செய்திகள் இரண்டு - கவலை ஒன்று
சமீபத்தில் CNN-ல் ஒரு செய்தி கண்டு சற்றே வியந்தேன், இங்கிலாந்தில் ஒருவர் தனது பாட்டியை $40,000 -க்கு விற்பதற்காக e-bay-ல் அறிவித்திருப்பதாக. இதற்கு ஒரு நாள் முன்னதாக நம் நாட்டில் இருந்து வெளிவரும் ஒரு நாளிதழில் ஒரு குடும்பம் 100-வருடங்களாக கூட்டு குடும்பமாக வாழ்ந்து வருவதாக. இதில் எது சரி, எது தவறு என்பது ஒரு பக்கம் இருக்கட்டும் என்னுடைய கவலை எல்லாம் நம் கண்ணில் பட்டவாறே இயக்குனர் சுசிகணேசன் கண்ணிலும் படாமல் இருக்கனுமேன்னு தான் நினைச்சேன். ஏன்னா இவர் ஏன் கந்தசாமியை எடுத்தார் தெரியுமா...? ஒரு நாள் இவர் செய்தி தாள் படிக்கும் போது முதல் பக்கத்தில் வந்த "சுவிஸ் வங்கியில் இந்தியாவின் கருப்பு பணம் பதுக்கல்.." என்ற செய்தியும் அதே பத்திரிக்கையின் கடைசி பக்கத்தில் "சேலத்தில் ஒரு குடும்பம் வறுமை காரணமாக அந்த குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரும் தற்கொலை செய்து கொண்டார்கள்" என்ற செய்தியும் தான் இவரை "கந்தசாமி" எடுக்க தோன்றியதாம். மற்றபடி நாம நினைக்கிற மாதிரி "இந்தியன்","சிவாஜி", "அந்நியன்" போன்ற படங்கள் அல்லவாம். அதுமாதிரி இவர் பாட்டுக்கும் இந்த செய்தியை பார்த்துட்டு ஒரு "மாயாண்டி குடும்பத்தார்" , "தவமாய் தவமிருந்து" மாதிரி (!?) எடுத்துட்டு அப்புறம் இந்த செய்தியை பாத்துதான் எடுத்தேன் அப்படின்னு சொல்லுவார் நாம அதையும் கேட்கணுமே அதை நினைச்சுதான் ரொம்பவும் கவலையா இருந்தது.
பின்குறிப்பு: இந்த செய்திக்கும் இங்கு இடம் பெற்றிருக்கும் பாட்டியின் படத்திற்கும் சம்மந்தமில்லை.
இது நம்ம சுசிகணேசன் சொன்ன மாதிரியான "சம்மந்தமில்லை" அல்ல நிசமாவே சம்மந்தமில்லை தான்.
0 comments:
Post a Comment