பதில்களில் எழுந்த கேள்விகள்
தமிழக முதல்வர் நேற்று வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கையில் வந்த சில பதில்களும் அதில் நமக்கு தோன்றிய கேள்விகளும்.
(இலங்கைக்கு திமுக கூட்டணி கட்சி தமிழக எம்.பி.கள் சென்ற ஐந்து நாள் பயணம் குறித்து சொன்ன பதில்)
பதில்: அனுப்ப பட்டுள்ள எம்.பி.கள் அந்தந்த கட்சியின் செலவில் சென்றுள்ளனர். அவர்கள் இந்திய அரசாங்கம் சார்பில் அனுப்பப்பட்டவர்கள் அல்ல. பாராளுமன்ற அனைத்து கட்சிகள் எம்.பி.களை அனுப்பினால் ஏன் எங்கள் கட்சி உறுப்பினர்களை அனுப்பவில்லை என்று கேள்வி கேட்பார்கள்.
கேள்வி: அப்போ இந்த நடவடிக்கையும் அரசாங்கம் சார்பில் எடுக்கப்படவில்லை. சரி போகட்டும் மற்ற கட்சிகளை சேர்ந்தவர்கள் ஒன்று கூடி,குறிப்பா அவுங்க அவுங்க கை காசை போட்டு இலங்கை சென்று அங்குள்ள தமிழர்களின் நிலையை பார்க்க நினைத்தாலும் இந்த அரசாங்கம் அனுமதி அளிக்குமா..?
(ஒபாமாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது குறித்து தலிபான்கள் தெரிவித்துள்ள எதிர்ப்பு பற்றிய பதில்)
பதில்: பயங்கர வாத அமைப்பு அல்லவா அதான் மற்றவர்களுக்கு பெயரோ,விருதோ கிடைப்பதை ஏற்க முடியவில்லை.
கேள்வி: அப்போ உங்களுக்கு "அண்ணா விருது" நீங்களே கொடுத்துகிட்டதையும், 2008 ஆம் ஆண்டிற்கான சிறந்த வசனகர்த்தாவாக உங்கள் அரசாங்கமே உங்களை தேர்ந்தெடு த்தையும் எதிர்த்தவர்கள் பயங்கரவாதிகளா..?
(பத்திரிக்கையாளரா,நடிகரா யாரை கலைஞர் ஆதரிக்கிறார் என்ற கேள்விக்கான பதிலில்)
பதில்: அவர்கள் வீட்டு பெண்களை பற்றியும் இப்படி செய்தி வந்தால் அதை எழுதியதையும் ஒரு பத்திரிகை காரன்தான் என்று சும்மா விட்டுவிடுவார்களா..?
தலைவலியும் வயித்து வலியும் தனக்கு வந்தால் தானா..?
கேள்வி: இந்த கேள்வி முரசொலியில் வரும் கட்டுரைகளுக்கும் பொருந்துங்களா..?
0 comments:
Post a Comment