நீயா நானா யார் குற்றவாளி..?




Katie Couric -- அமெரிக்காவின் CBS சேனலில் பணிபுரிந்து வரும் மிகவும் புகழ் பெற்ற நிருபர். சமீபத்தில் ஒரு நேரடி பேட்டிக்காக ஈரானிய அதிபர் Ahamadinejad அவர்களை சந்தித்தார்பொதுவாகவே அமெரிக்காவின் ஊடகங்கள் மற்ற நாட்டின் தலைவர்களை அவ்வளவாக புகழ்வதில்லை (விதிவிலக்கு இஸ்ரேல் தலைவர்களுக்குண்டு அதற்கான காரணம் நாமறிந்ததே). சமீப காலமாக அமெரிக்கா கண்ணை உறுத்தி வரும் நாடு ஈரான் தான். அனேகமாக அமெரிக்காவின் பொருளாதாரம் சிறப்பாக இருந்திருக்கும் பட்சத்தில் இந்த நாட்டின் மீது படை எடுக்கவும் அமெரிக்கா தயங்கி இருக்காது என்பது ஊடகங்களை உன்னிப்பாக கவனிப்பவர்களின் கணிப்பு. தினசரி செய்திகளில் இந்த நாட்டின் தலைமை மிக வெகுவாக விமர்சிக்கப்படுவதுண்டு. சமீபத்தில் நடந்த இந்த நாட்டின் தேர்தல் கலவரங்கள் கூட அமெரிக்கா ஊடகங்களால் வெகுவாக காண்பிக்கபட்டதும், விமர்சிக்கப்பட்டதும் நாம் அறிந்ததே.


முதலில் சொன்ன அந்த சந்திப்பின் போது நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு,


Katie Couric ஒரு புகைப்படம் ஒன்றை காண்பித்து, "இந்த படத்தில் உள்ள பெண் ஈரானிய பாதுகாப்பு படையினரால் அடித்து கொல்லப்பட்டிருக்கிறார். இந்த நிகழ்வு குறித்து உங்கள் கருத்து என்ன..? " என்று கேட்டவுடன், Ahmadinejad (இந்த பெயரை தமிழில் தட்டச்சு செய்து படித்தால் ஒரு மாதிரியாக இருந்தது எனவே தான் ஆங்கிலத்திலேயே கொடுக்கப்பட்டுள்ளது) சொன்னாராம் "நிச்சயம் வருத்தமளிக்க கூடிய ஒரு விஷயம்தான்.இறந்தவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபாங்கள். என்னிடம் உள்ள இந்த புகை படத்தையும் பாருங்கள்." என்று ஒரு புகை படத்தை நீட்டியிருக்கிறார் "இந்த புகை படம் பற்றி உங்களுக்கு ஏதும் தெரியுமா..?" என்று கேட்டவுடன், நிருபர் சொல்லி இருக்கிறார் "எனககு தெரியாது என்று." ஈரான் அதிபர் சிரித்துக் கொண்டே "இவர் பெயர் Marwa ali இவர் ஜெர்மன் நீதி மன்றத்தால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொல்லப்பட்டார், ஈரானில் கொல்லப்பட்ட அந்த பெண்ணின் படம் காண்பிக்கப்பட்ட அளவிற்கு இந்த பெண்ணின் படம் மேற்கத்திய ஊடகங்களில் ஏன் காண்பிக்கப்படவில்லை..? "


இதில் யார் புத்திசாலி என்பதற்காக நாம் இதை சொல்ல வரவில்லை. பதிலாக ஒரு பக்கம் பொறுப்பற்ற தனமாக பேசும் ஒரு அதிபர், மறுபுறம் நடந்த செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்காமல் மறைக்கும் ஊடகம், பொதுமக்களை பொறுத்தவரை இரண்டுமே குற்றம்தான்.


2 comments:

Anonymous,  October 2, 2009 at 10:19 PM  

Here is the video... you can embed ...thx

http://www.youtube.com/watch?v=QW1DltEt5z4&feature=channel

APSARAVANAN October 2, 2009 at 11:16 PM  

Thanks for your comment and visit. As you said we have added the video.

Post a Comment

தொடர்பவர்கள்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP