பதிவுலகம் சார்பில் ஷங்கருக்கு நன்றி
ஷங்கர் இயக்கம் படங்கள் குறித்து எனக்கு எப்பவுமே மாற்று கருத்து உண்டு. ஆனால் அவர் தயாரிக்கும் படங்கள் குறித்து எப்பவுமே ஒரு நல்ல பார்வை உண்டு. அவரின் சமீபத்திய வெளியீடான "ஈரம்" இன்னும் பார்க்கவில்லை (ஆமாம் இன்டர்நெட்டில் இல்லாம் படம் பார்க்காம இருந்தா எப்படி பார்க்க முடியும். குறைந்த பட்சம் DVD வர்ற வரைக்கும் காத்திருப்பது என்னுடைய வழக்கம். அந்த DVD ம் இன்னும் வரவில்லை). ஆனால் இந்த படம் பெருவாரியாக பாராட்டப்பட்டாலும் பொருளாதார ரீதியாகவும் நன்றாக போய் கொண்டிருப்பதாக இணையத்தளங்களிலும்,பத்திரிகைகளிலும் படித்தேன் மகிழ்ந்தேன். இந்த படம் எப்படி வித்தியாசமாகவும், ஈர்ப்பாகவும் இருந்தததோ அதே மாதிரி அந்த படத்தின் விளம்பரங்களிலும் ஷங்கர் கவனம் செலுத்துவது ரொம்பவும் நல்ல விஷயம். அதிலும் இன்று வந்த விளம்பரம் ஆர்குட் இணையதளத்தில் "ஈரம்" படம் பற்றி நடை பெறும் விவாதத்தை குறிப்பிட்டு வந்துள்ளது வலைப்பதிவுகளுக்கும் அதில் வரும் சினிமா விமர்சனங்களுக்கும் திரை உலகில் ஓரளவாவது முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஷங்கர் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் செய்யும் பொழுது பதிவுலகம் மீதான பார்வையை மற்ற தயாரிப்பாளர்கள் திருப்புவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றே நம்புகிறேன். இதை ஒரு பதிவராக பார்க்கும் பொழுது ஷங்கருக்கு நன்றி சொல்லவே தோன்றுகிறது.
1 comments:
//அதிலும் இன்று வந்த விளம்பரம் ஆர்குட் இணையதளத்தில் "ஈரம்" படம் பற்றி நடை பெறும் விவாதத்தை குறிப்பிட்டு வந்துள்ளது வலைப்பதிவுகளுக்கும் அதில் வரும் சினிமா விமர்சனங்களுக்கும் திரை உலகில் ஓரளவாவது முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் ஷங்கர் போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் செய்யும் பொழுது பதிவுலகம் மீதான பார்வையை மற்ற தயாரிப்பாளர்கள் திருப்புவதற்கும் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என்றே நம்புகிறேன். இதை ஒரு பதிவராக பார்க்கும் பொழுது ஷங்கருக்கு நன்றி சொல்லவே //
நல்ல விடயம் ஒரு பெரிய அவர் பார்கிறார் என்றால் மிக பெரிய விடயம்
Post a Comment