உச்சநீதிமன்றமும், வருத்தப்படாத வாலிபர் சங்கமும்
என்னத்தை சொல்றது...? நம்ம நாட்டின் மிகவும் பலம் வாய்ந்த உச்ச நீதி மன்றத்தை அவமதிப்பது சில மாநில அரசுகளாலே நடத்தப்படுவது வாடிக்கை ஆகி விட்டது. எனக்கு விவரம் தெரிந்து, ஒரு முறை கர்நாடக அரசு காவிரி நீர் பங்கீடு தொடர்பாக தமிழக அரசுக்கு சாதகமான ஒரு தீர்ப்பை வழங்கியதாக கூறி அந்த தீர்ப்பை அமுல் படுத்த மறுத்தது (அது இன்றைய வரை அப்படியேதான் இருக்கிறது என்று நினைக்கிறேன்). இத்தனைக்கும் இங்கு வேறு வேறு கட்சிகள் ஆட்சிக்கு வந்து விட்டது, இன்னும் இதற்கு ஒரு விடிவு காலம் பிறந்த மாதிரி தெரியவில்லை. இதற்கிடையில் தற்பொழுது உத்திர பிரதேசத்தில் ஆட்சியில் இருக்கும் மாயாவதி தலைமையிலான அரசு, அந்த அரசின் சார்பிலே , அரசின் செலவிலே வைக்கப்படும் மாயாவதி மற்றும் கன்ஷிராம் சிலைகளை அகற்றவும் இனிமேல் இவ்வாறு செய்யக்கூடாது எனவும் கூறி ஒரு தீர்ப்பை சில மாதங்களுக்கு முன் வழங்கியது. இதை உதாசீன படுத்தியது மாயாவதி தலைமையிலான அரசு. இன்னும் ஒரு படி மேல் போய் தங்களது கட்சி தலைவர்களுக்கு சுமார் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் நினைவிடம் அமைக்க செய்த முயற்சி உச்ச நீதி மன்றத்தை மேலும் கோபமுற செய்திருக்கிறது. இதற்கான கண்டனங்களை மாயாவதியின் சார்பில் ஆஜரான வக்கீலிடம் தெரிவித்திருக்கிறது.
இப்படி சொல்வதெல்லாம் வேலைக்காகாது, உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்த தற்காகவே சம்மந்த பட்ட ஆட்சியை கலைத்து விட்டால் என்ன..? இதற்காக ஒரு அவசர சட்டமே கூட போடலாம். இது என்ன வருத்தப் படாத வாலிபர் சங்கம் நிறைவேற்றிய கைப்புள்ள தீர்ப்பா..? அலட்சிய படுத்துவதற்குநாட்டில் மிகவும் சக்தி வாய்ந்தது உச்ச நீதிமன்றம் தான் அதன் பேச்சே மதிக்கப்பட வில்லை என்றால் எப்படி..? உச்ச நீதிமன்றத்தின் மதிப்பை மக்களிடம் நீடிக்கவும் இது வழி செய்யும் என்றே நம்பலாம்.
0 comments:
Post a Comment