இன்போசிஸ்-இன் அன்போசிஸ்
கர்நாடகா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள புயல்-வெள்ள நிவாரணப் பணிகளில் அரசுடன் இன்போசிஸ் தன்னையும் ஈடு படுத்தியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. இது மற்ற மாநிலங்களில் தொழில் துறையில் தங்களை வளர்த்து வரும் பெரும் நிறுவனங்களுக்கும் ஒரு பெரிய எடுத்துக் காட்டாக இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏதோ தொழில் ஆரம்பிச்சோமா அந்தந்த மாநில அரசாங்கம் கொடுக்கும் சலுகைகளை அனுபவித்தோமா லாபத்தை வாங்கி சுருட்டினமோ என்று போகாமல், அந்த மாநிலத்திற்கு ஏற்பட்டுள்ள ஒரு துயரத்தில் தங்களையும் பங்கு கொள்ள செய்ததன் மூலம் சாதரண மக்களுக்கும் தங்களுக்கும் இடைப்பட்ட தூரத்தை குறைத்துக் கொண்டதாகவே தெரிகிறது. அதிலும் சாப்ட்வேர் துறையில் உள்ளவர்கள் நோகாமல் பெரும் தொகை ஈட்டக்கொடியவர்கள் என்று எண்ணுபவர்கள் மத்தியில் இந்த மாதிரியான விஷயங்கள் மாற்றம் உண்டு பண்ணும் என்றே தோன்றுகிறது.
சமூக அக்கறை இல்லாத எந்த ஒரு சிந்தனையும் தேவையற்றது என்பதை எங்கோ படித்திருக்கிறேன். அது இந்த மாதிரியான நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றே நினைக்கிறேன் .
1 comments:
இன்னும் சின்னப்பிள்ளையாய் இருக்கின்றீர்களே ? முதலை வாய் திறப்பது வஞ்சகத்திற்கு. வாழ்த்துவதற்கு அல்ல. ஒரு கோடி ரூபாய் செலவு செய்தால் 10 கோடி ரூபாய் வரவு வைப்பார்கள். தொழில் நிறுவனங்கள் டிரஸ்ட் ஆரம்பிப்பது பொதுமக்களின் சேவைக்காக அல்ல சரவணன். சம்பாதிப்பதற்காக...
Post a Comment