நல்லது நடக்கணும்
ஸ்பெக்ட்ரம் ஊழல் பூதாகரமாக வெடித்து தற்போது புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் ராஜாவின் அலுவலகங்களில் நடந்த அதிரடி சிபிஐ சோதனையால் திமுக வட்டாரம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.
இருப்பினும் முதல்வர் கருணாநிதி இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை கருத்து தெரிவிக்காமல் உள்ளார். ஆனால் காங்கிரஸ் தரப்பில் ராஜா மீது நடவடிக்கை எடுக்கு ஆயத்தம் நடந்து வருவதாக பேசப்படுகிறது.
குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங், ராஜா மீது நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பு முதல்வர் கருணாநிதியின் கருத்தை அறிய காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் மூத்த தலைவர் கருணாநிதி என்பதாலும், தமிழகத்தில் திமுக தலைமையில் காங்கிரஸ் கூட்டணிக்குக் கிடைத்த பெரும் வெற்றிக்குக் காரணகர்த்தா என்பதாலும் அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரும்பவில்லையாம்.
அதேசமயம், எதிர்க்கட்சியினர் தொடர்ந்து காங்கிரஸ் மீதும், மன்மோகன் சிங் அரசு மீதும், மத்திய அமைச்சர் ராஜா விவகாரத்தைப் பயன்படுத்தி குற்றம் சாட்டிப் பேசுவதால் மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதை கருணாநிதியும் விரும்ப மாட்டார் என காங்கிரஸ் மேலிடம் கருதுகிறதாம்.இதன் உள்ளர்த்தம் என்னவென்றால் ராஜா மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் மற்றும் பிரதமர் தயாராகி விட்டனர். அதற்கு முன்பு கருணாநிதியிடமிருந்து ஒரு வார்த்தைக்காக காங்கிரஸ் காத்திருக்கிறது என்பதே என்று காங்கிரஸ் தரப்பில் கூறுகிறார்கள்.விரைவில் முதல்வர் கருணாநிதி யின் தூதர் ஒருவர் சோனியா காந்தியை சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர் ராஜா மீது நடவடிக்கை பாயலாம் என்றும் பேசப்படுகிறது.மக்களவை குளிர் காலக் கூட்டத் தொடர் துவங்கவுள்ள நிலையில் ராஜா விவகாரத்தால் தங்களுக்கு சி்க்கலை வருவதை காங்கிரஸ் விரும்பவில்லை என்கிறார்கள்.அதே நேரத்தில் ராஜாவை பதவியிலிருந்து திரும்பப் பெற்றால் ஊழலை ஒப்புக் கொண்டது போலாகிவிடுமே என திமுக அஞ்சுகிறது.இதனால் திமுக ஆழ்ந்த அமைதி காக்க, அதைப் பார்த்து காங்கிரசின் கோபம் அதிமாகிக் கொண்டுள்ளது. ராஜா நீண்ட நாட்கள் பதவியில் நீடிக்க முடியாது என்றே தெரிகிறது.
மேற்கண்ட அந்த செய்தி இன்றைக்கு தட்ஸ்தமிழ் இணையதளத்தில் வந்த செய்தி. இரண்டு நாளைக்கு முன் நம் "எண்ணங்களில்" தோன்றியதை பிரதிபலிக்கும் விதமாக இன்று வந்துள்ள இந்த செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். குறிப்பாக கடைசி வரிகள் நமது எண்ணத்தை முற்றிலுமாக ஒத்து போவதாகவே கருதுகிறேன். எப்படியோ நல்லது நடந்தா சரி.

0 comments:
Post a Comment