச்சே, எப்படி இருக்குமோ ஏதா இருக்குமோனு பயந்துகிட்டே தியேட்டருக்குள் போனேன். இரண் டாவது ரீல்லேயே எனக்கு சரியான நோஸ் கட்!

துணிக்குப் போடற கஞ்சியைக் குடிச்சே வயித்தை நிரப்பிக்கிற ஏழ்மை; இருந்தாலும் பாடகனா ஆகணுங்கற லட்சியம் - இது கதாநாயகன் ரவி (மோகன்).
ரவியின் திறமையை வெளி உலகுக்குக் கொண்டுவர எல்லா முயற்சிகளையும் எடுத்து, அவ னைக் காதலிக்கவும் செய்யும் கதாநாயகி ராதா (பூர்ணிமா ஜெயராம்).
- இவங்க ரெண்டு பேரையும் சுற்றி, டைரக்டர் திரைக்கதையைப் பின்னியிருக்கும் அழகு அப்படியே அசத்திடுது.
'முதன்முதல் ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ' பாடலும், டி.வி-க்காக ரவி பாடும் இன்னொரு பாடலும் படமாக்கப்பட்டுள்ள விதம் டைரக்டரோட எதிர்காலத்துக்கு உத்தரவாதம் அளிக்குது! (இளையராஜாவும் எஸ்.பி.பி- யும் இவருக்கு அசைக்க முடி யாத இரு தூண்கள்!)
தனக்கு பிளட் கான்சர்ங்கறதை ராதாகிட்டே சொல்ல முடியாம ரவி திண்டாடறது, தன் மீதுள்ள காதலை அவ மறக்கணும்கறதுக்காக அவளை டீஸ் பண்றது, மூன்றாவது ஒரு மதுரை டாக்டர் (ராஜேஷ்) அறி முகமாறது - பின்பகுதி விவ காரங்கள்லே துளிக்கூட அமெச்சூர்த்தனமே தெரியலே!
படத்துலே என்னதான் குறை?
ஹீரோவோட பிளட் கான் சர், 'வாழ்வே மாய'த்தின் பாதிப்பு! டாக்டர் குமார் விஷயத்தில் 'அந்த 7 நாட்கள்' பாதிப்பு!
இருந்தாலும், ஒரு ஊக்க போனஸ் மாதிரி 48 மார்க் தரலாம்!

-பயணங்கள் முடிவதில்லை படத்தின்  "ஆனந்த விகடன்" விமர்சனம் தான் நீங்கள் மேலே பார்த்தது. ஹும்.. என்னத்த சொல்றது....? முடிஞ்சா அப்படியே "கலைஞனை மதிக்காத சமூகமே" படியுங்கள், முன்னாடியே படிச்சிருந்தா அதை ஞாபக படுத்திக்கொள்ளுங்கள். விகடனின் இளையராஜா புறக்கணிப்பு முடிவதில்லை போல.


Read more...

அவசர சட்டமும் அதனால் நிகழப்போகும் விபரீதமும்

நாடு முழுவதும் உள்ள ஐஐடிக்களில் சேர நுழைவுத் தேர்வில் பங்கேற்க 12ம் வகுப்புத் தேர்வில் குறைந்தபட்சம் 60 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்று தற்போது தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை 80 முதல் 85 சதவீதமாக உயர்த்த மத்திய மனித வளத்துறை முடிவு செய்துள்ளது. 2011-வது கல்வி ஆண்டு முதல் இது அமலுக்கு வரும் என்று அத் துறையின் அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.

மேற்கண்ட செய்தியை இன்றைய செய்திகளில் நீங்கள் கடந்து வந்திருக்கலாம். ரொம்ப நாளா எனக்குள் ஒரு கேள்வி இருந்துகிட்டே இருக்கு.  சமீபத்தில் PROJECT MANAGEMENT குறித்த ஒரு தேர்வு எழுதினேன் நான் 63% மதிப்பெண் பெற்றேன். ஆனால் நான் தேர்வில் பாஸாகவில்லை என கூறிவிட்டார்கள். விசாரித்த பொழுதுதான் தெரிந்து கொண்டேன் அதற்கு 80% மதிப்பெண்கள் தான் குறைந்த பட்ச தகுதி என்று.  பிறப்பால் தாழ்த்தப்பட்ட சாதியில் பிறந்தவனுக்கு கல்வி எட்டா கனியாக இருந்த பொழுது அது கிடைக்க போராடியவர்களை நமக்கு தெரியும், அதன் மூலம் கல்வி பயன் அடைந்தவர்கள்தான் இன்று உலகம் முழுவதும் வியாப்பித்திருக்கிருகிறார்கள். இது பாராட்ட பட வேண்டிய ஒன்று.  தொழில் நிமித்தமாக தான் சார்ந்திருக்கும் சிறிய ஊரில்  ஒருவன் சாதரண கல்விநிலயத்தில் கல்வி கற்க நேர்ந்தால் அவனை மேலே கொண்டுவரவும் ஒரு சட்டம் போடப்பட்டு அவனுக்கிருந்த தடைகல்லும் நீக்கப்பட்டது. ஆனால் என்னை போல 60% மதிப்பெண் எடுப்பவர்களுக்கு என்னதான் கதி..? எங்களால் எல்லாம் உயர் பதவிகளை அடையவே முடியாதா..?  அப்படிங்கிற கேள்வி என் மனதுக்குள் இருக்கிறது. ஆனால் இதை சொன்னால் நீயும் 80% மதிப்பெண் வாங்க வேண்டியது தானே..? அப்படிங்கிற கேள்வி வரும்,சரி நாங்க முயன்றோம் முடியவில்லை ஆனால் அதற்காக அந்த வாய்ப்பு என்னை போன்றோருக்கு முற்றிலுமாக மறுக்க படுவது என்பது என்ன நியாயம்..? இது இன்னொரு வகையில் அடிமைகளை தோற்றுவிக்கும் வழிதானே.? இப்படியே போனால் வருங்காலத்தில் 80% வாங்கியவர்கள்தான் வாழலாம், மற்றவர்கள் எல்லாம்...?! என்ற நிலை  கூட வரலாம்.  அது
 எப்படின்னு கேள்வி கேட்பவர்களுக்கு ஒரு சின்ன விஷயம் ஒரு வளமான பொருளாதாரம் என்பது அந்த நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களது அடிப்படை தேவைகளை குறைந்த அளவு பணம் செலவு பண்ணினாலே கிடைக்கும் படி இருக்க வேண்டும் அப்பொழுது தானே அந்த நாடு நல்ல வளமான பொருளாதாரத்துடன் இருக்கிறது என்று அர்த்தம். அதை விடுத்து ஒரு வேளை சோற்றுக்கே சில ஆயிரங்களை செலவு பண்ணும் படி இருந்தால் அது எப்படி நல்ல பொருளாதாரம் ஆக முடியும்..?
அப்புறம்  கல்வியும், மதிப்பெண்ணும் மதிக்கப்படமால் போவதற்கே வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான திட்டங்களுக்காக  அவசர சட்டம் போட்டுபவர்கள் வருங்காலத்தில் அது என்ன விதமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதையும் எண்ணி பார்க்க வேண்டும்.


Read more...

என்ன பண்றாங்க..? எப்படி சம்பாதிக்கிறாங்க..?


 இந்த மாசம் வீட்டு வாடகைக்கு என்ன பண்றது அப்படின்னு நினைக்கிற குடும்ப தலைவன் இருக்கிறான். இந்த மாசம் காலேஜ் பீஸ் எப்படி கட்டப்போறோம்னு நினைக்கிற மாணவ மாணவிகள் இருக்கிறார்கள். வாழ்நாள்ல ஒரே ஒரு சொந்த வீடு கட்டிபுட மாட்டோமா அப்படின்னு நினைக்கிற சாதரண அரசாங்க ஊழியர்கள் இருக்கிறார்கள். ஆனால் இது மாதிரி எல்லாம் கவலை எதுவும் இல்லாமல் அதே சமயம் புகழுக்கும் கொஞ்சம் கூட குறைவில்லாமல் வாழ்கையை ஒட்டி கொண்டிருக்கும் ஆசாமிகளை பற்றி நாம் என்றாவது யோசித்திருக்கோமா..? அப்படி யோசித்த போது சில பிரபலங்கள் நம் எண்ணங்களில் தோன்றினர். தயவு செய்து சம்மந்தப்பட்ட நபர்களை நாம் நக்கலடிப்பதாக நீங்கள் நினைக்க வேண்டாம். பணம்
 இப்படியெல்லாம் சம்பாதிக்கலாம் அப்படின்னு தெரிஞ்சுகிட்டா நம்ம நடுத்தர மக்களும் அதை பாலோ பண்ண வசதியா இருக்கும்ல. அதுக்காகத்தான்,

அன்றாடம்  நீங்கள் காலையில எழுந்திருச்சு நியூஸ் பேப்பர்-ஐ புரட்டினால் உங்கள் கண்ணில் அடிக்கடி "சுப்பிரமணிய சாமி" அப்படிங்கிற பேரு அடிக்கடி தோன்றும். இல்லை இல்லை நான் அந்த பழனி மலை "சுப்பிரமணி சாமியை" சொல்லல. அரசியல்வாதி சுப்பிரமணியசாமியை தான் சொல்லுறேன். திடீர்ன்னு ஒரு அரசியல் கட்சியை எதிர்க்கிறார். திடீர்ன்னு அவுங்களையே ஆதரிக்கிறார்.  ரொம்ப சுருக்கமா சொல்லனும்னா சம்மந்தா சம்மந்தம் இல்லாம பேசுறார். கட்சி ஒன்றையும் நடத்துறார், ஆனா அப்படி இருந்தும் பெரிய வருமானம் இருக்கிறமாதிரி தெரியலை. இவரு வெளிநாட்டுல எங்கேயோ பேராசிரியரா வேலை பார்ப்பதாக சொன்னார்கள், இவருக்கு எப்படியும் ஒரு அறுபது வயதாவது இருக்கும் அப்படி பார்த்தா இவர் இந்நேரம் அந்த பேராசிரியர் தொழிலிருந்து ஓய்வு பெற்று இருக்க வேண்டும். அப்படி பார்த்தாலும் பென்ஷன் வருமே..? அது போதுமா ஒரு கட்சி நடத்த, அவ்வப்பொழுது அறிக்கை விட..? எல்லா தேர்கல்களிலும் போட்டியிட இந்த வருமானம் போதுமா..? வேற என்னதான் பண்ணுறார்  தொழிலுக்கு..? 

இது மட்டுமா திடீர் திடீர்ன்னு வெளிநாட்டு பயணம் போறார். அங்குள்ள அரசாங்க பிரதிநிதிகளை சந்தித்தேன்னு சொல்லுறார். இவரு என்னதான் பண்றார்...?  ஒரே குழப்பமா இருக்கு, இப்படி குறைஞ்ச வருமானத்துல ஒரு அரசியல் வாதியாவோ அல்லது பிரபலமாவோ இருக்க முடியும்னா அப்புறம் ஏன் மக்கள் மேலே சொன்ன சின்ன சின்ன கனவுகளுக்காக ஏங்கி கிடக்கனும்.?  உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.


Read more...

கமெண்ட் கற்கண்டுகள் (சிரிக்க மட்டும்) -- 4

அரசுப் பணி அதிகமாக அழுத்தும் நேரங்களில், 'கலைஞர்' டி.வி-யில் ஒளிபரப்பாகும் 'மானாட மயிலாட' நிகழ்ச்சியைப் பார்த்து தன்னை ரிலாக்ஸ் செய்து கொள்வாராம் முதல்வர் கருணாநிதி. குறிப்பாக நடுவர்கள், நடனமாடுபவர்கள் அணியும் காஸ்ட்யூம்கள் பற்றியும் இடையிடையே ரசனையோடு யோசனைகள் தருவாராம். 'கலைஞர்' என்றால் சும்மாவா!
>> இந்த லட்சணத்துல  கட்சிகள் எல்லாம் டி.வி ஆரம்பிக்கலாம்னு சொல்லிட்டாங்க. ஆமாம் நாட்டுல மும்மாரி மழை பொழிஞ்சு மக்கள் எல்லாம் சந்தோசமா இருக்காங்க அப்புறம் மானாட மயிலாட பார்த்தால் என்ன இல்லை மானே ஆடி பார்த்தால் என்ன ..?


செய்தி-2
அந்த ஆவேசக் கூட்டத்துக்கு எத்தனையோ பேர் வற்புறுத்தி அழைத்தும், 'தல' 'தள' நடிகர்கள் செல்லவில்லை. 'எங்களை இந்தளவுக்கு உச்சத்துக்கு கொண்டு வந்ததே மீடியாக்கள்தான். அவங்களுக்கு எதிரா வேகப்பட்டு பேசுகிற இடத்தில் நாங்கள் இருப்பது வீண் சங்கடம்' என்று சொல்லிவிட்டார்களாம்.
>> இதுக்கு பேசாம அஜீத், விஜய் அப்படின்னு போட வேண்டியது தானே. பொது ஜனங்களாகிய எங்களை நீங்க குறைச்சு எடை போட்டுட்டிங்கன்னு நினைக்கிறோம். இன்னும் கஷ்டமா ஏதாவது சொல்லுங்க கண்டுபுடிச்சு காட்டுறோம். எங்க அறிவை வளரவிட மாட்டிங்க போல. 
செய்தி-3
பேர் சொல்ல மாட்டேன்... ஊர் மட்டும் சொல்வேன். குறித்துக் கொள்ளும். தமிழகத்தின் முக்கிய வாரிசுப் பிரமுகர் ஒருவர் அண்மைக்காலமாக வெளிநாட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு சிகிச்சை அளிக்கும் இங்கிலாந்து டாக்டர் ஒருவர் அவசரமாகக் கடந்த வாரம் சென்னைக்கு வந்தார். நடுநிசியில் வந்த அவரை வரவேற்க அந்த வாரிசு தன்னந்தனியாக ஏர்போர்ட்டுக்குப் போயிருக்கிறார். டாக்டரை தனது காரில் ஏற்றிக்கொண்டு பிரபலமான மருத்துவமனைக்குப் போயிருக்கிறார். அங்கிருந்து அதிகாலையில் தன்னுடைய வீட்டுக்கும் டாக்டரை கூட்டிப் போயிருக்கிறார். கொஞ்சநாளைக்கு இங்கிலாந்து டாக்டர் இங்கேயே தங்கியிருந்து, சில மருத்துவ அட்வைஸ்கள் வழங்குவாராம்! வாரிசின் பயணங்களில் அந்த டாக்டரையும் பார்க்கலாம் போலிருக்கு.
>> போனதுக்கு போட்ட கமெண்டை பாருங்க. ஸ்டாலினை தானே சொல்றீங்க. திருந்துங்க. 

அழகிரி தனது பாதங்களை டெல்லியில் பதித்துவிட்டார். இனி "அட்டாக் பாண்டிகளும்'' "பாம் ரங்கநாதன்களும்'' அழகிரியின் அமைச்சர் மாளிகையிலிருந்தே தங்களுடைய நடவடிக்கைகளை துவங்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை.

(ஜெயலலிதா அறிக்கை)

>> அவுரு டெல்லில பாதம் பதிச்சு பல மாதங்கள் ஆயிடுச்சு இப்ப வந்து.., சரி உங்க காலண்டர்ல இப்ப மாசம் என்ன 2009 மே மாசமா..?
 எனக்கு புடவையே கட்டத் தெரியாதா என சிலர் கேட்பதாக சொல்கிறார்கள். எனக்கு நல்லா புடைவை கட்டத் தெரியும். அப்படி கட்டினா ரொம்ப ரொம்ப கவர்ச்சியா தெரிவேன். அதைப் பார்த்து 'மச்சான்ஸ்' எல்லாம் கெட்டுப் போயிடுவாங்க. ஆம்பிளைங்க கெட்டுப்போகாம தடுக்கத்தான் நான் புடவை கட்டறதில்லை.

(சொன்னவர் நடிகை நமீதா)
  >> இந்த மாதிரியான சமூக அக்கறை கொண்டவங்கலையா இந்த பத்திரிக்கை உலகம் இப்படியெல்லாம் பேசுது .? என்ன கொடுமை இது...?


Read more...

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 3


என்னடா "தளபதி" இவ்வளவு பெரிய ஏமாற்றத்தை தந்திடுச்சென்னு நினைச்சப்ப, நண்பர்கள் வற்புறுத்தல் காரணமாக "குணா" பார்க்க போனேன், எப்படியா இருந்தாலும் நம்மாளுதானே இசை. படம் என்னவோ பண்ணுச்சு. ஆனா அதை வெளில சொல்லிக்கலை. இந்த சமயத்துல ரஜினி-ன் அடுத்த படமான "அண்ணாமலை" இளையராஜா இல்லாம எடுக்கபட்டுச்சுன்னு, கேள்வி பட்டு ரொம்பவே நொந்து போயிட்டேன். இந்த முறை ரஜினி பிரிஞ்சதை ஏத்துக்க முடியலை, இந்த படத்தையே பார்க்க கூடாதுன்னு முடிவு செஞ்சேன். அது கூட இளையராஜவிற்காக இல்லைன்னு நான் நம்பினேன். ஏன்னா ரஜினியை அவரது நடிப்புக்காக எத்தனை பேரு ரசித்தார்கள் என்று தெரியாது. ஆனா ரஜினி நட்பிற்கு, தன்னை வளர்த்தவர்களுக்கு ஆதரவு தரக்கூடியவர் அப்படிங்குற குணத்தினாலேயே தான் எனக்கு ரஜினியை ரொம்ப பிடிச்சது. அப்படிப்பட்ட ரஜினி ராஜாவுடனான தனது நட்பை துண்டிச்சுக்கிட்டாரே அப்படின்னு நினச்சு மனசு ரொம்ப வெறுத்துடுச்சு அதனாலத்தான் அந்த படத்தை பார்க்க வேண்டாம்னு முடிவு செஞ்சேன். ஆனா அந்த படம் கூட பாலச்சந்தர் என்ற தனது குருவின் மேல் கொண்ட பக்தியினால பண்றார்னு நம்ப மனம் மறந்தது. அதாவது என்னையும் அறியாமல் ராஜாதான் என் மனசில் ஆழமா பதிஞ்சுட்டார். அப்படிங்கிறதை இந்த விஷயம் நன்கு உணர்த்தியது. சரி இனிமேல் நம் விருப்ப லிஸ்ட்-ல் ரஜினி இல்லை. அடுத்த வாரத்தில் இன்னொரு அடி, அதாவது பாலச்சந்தர் தயாரிக்கும் ஒரு படத்தை மணிரத்தினம் இயக்குவதாகவும் அதற்கு ராஜா இசை இல்லைன்னும் ஒரு செய்தி. என்னடா இது நமக்கு வந்த சோதனை பின்ன சின்ன வயசிலிருந்து முதலிடத்தில் இருந்த ரஜினியையே ஒதுக்கியாச்சு. இப்ப என்னடான்னா விருப்ப இயக்குனரையும் இழக்கணும் போல இருக்கே. அப்போ மணிரத்தினம் பல கல்லூரி மாணவர்களின் விருப்ப இயக்குனர். சாமி கும்பிடுரப்ப எல்லாம் இந்த செய்தி பொய்யா இருக்கணும்னு வேண்ட ஆரம்பிச்சேன். ஆனா நான் சாமியை  சரியா கும்பிடலை போல, என் வேண்டுதல் பலிக்கல. அந்த படத்துக்கான விளம்பரம் வந்துச்சு, அதில் இசை ஏ.ஆர்.ரஹ்மான் அப்படின்னு போட்டிருந்துச்சு. நான் அதை பெருசா எடுத்துக்கல. ஏன்னா ராஜா பார்க்காத ஆளுங்களா..? நிச்சயம் ராஜா ஜெய்ப்பார் அப்படின்னு நான் ஆணித்தனமா நம்புனேன். படம் ரிலீஸ் ஆகி மக்கள் எல்லாம் அந்த படத்தின் பாடலகளை வெகுவாக பாராட்டி பேசிக் கொண்டிருந்தார்கள். எனக்கு ரொம்ப நெருக்கமான ஒரு நண்பன் கூட முதன் முதலாக சண்டை எல்லாம் போட்டேன். எல்லாரும் சொன்னார்கள் இதுல என்ன இருக்கு அன்றைக்கு எப்படி ராஜ பெரிய ஆளா ஆனாரோ அது மாதிரிதான் இதுவும் மேலும் ராஜாவும் சும்மா இல்லை அவரு நிறைய சாதனைகள் எல்லாம் பண்ணிட்டார்னு. மனம் நம்ப மறுத்துச்சு, கிட்டத்தட்ட இந்த கால கட்டத்துல தான் நான் முழு பைத்தியமானேன். அது எப்படி இவ்வளவு சாதனைகள் செஞ்ச ஒரு ஆளு ஒரு படத்துலையே கீழே போயிருவார்..? குமுதம் இதழில் "ரோஜா" படத்துக்கான விமர்சனத்துல இசை பற்றி குறிப்பிடும் போது "பாடல்களில் ஒரு புது தொனி தெரிகிறது. (இளையராஜாவிற்கு ஒரு சக்களத்தி)" அப்படின்னு போட்டிருந்தார்கள். ராஜாவிற்கு போட்டியா..? ஹ ஹா..எத்தனை பேரை பார்த்தவர்  ராஜா..? டி.ராஜேந்தர்,சங்கர்-கணேஷ்,பாலபாரதி,தேவா,ரவீந்திரன்,தேவேந்திரன் இப்படி பல பேரை சம காலத்தில் சர்வ சாதரணமாக ஓரம் கட்டியவர். அந்த பட்டியலில் இந்த ஏ.ஆர்.ரஹ்மானும் ஒன்று.  ராஜாவை பற்றிய விஷயங்களை தேடி தேடி படிக்க ஆரம்பித்தேன். மணிரத்னத்தின் பெயரும் விருப்ப லிஸ்டிலிருந்து தூக்கியாச்சு. "புதிய முகம்" என்று ஒரு படம் அதிலும் பாடல்கள் சூப்பர் ஹிட் அப்படின்னு சொன்னாங்க. அந்த படத்தை பார்த்தேன், அந்த படத்திலும் ஒரு குறை தெரிந்தது. சொல்ல மறந்துட்டனே "ரோஜா" படம் பார்த்த பொழுது எல்லோரும் படத்தையும் இசையையும் சொன்னபொழுது என் மனதில் அந்த படத்தை பற்றி ஆஹா என்றோ ஓஹோ என்றோ தோன்றவில்லை. சொல்லப் போனால் அந்த படத்தின்  பின்னணி இசையில் ஒரு குறையே தென்பட்டது. இதை சொன்ன போது நண்பர்கள் எல்லோரும் எனக்கு முழு பைத்தியம் பிடித்ததை உறுதி செய்தார்கள்.
சரி இனிமே நாம என்ன சொன்னாலும் கேட்கவா போறாங்க. இந்த சமயத்துல கூட எனக்கு உதவியது ராஜாவின் பாடல் தான். 'எது வந்தால் என்ன எது போனால் என்ன என்றும் மாறாது வானம் தான்..". வான் போல இளையராஜா இருக்க என்ன கவலை. கிட்டத்தட்ட இந்த சமயத்தில் தான் கமலின் "தேவர் மகன்" வெளிவந்தது. எல்லா பாடலும் அருமையா இருந்துச்சு. ஆனா பாருங்க எல்லா ஊடகங்களிலும் விமர்சனங்களிலும் ரொம்ப அருமை பெருமையா எழுதாமல் இதெல்லாம் இளையராஜாவின் கடமை அதாவது இளையராஜாவிற்கு சாதரண விஷயம் என்பது போல. அடுத்து "ஜென்டில் மேன்","காதலன்" அப்படின்னு ஹிட் கொடுத்து ஏ.ஆர்.ரஹ்மான் மேலே ஏற ஆரம்பித்தார். ஆனால் அந்த காலத்திலும் இளையராஜா கொஞ்சம் கூட தரம் குறையாமல் பாடல்களை கொடுத்தார் உதாரணத்திற்கு சிலவை இங்கே "ராஜகுமாரன்","வள்ளி","சிறைச்சாலை","மகாநதி","பிரியங்கா","மகளிர் மட்டும்" இப்படி பல படங்கள் இவற்றில் இளையராஜாவின் பங்களிப்பு  எல்லாம் பெரிய அளவில் பேச படவில்லை, ராஜாவின் ரசிகர்களை தவிர. அல்லது இவை அந்த  பாடல்களுக்குரிய தகுதியான இடத்தை பெறவில்லை. இவை எல்லாம் எப்படி நிகழ்ந்தது..? ராஜாவை எல்லாரும் ஒதுக்கிய பொழுது என்னை போன்ற (முழு அல்லது அரை) பைத்தியங்களை எல்லாம் ஒரு தனி தீவில் விட்டுவிட்டு மற்றவர்கள் எல்லாம் சென்று விட்டதை போலவே நான் உணர்ந்தேன்.  இதன் பிறகு ராஜா எவ்வளவோ ரொம்ப ரொம்ப சாதரண படங்கள் பண்ணி இருக்கிறார், சில படங்கள் ரிலீஸ் ஆகமலே இருந்திருக்கின்றன (பரணி,பூஞ்சோலை,காதல் சாதி இன்னும் பல)
 ஆனால் எந்த படமானாலும் அந்த படத்தின் ஆடியோ கேசட் அல்லது சி.டி. வாங்குவதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்தேன்.  இன்னும் ஞாபகம் இருக்கிறது அன்று "தேவதை" படத்தின் ஆடியோ ரிலீஸ் என்று. சாப்பிட வைத்திருந்த காசில் ஆடியோ கேசட் வாங்கிவிட்டு கிட்டத்தட்ட நான்கு கிலோமீட்டர் நடந்தே நான் தங்கி இருந்த இடத்திற்கு சென்றேன். இதை நான் பெருமையாக இப்பொழுது கூட நினைத்து பார்க்க முடியவில்லை. மாறாக இது எல்லாம் அதி  அற்புதமான இசையை வழங்கிய ஒரு மகா கலைஞனுக்கு செய்யும் ஒரு கடமையாகவே பார்த்தேன், பார்க்கிறேன். மேற்சொன்ன அந்த  படத்தின் பாடல்களிலும் நான் "இளமை ஊஞ்சலாடுகிறது" -வில் பார்த்த ராஜா தெரிகிறார். எல்லாரும் சொன்னாங்க ராஜா ஹிட் டைரக்டர்களின்  படத்திற்கு இசை அமைப்பதில்லை, அவர் முன்னாடி பண்ண மாதிரி அவர் இசை அமைச்சாலே படங்கள் ஓடணும்னு எதிர்பார்க்க முடியாது, அவரால் இளைய தலைமுறையினருக்கு ஏற்ற மாதிரி இசை அமைப்பதில்லை, அவருக்கு தலைகனம் அதிகம், இயக்குனர்கள் சொல்வதை கேட்பதில்லை தனக்கு தோன்றியவற்றை தான் இசை அமைக்கிறார், இப்படி பல குற்றச்சாட்டுகள். நான் எதையும் நம்புவதில்லை, சொல்லப்போனால் எல்லாவற்றிற்கும் (ஒரு வெறியனா) என்னிடத்தில் நியாயமான பதில்கள் இருக்கு. ஒரு விஷயம் ராஜா 90 களுக்கு பிறகு நல்ல பாடல்களை தருவதில்லை என்று சொல்பவர்களுக்காக ஒரு லிஸ்ட்..
பூமணி, ஒரு ஊர்ல ஒரு ராஜ குமாரி,கட்டுமரக்காரன்,பூந்தோட்டம்,அவதாரம்,வீட்ல விசேஷங்க, காக்கை சிறகினிலே,இவன்,HOUSEFULL,காதல் கவிதை,என்னருகே நீ இருந்தால், சக்கரை தேவன்,வியட்நாம் காலனி,பிரியங்கா,ஜூலி கணபதி,காத்திருக்க நேரமில்லை,காதல் சாதி(வெளியாகவில்லை இதுவரை)
இந்த லிஸ்ட் இன்னும் பெரியது, இந்த படங்களின் பாடல்களை கேளுங்கள் கேட்டுவிட்டு இந்த பாடல்கள் ஏன் அவை வெளிவந்த காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்படாமல் போனது என்பதற்கு காரணம் சொல்லுங்கள். பிறகு சொல்கிறேன் இளையராஜா ஏன் ஹிட் இயக்குனர்களின் படங்களுக்கு இசை அமைப்பதில்லை என்றும், ஏன் தனக்கு தோன்றியவற்றை மட்டும் இசை அமைக்கிறார் என்றும்.   இதோ இன்றைக்கு இந்த அளவு வந்தபிறகும் கூட இளையராஜாவை அந்த இடத்திலிருந்து இறக்க மனசு வரவில்லை, எனக்கு தெரிந்து இறக்கும் வரை இப்படியேதான் இருப்பேன். இதை பிடிவாதம் என்று ஒத்துக்கொள்ள மாட்டேன். ஏன்னா இன்றைய பழசி ராஜா வரை ராஜாவின் பாடல்களை என்னால் அன்று எப்படி "முரட்டு காளையை" ரசித்தேனோ அதே முழு மனதுடன் ரசிக்க முடிகிறது.
நான் அடித்து சொல்றேன் வருங்காலங்களில்  இளையராஜாவால் இன்னொரு "மௌன ராகம்","சிந்து பைரவி","முதல் மரியாதை" தர முடியும். இதற்கு அவருக்கு எல்லாம் வல்ல அந்த இறைவன் நிச்சயம் உதவுவான்.  இளையராஜாவை இன்று மதிக்காமல் அல்லது அவரது இசையை உதாசீனம் செய்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள், ராஜா ஒரு இசை பெருங் கடல் அதை நீங்கள் போற்றி புகழ வேண்டாம் எங்களைப் போல், ஆனால் குறைந்த பட்சம் குறை சொல்லாமலாவது இருக்கலாமே. இதை நீங்கள் ராஜாவுக்கு செய்யும் மரியாதையாக கூட நினைக்கவேண்டாம், இசைக்கு செய்யும் மரியாதையாக நினையுங்கள். இசை வேறுபாடுகளை களைய கூடியது, இங்கு வேண்டாமே விரோதம்.   இதை சொன்னால் என்னை கிறுக்கன் என்கிறார்கள்.


Read more...

ஒரு பயணமும் ஒட்டு மொத்த தோல்வியும்.

அனைத்து எம்.பி-க்களையும் மரியாதையோடு வரவேற்ற ராஜபக்ஷே, என்னைச் சுட்டிக்காட்டி, 'நீங்கள் எனக்கு எதிராகத் தமிழகத்தில் கடுமையாக முழங்கி வருகிறீர்கள்' எனச் சிரித்தார். உலகத்தையே ஜெயித்துவிட்டது போல இருந்தது அவருடைய அந்தச் சிரிப்பு. அமைதிக் காலத்தில் நான் ஒரு முறை ராஜபக்ஷேயை சந்தித்துப் பேசி இருக்கிறேன். அதை நினைவுகூர்ந்து பேசிய அதிபர், 'நீங்கள் என்னை சந்தித்தபோது, பிரபாகரனை நீங்கள் அழைத்து வந்தால், மீடியாக்களுக்குத் தெரியாமல் நமக்குள்ளேயே சமரசம் பேசி தக்க தீர்வுக்கு வழி வகுக்கலாம்' என நான் சொன்னேனே, நினைவிருக்கிறதா? இப்போது நீங்கள் வந்திருக்கிறீர்கள்... பிரபாகரனை காணவில்லையே..? அவரை உங்களுடன் அழைத்து வரவில்லையா?' எனக் கேட்டு மீண்டும் சிரித்தார்.

சபைக்கு நடுவே சாட்டையடிபட்ட வேதனையில் துடித்துப் போனேன். சூழல் என்னை அமைதி காக்கச் செய்தது. கனிமொழி, டி.ஆர்.பாலுவிடம் என்னை சுட்டிக்காட்டி பேசிய ராஜபக்ஷே, 'இவர் பிரபாகரனின் மிக நெருங்கிய கூட்டாளி. இக்கட்டான நேரங்களில் பிரபாகரனின் பக்கத்தில் நின்றவர். நல்லவேளை... கடைசி நேர இக்கட்டில் இவர் பிரபாகரனுடன் இல்லை. அப்படி இருந்திருந்தால் இந்நேரம்...' என்று வார்த்தையை முடிக்காமல் நிறுத்தினார். ஆணவமும் அகம்பாவமும் மதியை மறைக்க, சிறு எறும்புக்கும் தீங்கு விளைவிக்காத பாவனையில் அவர் பேசிக் கொண்டிருந்தார். அவருடைய நக்கலான பேச்சு என்னை மட்டுமல்லாது, இதர எம்.பி-க்களையும் முகம் சுளிக்கவே வைத்தது. அப்போதும், 'நீங்கள் ஒரு பௌத்தர். உங்களிடமிருந்து கருணையையும் இரக்கத்தையும்தான் எம்மக்கள் எதிர்பார்க்கிறார்கள்' என ராஜபக்ஷேயிடம் சொன்னேன். 'ரெண்டு வருடங்களுக்கு முன்பு அனைத்துக் கட்சி நிர்ணயக் குழு அமைச்சர் திசவிதாரன தலைமையில் தயாரித்த அறிக்கையின்படி, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு வழங்கலாமே' என நான் சொன்னபோது, முகத்தில் அடித்தாற் போல, 'அது என்னோட பார்ட்... நான் பார்த்துக்கிறேன்' எனச் சொல்லிச் சிரித் தார் ராஜபக்ஷே. அதற்கு மேலும் என்னால் அங்கே நிற்க முடியவில்லை.''


--  மேலே நீங்கள் கண்டது சமீபத்திய இலங்கை விஜயம் குறித்த திருமாவளவன் ஜூனியர் விகடன் இதழுக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி.  இவர் ஏன் அங்கே போனார்..? ஏன் ராஜபச்சேவை சந்தித்தார்...? அப்படிங்கிற கேள்வி எல்லாம் ஒரு பக்கம்  இருக்கட்டும்.  ஆனால் மேற்கண்ட பதிலிலிருந்து ஒரு விஷயம் விளங்குது,  ராஜபக்ஷே நடந்துகொண்டது மிக மிக மிக (இப்படி எத்தனை மிக வேணுமினாலும் போட்டுக்குங்க) கேவலமான ஒரு செயல். ஒரு அரசு முறை பயணத்தில் வந்தவரிடம் ஒரு நாட்டின் அதிபர் பேசும் பேச்சா இது..? என்ன ஆச்சர்யம் என்றால்  இது பற்றி யாரும் மிகவும் உரத்து குரல் கொடுக்காதது. சரிங்க விடுதலை புலிகளை ஒடுக்கியது உங்களுக்கு பெருமிதம் தருவதாக இருக்கலாம்..ஆனால் அதுக்காக எப்படி நீங்கள் வேறொரு நாட்டு அரசு பிரதிநிதியை இவ்வாறு பேசலாம்...?  கேட்டால் அரசு பிரதிநிதியாய் அவர்கள் செல்லவில்லை அந்ததந்த கட்சிகளின் பிரதிநிதிகளாகவே சென்றார்கள் என்றொரு குரல் கேட்கலாம், சென்றவர்கள் அனைவருமே இந்திய பாராளுமன்ற உறுப்பினர்கள். இதுவே அவர்களை அரசு பிரதிநிதிகளாக பார்க்க உதவுமே.சரிங்க அதுவும் வேணாம் குறைந்த பட்சம் ஒரு விருந்தாளியிடம் இப்படியா விஷம் கக்குவது..? கொஞ்சம் கூட ஒரு சபை நாகரீகம் அன்றி பேசிய ராஜபக்சேயை அங்கேயே  யாரும் கண்டிக்காமல் நின்றதன் மூலம்  , அவர்கள் நம் நாட்டு மானத்தை எப்படி வாங்கி இருக்கிறார்கள் என்று தெரிகிறது. எந்தவிதத்தில் இந்த பயணம் வெற்றியோ ஆனால் இந்த ஒரு விஷயத்தில் ஒட்டுமொத்த தோல்வியையும் தனதாக்கி கொண்டது இந்த பயணம்.


Read more...

பிடித்த கேள்விகள் - பிடித்த பதில்கள்

 எந்த பத்திரிகை ஆனாலும் அதில் வரும் கேள்வி- பதில் பகுதியை படிக்க தவறுவதில்லை அப்படி படித்த கேள்வி-பதில்களில் என்னை கவர்ந்த வற்றை இங்கே தந்துள்ளேன். இவை உங்களையும் கவரும் என்ற நம்பிக்கையோடு..

லஞ்சம், மாமூல்... என்னங்க வித்தியாசம்?
சம்பளம் மாதிரி, குறிப்பிட்ட தேதியில் தொடர்ந்து ஒழுக்கமாக(!) லஞ்சம் கொடுத்து வந்தால் - அதுதான் மாமூல்!

கம்ப ராமாயணம் எழுதிய கம்பரும், அமராவதியின் காதலனான அம்பிகாபதியின் தகப்பனார் கம்பரும் ஒரே நபர்தானா?

அம்பிகாபதி-அமராவதி கதையே ஒரு கதை தான்! கவிச்சக்ரவர்த்தி கம்பர் இருந்தது உண்மை; அவர் ராமாயணம் எழுதியது உண்மை. அவ்வளவே!
(மதன் கேள்வி - பதில்)

கேள்வி : தமிழக அரசு, கலைஞர் சிறந்த கதை வசனகர்த்தா என விருது தருகிறது. அண்ணா விருதை தி.மு.க. கலைஞருக்கு அளிக்கிறது. இதிலிருந்து என்ன தெரிகிறது?
பதில் : இவற்றை மறுக்கும் பெருந்தன்மை கலைஞருக்கு வேண்டும் என்று தெரிகிறது!
(கல்கண்டு கேள்வி-பதில்)

ஊழல் எதிர்ப்பாளரான சோ, ஜெயலலிதாவை ஆதரிப்பது ஏன்?


சோவின் பிரச்சனை ஊழல் அல்ல, உள்ளத்தில் ஊறியிருக்கும் உணர்வு..

சமீபத்தில் நடந்த ஒரு கண்டனக் கூட்டத்தில் நடிகர் விவேக் பத்திரிகை யாளர்களை ஆபாசமாய்த் திட்டிப் பேசினாராமே..?


விவேக் பாவம். சினிமாவில் சீன் காட்டி பார்த்தார், வடிவேலு வின் அமர்க்களத்துக்கு முன் காணாமல் போய்விட்டார். இப் போது மேடையில் சீன் காட்டுகிறார் பரிதாபப் படுவோம்.
(அரசு கேள்வி-பதில்)


Read more...

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன் - 2

கால்வாசி கிறுக்கனா மாறினாலும் அந்த தலைவர் (ரஜினி) வெறி மனதை தாண்ட மறுத்தது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத ஒரு இடத்தில் சின்ன வயதில் எந்த சாயமும், அதாவது எந்த ஒரு தமிழ் நடிகரின் ஆதரவாளனாக இல்லாமல் வளருவது என்பது கொஞ்சம் கஷ்டமும் கூட. வளர்ந்து நமக்கு விவரம் தெரிந்த பிறகு வண்ணமில்லாமல் தோன்றலாம் ஆனால் எதையும் தெளிவாக புரிந்து கொள்ள முடியாத அந்த சிறு வயதில் ஒரு வண்ணம் அவசியம் முன்னமே சொன்னது போல மற்றவர்களோடு சேர்ந்து விளையாடுவதற்காகவாது அது தேவை பட்டது.
கழுகு என்று ஒரு படம், ஏற்கனவே கூட படிக்கிற பசங்க எல்லாம் பாத்துட்டு "பயமா இருக்குதுன்னு" சொல்லி இருந்தாலும் தலைவருக்காக பார்க்க கிளம்பினேன். படத்தை முழுசா பர்ர்த்ததை விட, கை விரல்களுக்கு நடுவில் பார்த்தது தான் அதிகம். அவ்வளவு பயமா இருந்தது அதுக்கு காரணம் இளையராஜாவின் பின்னணி இசை என்பதை காலம் தான் சொல்லியது. சங்கிலி முருகன் ஒரு மந்திரவாதியாக நடித்திருப்பார் அவர் முகம் கண்களை விட அந்த காங்கோ வாத்திய கருவியின் பீட்டு நிறைய அதிர்வை தந்தது. கிட்டத்தட்ட
 அதே கால கட்டத்தில் வந்த "குரு" கமல் நடித்த அந்த படம் இலங்கை வானொலியில் அடிக்கடி அந்த "ஆடுங்கள் பாடுங்கள்" பாடலை போட்டு கலக்கி கொண்டிருந்தார்கள். இருந்தாலும் தலைவர் விதி அந்த படத்திற்கு போக அனுமதிக்க வில்லை. ஆனால் வீட்டிலுள்ளவர்களால்  அந்த படத்திற்கும் வலு  கட்டாயமாக அழைத்து செல்லப்பட்டேன். அந்த படத்தில் கமல் குருவாய் தோன்றும் பொழுதெல்லாம் எழுப்பப்படும் இசை அப்படியே நாமளும் குதிரையில் போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்துச்சு. அட என்னடா இப்படி ஒரு இசையை கமல் படத்தில் போட்டுட்டாரே இந்த ஆளு. அப்படின்னு நினைக்கும் பொழுது "தனிக்காட்டு ராஜா" வந்தது எல்லா பாட்டும் சும்மா அப்படி இருந்தது. அப்ப கூட எனக்கு இதெல்லாம் இளையராஜாவிற்கு சாதாரணம் என்பதை  நம்ப மறுத்தேன்.

அப்பொழுதெல்லாம் இளையராஜாவின் பாட்டுக்கள் ஹிட் என்பது எழுதப்படாத ஒரு விதி. இளையராஜா ஒரு பேட்டியில் சொன்னதைபோல "அதை கேட்க வேண்டியது தமிழக மக்களின் தலை விதியாக " மாறிப் போயிருந்தது. "அழகே உன்னை ஆராதிக்கிறேன்" , "ப்ரியா"  என படங்கள் வரிசை யாக ஹிட் அடித்த நேரம். கொஞ்சம் கொஞ்ச மாக மனசு இளையராஜாவை நோக்கி நகர்ந்தது. சரி தலைவரையும் விட வேணாம் ராஜாவையும் விட வேணாம் ஏன்னா தலைவர் படங்கள் எல்லாவற்றிற்குமே ராஜாதானே இசை. அதனால் ரஜினி பாதி ராஜா பாதின்னு வச்சுக்கலாம்னு முடிவு பண்ணியது மனசு. அப்பவெல்லாம் தலைவர் படத்திலேயே பிடிக்காத படம் "ராணுவ வீரன்" ஆனா அதை வெளிப்படையா சொல்ல முடியலை அல்லது தெரியலை. ஆனா அந்த படத்தில் ஒரு குறை தென் பட்டது. அது ராஜாவின் இசை என்பதை வளர்ந்த பிறகே தெரிந்து கொண்டேன். இந்த காலகட்டத்துக்கு அப்புறம் எனக்கு நினைவில் இருப்பது  "புன்னகை மன்னன்" படத்தின் பாடல்கள் வெளியான புதிதில் அந்த படத்தின் கேசட்டை  நண்பர் ஒருவரிடமிருந்து அவ்வப்பொழுது இரவல் வாங்கி கேட்பது வழக்கம். அதில் போட்டிருக்கும் இளையராஜா படத்துடன் பேசி இருக்கிறேன் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். எப்படி இந்த இசை இவருக்கு சாத்தியமானது. ஒரு பக்கம் "சலங்கை ஒலி" மாதிரியான சாஸ்திரிய இசை,  "முதல் மரியாதை", "மண்வாசனை" போன்ற கிராமத்து பாடல்கள், இன்னொரு பக்கம் "புன்னகை மன்னன்" மாதிரியான மேற்கத்திய இசை. அப்புறம் இசையில் வேற என்னதான் இருக்குது...? எல்லாமே என் வசம் இப்பவாது என்னை முழுமையா நம்புறியா இல்லையா என்றது "புன்னகை மன்னன்" கேசட்டின் மேலிருந்த இளையராஜா. விடுவோமோ..? ஹும் நாங்க எல்லாம் கொள்கை குலவிளக்கு. எங்க கிட்டயேவா. இந்த படங்களில் சம்மந்த பட்டிருந்தவர்களும் என்னுடைய விருப்ப லிஸ்ட்-ல் பிடித்த இயக்குனர்களாக பாரதிராஜாவும்,வைரமுத்துவும்,மணிவண்ணனும் இருந்தார்கள். திடீரென்று ஒரு குமுதம் இதழில் வைரமுத்து இனிமே இளையராஜா கூட பணிபுரிய மாட்டார் என்ற செய்தி படித்து. அட இது என்னடா என்று நினைத்து, வைரமுத்துவை என்னுடைய விருப்ப லிஸ்ட்-இலிருந்து தூக்கி விட்டேன். அப்புறம் பார்த்தா பாரதிராஜாவும் போறார்னு போட்டிருந்துச்சு. ஆனால் அவரை அவ்வளவு சீக்கிரம் தூக்க முடியவில்ல அத்துடன் அப்பொழுதுதான் "வேதம் புதிது" பார்த்தேன். ஆனா இவ்வளவு திறமையான படத்தில் இளையராஜாவிற்கு இடமில்லையே அப்படி என்றால் ....? என்று யோசித்து கொண்டிருக்கும் போதே வந்துச்சு "மௌன ராகம்" இளையராஜா அனேகமாக பாரதிராஜாவின் மேலிருந்த கோபத்திலேயே இந்த மாதிரியான படங்களுக்கு ட்யூன் போட்டிருக்க வேண்டும், இதை நான் எப்படி சொல்கிறேன் என்றால், இளையராஜா திரை துறையின் தனிக்காட்டு ராஜாவாக வலம் வரத்துவங்கிய பொழுதில் வந்தது "ஒரு தலை ராகம்" எல்லா பாடல்களும் ஹிட், ராஜாவிற்கு மாற்றா டி.ராஜேந்தர் என்ற விமர்சனம் வந்ததாம், அப்பொழுது தான் அவர் "பயணங்கள் முடிவதில்லை" கொடுத்ததாக ஒரு பத்திரிகையில் படித்தேன். எப்படியோ "மௌன ராகம்", "இதயகோவில்", என வரிசையா ஹிட்.  சரி பாரதிராஜா போனால் என்ன அதான் மணிரத்னம் இருக்காரே, அவரது புதுமையும் மிகவும் பிடித்திருந்தது. வந்தது "நாயகன்" என் மனதில் ரஜினி பாதி ராஜா பாதி என்ற நிலைமை மாறி ராஜா முக்கால், ரஜினி கால் என்ற நிலைமை உருவானது. ரஜினியும் ராஜாவை விட்டுவிட்டு "மனிதன்", "ராஜா சின்ன ரோஜா" போன்ற படங்களை பண்ணினார். ஆனால் அப்பொழுதெல்லாம் ரஜினியை சுத்தமா வெறுக்க முடியவில்லை. "அக்னி நட்சத்திரம்" வந்தது யாரவது அந்த படத்தை பத்தி பேசினாலே அவுங்கதான் எனக்கு நண்பர்கள். "ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜா.." பாடலின் படமாக்கல் மணிரத்தினம் மீதான மரியாதையை  கூட்டி  போயிருந்தது. "பணக்காரன்","மன்னன்" என ரஜினி மீண்டும் இளையராஜாவிற்கு மாறி இருந்ததால் ரஜினியையும் மெய்ண்டைன் பண்ணுவது சுலபமாக இருந்தது. இந்த கட்டத்தில் நடந்த மிகப் பெரிய மாற்றம் தான் நிரந்தரமாக இருக்கப் போகிறது என்று நான் அன்று அறியவில்லை.

மிகவும் பிடித்த இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தலைவர் நடிக்கும் "தளபதி" என்னை அதை பற்றி மட்டுமே சிந்திக்க வைத்தது. சாப்பிடும் போதும் தூங்கும் போதும் "தளபதி" தான். அந்த தீபாவளிக்கு "தளபதி" யுடன் கமலின் "குணா" மற்றும் பாரதிராஜாவின் "நாடோடி தென்றல்"  போன்ற படங்கள் ரிலீஸ் செய்யப்பட்டன. வழக்கம் போல் "தளபதி" பார்த்தாச்சு ஆனால் ரொம்ப புடிச்ச இயக்குனர் இயக்கி இருந்தும், ரொம்ப புடிச்ச நடிகர் நடித்திருந்தும், அந்த படம் பெரிய அளவு தாக்கத்தை என் மனதில் உண்டு பண்ணவில்லை மாறாக பெரிய ஏமாற்றத்தை தந்தது. ஆனால் ராஜாவின் இசை மட்டும் திருப்தியை இருந்தது. திருப்தின்னா என்ன எதிர்பார்ப்பை பூர்த்தியாவது, "தளபதி" படத்தில் என்னை போன்ற ரசிகர்களுக்கு எல்லா துறையிலும் இருந்தது ஆனால் இசையை தவிர வேறு எதுவும் மனசை ஆக்கிரமிக்கவில்லை. மனசு மீண்டும் சொல்லியது ராஜா யாருடன் இணைந்தாலும் அங்குதான் வெற்றி இருக்கும்னு. ஒருவரை ரசிக்க வெற்றியும் தேவைன்னு நினைத்திருந்த காலகட்டம் அது. ஏன்னா கல்லூரி காலம் அல்லவா..? நிச்சயம் முழு பைத்தியம் (ரசிகன்) ஆன கதை அடுத்த பகுதியில் சொல்லப்படும்.


Read more...

நல்லது நடந்தா சரி


கமல் 50 நிகழ்ச்சியை விஜய் டி.வி. நடத்திய விதத்தைப் பார்த்து சன் டி.வி. நிர்வாகி களை அழைத்து லெப்ட் ரைட் வாங்கி விட்டாராம் கலாநிதி மாறன். தினசரி பேப்பர்கூடப் படிப்பதில்லையா... இப்படி ஒரு விஷயத்தை நீங்கள் எப்படி மிஸ் பண்ணினீங்கனு அவர் கேட்ட எந்தக் கேள்விக்கும் நிர்வாகிகளிடம் இருந்து பதிலே இல்லையாம். கமல் 50, பாபா குகை விசிட் போன்ற சில நிகழ்ச்சிகள் விஜய் டி.வி-யின் டி.ஆர்.பி-யை எகிற வைத்திருப்பதுதான் கலாநிதி மாறனின் டென்ஷனுக்குக் காரணமாம்.
இது ஒரு இணையதளத்தில் கண்ட செய்தி. இனியாவது சன் டி.வி. தனது "ஆரோக்கியமான" போட்டியை தொடரும் என்று நம்புகிறோம்.

  


Read more...

ஹலோ ஒரு (ரசிக) கிறுக்க ன் பேசுறேன்


"டேய் நாளைக்கு நம்ம ஊரு எக்ஸ்ல் தியட்டர்ல முரட்டுகாளை படம்டா" -- நண்பன் சொல்லியவுடன் தூக்கமே வரவில்லை. படத்தின் போஸ்டர் வைத்தே பல கதைகளை மனதில் நினைத்தவாறே தூங்கி போனேன். மறு நாள் காலைல போயி பார்த்தால், ரஜினி மன்னிக்கணும் தலைவர் கம்பீரமா நிக்கும் போஸ்டரும் அதை சுற்றி கலர் கலர் பேப்பர்களும் ஒட்டப்பட்டிருந்தன. இதற்கு முன் வேறு எந்த படம் வரும் போதும் அப்படி ஒட்டி நான் பார்த்ததில்லை. அப்பவெல்லாம் ரிக்கார்ட் பிளேயர் தான் பாட்டு போடுவதற்கு சவுண்ட் சர்வீஸ் அதைத்தான் பயன் படுத்தும். பென்ச் டிக்கெட் 50 காசுகள், உட்கார குஷன் வைத்த சீட் 1.50 , சாய்வதற்கும் உட்காருவதற்கும் குஷன் வைத்தது 2.00 ரூபாய். மிடில் கிளாஸ்-ல அதை நிரூபிக்கும் விதமாக 1.50 க்கு தான் நாங்கள் எல்லாம் அழைத்து செல்ல படுவோம். ஆனால் எனக்கோ 50 காசு பெஞ்சில் அமர்ந்து கொண்டு விசிலடிக்கும் நண்பர்களை நோக்கியே மனசு  இருந்தது, அவர்கள் எல்லாம் தனியாக வந்து படம் பார்ப்பார்கள். எங்கள் வீட்டில் அதெல்லாம் பற்றி கனவு கூட காண முடியாது. படம் ஆரம்பிக்கிறது, "எவண்டா இந்த காளையை அடக்குவான்.." அப்படின்னு சொன்னதுமே, கேமரா வானம் பார்க்கிறது, இப்ப மாதிரி கொஞ்சம் விஷயம் தெரிஞ்சால் ஏன் கேமரா மேனின் அங்கிள் மாறி போச்சுன்னு யோசித்திருப்பேன், அப்ப அதெல்லாம் முக்கியமாய் தெரியலை சீக்கிரம் தலைவரை காட்டுங்கப்பா அப்படின்னு மனசு துடிக்க ஆரம்பித்தது, தலைவர் சும்மா அப்படி துள்ளி வர்றார் எனக்கு அப்படியே காத்துல பறக்குற மாதிரி இருந்துச்சு. ஆனா இதெல்லாம் மனசுக்குள்ள தான் வெளில இதெல்லாம் காட்ட முடியாது காட்டுனா அவ்வளவுதான் "இனிமே சினிமாவே கிடையாதுன்னு" ஒரு கட்டளை பிறப்பிக்கப்படும். அதுனால எல்லாத்தையும் மனசுக்குள்ள அடக்கிகிட்டு படம் பார்த்தேன், அதுல வந்த பாட்டுக்கள் மட்டும் மனசை என்னவோ பண்ணுச்சு. ஆனா அவை எல்லாம் தலைவருக்காகதான்னு மனசு நினச்சுசு. அதுக்கு பின்னாடி இளையராஜாங்குற பெரிய இசை சிங்கம் இருக்குன்னு தெரியலை. ஒரு நாள் அந்த படத்தை பத்தி  பேசுறப்ப ஒரு நண்பன் சொன்னான் (ரெண்டு வயசு பெரியவன்னு நினைக்கிறேன்) "இந்த படத்துக்கு மட்டும் M.S.V மியூசிக் போட்டிருந்தா படம் எங்கேயோ போயி இருக்கும், இந்த இளையராஜா சாவு மேளம் அடிச்சு படத்தையே கெடுத்து வச்சிருக்கார்." அப்படின்னு. அப்ப அந்த நபர் இளையராஜாவை சாதி சார்ந்து பேசுறார்ன்னு தெரியாம போச்சு பத்து பதினைந்து வருடங்களுக்கு பிறகுதான் அதை தெரிந்து கொண்டேன். ஆனா அப்ப அந்த நண்பன் சொன்னதை ஆமோதிக்கும் கூட்டத்தில் நானும் ஒருத்தனாய் மண்டை ஆட்டினேன். ஏன்னா அப்படி செயலைன்னா நாளைக்கு பின்ன விளையாட்டுல சேத்துக்க மாட்டங்களே, ஆனா மனசு மட்டும் சொன்னுச்சு நல்லாத்தானே இருந்துச்சு பாட்டெல்லாம். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அதே எக்சல் தியட்டர்ல "சகல கலா வல்லவன்" அப்படிங்குற படம் கமல் நடிச்சது வந்தது, எனக்கென்னவோ படத்துக்கு போகவே பிடிக்கல, பின்ன ஒரு ரஜினி ரசிகன் எப்படி கமல் படம் பார்க்குறது..? ஆனா அந்த படத்துல வர்ற "இளமை இதோ இதோ .." பாடல் மட்டும் மனசுல பதிஞ்சு போச்சு. அதுக்காக இந்த படத்தை பார்க்கலாம்னு தீர்மானிச்சேன், மத்தபடி நிச்சயம் கமலுக்காக இல்லைன்னு தீர்மானமா என் மனசுக்குள் சொல்லிக்கிட்டேன். அப்பவும் அந்த நண்பன் "இதுல வர்ற முக்கியமான டிரம்ஸ் இசை எல்லாம் M.S.V ஐடியாவின் படியே போட்டது.." அப்படின்னு சொன்னார். அதுக்கும் தலையசைப்பு தான் வேற வழி. ஒரு சமயம் விளையாடுறப்ப அந்த நண்பனை எதிர்த்து பேசும் படி ஆகி விட்டது, ஆனால் அதுக்கு நான் எதிர்பார்த்தமாதிரி பெரிய ரீ ஆக்ஷன் எல்லாம் இல்லை மற்றவர்கள் மத்தியில். கொஞ்சம் தைரியம் வந்துச்சுன்னே சொல்லலாம். அப்புறம் அது மாதிரியான நிறைய படங்களுக்கு அவரும் அவரை சார்ந்தவர்களும் இளையராஜாவின் இசையை குறை சொல்லாமல் அவை M.S.V ஐடியாவை வைத்தே ராஜா இசை அமைப்பதாக சொல்லி வந்தார்கள். அந்த நண்பர் அப்படி பேச பேச மனசுக்குள் ராஜாவின் இசையை இன்னும் நெருங்கி பார்க்கவே தோன்றியது. ஆனால் அதை எல்லாம் விட பெரிய ஆளாக இருந்தது ரஜினி தானே அதனால் அவற்றை புறம் தள்ளி வைத்து விட்டேன். காலங்கள் சென்றன, "பயணங்கள் முடிவதில்லை" அப்படின்னு ஒரு படம், அப்பவெல்லாம் "சண்டை பயிற்சி" அப்படின்னு டைட்டில் கார்டு வரலைன்னலே அந்த படம் ஒரு அறுவை (அதாவது இப்ப குப்பைன்னு சொல்றோமே அது மாதிரி) அப்படின்னு சொல்லி முத்திரை குத்தி அந்த படத்தை தலைவிதியேன்னு பார்க்குறது. "பயணங்கள் முடிவதில்லை" படம் ஆரம்பித்து அதில் வரும் "இளையநிலா பொழிகிறது" அப்படின்னு பாடல் ஓடுது, மனசு என்னையும் அறியாமல் ஒரு வேளை இளையராஜா நிஜமாவே பெரிய ஆளோன்னு தோனுச்சு. "சண்டை பயிற்சி" டைட்டில் கார்டில் வராமலேயே ஒரு நல்ல படம் (!?) பார்த்தேன் என்றால் அது "பயணங்கள் முடிவதில்லை" மட்டும்தான். அதுக்கு காரணம் அந்த படத்தில் வரும் பாட்டுகளே என்பது அப்போதைய என் எண்ணம். அது வரையில் அந்த நண்பருக்காக இளையராஜா பெரிய ஆளுன்னு நினைக்கிற கோணம் மாறி நிஜமாவே பெரிய ஆளுதானோ அப்படின்னு நினைக்க தோன்றியது. ஆனாலும் மனசு அவ்வளவு சீக்கிரம் ரஜினியை கீழே தள்ளுவதை ஏற்கவில்லை, ஒரு வேளை அப்பொழுதெல்லாம் ஒரு நடிகனுக்கு கிடைத்த மரியாதை ஒரு தொழில்நுட்ப கலைஞனுக்கு கிடைப்பதில்லை அதுவும் கூட ஒரு காரணமா இருக்கலாம். சுற்றி இருப்பவர்கள் ஒன்றை சொல்லும் போது அந்த வயதில் அதை உறுதிபட நம்பத்தான் தோன்றும். அதை ஆராய தோன்றாது. அப்புறம் "நான் பாடும் பாடல்" என்று ஒரு படம் முதன் முதலாக ஒரு இசை அமைப்பாளரின் பெயரை பெரிதாக  போட்டு ஒட்டிய போஸ்டர்ஸ் கண்டு சற்று அதிர்ந்தே போனேன். "இளையராஜாவின் இசையில்" என்று போட்டிருந்தார்கள், அந்த படத்தின் பாடலான "பாடவா உன் பாடலை.." பாடல் இலங்கை வானொலியில் ஒலித்துக் கொண்டே இருந்தது. ஊர்களில் நடக்கும் கல்யாணா வீடுகளில் எல்லாம் "விநாயகனே வினை தீர்ப்பவனே .." பாடலுக்கு பிறகு "பாடவா உன் பாடலை .." தான்.  இப்போ மனசுக்குள் ஒரு போராட்டமே வந்துவிட்டது என்னடா இது ஒரு இசை அமைப்பாளரை போயி ஒரு நடிகருடன் ஒப்பிடுவதா. அப்படின்னு.  அதனாலேயே இளையராஜாவை அவ்வளவு சீக்கிரம் மனம் அங்கீகரிக்க வில்லை.  "உதய கீதம்" ன்னு ஒரு படம் "சங்கீத மேகம்.." என்றொரு பாடல், ஊரில் அப்பொழுதான் அங்கொன்றும் இங்கொன்றுமாக இசை பதிவகங்கள் (மியுசிக்கல்ஸ்) ஆரம்பித்த தருணம். எங்கு போனாலும் இந்த பாட்டு தான் பதிந்து கொண்டிருப்பார்கள். அப்பவெல்லாம் செருப்பு போடாமல் தான் பள்ளிக்கூடம் செல்வது, அப்பத்தானே வெளையாடும் போது வேகமா ஓட முடியும், செருப்பை எங்கே கழற்றி வைக்கிரதுங்குற கவலை இல்லாமல் இருக்கலாமே அதுக்காகத்தான். அப்படி போகும் போது நிழல் எங்காவது கிடைத்தால் சற்றே ஒதுங்கி இருந்துவிட்டு மீண்டும் வெயிலில் நடப்பது. அப்படி ஒதுங்குகிற இடமும் இசை பதிவகங்களா இருந்தா கூட சில மணித்துளிகள் ஒதுங்கி இருந்துவிட்டு போவது வழக்கம். அப்படி ஒதுங்கும் போதெல்லாம் கேட்ட பாடல் இளையராஜவினுடயது என்பது அப்பொழுது அறியாவிட்டாலும் பிற்காலத்தில் அறிந்து கொண்டேன், ஆனால் அந்த பாடல்கள் மனசை அப்பவே ஆக்கிரமிக்க ஆரம்பித்து விட்டன. அவ்வாறு கேட்ட சில பாடல்கள்
"கேட்டேளா இங்கே அதை பார்த்தேளா இங்கே .." -- பத்ரகாளி
"கண்ணன் ஒரு கை குழந்தை.."  -- பத்ரகாளி
"கீதா சங்கீதா..." -- அன்பே சங்கீதா
"சிறு பறவைகள் மலை முழுவதும்..."  -- நிறம் மாறாத  பூக்கள்
    "கோவில் மணி ஓசை தனை .." -- கிழக்கே போகும் ரயில்
"சிந்து நதிக்கரை ஓரம்..." --- நல்லதொரு குடும்பம்
கிட்டத்தட்ட இந்த தருணத்தில் எல்லாம் நான் கால்வாசி கிறுக்கனாய் (ரசிகன்) போயிருந்தேன் என்றுதான் எனக்கு இப்பொழுது தோன்றுகிறது. அடுத்த பகுதியில் எப்பொழுது எப்படி அரை கிறுக்கனாய் ஆகியிருந்தேன் என்று சொல்கிறேன்.


Read more...

எனக்கு பிடித்த இயற்கை



முகத்தில் கரி பூசி முழு நிலவு போட்டு வைத்த இரவு...
பூமியை முத்தமிட்டு அந்த ஈரத்திலேயே முகம் பார்க்கும் மாலை சூரியன்...
வான வில்லுக்கு சாயம் பூசிய வண்ணமில்லா மழைத்துளிகள்...
உருவமில்லாத,வண்ணமில்லாத ஆனால் அழகான தென்றல்...
நகம் கடிக்காத, நாணப்பட தெரியாத ஆனால் மென்மையான பூக்கள்...
மாமிசம் தின்று தாவரம் செரிக்கும் இந்த மண்...
தலை எழுத்தில்லாத மலைகள்..
நிலவு கண்டு மகிழ்ச்சியிலும், அதை காணமல் கோபத்திலும் ஆர்பரிக்கும் அலைகள்...
செயற்கை சாதியில் பிறந்து இயற்கை சாதியில் மணம் முடித்த மழலை சிரிப்பு...
இயற்கை இவை தீண்டா மனித மனங்கள் இல்லை...


Read more...

வியாபர யுக்தியும் வில்லங்க புத்தியும்


விஜய் டிவி-யில் இரவு 7 மணிக்கு திரையுலக நட்சத்திரங்கள் பங்கு பெற்ற கமல்-50 விழா பற்றிய தொகுப்பை வெளியிட்டது. சன் டி.வி. குழுமத்திலிருந்து ஒளிபரப்பாகும் கே டி.வி எப்பொழுதும் இரவு 8 மணிக்கு காண்பிக்கும் (சூப்பர் ஹிட் இரவு காட்சி) படத்தை இரவு 7 மணிக்கே ஒளிபரப்பியது. ஆஹா என்ன வியாபர யுக்தி என்று சொல்வதற்கு பதில் சீ சீ இது என்ன வில்லங்க புத்தி...? அப்படின்னுதான் சொல்லத்தோன்றியது. சன் டி.வி இது மாதிரி செய்வது இது முதல் முறை அல்ல ஆனால் இது மாதிரியான செயல்கள் நடுநிலையாளர்களிடையே ஒரு வித வெறுப்பையே உண்டுபண்ணுகிறது. இதை சன் டி.வி.-இன் தலைமை அறிந்திருக்குமா என்று தெரியவில்லை. சன் டி.வி. ஆரம்பித்த புதிதில் ஒரு வித கிரியேட்டிவிட்டி இருந்தது, ஆனால் சன் டி.வி. வளர வளர அது குறைந்து, பணத்தால் இல்லை அதிகாரமையத்தில் தனக்குள்ள செல்வாக்கால் எல்லாத்தையும் சாதித்து விடலாம் என்று நினைத்து அது செயல் படுவது போல தோன்றுகிறது. கொஞ்ச காலத்திற்கு முன்னால் தனக்கு தொலைகாட்சி உரிமை கொடுக்காத படங்கள் பட்ட பாட்டை நாம் நன்கு அறிவோம். இது ஒரு வித மிரட்டலாகவே பார்க்கப்பட்டது. சிலபேர் இதை கண்டிக்க கூட செய்தார்கள் ஆனால் கடைசிவரை சன் டி.வி அதை பொருட்படுத்தவே இல்லை. தயாரிப்பாளர் சங்கம் புதிய படத்தின் பாடல்களையும் காட்சிகளையும் ஒரு குறிப்பிட்ட தடவை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் ஒரு கட்டுப்பாடு கொண்டு வந்தது, ஆனால் அதை கொஞ்சம் கூட மதிக்காமல் கீழே தூக்கி போட்டது. இதற்கு சன் டி.வி. தான் தமிழிலே நெ.1 சேனல் என்ற நிலை தான். இதே மாதிரி தான் விஜய் டி.வி. வசம் இருந்த "அசத்தப் போவது யாரு" நிகழ்ச்சியை இங்கே கடத்திக்கொண்டு வந்தது. ஆனால் இது சன் டி.வி.க்கு வந்த பிறகு அந்த நிகழ்ச்சியின் சுயம் இழந்து சன் டி.வியின் புகழ் பாட பயன்படுத்திக் கொண்டது.

முன்பெல்லாம் சன் டி.வி செய்யும் முயற்சியை மற்றவர்கள் காப்பி அடித்து கொண்டிருந்தார்கள் சன் டி.வி முன்னிலை வகித்ததும் நமக்கு பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. ஆனால் இப்பொழுது நிலைமை அப்படி இல்லை இருந்தும் சன் டி.வி. முன்னிலை வகிக்கிறது என்பதை ஏற்றுகொள்ள கடினமாக இருக்கிறது. மீடியா நினைத்தால் ஒருவரை புகழேணியில் ஏற்றவும் முடியும் அதிலிருந்து இறக்கவும் முடியும் என்ற நிலையை பயன்படுத்தி ஊடகத்தின் எல்லா பரிணாமங்களிலும் தனது தடத்தை அழுத்தமாக பதிக்க முயற்சிக்கிறது. போதாகுறைக்கு திரையுலகிலும்
தனது வில்லங்க புத்தியை நுழைக்க பார் க்கிறது இல்லை அந்த செயலை தொடங்கி விட்டது. உதாரணமாக தனக்கு பிடிக்காதவர்களின் படங்கள் பிடிக்காதவர்கள் என்றால் யார் தொழில் ரீதியாக தனது தொலை காட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்க
மறுத்தவர்கள், படம் வெளியாகும் வேளையில் தனது சன் பிக்சர்ஸ் சார்பாக ஒரு படத்தை வெளியிட்டு அவர்களுக்கு தொந்தரவு தருவது. சன் பிக்சர்ஸ் தமிழகமெங்கும் திரையரங்குகளை வாடகைக்கு அமர்த்தியுள்ளது, அதன் மூலம் மற்ற படங்கள் அல்லது தனக்கு வேண்டாதவர்கள் படம் வெளியாகும் போது தனது படங்களை வெளியிட்டு திரையரங்குகள் இல்லாமை நிலைமையை கொண்டுவருகிறது.இப்படிதான் வில்லு படத்தின் உரிமையை ஐங்கரன் சன் டி.விக்கு கொடுக்க மறுத்ததால் கட கட வென தனுஷ் நடித்த "படிக்காதவன்" என்ற படத்தை
முடித்து வெளியிட்டு "வில்லு" ஒடிந்து போக செய்தது. இதை அந்த துறையிலிருக்கும் நண்பர் ஒருவர் என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். நீங்கள் நினைப்பதும்
சரி எப்படியாயிருந்தாலும் "வில்லு" ஒடிந்து தானே போயிருக்க வேண்டும். அது அந்த படத்தின் தலைவிதி அல்லவா ..? அப்படின்னு. அதுவும் சரிதான் ஆனால் அந்த வெற்றி காற்று திசை மாறி அடித்து சன் டி.வி வசம் அடைந்தது சன் டி.வி.இன குறுக்கு புத்தியாலையே. "சிவா மனசுல சக்தி" என்ற படம் விகடன் தயாரித்தது, இந்த படத்தை சன் டிவி. வெளியிடுவதாகத்தான் அறிவித்தார்கள், ஆனால் சன் டி.வி நாள் கடத்திக்கொண்டு போகவே விகடன் தாங்களே அந்த படத்தை வெளிடுவதாக கூறி சன் டி.வியிடம் கேட்டார்கள். சன் டி.வியும் ஒத்துக்கொண்டு அந்த படம் வெளியாகும் வேளையில் ஒரு ஆங்கில படத்தின் தமிழ் மொழி ஆக்க படத்தை வெளியிட்டது. விகடனும் தப்பித்தது, காரணம் விகடனின் இரண்டு பெரிய சீரியல்கள் சன் டி.வியின் கல்லா நிரம்புவதற்கு (கோலங்கள்,திருமதி செல்வம்) பெறும் உதவி புரிவதே. இப்படி ஏதாவது ஒரு விதத்தில் தனக்கு சாதமாக நடந்து கொள்பவர்களை சன் டி.வி ஒன்றும் செய்யாது ஆனால் யாராவது எதிர்க்க முனைந்தால்..? அவ்வளவுதான். இப்ப கூட பாருங்க "வில்லு" போட்ட போட்டால் விஜய் தானாக தனது "வேட்டைகாரனை" சன் வசம் ஒப்படைத்து தீபாவளி விருந்தாக்க எண்ணினார். சன் டி.வி.இன பங்காளி ரெட்ஜெயண்ட் வழங்கும் "ஆதவன்" வருவதால் "வேட்டைக்காரனை" பிறகு ரிலீஸ் செய்கிறார்களாம். ஒன்னு அவுங்களுக்கு பங்காளியாக இருக்கணும் இல்லை அடிமையாய் இருக்கணும் அல்லது குறைந்த பட்சம் அவுங்க கல்லாவை பாதிக்கிற எந்த செயலையும் செய்யாமலாவது இருக்கணும் அப்பத்தான் அவுங்க பிழைக்க முடியும் இல்லன்னா..? அரசாங்கம் இதற்கெல்லாம் கட்டுப் பாடு கொண்டுவந்தால்தான் சன் டி.வி. போன்ற மீடியா வல்லரசுகளை ஒடுக்க முடியும். இதை எழுதிக்கிட்டு இருக்கும் போது அதே சன் டி.வியில் ஒரு பாடலை ஒளிபரப்பினார்கள் அது அவர்களுக்கும் பொருத்தும் என்றே தோன்றுகிறது, அந்த
 பாடல் "ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவுங்க மண்ணுக்குள் போன கதை தெரியுமா.."


Read more...

படிச்சு கிழிச்சது

 ஒரு அதிகாரியின் அறையில் ஆபாச பட சி.டி. கேசட்டுகள் ஏராளமாக கைப்பற்றப்பட்டது. சி.டி.களை கைதிகளுக்கு போட்டு காண்பிப்பதற்காக 4 கலர் டி.வி செட்டுகள் கைதிகளின் அறைகளின் வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு கைப்பற்றப்பட்டது. ஆபாச படம் பார்ப்பதற்கு கைதிகளிடம் தனி கட்டணம் வசூலிக்கப்படுமாம். சோதனை நடந்த அனைத்து அதிகாரிகளின் அறைகளிலும் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டது. சிறை டாக்டர் கூட பீடி, சிகரெட்டுகள் விற்பார் போலும். அவரிடமும் அவை கைப்பற்றப்பட்டன.

>> நாசமா போச்சு. அவுங்க (நிஜ)   புழல் சிறையில் இருக்குறாங்களா இல்லை "நிழல்" சிறையில் இருக்குறாங்களா..?    
 
முன்னாள் அமைச்சர் கக்கன் விட்டு சென்ற பணிகளை நான் தொடருவேன் (அழகிரி)
>>நீங்க வேற அந்த ஆளு பேரை கேட்டுட்டு நம்ம கட்சியை சேர்ந்தவர்ன்னு நினைச்சீங்களா அவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருங்க.

சிட்டா மற்றும் அடங்கல் ஆவணங்களை வாங்குவதற்காக, வி.ஏ.ஓ., லட்சுமி நரசிம்மன் என்பவரை அணுகியுள்ளார். சிட்டா வழங்க ரூ. 50 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என லட்சுமி நசிம்மன் வற்புறுத்தினார். தன்னால் முதற்கட்டமாக 10 ஆயிரம் மட்டுமே தரஇயலும் என கூறிய பழனிச்சாமி, அதை பல்லாவரம் பஸ் ஸ்டாண்டில் வைத்து தருவதாகவும் கூறினார்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்த பழனிச்சாமி, அவர்களின் ஆலோசனையின் படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை லட்சுமி நரசிம்மனிடம் அளித்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக லட்சுமி நரசிம்மனை கைது செய்தனர்.
>>அப்படி போடுங்க, போயும் போயும் 50000 தான் லஞ்சமா கேட்கனுமா இந்த ஆளை புடிச்சு உள்ளர போட்டது சரிதாங்க. இந்தியாவின் பொருளாதாரமே தெரியாம இருக்காரே..?

நலிந்த சினிமாவை தலைநிமிர செய்த நீங்கள். உங்களுக்கு பட்டம் கொடுப்பது தவறா? அப்படியென்றால் அந்த தவறை நாங்கள் செய்து கொண்டே இருப்போம்.

எங்கள் கஷ்டங்களை தெரிந்தவர்கள் நீங்கள். இப்போது கூட உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறோம். சினிமா தொழிலாளர்கள் வீடு கட்டுவதற்கு நீங்கள் இடம் ஒதுக்கி தர வேண்டும். எங்களுக்கு நீங்கள் தான் வேண்டும் (வி.சி. குகநாதன்)
 .>>  நீங்க கடைசியா சொன்னது ரொம்ப கரீட். இந்த மாதிரி கோரிக்கை வைக்கிறவுங்க கேவலம் ஒரு விருது கூட கொடுக்கலைன்னா எப்படி ...? அதுக்கு ஏன் மத்தவங்களை குறை சொல்றீங்க..?

ஒரு நாள் என்னை வீட்டுக்கு அழைக்கிறீர்கள். நீ பத்மஸ்ரீ என்றீர்கள். சரி ஐயா என்றேன். பிறகு மீண்டும் அழைக்கிறீர்கள். நீ கலைஞானி என்கிறீர்கள். இப்படி படிப்படியாக எனக்கு என் உழைப்புக்கு மார்க் போடும் வாத்தியாராக இருந்து இருக்கிறீர்கள். (கமல்ஹாசன்)
>> ஓஹோ இப்படித்தான் பத்மஸ்ரீ விருது கொடுக்குறாங்களா..? புரிஞ்சு போச்சு.
 
தலைமைக் கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்களிலும், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு உட்பட்ட பிற பகுதிகளிலும் கழகத்தின் 38ஆவது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து நடத்த வேண்டும். (ஜெயலலிதா)
>>தலைமை கழகத்தால் அறிவிக்கப்படாத மற்ற இடங்கள் அப்படின்னு சொல்லி இருக்கிங்களே..? லண்டன்,நியூயார்க்,ரியோடி ஜெனிரோ இந்த இடங்கள் தானே. ஏன்னா எத்தனை நாளு தான் இந்த சென்னை,புது டெல்லி அப்படின்னு குண்டு சட்டிக்குள்ளே குதிரையை ஓட்டுறது.?


Read more...

யார் தமிழன்..?

  • தமிழ் நாட்டில் பிறந்தால்தான் அவன் தமிழன் ....?
  • தமிழ் நாட்டில் பிறந்தால் மட்டும் அவன் தமிழன் ஆக முடியாது நல்ல தமிழ் பேசுபவனே தமிழன்.
  • தமிழ் நாட்டில் பொறந்து வெளிநாட்டு குடியுரிமை பெற்று அங்கேயே தனது வாழ்க்கையை நடத்தி வந்தாலும் அவன் தமிழன்தானா..?
  • தமிழ் நாட்டில் பிறக்கா விட்டாலும் தமிழ் பேச தெரிந்த அனைவருமே தமிழர்தானா..?
  • தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் பேச தெரியாவிட்டாலும் அவன் தமிழன்தானா..?
இப்படி எந்தெந்த வகையில் ஒருவன் தமிழனாக முடியும். ஏன்னா சமீபத்தில்
 அமெரிக்கா குடியுரிமை பெற்ற வெங்கட்ராமன் வேதியல் துறையில் நோபல் பரிசு பெற்றதற்காக பல பத்திரிக்கைகள் வாழ்த்தியிருந்ததற்கு பதில் இடுகைகள் பலவை அவர் தமிழரே அல்ல ஏன்னா அவர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இல்லை இல்லை அவர் சிதம்பரத்தில் பிறந்தவர் எனவே தமிழர் தான் என்று தமிழக முதல்வர் அவர் நோபல் பரிசு வாங்கியது அனைத்து தமிழருக்கும் பெருமைன்னு சொல்றார். கவுண்டமணி சொல்ற மாதிரி "ஒரே குழப்பமா இருக்கேன்னு" யோசிச்சேன். அதான் உங்க கிட்ட கேட்குறேன் உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்க.


Read more...

பதில்களில் எழுந்த கேள்விகள்

 தமிழக முதல்வர் நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில் வந்த சில பதில்களும் அதில் நமக்கு தோன்றிய கேள்விகளும்.
(இலங்கைக்கு திமுக கூட்டணி கட்சி தமிழக எம்.பி.கள் சென்ற ஐந்து நாள் பயணம் குறித்து சொன்ன பதில்)
பதில்: அனுப்ப பட்டுள்ள எம்.பி.கள் அந்தந்த கட்சியின் செலவில் சென்றுள்ளனர். அவர்கள் இந்திய அரசாங்கம் சார்பில் அனுப்பப்பட்டவர்கள் அல்ல. பாராளுமன்ற அனைத்து கட்சிகள் எம்.பி.களை அனுப்பினால் ஏன் எங்கள் கட்சி உறுப்பினர்களை அனுப்பவில்லை என்று கேள்வி கேட்பார்கள்.
கேள்வி: அப்போ இந்த நடவடிக்கையும் அரசாங்கம் சார்பில் எடுக்கப்படவில்லை. சரி போகட்டும் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி,குறிப்பா அவுங்க அவுங்க கை காசை போட்டு  இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களின் நிலையை பார்க்க நினைத்தாலும் இந்த அரசாங்கம் அனுமதி அளிக்குமா..?

(ஒபாமாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது குறித்து தலிபான்கள் தெரிவித்துள்ள எதிர்ப்பு பற்றிய பதில்)
பதில்: பயங்கர வாத அமைப்பு அல்லவா அதான் மற்றவர்களுக்கு பெயரோ,விருதோ கிடைப்பதை ஏற்க முடியவில்லை.
கேள்வி: அப்போ உங்களுக்கு "அண்ணா விருது" நீங்களே கொடுத்துகிட்டதையும், 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த வசனகர்த்தாவாக உங்கள் அரசாங்கமே உங்களை தேர்ந்தெடு த்தையும் எதிர்த்தவர்கள் பயங்கரவாதிகளா..?
(பத்திரிக்கையாளரா,நடிகரா யாரை கலைஞர் ஆதரிக்கிறார் என்ற கேள்விக்கான பதிலில்)
பதில்: அவர்கள் வீட்டு பெண்களை பற்றியும் இப்படி செய்தி வந்தால் அதை எழுதியதையும் ஒரு பத்திரிகை காரன்தான் என்று சும்மா விட்டுவிடுவார்களா..?
தலைவலியும் வயித்து வலியும் தனக்கு வந்தால் தானா..?
கேள்வி: இந்த கேள்வி முரசொலியில் வரும் கட்டுரைகளுக்கும் பொருந்துங்களா..?


Read more...

எல்லாம் பொய் -- நமக்கு நடக்காத வரை

  ராம் கோபால் வர்மா இயக்கத்தில் வெளிவந்த "பொம்மாயி" என்ற திரை படம் (ஹிந்தி டப்பிங் படம்) விளம்பரத்தில் "சூன்யம்,பேய் எல்லாம் பொய் -- நமக்கு நடக்காத வரை" அப்படின்னு போட்டிருந்தார்கள். இதை சாதாரண ஒரு விஷயமாக நான் பார்க்கவில்லை. சில அசாதாரணமான விஷயங்கள் மிக சாதரணமாக நம் வாழ்வில் நடப்பதை நம்மில் பெரும்போலானோர் உணர்ந்திருக்க கூடும். கிட்டத்தட்ட
அந்த மாதிரி நிஜ வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை ஒன்றாக்கி ஒரு தொடர் கட்டுரை வருகிறது விகடன்.com வெப் சைட்-இல.  நான் இதை தொடர்ந்து படிக்காவிட்டாலும் முடிந்த அளவு படித்து விடுவேன். இந்த கட்டுரையின் தலைப்பு "ஆழ் மனதின் அற்புத சக்திகள்" இதை எழுதுபவரின் பெயர் "கணேசன்". அதில் வந்த ஒரு விஷயத்தை சாம்பிள் காக உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

நினா குலாகினா தொடாமலேயே பொருட்களை அசைத்தாரென்றால், ஸ்பூன்களை மடக்குதல், பல காலமாக ஓடாமல் இருந்த வாட்ச்களை ஓட வைத்தல் போன்ற செயல்களைச் செய்து பிரபலமானார், இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த யூரி கெல்லர்!

கடந்த 1973 நவம்பர் மாதத்தில் பி.பி.சி. ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யூரி கெல்லர், தன்னிடம் உள்ள அந்த அபூர்வ சக்திகளை அந்த நிகழ்ச்சியில் விளக்க ஆரம்பித்தார். அந்த நிகழ்ச்சி இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து முழுவதும்
ஒலிபரப்பானது. அந்நிகழ்ச்சியை நடத்தும் ஜிம்மி யங் ஷோ மிகவும் பிரபலமானவர் என்பதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகழ்ச்சியைக் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
ஜிம்மி யங் ஷோ ஒரு தடிமனான சாவியை யூரி கெல்லருக்குத் தந்து, அதை மடக்கிக் காண்பிக்கச் சொன்னார். அந்த சாவியை லேசாகத் தொட்ட யூரி கெல்லர் தன் மனதை ஒருங்கிணைத்து குவித்து அந்த சாவியை மடக்க முயற்சி செய்தார்.
எல்லா சந்தர்ப்பங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறார் என்று சொல்ல முடியாது. அவரால் முடியாமல் போன சந்தர்ப்பங்களும் உண்டு.
அப்போது அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டிருக்கும் நேயர்களையும் வீட்டில் உள்ள ஸ்பூன்கள் அல்லது பல காலம் ஓடாமல் இருந்த கடிகாரங்களை எடுத்து தங்கள் முன் ஒரு மேசையில் வைத்து தங்கள் மனங்களைக் குவித்து ஸ்பூன்களானால் அவை மடங்கும் படியும், ஓடாத கடிகாரங்களானால் அவை ஓடும் படியும் செய்ய உறுதியாக நினைக்கச் சொன்னார், யூரி கெல்லர்.
சிறிது நேரம் ஸ்டூடியோவில் ஜிம்மி யங் ஷோவின் சாவி மடங்கவில்லை. யூரி கெல்லர் கையை அதிலிருந்து எடுத்த பின் அந்த சாவி சிறிது சிறிதாக மடங்க ஆரம்பித்தது.
பரபரப்படைந்த ஜிம்மி, "ஸ்பூன் மடங்க ஆரம்பிக்கிறது. மடங்கிக் கொண்டே வருகிறது... என்னால் நம்ப முடியவில்லை!!!" உற்சாகத்தில் கத்த ஆரம்பிக்க அது பல்லாயிரக்கணக்கான வீடுகளில் எதிரொலித்தது.
 அடுத்த சில நிமிடங்களில் பிபிசி ரேடியோ ஸ்டூடியோவில் தொடர்ச்சியாக ஃபோன் கால்கள் வர ஆரம்பித்தன. அந்த ஸ்டூடியோவின் ஸ்விட்ச் போர்டு கிறிஸ்துமஸ் மரம் போல ஃபோன் கால்களால் மின்ன ஆரம்பித்ததாக, அங்கு பணிபுரிபவர் சொன்னார்.
பலருடைய வீடுகளிலும் ஸ்பூன்கள், கத்திகள், ஆணிகள் எல்லாம் மடங்க ஆரம்பித்ததாகப் பலரும் பரபரப்பாகப் ஃபோன் செய்து சொல்ல ஆரம்பித்தார்கள். நூற்றுக் கணக்கான நேயர்களின் இந்த அற்புத அனுபவங்கள் மறுநாள் பத்திரிக்கைகளில் படங்களுடன் தலைப்புச் செய்தியாயின.
நான்கு மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவில் டெக்சாஸ் நகர ரேடியோ நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இது போன்ற அற்புதங்களை யூரி கெல்லர் செய்து காட்டிய போது, அந்த நிகழ்ச்சியை கேட்டுக் கொண்டு இருந்த டெக்சாஸ் அட்டர்னி ஜெனெரல் அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று பெண்மணிகள் விளையாட்டாக தாங்களும் அப்படி முயற்சிக்கலாம் என்று முயன்ற போது, ஒரு ஸ்பூன் 45 டிகிரிக்கு மடங்கியதாகவும், ஒரு சாவி பாதியாய் உடைந்ததாகவும் தெரிகிறது. அந்த அட்டர்னி ஜெனரல் ஆச்சரியப்பட்டு அதை எழுத்து மூலமாகவே யூரி கெல்லருக்கு அறிவித்ததாகத் தெரிகிறது.
அதை  நினைவில் கொண்டு தான் பிபிசி ரேடியோவில் நேயர்களையும் அப்படிச் செய்து பார்க்கச் சொன்னதாக யூரி கெல்லர் பின்பு தெரிவித்தார். அதிலும் ஆச்சரியமான விஷயம் என்ன என்றால், இங்கிலாந்தில் பிபிசியில் நடந்தது போல டெக்சாஸில் நடந்தது நேரடி ஒலிபரப்பல்ல. டேப் செய்து பின்னர் ஒலிபரப்பிய நிகழ்ச்சி அது.
யூரி கெல்லரின் சாதனைகளில் நம்பிக்கையும் அவநம்பிக்கையும் சரிசமமாக ஆராய்ச்சியாளர்களிடம் இருந்திருக்கின்றன. சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இது அவருடைய ஆழ்மன சக்தியே என்று கூறினார்கள். சில விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் அவரது நம்பகத்தன்மையை சந்தேகித்தனர். அதற்கேற்றாற் போல் அவரால் பல இடங்களில் அதை செய்து காட்ட முடியாமலும் போயிருக்கிறது. இது மேஜிக் வித்தை தான்; ஆழ்மன சக்தி அல்ல என்று ஜேம்ஸ் ரேண்டி போன்ற நிபுணர்கள் அடித்து சொன்னார்கள்.
எது எப்படியோ யூரி கெல்லர் 1971 முதல் 1977 வரை ஆராய்ச்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு பேசப்பட்டது போல பின்னாளில் பேசப்படவில்லை. (சமீபத்தில் மைக்கேல் ஜாக்சனின் மறைவுக்குப் பின் அவருடைய நண்பராக மைக்கேல் ஜாக்சன் பற்றிய தகவல்கள் சொல்லி பத்திரிக்கைகளில் பேசப்பட்டார்).

ஒருவேளை நாம் யூரி கெல்லர் விஷயத்தை சந்தேகத்தின் அடிப்படையில் ஒதுக்கினாலும் அந்த டெக்சாஸ் நகர அட்டர்னி ஜெனரல் அலுவலக ஊழியர்களான மூன்று பெண்மணிகளை அப்படி ஒதுக்க முடியாதல்லவா? அவர்களுக்கும் அதை உறுதி செய்த அட்டர்னி ஜெனரலுக்கும் பொய் பேச வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? பிபிசி நிகழ்ச்சியைத் தொடர்ந்து

பலர் வீடுகளில் நடந்த அந்த அற்புதங்களிலும் ஒரு சிலவற்றை வேண்டுமானால் கற்பனையாக இருக்கலாம் என்று சந்தேகப்பட்டாலும், பெரும்பாலானவையும் அப்படியே இருக்க சாத்தியமில்லை என்றே பத்திரிகை செய்திகளைப் படிக்கையில் தோன்றுகிறது.
யூரி கெல்லரால் அத்தனை பேருக்கு ஏற்பட்ட நம்பிக்கை அப்படி நிஜமான விளைவாக மாறியிருக்க வேண்டும் என்றே முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.
அந்த நிகழ்ச்சிகளின் தாக்கமாகவே மேட்ரிக்ஸ் (Matrix) திரைப்படத்தில் ஒரு சிறுவன் ஒரு ஸ்பூனை பார்வையாலேயே வளைக்கும் காட்சியைக் காண்பித்திருக்கிறார்கள்.
பிரபல ஆங்கில நாவலாசிரியரும், சினிமா தயாரிப்பாளர், டைரக்டருமான மைக்கேல் க்ரிஸ்டன் தன் 'ட்ராவல்ஸ்' என்ற நூலில் "ஸ்பூன்களை மடக்கும் விருந்து நிகழ்ச்சி" ஒன்றில் தனக்கு நேரடியாக ஏற்பட்ட அனுபவம் ஒன்றை விவரித்திருக்கிறார்...
"என்னாலும் ஸ்பூனை மடக்க முடிந்ததை நான் ஆச்சரியத்துடன் பார்த்தேன். அந்த ஸ்பூனைத் தொட்டுப் பார்த்த போது அது ப்ளாஸ்டிக்கைப் போல மெத்தெனவும் லேசான உஷ்ணநிலையிலும் இருந்தது. அதை மடக்க விரல்நுனியால் லேசாகத்
தொடுவதே போதுமானதாக இருந்தது. எந்த பலத்தையும் பிரயோகிக்கத் தேவையிருக்கவில்லை. வேறு சில ஸ்பூன்களையும், ஃபோர்க்குகளையும் சிரமமேயில்லாமல் வளைத்த பிறகு எனக்கு போரடிக்க ஆரம்பித்து விட்டது. சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்தேன்".
எட்டு, ஒன்பது வயது சிறுவர்கள் எல்லாம் பெரிய இரும்புத் துண்டுகளை விளையாட்டாக வளைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். யூரி கெல்லர் உண்மையாகச் செய்து காட்டினாரா, இல்லை ஜேம்ஸ் ரேண்டி சொல்வது போல மேஜிக் வித்தை தானா அது என்பது எனக்குத் தெரியாது. நான் செய்து பார்த்ததிலும், என்னைச் சுற்றிலும் சில சிறுவர்கள் செய்து கொண்டிருப்பதிலும் பொய் புரட்டு கிடையாது என்பது மட்டும் நான் அறிவேன்.
இதில் நான் வித்தியாசமாகக் கவனித்தது ஒன்றே ஒன்று தான். இது போன்ற சக்திகள் வேலை செய்ய ஆரம்பிப்பது நாம் கவனத்தைக் குவிப்பதை விட ஆரம்பித்து வேறிடத்துக்குக் கவனத்தை செலுத்த ஆரம்பிக்கும் போது தான். மிகவும் மனஒருமைப்பாடுடன் கவனத்தைக் குவித்து பார்ப்பதற்குப் பலன் கிடைப்பது பிறகு அந்தக் கவனத்தை வேறிடத்திற்குத் திருப்பும் போது தான்.

இதன் பின்னால் இருக்கும் தத்துவம் எனக்குத் தெரியவில்லை. அதைப் பற்றி நான் கவலைப்படவும் இல்லை. யாரும் இதைச் செய்ய முடியும் என்பது மட்டும் எனக்கு உறுதியாகத் தெரிந்தது..."
எழுத்துலகிலும், திரையுலகிலும், புகழின் உச்சாணிக் கொம்பில் இருந்து 2008ல் மறைந்த மைக்கேல் க்ரிஸ்டன் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தவர். அவர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பட்டதாரியும் கூட. அவர் ஒரு முறை சந்தித்த அந்த அனுபவத்தைப் பற்றி அதிகம் விவரிக்கப் போகவில்லை. இது அவருடைய துறையும் அல்ல. அவருக்கு இதுபற்றி பொய் சொல்லி ஒன்றும் ஆகப்போவதில்லை. அவசியமுமில்ல. இதை படிக்கும் போது ஒரு விஷயம் தெளிவாகிறது விஞ்ஞான எல்லைக்கு அப்பாலும் சில விஷயங்கள் உள்ளன அவை கடவுளின் சக்தியா..? இல்லை விஞ்ஞானத்தின் விளிம்புகளுக்குள் வராத விஞ்ஞான உலகமா..? அப்படின்னு.


Read more...

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP