எனக்கு பிடித்த இயற்கை
முகத்தில் கரி பூசி முழு நிலவு போட்டு வைத்த இரவு...
பூமியை முத்தமிட்டு அந்த ஈரத்திலேயே முகம் பார்க்கும் மாலை சூரியன்...
வான வில்லுக்கு சாயம் பூசிய வண்ணமில்லா மழைத்துளிகள்...
உருவமில்லாத,வண்ணமில்லாத ஆனால் அழகான தென்றல்...
நகம் கடிக்காத, நாணப்பட தெரியாத ஆனால் மென்மையான பூக்கள்...
மாமிசம் தின்று தாவரம் செரிக்கும் இந்த மண்...
தலை எழுத்தில்லாத மலைகள்..
நிலவு கண்டு மகிழ்ச்சியிலும், அதை காணமல் கோபத்திலும் ஆர்பரிக்கும் அலைகள்...
செயற்கை சாதியில் பிறந்து இயற்கை சாதியில் மணம் முடித்த மழலை சிரிப்பு...
இயற்கை இவை தீண்டா மனித மனங்கள் இல்லை...
2 comments:
சுவாரசியமா இருந்தது!
தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!
Thanks KalaiArasan. Ungalukkum Deepavali Vazhthukal.
Post a Comment