வெல்லத்தான் நினைக்கிறேன் -- ரேணிகுண்டா
தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படங்களிலேயே "பேராண்மை" க்குத்தான் முதலிடம் என்று அறிந்து மகிழ்வுற்றோம். ஒரு நல்ல படம் மீண்டும் வெற்றி பெற்றிருப்பது, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனையை மெச்சுவதாகவே உள்ளது. நான் இன்னும் "பேராண்மை" பார்க்கவில்லை. பார்த்தபிறகு அது எப்படி நமது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது என்பதை பற்றி பேசலாம். எப்படியோ இந்த படம் வெல்ல வேண்டும் என்ற ("வெல்லத்தான் நினைக்கிறேன் -- பேராண்மை") நமது எண்ணம் ஈடேறி இருப்பது குறித்து மகிழ்ச்சியே. அந்த நம்பிக்கையோடு...
ரேணிகுண்டா இந்த படத்தை லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக இருந்த ஆர்.பன்னீர் செல்வம் என்பவர் இயக்கியுள்ளார். புது முகங்கள் நடித்துள்ள இந்த படத்தின் ஸ்டில்கள் மற்றும் இந்த படத்தை பற்றி வரும் செய்திகளும் இந்த படத்தை ஒரு நம்பிக்கைக்குரிய படமாக காட்டுகிறது. சமீப காலமாக இந்த மாதிரியான புது இயக்குனர்களும் புது முகங்களும் இணைந்து வரும் படங்கள் தரத்திலும் கல்லா கட்டுவதிலும் முதன்மை பெறுவது, தமிழ் பட ரசிகர்களாகிய நமக்கு கிடைக்கும் பெருமை. இந்த படமும் வெல்ல வாழ்த்துகிறோம்.
0 comments:
Post a Comment